தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், 16.11.2010 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது.
முன்னதாக, 15.11.2010 அன்று இரவில், சின்ஸியர் லங்கா நிறுவன இல்லத்தில் திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
பெருநாளன்று காலை 09.30 மணிக்கு, பாங்காக் மஸ்ஜிதில் ஹஜ் பெருநாள் தொழுகை கூட்டாக நடத்தப்பட்டது. சுமார் 1500 ஆண்-பெண்கள் இத்தொழுகையில் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவுற்றதும், காயலர்கள் தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க அங்கத்தினரும் இணைந்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். அனைவருக்கும் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் பெருநாள் விருந்தளித்தார்.
உலக காயலர்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக தாய்லாந்து காயல் நல மன்றத் தலைவரும், பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தெரிவித்தார்.
தகவல்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்
மற்றும்
O.A.C.செய்யித் முஹம்மத்,
பாங்காக், தாய்லாந்து. |