ஹஜ் பெருநாளை முன்னிட்டு, 18.11.2010 (நேற்று) காலை 07.30 மணிக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
ஹாஃபிழ் ஏ.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் தொழுகையை வழிநடத்தினார். டி.என்.டி.ஜே. அழைப்பாளர் எஸ்.தாவூத் கைஸர் குத்பா பேருரையாற்றினார்.
டி.என்.டி.ஜே. நகர கிளை நிர்வாகிகள் சாளை முஹம்மத் அப்துல் காதிர் என்ற சாளப்பா, ஹஸனாலெப்பை, ஸலாஹுத்தீன், முஜீப், அபூபக்கர், காஜா, பாஸித், இக்பால், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எஸ்.மக்கீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.மூஸா, அப்பள்ளியின் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.இ.மரைக்கார் ஆலிம், நெய்னா மரைக்கார், சட்னி யாஸீன், ஷம்சுத்தீன், இஸ்மாஈல் நஜீப், ஸாலிஹ் உமரீ உள்ளிட்ட ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
A.S.மக்கீ,
மாவட்ட துணைச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தூத்துக்குடி மாவட்டம்.
படங்கள்:
செந்தூர் சுந்தர்
மற்றும்
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |