தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ இலவச முகாம், இன்று (18.11.2010) காலை 10 மணிக்கு காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
துவக்க நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் எம்.ஏ.கஸ்ஸாலி மரைக்கார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் உமா திட்ட விளக்கவுரையாற்றினார். காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.ரஃபீக் சிறப்புரையாற்றினார்.
பின்னர் துவங்கிய மருத்துவ முகாமில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். உள்ளூர் மருத்துவர்கள் துணைப்பணியாற்றினர்.
இம்முகாமில் காயல்பட்டினத்தின் அனைத்து பகுதிகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்வரி தலைமையில், காயாமொழி ஆரம்ப சுகாதார மையத்தினர் செய்திருந்தனர்.
|