ஹஜ் பெருநாளை முன்னிட்டு, 17.11.2010 அன்று, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி, கடைப்பள்ளி, தாயிம்பள்ளி, ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி, செய்கு ஹுஸைன் பள்ளி, ஷெய்கு ஸலாஹுத்தீன் பள்ளி (மேலப்பள்ளி), புதுப்பள்ளி, அரூஸிய்யா பள்ளி, மஸ்ஜிதுர்ரஹ்மான், மகுதூம் பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, ஹாஜியப்பா தைக்கா பள்ளி, ஆறாம்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி,
மஸ்ஜித் மீக்காஈல் (இரட்டை குளத்துப்பள்ளி), மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால், அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளி, ஜாவியா, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி ஆகிய நகர பள்ளிவாசல்களில் ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது.
தொழுகை நிறைவுற்றதும், குத்பா பிரசங்கத்திற்காக பொதுமக்கள் குத்பா சிறிய பள்ளியில் திரண்டனர். ஒரு சில பள்ளிவாசல்களில் - அங்கேயே குத்பா பேருரை நிகழ்த்தப்பட்டது.
காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளியில் பெருநாள் தொழுகையை பள்ளியின் இமாம் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் வழிநடத்தினார். பன்னூல் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ குத்பா பேருரையாற்றினார்.
தொழுகை நிறைவுற்றதும், தனியார் தொலைக்காட்சி சார்பில் ஜமாஅத்தார் அனைவரும் நேர்காணல் செய்யப்பட்டனர். ஹல்ஜீ ஆலிம் உள்ளிட்டோர் இந்நேர்காணலில் கருத்து தெரிவித்தனர்.
|