நடப்பு ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகள் காயல்பட்டினத்தில் உள்ஹிய்யா கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சிகள் ஏழை-எளியோருக்கும், பங்காளர்களின் குடும்பத்திற்கும் பங்கீடு செய்யப்பட்டு வருகிறது.
நகரில் கிடா ஒன்று தற்சமயம் ரூ.6000க்கு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. வழமையான இறைச்சி வியாபாரிகள் தவிர, கிடாவுக்கு இருக்கும் கிராக்கியைக் கருத்தில் கொண்டு பல புதிய காயலர்கள் கிடா வியாபாரிகளாக உருவெடுத்துள்ளனர்.
நகர இறைச்சிக் கடைகளின் அருகாமையிலும், ஆஸாத் தெரு, அலியார் தெரு, ஹாஜியப்பா தைக்கா தெரு உள்ளிட்ட தெரு முனைகளிலும் கிடா வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது.
|