உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், 19.11.2010 வெள்ளிக்கிழமை மாலை 06.45 மணிக்கு, இக்ராஃ அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள், கல்வி உதவித்தொகை குறித்த விபரங்கள், புதிய உறுப்பினர்களை அங்கீகரித்தல் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசனை செய்து முடிவெடுக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தற்சமயம் தாயகத்தில் இருக்கும் உலக காயல் நல மன்றங்களின் முக்கிய உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளூரில் இருப்பதாக இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே உலக காயல் நல மன்றங்களின் அங்கத்தினர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தற்சமயம் தாயகத்திலிருக்கும் உலக காயல் நல மன்றங்களின் அனைத்து முக்கிய உறுப்பினர்களையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்திடும் பொருட்டு, தாயகத்திலிருக்கும் தத்தம் மன்றங்களின் உறுப்பினர்களுக்கு அந்தந்த மன்ற நிர்வாகிகள் தகவல் கொடுத்து இக்கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யுமாறும், இக்ராஃ செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் கேட்டுக் கொண்டுள்ளார். |