செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: ஐக்கியப் பேரவை தேர்வுக்குழுக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவருக்கான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[26 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 8831
யார் யாரெல்லாம் வேட்பாளர்கள் என்று கூட தெரியாமல் வாக்குச்சாவடிக்கு சென்றவர்களுள் நானும் ஒருவன்.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அப்பா பள்ளியின் பிரதிநிதியாக (ஒட்டுரிமையுடன்) ஐக்கிய பேரவை ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு/ தேர்தலுக்கு சென்ற இருவரில் ஒருவன் என்ற அடிப்படையில் அங்கு நடந்த நிகழ்வை சுருக்கமாக சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.
எல்ல ஜமாத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகள் தங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்து ஐக்கிய பேரவைக்கு தெரிவித்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் அங்கு இன்று தேர்தல் நடக்கும் என்று நான் எதிர்பார்கவில்லை. அங்கு நுழைந்ததும் தேர்தல் நடப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதை உணரமுடிந்தது. அப்பொழுது கூட வேட்பாளர்கள் யார் யாரென்று தெரியாத நிலை.
இஷா பாங்கிற்குப் பிறகு வழமைபோல் கிராஅத்துடன் கூட்டம் துவங்கியது. பின் வரவேற்ப்புரை. 25 நபர்கள் (ஓட்டுரிமை இல்லாதவர்கள்) ஐக்கியப் பேரவையால் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதற்கு காரணம் கூறப்பட்டது. விருப்ப மனு கொடுத்தவர்களின் பெயர்கள் (7 ) வாசிக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரகளின் (4 ) விபரங்கள் வாசிக்கப்பட்டு, மறுக்கப்பட்ட மனுதாரார்களின் (3 ) விபரகளுடன். மறுக்கப்பட்ட காரணங்களும் சொல்லப்பட்டது.
பின்னர் ஏற்றுக் கொள்ளபபட்ட மனுக்கள் மீது ஆலோசனை செய்வதா ? அல்லது நேரடியாக நான்கு பேரில் ஒரவரை தேர்ந்தெடுப்பதா? என்ற கேள்வி வாக்காளர்கள் (எங்கள்) மீது தொடுக்கப்பட்டது. பலர் அமைதி காத்தனர். சிலர் ஓட்டெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்போம் என்றனர்.வேறுசிலர் ஆலோசனை பண்ணினால் கருத்து வேறுபாடுகள்தான் அதிகரிக்கும், ஆதலால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்போம் என்றனர். ஆக மொத்தத்தில் ஆலோசனை பண்ணும்படி யாரும் குரல் எழுப்பவில்லை.
எனவே ஓட்டுபோட்டு ஒருவரை தேர்ந்தெடுப்போம் என்றும் அதுவும் இரண்டு கட்ட ஓட்டு நடத்துவோம் என்றும் கூறப்பட்டது/முடிவுசெய்யப்பட்டது.
(இரண்டு கட்ட ஒட்டு எனபது, முதலில் நடக்கும் ஓட்டெடுப்பில் அதிக வாக்குகள் வாங்கும் முதல் இருவரில் இரண்டாவது கட்டமாக ஒட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுப்பது எனபது. இந்த முறை உண்மையான் ஜனநாயகத்தில் நம்பிக்கயுள்ள நாடுகள் கடைபிடிக்கும் முறை)
பின்னர் ஓட்டெடுப்பின் விதிமுறைகள் விளக்கப்பட்டு வாக்காளர்களின் கருத்துகள்/ஆலோசனைகள் கோரப்பட்டது.
நான் எழுந்து சென்று,
" ஓட்டெடுப்பு என்று முடிவு செய்தாகிவிட்டது, வேட்பாளர்களின் பெயர் விலாசம் மற்றும் குடும்பத்தை பற்றி கூறினீர்கள். அதை வைத்து வேட்பாளரை எப்படி தேர்வு செய்ய இயலும் at least வேட்பாளர்களின் profile , என்னவென்று கூறினால், அவர்கள் நம்ம ஊருக்கு செய்த சேவைகள், அவர்கள் செய்த பொதுப் பணிகள் பற்றி கூறினால் தேர்ந்தெடுக்க எதுவாக இருக்கும்" என்று கூறினேன்.
என்னுடைய இந்த ஆலோசனை/கருத்தை ஏற்றுக்கொண்டு வேட்பாளர்கள் தங்கள் விருப்ப மனுவில் சுற்றிக் காட்டிய விசயங்கள் வாசிக்கப்பட்டது.
என்னை தொடர்ந்து மூத்த சகோதரர் பல்லாக் கக்கா அவர்கள் எழுந்து சென்று, இரண்டு கட்ட வாக்கெடுப்பை பற்றி வினவினார்கள். அத்தாவது,
" முதல் கட்ட வாக்கெடுப்பிலேயே ஒரு வேட்பாளர் 50 % சதவிகிதத்திற்கும் மேல் ஓட்டு வாங்கினாலும் இரண்டாவது கட்ட ஓட்டு தேவைதானா?"
(மிக அருமையான கேள்வி, "Vast General knowledge" and "Presence of Mind" உள்ள ஒருவர் மட்டுமே கேட்க நினைக்கும் கேள்வி)
50 % சதவிகிதத்திற்குமேல் ஒரு வேட்பாளர் ஓட்டு பெற்றால் இரண்டாவது கட்ட வாக்கெடுப்பு தேவையில்லை, அவரே வெற்றி வேட்பாளர் என்று பதில் கூறப்பட்டது.
சகோ., சட்னி செய்து மீரான் கேட்ட கேள்விக்கும் பதில் கூறப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு ஆரம்பமாகியது. வாக்காளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு ஒட்டு சீட்டு தரப்பட்டது. ஒவ்வொருவராக சென்று ஒட்டு போட்டோம்.
61 ஓட்டுகள் பதிவாகியது. சகோதரி மைமுனதுல் மிஸ்ரிய 40 வாகுகள் வாங்கி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சகோதரி வஹீதா 16 வாக்குகளும், மற்ற இரு சகோதரிகளும் முறையே 3 மற்றும் 2 வாக்குகள் பெற்றனர்.
து-ஆ வுடன் கூட்டம் sorry ஓட்டெடுப்பு நிறைவுபெற்றது.
ஓட்டெடுப்பு sorry கூட்டம் (Entire Process) ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
வேட்பாளர்(கள்) யார் என்று தெரியாமல் வாக்குச்சாவடிக்குள் நுழைந்தது இதுவே எனக்கு முதல் முறை. இன்ஷா-அல்லாஹ் இதுவே கடைசியாக இருக்குமா?
மொத்த நிகழ்வையும் ஒளிப்பதிவு செய்த ஒளிபதிவாளர்களை தவிர வேறு எந்த மீடிய காரர்கள் கண்ணில் படவில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross