செய்தி: முஸ்லிம் மாணவியர் முக்காடு அணிய தடையில்லை! பிறப்புச் சான்றிதழ் படி பெயர் பதிவு செய்யலாம்!! மக்கள் சேவா கரங்கள் முயற்சிக்குப் பின் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இறுதி காலத்தில் மார்க்க கல்வி குறைந்து விடும்(நபிமொழி ) posted byMoulavi Hafil M.S.Kaja Mohideen. Mahlari. (Singapore.)[27 September 2011] IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8864
மாசாஅல்லாஹ். மிகவும் அருமையான ஒரு முயற்சி. நமது மார்க்கம், கலாச்சாரம் இவைகளுக்கு பாதிப்பு வரும்போது நாம் அனைவரும், தனியாகவும், கூட்டாகவும், பொதுநல நிறுவனங்கள்,பள்ளிகள், ஜமாத்கள், மூலமாக அவைகளை குறித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
தலையில் முக்காடு அணியும் விஷயம் பற்றி இதற்கு முன்பு நமதூரில் பல உலமாக்கள், பல இடங்களில் தங்களின் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார்கள். பெண்கள் பாடசாலையில் இப்படி ஒரு முறை அசெம்பளியில் முஸ்லிம் பெண்கள் தலையை மூடக்கூடாது என சில ஆசிரியர்கள் சொல்ல, அதை அப்போது அங்கு படித்துக்கொண்டு இருந்த எனது மகள் என்னிடம் சொல்ல அந்த செய்தியை நன்றாக உறுதி செய்துக்கொண்டு அப்போதே அதனை கண்டனம் செய்து நமது புனித மஜ்லிஸில் புகாரிஸ் ஷரீப் ஹதீஸ் மஜ்லிஸில் அதனை குறித்து கண்டித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்தேன்.
அன்று அம்மஜ்ளிஸ் நிறைவுற்றதும் அங்கிருந்தே எனது மாமியார் உட்பட சில தாய்மார்கள் ,சகோதரிகள் நேரடியாக பாடசாலைக்கு சென்று அங்குள்ள ஆசியர்களிடம் கூறி ,தற்காலிகமாக அதற்க்கான வெற்றியையும் பெற்று வந்தார்கள் .அல்ஹம்து லில்லாஹ். இதைபோன்ற இன்னொரு முயற்சியையும் நாம் அனைவரும் செய்தாக வேண்டும்.
முன்பெல்லாம் நமதூரில் அணைத்து பாட சாலைகளும் வெள்ளி,நாயிறு ஆகிய தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அதனால் நமது மக்கள் ஹாமிதிய்யா,மல்ஹஅருள்ஆபிதீன் போன்ற மார்க்க கல்வி நிறுவனங்களில் இலவசமாக சன்மார்க்க கல்வி கற்று வந்தனர். பிறகு இன்றுவரை நமதூர் பாடசாலைகள் சனி,ஞாயிறு ஆகிய இருதினங்கள் விடுமுறை அளித்து விட்டு ,நமது மார்க்க புனித நாளாகிய வெள்ளிக்கிழமை அன்று இஸ்கூல் பாட நாளாக அறிவித்து விட்டு செயல் படுத்தி வருகிறார்கள்.
அதனால் நமது மக்களின் மார்க்க கல்விக்கு பெறும் பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. (இறுதி காலத்தில் மார்க்க கல்வி குறைந்து விடும் என்ற நபிமொழி இங்கு நினைவு கூறத்தக்கது ) இதனை குறித்து அப்போதே yuf, kaaide millath, போன்ற நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை. நமது மக்களின் மார்க்க கல்விக்கு பாதிப்பு ஏற்பட்டது தான் மிச்சம்
ஆகவே ! பொறுப்புள்ள நாம் அனைவரும் ஒன்றாக இதுவிசயம் குறித்து முயற்சித்து ,மீண்டும் வெள்ளி,ஞாயிறு ஆகிய தினங்கள் பள்ளிகூட விடுமுறையாக ஆக்கி, நமது மாணவ,மாணவியர்கள் மீண்டும் சன்மார்க்க கல்வியை இனிதே கற்றிட நாம் அனைவரும் முயற்சி செய்வோமாக ~ வல்ல அல்லாஹ் அதற்கு துணை செய்வானாக ~ ஆமீன். !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross