Re:புதுப்பள்ளி ஜமாஅத் 16வது ... posted byKaleefa Seyed Mohamed (Kayalpatnam)[28 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 8984
16வது வார்டுக்கு போட்டியிட விருப்ப மனுவை புதுப்பள்ளி ஜமாஅத்திற்கு கொடுத்தவர்களில் நானும் ஒருவன். இது சம்பந்தமாக கலந்தாலோசிக்க பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் விருப்பமனு கொடுத்த ஐந்து நபர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த கூட்டத்தில் ஜமாஅத் சார்பாக ஒருவரை தேர்ந்தெடுப்பது என அறிவிக்கப்பட்டது.
இதற்கு கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானோர் மற்றும் விருப்ப மனு தாக்கல் செய்த ஐவரில் மூவரும் (கலீபா செய்யது முஹம்மது ஆகிய நான், பி.எஸ். செய்யது முகம்மது, பாட்டா மஹ்மூது) எதிர்ப்பு தெரிவித்த பட்சத்தில் கூட்டம் எந்தவித முடிவும் காணாமல் நிறைவு பெற்றது. இந்நிலையில் 26-09-2011 அன்று ஜமாஅத் சார்பாக வாக்கெடுப்பு நடைபெற இருப்பதாக புதுப்பள்ளி சந்தியில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
இதை அறிந்த நான் ஜமாஅத்திற்கு ஒரு லட்டர் அனுப்பி 'எனக்கு இந்த வாக்கெடுப்பில் உடன்பாடு இல்லாத பட்சத்தில் எனது விருப்பமனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தேன். அப்படியிருந்தும் எனது பெயரையும் வாக்கெடுப்பில் சேர்த்துள்ளார்கள்.
மேலும் தேர்தல் என்று எடுத்துக் கொண்டால் ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் இருவருமே வாக்களித்தால் மட்டுமே அந்த தேர்தலை முறையாக ஏற்றுக் கொள்ள முடியும். எனவே ஜமாஅத் மூலம் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பிற்கு நான் ஆட்சேபம் தெரிவிப்பதோடு போட்டியிடவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன் என்பதை அறியத்தருகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross