சபாஷ் சரியான போட்டி posted byசொளுக்கு M.A.C.முஹம்மது நூகு (சென்னை)[28 September 2011] IP: 113.*.*.* India | Comment Reference Number: 9031
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த சில மாதங்களாக யார் நகர் மன்றத்தின் அடுத்த தலைவர் யார் ? ? ? ? ? ?...........? ? ?... என்ற கேள்விகளும், அதற்கு தகுந்தார்போல நம்மில் பலர் இவர்தான் வர வேண்டும், அவர்தான் வர வேண்டும் என்றெல்லாம் எண்ணி, அதனை வெளிப்படையாகவும் காயல் வெப் சைட் மூலமாகவும் நமதூரை சார்ந்தவர்களுக்கு தெரியப்படுத்தி கொண்டு இருந்தோம்.
இலவு காத்த கிளி கதை போல நம்முடைய கதை ஆகி பழம் வரும் என்று பார்ததால் வெறும் பஞ்சு தான் வந்தது ( பெண்களுக்கான தனி நகராட்சியாக மாறியது ) இறைவனின் நாட்டம் நமதூருக்கு வேறு விதமாக இருக்கிறது.
வார்டு உறுப்பினர் முதல் நகராட்சி தலைவர் வரை ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்ற நம்மில் பலருடைய என்னம் எல்லாம் இப்போது வீணாகி கொண்டு இருக்கிறது இது எதனால் என்று நாம் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஒரு முனைப்போட்டி அது இரு முனையாக, மும்முனையாக, இன்னும் பல முனை போட்டிகளாக மாறி கேலியும், கிண்டலும் செய்யும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளது. இது மிகவும் வேதனைக்குரியது.
தேர்தல் என்பது ஜனநாயக முறைப்படி, மக்களால், மக்களுக்கு பிடித்தமானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பதோ கட்டபஞ்சாயத்து!! யார் உறுப்பினராக வர வேண்டும், யார் தலைவராக வர வேண்டும் என்று ஊரில் உள்ள பணக்காரர்களும், தொழில் அதிபர்களும், ஜமாத்தை சார்ந்தவர்களும் தேர்ந்தெடுப்பது சரி இல்லை.
அப்படி தேர்ந்தெடுததன் மூலம் நாம் எதிர் பார்த்த ஒற்றுமை கிடைத்ததா? இல்லை, ஒரு அபாயகரமான் முடிவை ஐக்கிய ஜமாத் இன்று எடுத்துள்ளது மிகவும் வேதனைக்குறியது.
இப்படி பல முனை போட்டியாலும், மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமலும் இவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர்கள் தோல்வியை தழுவினால் அது வேட்பாளரின் தோல்வியா? அல்லது ஐக்கிய சபையின் தோல்வியா?
வல்ல இறைவன் நமதூர் பெரிய மனிதர்களுக்கு எப்போதுதான் நல்ல புத்தியை கொடுப்பானோ, எப்போதுதான் நாம் ஒற்றுமை என்னும் கயிற்றை பிடித்து ஓர் அணியில் நடப்போமோ.. எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே வெளிச்சம்.
Moderator: சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross