Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byP N IBRAHIM NASER (KOTTAYAM)[29 September 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9127
தேர்தல் எனபது போட்டியிடும் வேட்ப்பாளர்களில் யாராவது ஒருவரை மக்கள் அவரவர் மனசாட்சிப்படி தேர்ந்தெடுப்பது. தேர்தல் என்பதின் வரையறுக்கப்பட்ட விதி அதுதான். இதில் அமைப்புகளோ கட்சிகளோ போட்டியிடலாம். அது வேறு விஷயம். ஆனால் இவ்வாறு போட்டியிட துணிவில்லாத ஒரு அமைப்பு தங்களின் "பினாமியாக" யாரையாவது களத்தில் இறக்கி "இவருக்குத்தான் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் ""இவர்தான் ஊரின் பொது வேட்பாளர் "என்றெல்லாம் செயல் படுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.
இன்று கிராமப்புறங்களில் பல லட்சம் ரூபாய்க்கு பஞ்சாயத்து தலைவர் பதவியை ஏலம் போடுவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. அதை தவறு என அரசு சொல்ல்கிறது. அப்படியானால் இது சட்டவிரோதம் இல்லையா? "ஊர் கூடி தேர் இழுப்பது வேறு. ஊர் கூடி "தேட்டை "போட நினைப்பது வேறு. இதில் இரண்டாவதைதான் செய்ய நினைக்கிறது. இதை தடுத்து நிறுத்துவது நம் அனைவரின் கடமையுமாகும். வேறு விஷயங்களில் பேரவை தனது கவனத்தை செலுத்தட்டும். தேர்தலில் வேண்டாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross