வழங்கப்பட்ட நேரத்தை பயன்ப்படுத்துவோம் posted bymujahidh (kayalpattanam)[11 November 2010] IP: 123.*.*.* India | Comment Reference Number: 913
அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோதரர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்.
“யார் எவ்வித ஞானமின்றி குர்ஆனைப் பற்றி பேசுகிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்”. (திர்மிதி, அஹ்மது)
“உமக்கு எது பற்றி அறிவு இல்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாகச் செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக்கூடியனவாக இருக்கின்றன.” (திருக்குர்ஆன் 17:36)
குழப்பத்திற்கு காரணாமாக இருக்கும் அணைத்து உலமாக்களும் நிச்சயமாக அல்லாஹுவை பயந்து கொள்ளட்டும். அல்லாஹ் அவர்களை விசாரிக்கு முன் தங்களை தாங்கள் விசாரித்து கொள்ளட்டும். அல்லாஹ் அனைத்தையும் விசாரிக்க கூடியவனாக இருக்கின்றான்.
'விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அப்போது அவற்றுக்கிடையே (மெளனமாம்) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனைவிடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனைவிடவும் சிறந்தவன் ஆவான். அதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ, காப்பிடத்தையோ பெறுகிறவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'.புகாரி 7081
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்துபோய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெரும்விடும்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கொலை, கொலை' என்று பதிலளித்தார்கள். புகாரி 7061
சகோதரர்களே! இன்றைய கால சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியது அல்லாஹுவை நினைவு கூறுவது தான், அதை விட்டு நாம் எங்கே திசை திருப்பபடுகின்றோம். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்தட்டும்.
யா அல்லாஹ்! உள்ளங்களை திருப்புபவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பால் திருப்புவாயாக! (முஸ்லிம் 4798)
''அறிமுகமான நாள்களில் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூர்வர்'' (திருக்குர்ஆன் 22:28)
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல" என்று நபி(ஸல்) கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா?' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) கூறினார்கள். புகாரி 969
பிரார்த்தனைகளில் மிகச் சிறந்த பிரார்த்தனை அரஃபா தினத்தன்று கேட்கும் பிரார்த்தனைதான்! நானும் எனக்கு முன்சென்ற நபிமார்களும் கூறியவைகளில் மிகச் சிறந்த -திக்ர்- லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாPக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர் என்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அம்ர் பின் ஷுஐப் -ரலி, நூல் : திர்மிதி)
ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகிய நான்கு வார்த்தைகளும் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவைகளாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் :ஸமுரா பின் ஜுன்துப் -ரலி, நூல் : முஸ்லிம்)
அல்லாஹ்வைப் புகழ்வதுடன், அவனைத் தூய்மைப் படுத்து கிறேன். மகத்தான அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்.
இன்னும் ஏராளமான இபாதத்துகள் உள்ளன அதை நாம் கடைபிடிப்போம் இன்ஷா அல்லாஹ்.
உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. (108:2)
நாம் அல்லாஹுக்காக செய்வோம், பிறை குழப்பத்திற்காக அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான். பொறுப்பில் உள்ளவர்கள் உலமாக்கள் பதில் சொல்லட்டும்.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தன் பிரiஜகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுக்குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என்று சொன்னதாக எண்ணுகிறேன் என்று கூறினார்கள். புகாரி 2558
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross