Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byAbdul Wahid Saifudeen (Kayalpatnam)[30 September 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9150
என்னுடைய முந்தய பதிப்புகளில் ஐக்கிய பேரவை உள்தேர்தலுக்கு முன் செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் முக்கியமான சிலவற்றை செயத் தவறிவிட்டது என்பதைதான் நாசூக்காக சுற்றி காட்டினேனே தவிர, நடந்து முடிந்த தேர்தலின் முடிவை நான் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புரியவைப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்ச்சிதான் இந்த எனது கீழ்க்கண்ட விளக்கம்).
ஐக்கிய பேரவையின் தவறுகளை நான் ஏன் அவர்களிடம் அங்கு சுற்றிகாட்டவில்லை?. ஏன் இணையத்தில் சுற்றிகாடவேண்டும் ?என்று சிலருக்கு நியாயமான கேள்வி எழும். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, உங்கள் செயல்பாட்டில் "transparency" இல்லை என்பதனை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அவர்களிடமே சுற்றிக்காட்டியுள்ளேன், அவர்கள் அதை ஏற்றுகொண்டதாக தெரியவில்லை" அதன் வெளிபாடுதான் வாக்காளர்களாகிய எங்களுக்கு வேட்பாளர் விபரங்கள் முற்க்கூட்டியே அறிவிக்கப்படவில்லை.
நானும் ஓட்டெடுப்பில் கலந்துகொண்டு எனது ஓட்டை பதிவு செய்ததால், விருப்பு, வெறுப்பின்றி அதன் முடிவை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அன்று ஜலாலியாவில் ஓட்டெடுப்பில் கலந்துகொண்டு, முடிவுக்கு மாறாக செயல்படுவது அல்லது வேறு வேட்பாளர்களுக்கு ஒட்டு போடுவது "முனாபிகின்" செயல் என்று நான் நம்புகிறேன். நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன்.
(ஓட்டெடுப்பிற்கு முன் அரங்கேற்றியதாக சொல்லப்படும் நாடகங்கள் என் காதிலும் விளாமளில்லை. ஆனால் அதற்க்கு என்னிடம் எந்த ஆதாரமுமில்லை. ஆதாரமில்லாத ஒரு விஷயத்தை கையில் எடுத்துகொண்டு முடிவுக்கு மாற செயல்படுவது முற்றிலும் தவறு என்பது என்னுடைய கருத்து).
இங்கு சிலர் " ஐக்கிய பேரவை நடத்தும் உள்தேர்தலில் தோற்றுவிட்டால் நகராட்சி தேர்தலில் வேட்பாளராக நிற்கக் கூடாது" என்று ஐக்கிய பேரவை பலரின் ஜனநாயக உரிமையை பறிக்கிறது என்று தங்களது கருத்தை தெரிவித்துள்ளார்கள். ஆனால் அவர்களின் கருத்திலிருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.
ஐக்கிய பேரவை தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற எல்லா வேட்பாளர்களிடமும் அந்த உறுதிமொழியை கேட்கவில்லை. மாறாக தங்களிடம் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மட்டுமே அதை கோரியுள்ளது. இதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. இது ஜனநாயகத்தை மீறிய செயல் என்றும் கூற முடியாது.
அவ்வாறு உறுதிமொழி கொடுக்க மறுத்த சகோதரி (ஆபித ஷேய்க்) யை குறைகூறுவதும் முற்றிலும் தவறு. அது அவருடைய சொந்த விருப்பம். அவ்வாறு உறுதிமொழி கொடுக்க மறுத்த மனுதாரார்களை உள்தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் சேர்க்காமல் தேர்தல் நடத்திய ஐக்கிய பேரவையும் இந்த விசயத்தில் தவறு செய்யவில்லை என்பதே என்னுடைய கருத்து.
அதே வேளையில் உறுதிமொழி கொடுக்க மறுத்த சகோதரிகளுக்கு (3 ) தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு எல்ல உரிமையும் இருக்கிறது. அவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் ஊர் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள் அல்லது ஊருக்கு எதிராக செயல்படுகிறார்கள் எனபது விதண்டா வாதம்.
உண்மையான ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவன் நான். இருந்தபோதிலும் ஒரு முஸ்லிம் தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதில் அதிக கவன செலுத்தவேண்டும். இந்த வகையில் ஐக்கிய பேரவையில் உறுதிமொழி கொடுத்து உள்தேர்தலில் தோல்வியடைந்த (3 ) மனுதாரகளில் எவரும் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு செய்யவில்லை. அவர்கள் கொடுத்த உறுதிமொழியை மீறவில்லை. இது உண்மையில் பாராட்டுக்குறிய விஷயம்.
மீண்டும் ஒருமுறை ஐக்கிய பேரவைக்கு "ஜால்ரா" போடுபவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, விமர்சனம் செய்வது ஐக்கிய பேரவை என்று ஒன்று இருக்ககூடாது என்பதற்காக அல்ல. அது ஜால்ரா அடிப்பவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக. அது தவறுகள் சுற்றிக்காட்டப்ப்படும்போது தன்னை திருத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக. அதன் செயல்பாடுகளில் "Tranparency" இருக்க வேண்டும் என்பதற்காக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross