Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byShameemul Islam SKS (Chennai)[30 September 2011] IP: 115.*.*.* India | Comment Reference Number: 9195
இப்பள்ளி உள்ளிட்ட ஒரு சில பள்ளிகள் மிக அழகான முறையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே கூட்டங்கள் நடத்தி,
அனைவரது கருத்துக்களையும் பதிவு செய்ய வாய்ப்பளித்து, அதனடிப்படையில் அதிகமான கருத்துக்களை சுருக்கி முடிவு செய்ய குழுவையும் அமைத்து, அக்குழு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் அழகான முடிவையும் அறிவித்திருக்கிறார்கள்.
07ஆவது வார்டுக்கு, சொளுக்கார் தெருவைச் சார்ந்த எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் அவர்களை நியமித்திருப்பது மிகவும் பொருத்தமான சரியான முடிவாகத் தெரிகிறது. இவர் ஏற்கனவே தமது குடும்பத்திற்கான பொருளாதாரத் தேவைகளை வியாபாரம் செய்து தேடித் தருபவர். நல்லொழுங்கு மிக்க குடும்பப் பின்னணியும் இவருக்கு உண்டு. எனவே மேஜைக்கு கீழ் வழங்கப்படும் பணங்களின் மீது இவருக்கு ஒருபோதும் நாட்டம் வராது என நம்பலாம். பொதுச் சேவையிலும் இவர் ஒரு ஊரறிந்த சேவகர்.
08ஆவது வார்டுக்கு கொச்சியார் தெருவைச் சார்ந்த எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய் அவர்களைப் பள்ளியின் சார்பில் பொது வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பதும் அழகான முடிவாகவே தெரிகிறது.
இவருக்கு சட்ட ரீதியாக முடிவெடுக்கும் நிலை குறித்து பள்ளியின் தலைமை நல்ல ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். தவறுகள் எப்படி எல்லாம் நிகழ வாய்ப்புள்ளது என்பதை இவருக்கு தொடர்ச்சியாக நிகழும் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் அறிவுறுத்தி வர வேண்டும். அலட்சியம் செய்தால் ஊரின் மேல் அக்கறை இல்லாத ஓநாய்கள் இவரை வென்று விடலாம். கிழக்குப் பகுதியில் மட்டுமல்லாது நமதூருக்கே கிடைத்த விலைமதிப்பற்ற ஒரு சமூக சேவகி.
இவர்கள் அல்லாத ஏனையவர்கள் களத்தில் நிற்பதும் போட்டியிடுவதும் அவரவர் ஜனநாயக உரிமை. ஆனால் அவர்களை டெபாசிட் இழக்கச் செய்து தோற்கடிக்க வேண்டியது சமூகக் கடமை. அதுதான் கூட்டு வாழ்க்கையின் அச்சாணியாக அமையும்.
ஒரு தலைமையின் கீழ் கட்டுப்பட்ட ஒரு சமுதாயம் என்ற வலிமையையும் பெற்றுத் தரும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross