செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர பொதுமக்களுக்கு, நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர் ஆபிதா வேண்டுகோள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byVilack SMA (Hetang)[01 October 2011] IP: 59.*.*.* China | Comment Reference Number: 9220
அஸ்ஸலாமு அழைக்கும் .
அன்பு சகோதரி ஆபிதா , நீங்கள் படித்த பண்பாளர் , ஒரு பள்ளியை திறம்பட நடத்தி , பொதுச்சேவை செய்து வருபவர் , இந்தவகையில் நீங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் . ஆனால் , ஊரின் ஒற்றுமை என்று வரும்போது , அதை மதித்து நடக்கவும் தெரிந்திருக்க வேண்டும் . இது உங்கள் அந்தஸ்தை மேலும் உயர்த்தும்.
நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் , சில விசமிகளின் சூழ்ச்சியாலும் , அவர்களது நயவஞ்சக வார்த்தைகளாலும் கவரப்பட்டு இவ்வாறு செய்து விட்டீர்கள் என்று நெருங்கிய சில நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன்.
இன்னும்கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை .. போட்டியில் இருந்து விலகி , உங்கள் அந்தஸ்தை மேலும் உயர்த்துங்கள் . " முன் வைத்த காலை பின் வாங்க மாட்டேன் " என்றெல்லாம் பழைய பஞ்சாங்கம் பாடி , விசமிகள் உங்களை வழிகெடுக்க முயல்வார்கள் . படித்த நீங்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள் .
முன் வைத்த காலை , ஊர் ஒற்றுமையை கருதி சில நேரங்களில் பின் வைப்பதில் தவறில்லை .இவ்வாறு நீங்கள் செய்யும் பட்சத்தில் , இன்ஷா அல்லாஹ் , அடுத்த தேர்தலில் ஊர் மக்களின் அனைவரது ஆதரவும் உங்களுக்கு உண்டு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross