செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: உங்களுக்காக உழைக்க உத்தரவிடுங்கள்! உங்கள் சகோதரியை வெற்றி பெறச் செய்யுங்கள்!! பொதுமக்களுக்கு ஐக்கியப் பேரவை பொது வேட்பாளர் மிஸ்ரிய்யா வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted bymackie noohuthambi (kayalpatnam)[01 October 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 9234
அன்பு சகோதரி முத்து மைமூனதுல் மிஸ்ரியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இன்றைய தினசரியை படிக்க முற்பட்டபோது உரிமையோடு வேண்டுகிறேன் ஊருக்கு உழைக்க உத்தரவிடுங்கள் என்ற உங்களின் வேண்டுகோள் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு எங்கள் எல்லோரின் கரங்களிலும் வந்து விழுந்தது. உங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்க்களும்கூட மனம் மாறி உங்களுக்கு ஆதவாக வாக்களிக்கும் மன மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புதமான வசன நடை அதில் நிறையவே காணப்படுகின்றன.
மைத்துனன் சலாஹுதீன் அவர்களின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அருமையான வேண்டுகோள். உங்களை நகரமன்ற தலைவியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் உங்களை தலைவர் வேட்பாளராக அறிவிக்க ஐக்கிய பேரவையும் 3 உருப்பினர்கள் ஜமாஅத் சார்பாக வாக்களிக்க தேர்ந்டுத்த அணுகு முறையும் பின்பற்றிய நெறிமுரையும்தான் சர்சைக்கிடமாகி விட்டது.
எங்கள் மொகுதூம் பள்ளி ஜமாத்தில் தினசரி ஐந்து வேளை ஜமாத்துடன் தொழுபவர்கள் சுமார் 50 பேர். ஐக்கிய பேரவையின் அழைப்பின் பேரில் 26m திகதி கூட்டத்துக்கு சென்றவர்கள் 3 பேர்.4 பேர் களத்தில் நிற்கிறார்கள் எனபது முன்கூட்டியே அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அல்லது கூட்டத்துக்கு சென்றபின் தான் அது தெரியும் என்றாலும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் மூவரும் ஜமாத்தை கூட்டி கருத்து கேட்டு விட்டு பின் அவர்கள் வாக்குரிமையை பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த ஜனநாயக நெறிமுறை மீறப்பட்டதால் எங்களுக்கு இதில் கருத்து வேற்றுமை ஏற்பட வழி வகுத்து விட்டது.
இன்ஷா அல்லாஹ் நீங்கள் நகரமன்ற தலைவியாக வெற்றி வாகை சூடி, நகர்மன்றம் கூடும்போது, 18 பல்வேறு கருத்துள்ள உறுப்பினர்கள் அங்கே இருப்பார்கள். ஊருக்கு நலத்திட்டம் வகுக்கும்போது நீங்கள் அவர்கள் ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்க வேண்டும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் வார்டிலுள்ள அவர்களை தேர்ந்தெடுத்த ஜமாதார்களிடம் கலந்து பேசி அவர்கள் ஒத்துழைப்புடன் ஊருக்கான நலத்திட்டத்தை முன்னெடுத்து சென்றால் இன்ஷா அல்லாஹ் உங்கள் முயற்சி வெற்றி அடையும்.
எல்லா கட்டத்திலும் மஷூரா என்னும் கலந்துரையாடல் முக்கியம். மஷூராவில் வஹீயுடைய பரகத் இருப்பதாக் உலமாக்கள் சொல்கிறார்கள். சிரியவர்களுடைய ஆலோசனையையும் நபி அவர்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட்டதாக ஹதீஸ்களில் காணக்கிடைக்கிறது.
எனவே இந்த வழிமுறையை நீங்கள் உங்கள் ஆட்சி நெறியாக பின்பற்றினால் காயல்பட்டணம் சரித்திரத்தில் நீங்கள் முத்திரைபதிக்க முடியும். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross