நடந்தது என்ன? posted bySalih (New Delhi)[03 October 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 9413
ஐக்கிய பேரவைக்கு ஜால்ரா போடுபவர்களே தயவுசெய்து உங்கள் நிலைபாட்டை மற்றவர்கள் மீது அறிவுரை அல்லது ஆலோசனை என்ற பெயரில் திணிக்காதீர்கள். சகோதரி ஆபித் ஷேக் ஐக்கிய பேரவையின் நிபந்தனையை ஏற்காததால் ஐக்கிய பேரவை நடத்திய தேர்தலிலிருந்து நீக்கப்பட்டார். சகோதரி வஹீதா அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அது சரி என்று நினைத்திருக்கலாம். அதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அது தவறு என்று நினைத்திருக்கலாம். ஆகையால் இருவர்களையும் ஒப்பிட்டு எழுதாதீர்கள்.
நான் கேள்விபட்டவரையில் சகோ, ஆபிதா சேக் அவர்கள் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்ளாததற்குறிய காரணங்களையும் ஐக்கிய பேரவைக்கு அவர் எழுத்து மூலம் தெரிவித்துள்ளர்ர். அதில் சொல்லபடாத காரணங்களில் ஒன்று "பேரவையின் ஓட்டெடுப்பை சிலர் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்ற முயலுகிறார்கள் என்பதுதான்.
இன்று எனக்கு ஊரிலிருந்து வந்த செய்தி அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. ஒட்டேடுப்பிற்க்கு முதல் நாள் ஓட்டெடுப்பில் ஓட்டுபோடும் உரிமையுடன் கலந்து கொண்ட, கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தக்கூடிய செல்வந்தர் ஒருவர் (வாக்காளர்) தன்னுடைய ஆணையை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிற ஜமாத்தினால் ஒட்டேடுப்பிற்க்காக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு (வாக்காளர்களுக்கு) போன் செய்து குறிப்பிட்ட ஒரு மனுதாரர்க்கு (வெற்றிபெற்றவருக்கு) மட்டும் ஒட்டு போடும்படி கட்டளை இட்டுள்ளார். உறுதிமொழியும் வாங்கியுள்ளார்
இங்கு எனது கேள்வி,
1 ) ஓட்டெடுப்பில் கலந்துகொண்ட சில பிரதிநிதிகளுக்கு வேட்பாளர்கள் யார் என்று ஓட்டெடுப்பு நடைபெறும் நிமிடம் வரை தெரியாத விஷயம், அந்த செல்வந்தருக்கு ஒரு நாள் முன்பாக எப்படி தெரிந்தது?
2 ) ஏன் அந்த செல்வந்தர் (வாக்காளர்) குறிப்பிட்ட (வெற்றியடைந்த) அந்த மனுதாரருக்காக பிற வாக்காளர்களிடம் ஒட்டு சேகரிக்கவேண்டும்?
3 ) ஊருக்கு முன்பின் தெரியாத சகோதரி மிஸ்ரியா 61 பதிவான வாக்குகளில் எப்படி 40 ஓட்டுகள் பெறமுடிந்தது?
குறிப்பு : அந்த செல்வந்தர் ஒரு ஜமாஅத் பள்ளியிலிருந்து ஒட்டேபோடும் உரிமையுடன் தேர்வு செய்யப்பட்டவர் மட்டும் அல்ல பேரவையுடன் மிகுவும் நெருங்கியவரும் ஆவார்.
பேரவை நடத்திய தேர்தலில் சகோதரி மிஸ்ரியா வெற்றிபெற்றார் என்பதைவிட சகோதரி வஹீதா தோற்கடிக்கப்பட்டார் எனபதுதான் சரி. இதில் பேரவைக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு என்பதை துல்லியமாக என்னால் சொல்லமுடியாவிட்டாலும், பேரவைக்கு மிக நெருங்கியவர் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
என்னுடைய தாழ்மையான கருத்து என்னவெனில் சகோதரி ஆபிதா ஷேக்கின் முடிவு (நிபந்தனையில் ஒப்பமிடாதது , தனியாக் தேர்தலை சந்திக்க முடிவு செய்தது) சிறந்ததாகும்.
Best wishes to Sis. Abidha Sheik
அல்-குரானில் உள்ள ஒரு வரி என் ஞாபகத்திற்கு வருகிறது.
"அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள், அல்லாஹுவும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சியாளர்களில் சிறந்த சூழ்ச்சியாளன் அல்லாஹ்." இவர்களின் சூழ்ச்சி தெரிந்துவிட்டது. இன்ஷா-அல்லாஹ், அல்லாஹ்வின் சூழ்ச்சி என்னவென்று பொருத்திருந்து பார்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross