Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byA.Lukman (kayalpatnam)[04 October 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 9513
சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்
நகராட்சி தலைவி தேர்வு சம்பந்தமாக பல கருத்துக்கள் வலை தலத்தில் வருகிறது. எனது கருத்து நாட்கள் குறைவாக இருந்த காரணத்தால் ஐக்கியபேரவையால் பரிசீளிக்கபடவில்லை.
நான் சொன்னது, விருப்பம்னு தாக்கல் செய்திருப்பவர்களின் பட்டியலை எல்லா ஜமாதுக்களுக்கும் அனுப்பி அந்தந்த ஜமாத்துக்கள் முதலில் பரிசீலனை செய்து அதன் பிறகு பேரவை பொதுக்கூட்டத்தில் முடிவு எடுக்கலாம் என்பதுதான்.
தயவு செய்து விமர்சனம் செய்பவர்கள் முதலில் உங்கள் கருத்துக்களை பேரவைக்கு தெரிவித்து, அது தக்க காரணமின்றி மறுக்கப்பட்டால் அப்போது பொது விவாதத்துக்கு கொண்டுவாருங்கள்.
ஒரு அமைப்பு செயல்பட பொருளாதாரமும் மனித சக்தியும் அவசியம். விமர்சனம் எழுதும் நம்மில் எத்தனை பேர் பேரவைக்கு இந்த விசயத்தில் பங்கெடுத்தோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஜனாப்.முத்துஹாஜி பிரபு சுல்தான்ஹாஜி போண்டவர்களின் செயல்பாட்டை குறைத்து மதிப்பிடமுடியாது .பேரவையின் அமைப்பிலும் காலத்திற்கேற்ற மாற்றம் தேவை. பேரவையின் நிர்வாக குழுவிற்கு ஒவ்வொரு ஜமாஅதிளிருந்தும் ஒரு நபர் வீதம் தேறுவு செய்து அதிலிருந்து ஒருவரை பேரவை தலைவராக தேர்வு செய்வது நல்லது.
சூப்பர் ஆலோசனை கமிட்டியாக, புரவலர்களாக பேரவைக்கு பொருளுதவி செய்தே நல்ல ஆலோசனைகளை இதுவரை தந்துவரும் பெரியவர்களை நியமிக்கலாம் என்பது எனது கருத்து. எல்லாம் வல்ல அல்லாஹ் நன்கு அறிந்தவன் . நன்றி வஸ்ஸலாம்,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross