செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இனியும் ஏமாந்து போகாமல் இருக்கும் அளவுக்கு சுதப்பிய பேரவைக்கு நன்றி posted byM Sajith (DUBAI)[04 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9545
ஊரின் நலன் என்றால் என்ன? ஊர் மக்கள் அனைவரின் நலமா அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பின் நலமா?
Undertaking நடைமுறையில் உள்ளது தானே என்பது சரிகானல் நுஸ்கி காக்கா.. நீங்கள் இதை சொல்லும் போது கூடவே நடந்ததில் தவறுள்ளது என்பதையும் குறிப்பிட்டு இருக்கவேண்டும். அதுதான் நியாயம்.
Undertaking என்பது சட்டப்படி சரியா? ஒருவரின் பிறப்புரிமையை பறிக்கும் நடவடிக்கையாக இருந்தாலுமா?
இந்த தேவையில்லாத ஒன்று, ஒரு வேளை, சகோதரி ஆபிதாவும் வக்களிப்பில் சேர்க்கப்பட்டு தெரிவு செயப்படாமல், பின் மனு தாக்கல் செய்திருந்தால் இன்று பேரவையை விமர்சித்து எழுதும் 'நியாயம்' கோரும் எல்லோரும் அவரை கன்டித்தும், உதாசீனப்படுத்தியும் இருக்கமாட்டார்களா?
இறைவன் மேல் ஆனையிட்டு ஒருவர் ஊருக்காக, ஊரின் நன்மைக்காக செயல்படுவேன் என்ற வாக்குறுதியை ஏற்றுக்கெள்ளாமல் - இதில் தான், என் படிவத்தில் தான் கையெழுத்திடவேண்டும் என்பது வரம்பு மீறல் இல்லையா?
பேரவையின் படிவத்தில் 'லஞ்சமோ' 'ஊழலோ' இல்லை, போட்டியிடமாட்டேன் என்பதை தவிர வேறு ஏதாவது இருக்கிறதா? - கவனம் 'கன்ட்ரோல்' லில் தானே தவிற மற்றது இல்லை என்பது போல இல்லயா?
ஒருவேளை, இவர்கள் ஏமாற்றிய வஹிதா லாத்தாவோ அல்லது மற்ற இருவருமோ போட்டியிட்டால் ஏதாவது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதா? - மக்களின் உதாசிணம் தவிர வழிமுறை உள்ளதா? இதைத்தான் மக்கள் செய்வார்களே ஆபிதா செய்தாலும். ஆக என்ன சாதிக்க இந்த undertaking?
சகோதரர்: பிரபு ஸுஐபு, நடைமுறையின் இன்னும் ஒரு சரிகானலை தெரிவித்து இருக்கிறார்: இயக்கம் நடத்த பணம் அவசியமாம்.
பணம் தருபவரை 'மகிழ்ச்சி'யாக வைக்கவேண்டும் இதில் சத்தியம் செத்தால் "collateral" என்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதா இதன் பொருள்? அவர்தான் விளக்கவேண்டும். - இது தான் அவர் சொல்லவருகிறார் என்றால் அந்த அமைப்பு தேவையா?
அமைப்பு தெளிவாக, வெளிப்படையாக நடந்தால் இந்த விவாதங்கள் அவசியமா? நேரில் கேட்டாலும் , ஈமெயில் அனுப்பினாலும், தளத்தில் பதிவு செய்தாலும் பதில் தரும் அவசியம் இல்லை என்பது போல் நடந்து கொண்டது தானே இத்துனை குழப்பத்துக்கும் காரணம்.
தவறும், அதை மறைக்க ஒரு சப்பைக்கட்டும், பின் அதை சமாளிக்க ஒரு பொய்யுமாக பேரவை 'சுதப்பிவிட்டது' - ஒற்றுமையை 'பெரும்பான்மை' என்னும் அகம்பாவத்தால் அழித்துவிட்டது.
முதலில் ஆலோசனையை தீர்மாணம் என்றது. 25 பேர் என்றது, ஓட்டில்லை என்றது, முச்சரிக்கை என்றது, தகுதி இல்லை என்றது, வஹிதா லாத்தாவை தோற்கடித்தது, துரோகத்தின் உச்சகட்டமாக 'உம்மாவை' மாற்று வேட்பாளராக்கியது. இப்போது புதுப்பள்ளியை பயன்படுத்தி எதோ சரிகட்ட நினைத்து இருந்த அனுதாபத்தையும் இழந்துள்ளது.
மொத்தத்தில் இந்த தேர்தலில் போட்டி உண்மைக்கும் அதிகார துஸ்பிரயோகத்திற்கும் என்றாகிவிட்டது. மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள்.
தன்னை நம்பி இனியும் ஏமாந்து போகாமல் இருக்கும் அளவுக்கு சுதப்பிய பேரவைக்கு நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross