செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byVilack SMA (Hetang)[04 October 2011] IP: 113.*.*.* China | Comment Reference Number: 9551
அஸ்ஸலாமு அழைக்கும் .
சகோதரி ஆபிதா அவர்களே ! குழப்பங்களுக்கு மேல் குழப்பமாக சென்று கொண்டிருக்கும் இந்த தேர்தல் களத்தை பார்க்கும்போது , மனதிற்கு வேதனையாக உள்ளது . ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது , இது உங்களுக்கும் , மிஸ்ரியாவுக்கும் நடக்கும் ஆரோக்கியமான போட்டியாக இல்லாமல் , ஒரு சிலரின் தூண்டுதலால் , உங்களுக்கும் ஐக்கியப்பேரவைக்கும் நடக்கும் மல்யுத்தமாகவே உள்ளது .
நீங்கள் சொல்வது போல , ஐக்கியப்பேரவை உங்களுக்கு கொடுத்த format letter தான் அனைத்து போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டது . அவர்களெல்லாம் ஐக்கியப்பெரவையை நம்பி , கையெழுத்திடும்போது , நீங்கள் மட்டும் ஏன் ஐக்கியப்பேரவையை நம்ப வில்லை .
ஒருவேளை , நீங்கள் சொல்வதுபோல ," ஐக்கியப்பேரவை ஏற்கனவே ஒருவரை முடிவு செய்தாகி விட்டது , அதனால் நான் கையெழுத்து போட்டாலும் அது ஒரு " ஒப்புக்காகத்தான் " , ஆகவேதான் கையெழுத்து போடவில்லை " என்று நீங்கள் நினைத்தால் , உங்களுக்கு வந்த செய்திபோலத்தானே அது மற்ற போட்டியாளர்களுக்கும் அது எட்டி இருக்குமே !
ஒருவேளை , இந்த போட்டியில் நீங்கள் வெற்றியை நழுவ விடும் பட்சத்தில் , இப்போது உங்களை தூண்டிவிடும் நபர்கள் , ஒருவர் கூட அந்த சமயத்தில் உங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் . இது உறுதி , பொறுத்திருந்து பாருங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross