செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byJaved Nazeem (Chennai)[04 October 2011] IP: 14.*.*.* India | Comment Reference Number: 9585
ஒரு அமைப்பின் உதவி நாடப்படும் பொழுது, தனது நிபந்தனைகளை ஏற்க வேண்டும் எனக் கோர அந்த அமைப்பிற்கு நிச்சயம் உரிமை உள்ளது. அந்த நிபந்தனைகள், சரியானவையா அல்லது தவறானவையா என்பது விவாதத்திற்குரியதாக இருக்கலாம் - ஆனால் நிபந்தனைகளை வைக்க அந்த அமைப்பிற்கு நிச்சயம் உரிமை உள்ளது.
அப்படிக் கோரும் ஒரு அமைப்பு, நியாயமான ஒரு அமைப்பாக, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை கொண்ட ஒரு அமைப்பாக இருக்கும் பட்சத்தில், அந்த நிபந்தனைகளை ஏற்க மறுப்பவர் தவறிழைத்ததாக எண்ணும் வாய்ப்புக்கள் மிக அதிகம். இந்தப் பிண்ணனியில் ஐக்கியப் பேரவையின் சில செயல்பாடுகளை பார்க்கலாம்.
உள்ளாட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக விருப்ப மனு வாங்கும் முன், ஆலோசனை செய்யலாம் என அறிவித்து விட்டு தீர்மானங்களை மட்டுமே அறிவித்தது. அமைப்புகள் சாரா 25 நபர்களுக்கு வாக்குரிமை வழங்கியது. பின்னர் எதிர்ப்பு வலுக்கவே அதை கை விட்டது. சில பொது நல அமைப்புக்களுக்கு வாக்குரிமை வழங்கியது - அதன் அடிப்படை இன்று வரை தெளிவு படுத்தப்படவில்லை
விருப்ப மனு வாங்கிய பின், வேட்பாளர் தேர்வு நடைபெற்றபோது வேட்பாளர்களின் பெயர்களை முன்னமே அறியத் தராதது
வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் அதிகாரபூர்வ வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்படலாம் எனும் நிலையில், இரண்டாம் நிலையில் உள்ள வேட்பாளருக்கு வாய்ப்பு தராமல், அதிகாரபூர்வ வேட்பாளரின் தாயாரை மாற்று வேட்பாளராக நிறுத்தியது.
மேற்காணப்படும் செயல்பாடுகளை கவனித்தால், இவை ஒரு நியாயமான அமைப்பின் செயல்பாடுகள் அல்ல என்பதையும் உணரலாம். இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் நிபந்தனைகளை நிராகரிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
Mrs. Shaik, all the very best. Suggest getting some guidance in preparing public statements. Some innocent, plain sentences may be misinterpreted. Don’t take periyappa Shaik’s help – அவனுக்கு அரசியல் எல்லாம் தெரியாது :)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross