செய்தி: ‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் காலமானார்! குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல்பட்டினம் புனித மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் ஸ்தாபகர்களில் ஒருவரான கண்ணியத்திற்குரிய மர்ஹூம் மவ்லானா மவ்லவீ செ.யி.நூஹ் லெப்பை (வேலூர் ஆலிம்) அவர்களின் மகனாரும், ஷெய்குனா அல் ஆரிஃப் பில்லாஹ் முஹிப்பிர்ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூஃபீ ஹஸ்ரத்ஜீ ஸித்தீக்குல் காதிரிய்யுல் காஹிரீ அவர்களின் கலீஃபாவும், காதிரிய்யா தரீக்காவின் ஷெய்கும், எனது உறவினரும்,உஸ்தாதும்,செய்க்குமாகிய எனது நேசத்திற்கும், பாசத்திற்குமுரிய சங்கை சான்ற அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஷ்ஷெய்க் நூ.கு.ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூஃபீ ஹஸ்ரத் என்ற மலேஷியா வாப்பா அவர்கள் வபாத் செய்தி அறிந்து மிக,மிக கடும் துயருற்றேன். انا لله وانا اليه راجعون.
இறைவனின் கட்டளைக்கிணங்க "சபூர் " செய்து கொண்டேன். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளில் தாங்களும் இருந்து, பிறருக்கும் அதன் விளக்கங்களை அறிவித்து, தவறான கொள்கை ,கோட்பாடுகளை மக்களுக்கு எச்சரித்து, நல்லுபதேசம் புரிந்து வந்தார்கள்.
அன்னாரின் இழப்பு நமக்கு ஈடு ,இணை செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பம், அவர்களின் முரீதீன், முஹிப்பீன், உற்றார், உறவினர் யாவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சபூர் செய்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
எல்லாம்வல்ல அல்லாஹ், அன்னாரது பிழைகளைப் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியில், அண்ணலெம் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சேர்த்து அருள் புரிய உள்ளம் உருகி பிரார்திக்கிறேன். ஆமீன்! யா ரப்பல் ஆலமீன் ! (இப்படிக்கு: அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் முரீதும்,முஹிப்புமான எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன்)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross