செய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2011: “ஐக்கியப் பேரவையின் முச்செரிக்கையில் நான் ஏன் கையெழுத்திடவில்லை?” நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கான வேட்பாளர் ஆபிதா அறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:... posted byM Sajith (DUBAI)[05 October 2011] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9651
முச்சரிக்கை கலாச்சாரம் - இது என்ன புதுமை? இதை எப்படி சரிகான்கிறார்கள் என்பதே புரியவில்லை.
இது சட்டப்படி குற்றம். ஒருவரின் பிறப்புரிமையை பறிக்கும் செயல். அடிமை சாசனம், அதிகார துஸ்பிரயோகம்.
இது வழக்கம் தானே என்று கேட்போர், இதற்கு முன் பேரவை பரிந்துரைத்த யாரிடம் வாங்கி இருக்கிறது? சட்டமன்ற தேர்தலில் பரிந்துரை செய்த போது வாங்கியதா? இல்லை இதற்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நாச்சி தம்பியிடம்யொ அல்லது? விளக்கு அப்பா விடம் பெறப்பட்டதா? - எதற்கு இப்போது?
நன்பர் அபுதாபி அப்துல் காதர், தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது,சில காரணங்கள் சொன்னார். கடந்த துணைத்தலைவர் செய்த தில்லுமுல்லுக்கு பிறகுதான் இப்படி ஒரு முடிவாம்!! நானும் ஏதும் இறைவனுக்கு பயந்து நடப்பேன் என்றோ, ஊழலுக்கு துனை போகமாட்டேன் என்றோ உற்தியளிக்க சொல்லியிருப்பார்கள் போலும் என்று நினைத்தேன். மீண்டும் படித்துப்பாருங்கள் இது குறித்து ஏதாவது உள்ளதா என்று.. வெரும் அதிகாரத்தை தக்கவைக்கும் முயற்சியை தவிர ஏதாவது இருக்கிறதா?
பேரவையை சந்தேகிக்காமல் இருக்க எதையாவது வெளிப்படையாக செய்தார்களா? அவர்களின் சூழ்ச்சிக்கும் மூடகமான செயலுக்கும் ஒரு வரைமுறையே இல்லையே...
ஐயா.திருத்துவராஜ் அவரது உரையில் சகோதரி வஹிதாவை முன்மொழிந்தார் அதன் பலன் தான் அவர் தோற்கடிக்கப்பட்டார். முன்பின் தெரியாதவர் 61 ல் 40 வாக்குகள் பெற்றார். இன்று வரை பேரவையின் வேட்பாளரின் PறோFஈளே சிதம்பர ரகசியம்.
நம்பி கையெழுத்திட்ட வஹிதா லாத்தாவுக்கு நன்றி கடனாக வேட்பாளரின் தாயாரை மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்யசெய்தது பேரவை (இது சகோ.அப்துல் காதிர் உறுதி செய்தார் உரையாடாலில், இது தவறு என்றும் சொன்னார். ஆனால் கேட்கவோ மக்களுக்கு தெரிவிக்கவோ மாட்டார் அவரும்) - நம்பினால் கிடைக்கும் ஒற்றுமைக்காக உழைக்கும் இவர்களின் கைமாறு.
துரோகம் எப்படி ஒற்றுமை உண்டாக்கும்? புரியாத சித்தாந்தம்.. பேரவைக்கே வெளிச்சம்.
கடைசி வரையில் வேட்பாளரின் இரகசியம் காத்த பேரவை, ஓட்டெடுப்பில் பங்கெடுக்கும் 'பொது நல' அமைப்பின் பெயர்களிலும் இரகசியம் காத்தது. Official statement இல் 9 ஓட்டை காணவில்லை. யார் ஆட்டைய போட்டா? என இதே தலத்தில் கேட்டதும் பேரவை உடனே திருத்தம் வெளியிட்டது.(அமானுல்லா மாமா தினமும் மாஸ்டர் கம்ப்யூட்டரில் பிரின்ட் எடுப்பதாக வந்த செய்தியை இதில் இருந்து உறுதி செய்ய முடிந்தது)
ஆனாலும், தாயாரின் மனு குறித்த கேள்வி, 25க்கு என்ன அடிபடை, விடுபட்ட அமைப்புகள் 'சுய நல' அமைப்புகளா? போன்ற கேள்விகள் மட்டும் வெளியில் இருந்து சொன்னால் கோட்காதாம், நேரில் சொல்ல வேண்டுமாம்- வக்காலத்து வாங்க ஒரு கூட்டம் வேறு.
2 வோட்டு சமாச்சாரம் இன்னொரு சூழ்ச்சி - இது தெரியாமல் நடந்த விஷ்யமில்லை.- இது "ட்ரம்ப் கார்ட்" பேரவையின் பின்னால் இயக்கும் நபர்களின் வழிக்கு ஒருவேலை இந்த சகோதரி இடைஞல் ஆனால் பயன் படுத்த உதவும் எற்பாடு. இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடாக 2 வோட்டுள்ள தாயாரை நிறுத்தும் அளவுக்கு 'புத்திகூர்மை' இல்லாதவர்களா?
ஒன்று செய்யலாம். வேறொரு தலத்தில் நன்பர் ஒருவரின் யோசனையை முயற்சி செய்யலாம். இதோ அவரின் கருத்து.(copy&pasted below)
_________________________________________________________
"ஐக்கியம் பேணுவதில் உண்மை ஆர்வம் உள்ளவர்கள் அனைவரின் கருத்தும் இதுதான். ஒற்றுமை மிகவும் அவசியம் என்பதில் பேரவைக்கு இருக்கும் அக்கறை அனைவருக்கும் தெரியும்.
யாராவது ஒருவர் விட்டுகொடுப்பதால் தன் நன்மை வரும், எனவே சிறியவளின் தவறை மன்னித்து பெரியவர்களான ஐக்கியப் பேரவை விட்டுக் கொடுக்கவேண்டும்.
இவரின் திறமையில் எந்த குறையும் இல்லாத நிலையில் இவரை உதாசீனப் படுத்துவது ஊருக்கு நல்லது செய்யும் ஆர்வம் கொண்ட இளையவர்களை இழிவு செய்வது போல ஆகிவிடும்.
பெரியவர்கள் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டாமா?
என்ன வலிக்குதோ.. அப்ப உபதேசம் எல்லாம் ஊருக்கு தானோ ?"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross