செய்தி: ‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் காலமானார்! குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்... posted byK.m.s. kader meeran sahib (Riyadh)[05 October 2011] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9718
ஷைகு நாயகத்தின் மறைவு செய்தியே அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு மாபெரும் வலியுல்லாஹ் மறைந்து விட்டதை எண்ணி. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். ஷைகு நாயகம் அவர்கள் தன்னுடைய வாழ்விலே மிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்கள். மிகவும் பொறுமை மிகுந்தவர்களாக இருந்தார்கள். ஷைகுனாவின் முபாரக்கான முகமோ இறை நேசத்தினாலும், நபிகளின் நேசத்தினாலும் ஜொலிக்கும். ஷைகு நாயகம் அவர்கள் மிகவும் கருணை உடையவர்களாக இருப்பார்கள். பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் மீது மிகவும் நேசமிக்கவர்களாக இருந்தார்கள். ஒரு ஆஷிகே ரசூலாக திகழ்ந்தார்கள். அதே போன்று வலீமார்களை மிகவும் நேசித்தார்கள்.
தன்னுடைய பிள்ளைகளின் மீதும் மற்றும் முஹிப்பீன்களின் மீதும் பாசமுடையவர்களாக இருந்தார்கள். நான் ஷைகுனாவை சந்திக்க செல்லும்போதெல்லாம் குரானை ஓதிக்கொண்டும், சலவாத் ஓதிக்கொண்டும் மற்றும் கிதாப்களை வாசித்துக்கொண்டும் இருப்பார்கள். திக்ருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஷைகுனாவின் குடும்பத்தவர்களுக்கும், முஹிப்பீன்களுக்கும் மேலான பொறுமையே கொடுத்தருள்வானாக. எல்லாம் வல்ல அல்லாஹ் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் ஷைகுனா மலேசியா வாப்பா அவர்களின் முபாரக்கான கப்ரை நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசலல்லம் அவர்களின் நூரைக்கொண்டு ஒளிமயமாக்குவனாக. ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியிலே நபியவர்களோடு இருக்க செய்வானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross