வாக்குகள் posted bySalih (Chennai)[05 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 9734
நகர்மன்ற தலைவி பொறுப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் சமுதாய வேட்பாளர்கள் நின்றால் வாக்குகள் பிரியும். வாக்குகள் பிரிவதினால்
உண்டாகும் விளைவுகள் குறித்த அச்சம் 2001 ஆம் தேர்தலிலும் பேசப்பட்டது. அத்தேர்தலில் - ஏ. வஹீதா அவர்கள் - (ஒரே) பொது
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் காரணமும் அதுவே. 2001 ஆம் ஆண்டு தேர்தல் - பொன்செல்வி மரணத்திற்கு சில மாதங்கள் கழித்து நடந்தது
பலருக்கு நினைவிருக்கலாம்.
அத்தேர்தலில் ஏ.வஹிதா 13605 வாக்குகள் பெற்றார். போட்டி வேட்பாளர் பாக்கியம் - 2068 வாக்குகள் பெற்றார். மொத்த பதிவான வாக்குகள் -
சுமார் 15700. இது 2001.
2011 சட்டமன்ற தேர்தலில் மொத்த பதிவான வாக்குகள் - சுமார் 19,500. சுமார் 4000 வாக்குகள் (2001 எண்ணிக்கையுடன் கணக்கிடும் போது)
கூடியுள்ளன. இதில் 3000 வாக்குகள் முஸ்லிம்கள் உடையது என்றும், 1000 வாக்குகள் மாற்று சமுதாய வாக்குகள் என்றும் வைத்துக்கொள்வோம்.
நகர மாற்று சமுதாய வாக்கு கூடியது 4000 என்றே இருக்க வாய்ப்புள்ளது.
சுமார் 18000 வாக்குகள் வரும் நகர்மன்ற தேர்தலில் பதிவானால், அதில் 14,000 (சுமார்) வாக்குகள் முஸ்லிம்
சமுதாயத்துடையதாக இருக்கும். மிஸ்ரியா மற்றும் ஆபிதா தவிர பிற மூன்று வேட்பாளர்கள் - பெரும் அளவில் வாக்குகளை பிரிக்க
வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. பிற மூவரும் சேர்ந்து கூடியது சுமார் 1500 வாக்குகள் பெறலாம். மீதம் உள்ள 12500 முஸ்லிம் வாக்குகளை
மிஸ்ரியா மற்றும் ஆபிதா ஆகியோர் சரிசமமாக பிரித்தாலும் (6000 , 6000) அவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளதே அன்றி
வேறோருவருக்கில்லை.
மேலும் - ரூத்தம்மால், நாடார் சமூகத்தை சார்ந்தவர். பிற சமுதாய வாக்குகள் அனைத்தையும் அவர் பெறுவார் என்றும் கூற முடியாது. நகரின்
பெரும்வாரியான தாழ்த்தப்பட்ட சமுதாய வாக்குகள் - கடந்த காலங்களில் முஸ்லிம் சமுதாய வேட்பாளர்களை ஆதரித்துள்ளனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross