சரியான நேரத்தில் விரிவான விளக்கம் posted byAbdul Razzaq Lukman (Dubai)[06 October 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9809
அஸ்ஸலாமு அலைக்கும். அன்புள்ள காயல்வாசிகளுக்கு. நேற்று நகராட்சி தலைவர் வேட்பாளரின் அறிக்கை மற்றும் வாசகர்களின் கமெண்ட்ஸ் படித்தேன். சில விமர்சகங்கள் குறிப்பாக அருமை தம்பி சாஜித்தின் பேரவை பற்றி காரசாரமான கமெண்ட்ஸ் பற்றி ஐக்கிய பேரவை சார்பில் பதில் தந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்த நேரத்தில் புதுப்பள்ளி சார்பில் வெளிவந்து இருக்கும் அறிக்கை மிக தெளிவாக உள்ளது.
வேட்பாளரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்தது ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்பின் சார்பாக பிரதிநிதியாக வந்தவர்கள்தான். இதில் ஐக்கிய பேரவை வெறும் facilitator மட்டும் தான். சகோதரி ஆபிதா அவர்கள் தனக்கு ஐக்கிய பேரவை அநீதி இழைத்துவிட்டது என்று கூறுவது, அவர் இந்த தேர்வு முறை பற்றிய அறியாமையை காட்டுகிறது.
மேலும் ஒரு முக்கிய நபர் தன்னை அடிக்கடி அலைபேசியில் அழைத்து முச்சரிக்கையில் கையழுத்து போட வலியுறுத்தினார் என்று அறிக்கையில் சொல்லியுள்ளார். அந்த முக்கிய நபர் யார் என்று தெரிவித்தால், அவருக்கும் ஐக்கிய பேரவைக்கும் என்ன தொடர்பு என்றும் தெரியும். ஆனால் அவர் உங்களை(சகோதரி ஆபிதா) போட்டியில் இருந்து விலக சொல்லவில்லை. மாறாக நீங்களும் போட்டியில் நீடிக்க (தகுதி பெற) முச்சரிக்கையில் தான் கையழுத்து போட சொல்லியுள்ளார்.
இன்னும் ஒன்றும் முடிந்துவிடவில்லை. நீங்கள் நன்றாக சுயமாக யோசித்து போட்டியில் இருந்து விலகி அணைத்து ஜாமாத்தார் தேர்ந்தெடுத்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறேன்.
அதைவிடுத்து சிலரின் தவறான ஆலோசனையை கேட்டு போட்டியில் நீடித்தால், அது உங்களின் நற்பெயருக்குத்தான் கேடு. அல்லாஹ் நமது ஊருக்கு நன்மையை செய்யும் வேட்பாளருக்கு வெற்றியை தருவானாக. ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross