| |
செய்தி எண் (ID #) 17627 | | | வியாழன், ஏப்ரல் 28, 2016 | பள்ளி மாணவ-மாணவியருக்கு கோடை விடுமுறையில் ஆங்கிலம் பேசும் பயிற்சி வகுப்பு! தம்மாம் கா.ந.மன்றம், இக்ராஃ இணைந்தேற்பாடு!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 2193 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
நடப்பு கோடை விடுமுறையை முன்னிட்டு, பள்ளி மாணவ-மாணவியருக்காக ஆங்கிலம் பேசும் பயிற்சி வகுப்பை சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றம், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இதுகுறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல் நகர மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், வளமான எதிர்காலம் அமைந்திட வேண்டுமென்பதற்காகவும் கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறது இக்ராஃ கல்விச் சங்கம். இதற்கு உறுதுணையாக உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் செயலாற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு காயல் நல மன்றங்களும் இக்ராஃவுடன் இணைந்து பல கல்வி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் தம்மாம் காயல் நற்பணி மன்றம், இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் 2016 SUMMER SPOKEN ENGLISH COACHING PROGRAM மாணவ- மாணவியர்களுக்கு தனித்தனியாக பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளது. இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் மே மாதம் 5 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
தற்போதைய கால கட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் பேச (spoken English) கற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆங்கிலம் பேசத் தெரியாததால் கடந்த தலைமுறையினர் மட்டுமல்ல, இன்றைய தலைமுறையினர் படும் பாட்டையும் நாமறிவோம். இந்த அவல நிலை வருங்கால சமுதாயத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதிற்கொண்டே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
தரமான ஆசிரியர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியில் அதிகமான மாணவ- மாணவியர்களை பயன் பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக '' வாருங்கள் ... ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ளலாம்!" என்ற தலைப்பிலான கீழ்க்கண்ட விளக்கப்பிரசுரத்தை நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் வெள்ளியன்று விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இதனைக் காணும் கல்வி ஆர்வலர்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களிடமும், உறவினர்களிடமும் இதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி 8, 9, 10, 11 ஆம் வகுப்புகளில் படித்து முடித்திருக்கும் மாணவ-மாணவியர்களை இந்த ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பில் கலந்து பயன் பெறச்செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஆர்வமுள்ள மாணவ-மாணவியர் இதற்கான விண்ணப்பப்படிவத்தை இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து 02-05-2016 தேதிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
என்.எஸ்.இ.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம் – காயல்பட்டினம்.
2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட - ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தம்மாம் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|