திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தி.மு.க. வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 25.04.2016. திங்கட்கிழமையன்று தாக்கல் செய்தார்.
திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றார். இதையொட்டி, திங்கட்கிழமை மதியம் தி.மு.க. தேர்தல் பணிமனையிலிருந்து தொண்டர்களுடன் வேட்பாளர் ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். 12.35 மணிக்கு திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான தெ.தியாகராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அப்போது காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் பி.சிவசுப்பிரமணியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச்செயலர் கே.முஹ்ஸின், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலர் சோ.அருந்ததி அரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
6 பேர் வேட்பு மனுத்தாக்கல்:
இதேபோல திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு மாற்று வேட்பாளராக அவரது சகோதரர் ஆர்.சண்முகானந்தன் (51) வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். திருச்செந்தூர் தொகுதியில் திங்கட்கிழமையன்று எஸ்.ஜே.கென்னடி (43), அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (65), அப்துல் கண்ணா (34), சண்முகானந்தன் (51), துரைமணி (45), முகம்மது ஆரிஃப் ஆகிய 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
|