சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நல மன்றத்தின் 36ஆவது பொதுக்குழுக் கூட்டம், 24.06.2016. வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அனைத்து காயலர்களுக்கும் அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் இணைச் செயலாளர் சட்னி எஸ்.ஏ.கே.செய்யித் மீரான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எங்களன்புக்குரிய உங்களனைவருக்கும்
மனமார்ந்த புனித ரமலான் வாழ்த்துக்களுடன் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பறக்காத்தஹூ.
நமது ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 95-ஆவது செயற்குழு, 36-ஆவது பொதுக்குழு கூட்டம் புனித ரமலான் நோன்பு திறப்பு இப்ஃதார் நிகழ்ச்சியாக கீழ்காணும் நிகழ்முறை விளக்கப்படி இன்ஷாஅல்லாஹ்
நடைபெற உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிய தருகின்றோம்.
இனிய இந்நிகழ்ச்சியில் ஜித்தா மன்றத்தின் உறுப்பினர்களாகிய ஜித்தா, புனித மக்கா ,மதினா, யான்போ மற்றும் அபஹா வாழும் தாங்கள் யாவரும் மேலும் இப்பகுதிகளில் புதிதாக வந்துள்ள காயல் சொந்தங்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்றும் தவறாது முற்கூட்டியே வந்து கலந்து சிறப்பித்து தருமாறும் மிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவருக்கும் வாட்ஸ்அப், முகநூல், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாகவும் அறிய தந்துள்ளோம்.
மேலும் புனித ரமலானை முன்னிட்டும் உங்களது மேலான பங்களிப்பையும் , ஆதரவினையும் வல்லோன் அல்லாஹ்வின் ஈருலக நன்மையை நாடியும் தாரளம்மாக வழங்குமாறும் மிகவும் அன்புடன் வேண்டுகிறோம்.
நிகழ்முறை விளக்கம்:
----------------------------------------
நாள்: 24-06-2016 ,ரமலான் பிறை 19, வெள்ளிக்கிழமை.
நேரம்: மாலை 06-00 மணி முதல் இரவு 09-00 மணி மட்டில்.
இடம்: ஸஹாரா உணவகம் ,(அல் அபீர் மெடிக்கல் சென்டர் எதிரில்)
காலித் பின் வலித் வீதி, ஷரபிய்யா , ஜித்தா. இன்ஷாஅல்லாஹ்.
உங்களனைவரின் மேலான வருகையை அன்புடன் நாடும்....
காயல் நற்பணி மன்றம் ஜித்தா.
ஜித்தா, சவுதி அரேபியா.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) ஜித்தா கா.ந.மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இஃப்தாருடன் கூடிய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜித்தா காயல் நல மன்றத்தின் முந்தைய (35ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜித்தா காயல் நல மன்றத்தின் முந்தைய (94ஆவது) செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஜித்தா காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |