கடந்து வந்த பாதை |
டிசம்பர் 20, 1998 அன்று KAYAL ON THE WEB இணையதளம் துவக்கப்பட்டது. காயல்பட்டினம் நகர் குறித்த அடிப்படைத் தகவல்கள், வரலாறு, தொலைபேசி எண்கள் போன்ற தகவல்கள் அதில் இருந்தன |
ஏப்ரல் 1999 இல் http://kayal.8m.com என்ற முகவரி கொண்டு இணையதளம் செயல்படத் துவங்கியது. அதன் சில பக்கங்களை இன்றும் காணலாம்! |
டிசம்பர் 1999 முதல் www.kayalpatnam.com என்ற முகவரியில் செயல்பட துவங்கியது |
நவம்பர் 2000இல் ஆங்கிலத்தில் செய்திகள் சேவை துவக்கப்பட்டது. சிறிது காலம் அச்சேவை தொடர்ந்தது |
டிசம்பர் 09, 2000 முதல் தமிழில் நகர செய்திச் சேவை துவங்கியது. பல ஆண்டுகளாக பாமினி எழுத்துரு பதிவிறக்கம் மூலம் செய்திகளைக் காணும் சேவை தொடர்ந்தது. பின்னர் 2010ஆம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் UNICODE முறைக்கு மாற்றப்பட்டது |
சில காலங்களுக்கு - வாராந்திர ஜும்ஆ சொற்பொழிவுகளின் ஆடியோ சேவை, விவாத மேடை, பிறப்பு-இறப்பு தகவல்கள், திருமணத் தகவல்கள் உட்பட பல சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன |
2006இல் ‘தலையங்கம்’ பகுதி அறிமுகப்படுத்தப்பட்டது |
2006இல் இணையதளம் THE KAYAL FIRST TRUST அறக்கட்டளையின் அங்கம் ஆனது |
செப்டம்பர் 2010இல் ‘வாசகர் கருத்துக்கள்’ பகுதி அறிமுகப்படுத்தப்பட்டது |
ஆகஸ்ட் 2011இல் ‘எழுத்து மேடை’ பகுதி / ‘சிறப்புக் கட்டுரைகள்’ பகுதி துவக்கப்பட்டது |
டிசம்பர் 14, 2012 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை - செய்திகளை சேகரிக்க காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு எவ்வித தடங்கலும் செய்யக்கூடாது என காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு -இடைக்காலத் தடை விதித்து - உத்தரவிட்டது |