அன்புடையீர், அஸ்ஸலாமு அழைக்கும்!
திராவிட முன்னேற்ற கழகத்தின் 2016 தேர்தல் அறிக்கையில் எனக்கு பிடித்த பல அம்சங்களில் சில அம்சங்களை மட்டும் அதாவது ஆழ்கடல் முத்துக்களில் கையளவு மட்டும் எடுத்துக்கொண்டு அதன் நன்மைகளை உங்களுடன் அள்ளிப்பருக இந்த ஆதம் சுல்தான் வந்துள்ளேன்!
தமிழினத்தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் சொன்னதை செய்வார் செய்வதைத்தான் சொல்வார் என்ற உண்மையான தாரக மந்திரத்திற்கு சொந்தக்காரர், அவர் தலைமையிலுள்ள இயக்கத்தின் தேர்தல் அறிக்கை 2016-ஐ உளமகிழ வரிசை படுத்துகிறேன்!
> தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசாணையின் முதல் கையெழுத்து மதுவிலக்கு பரிபூரண அமுலுக்கு வரும் ஆணை!
> மாணவர்களின் கல்விகடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வது.
> விவசாயிகளுக்குள்ள பயிர்க்கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்வது.
> ஆவின் பால் விலையில் ரூபாய் 7 குறைக்கப்படும்.
> முதலமைச்சர் முதல் அனைத்து மந்திரிகள்,மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் ,அரசு ஊழியர்கள் அனைவர்களின் குற்றசாட்டுகளை விசாரிக்க "லோக்ஆயுத்தா" சட்டம் இயற்றுதல்.
> சேவை உரிமை சட்டம் (RIGHT TO SERVICE ACT) மக்களுக்கு கிடைக்கவேண்டிய பிறப்பு,இறப்பு,வருவாய்,இருப்பிட சான்றிதள்கள் ஒய்யூதிய பலன்கள் ஆகியவு முறையாக கிடைப்பதற் குறிய நடவடிக்கை!
> வேளாண் விலைபொருள் பரிவர்த்தனை அமைப்பு (COMPREHENSIVE AGRICULTURE PRODUCE MARKETING EXCHANGE) வேளாண் விலைபொருளை உற்பத்தியாலனே விலை நிர்ணயம் செய்து சந்தைபடுத்தி விற்பனை செய்து இடைத்தரகர் என்ற இடர்பாடுகளைத்தவிர்த்தல்!
> நெல்லுக்கு தற்போதுள்ள குவிண்டால் விலை ரூ1520 லிருந்து ரூ 2500 வரை உயர்த்துதல்!
> கரும்புக்கு தற்போதுள்ள டன்னுக்கு விலை ரு 2300 லிருந்து ரூ 3500 வரை உயர்த்துதல்!
> விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்!
> விவசாயிகளுக்கு இலவச வேஷ்டி சேலைகளுடன் ரூ 500 பொங்கள் பரிசாக வழங்கப்படும்!
> அ .தி.மு.க ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட உழவர் சந்தை மறுபடியும் ஆரம்பிக்கப்படும்!
> சிறு, குறு விவசாயிகளுக்கு மோட்டார் வாங்க ரூ 10,000 வழங்கப்படும்!
> ப ஜ க அரசின் நில கையகபடுத்தும் திட்டத்தை தீர்க்கமாக எதிர்கிறது தி .மு.க.
> வெள்ளத்தடுப்பு வேளாண்மை குழு அமைத்தல் (CHENNAI METRO FLOOD MANAGEMENT COMMITTEE) நகரமைப்பு வல்லுனர்கள்,சுற்ற சூழல் அறிஞர்கள்,நீர் நிர்வாகத்துறை அறிஞர்களால் வெள்ளப்பெருக்கை கட்டுபடுத்தும் திட்டம் மற்றும் மக்களை வெள்ளப்பெருக்கு பேரிடல் அபாயத்திலிருந்து காப்பாற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்!
>அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடங்கிகிடக்கும் மிகப்பெரிய திட்டமாம் சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் கொண்டுவர அரும் பாடு பட இருக்கிறது தி.மு க
> காஞ்சிபுரத்தில் பட்டு பூங்கா அமைத்து சுமார் 25000 நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு திட்டம்!
> போக்குவரத்து தொழிலாளர்களின் ஒய்யூதிய திட்டம் சென்ற அரசால் ஓதிக்கி நிறுத்தி வைக்கப்பட்டத்தை மீண்டும் தொடக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்!
> ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ 10,000 மானியம் வழங்கப்படும்!
> பள்ளிகளில் தமிழ் ஆங்கிலத்தோடு மொழிவழி சிருபான்மையினரின் தங்களுடைய தாய் மொழியையும் பையல வழி செய்யப்படும்.(உம்: உருது,அரபி,தெலுங்கு)
> மருத்துவ கல்லூரிகளில் மத்திய தொகுப்புக்கான இடங்களுக்கு மத்திய அரசே நுழைவு தேர்வு வைத்து மாணவர்களை தேர்ந்த்டுப்பதை மாற்றி,சிறப்பு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழக அரசே மாணவர்களை தேர்ந்தெடுப்பது!
> கிரனைட் மற்றும் தாது மணல்விற்பனையை அரசே நேரிடியாக கையாள்வது!
> இரண்டு மாதத்திற்கொருமுறை மின்சாரகட்டணம் செலுத்தும் முறையை மாற்றி மாதந்தோறும் செலுத்தும் பயனுள்ள முறை!
> நிறுத்திவைக்கப்பட்ட உடன்குடி மின் நிலைய திட்டத்தை மீண்டும் துவக்குவது!
> நியாய விலை கடைகளுக்கு விடுமுறை இல்லாமல் மாதம் முழுவதும் இயக்குவது!
> நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ தூர இடைவெளிக்கொன்றாக அரசு சார்பாக தங்கும் விடுதியும்,தரமான உணவகமும் அமைத்தல்!
> ஊட்டி. கொடகானல், குற்றாலம், குமரி போன்ற சுற்றுலாதலங்க்களை இன்னும் சிறப்பாக மேம்படுத்துதல்!
> எல்லா மாவட்டங்களிலும் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான பெண்கள் விடுதி அமைக்கப்படும்!( WORKING WOMENS HOSTEL)
> கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை சிறுபாண்மையர்கள் பெறுவதற்குறிய நடவடிக்கையாக நீதியரசர் சச்சார் ஆணையத்தின் பரிந்துரையை அமுல்படுத்த தொடர்ந்து தி.மு.க வலியுறுத்தும்!
> மாற்றுதிரனாளிகளுக்காக பாடுபடுவதோடு அவர்கள் குறைகளை நீக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்!
> அ.தி.மு க அரசினால் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களை அரசு பணியாளர்களாகவும் மாற்றிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்!
> அ.தி.மு க அரசினால் பழிவாங்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களில் இறந்திருந்தால்,அந்த குடும்பத்திற்கு ஐநது இலட்சம் உதவித்தொகையும், அக்குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும்!
> அ.தி.மு க அரசினால் நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் ஓய்வூதிய திட்டம் மறுபடியும் தொடங்கப்படும்,தி.மு க அரசால் முதலில் நிர்மாணிக்கப்பட்ட ரு1000 திலிருந்து ரு1300 ஆக உயர்த்தி வழங்கப்படும்!
> நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ தூர இடைவெளிக்கொன்றாக ஒவ்வொரு அவசர பிரிவு மருத்துவ மனை (EMERGENCY HOSPITAL) நிறுவப்படும்!
> சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கிழக்கு கடற்கரை சாலையை அமைத்திட ஆவன நடவடிக்கை எடுக்கப்படும்!
> மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும்,தூத்துக்குடி மற்றும் சேலம் விமானநிலையத்தை விரிவு படுத்தவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்!
> இரத்த சொந்தங்களின் சொத்தை மாற்றும்பொழுது குறைந்த கட்டண பதிவு வசூலிக்கப்படும்!
> பத்திரப்பதிவுத்துறை ஆவண எழுத்தர் நலவாரியம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு பத்திர பதிவு முறைகளை எளிமையாக்கப்படும்!
> பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் WI-FI வசதிகள் செய்து தரப்படும்!
இன்னும் ஏராளம் ஏராளம் எழுதிக்கொண்டே போகலாம்.தற்போது தி.மு.க வானது மக்களிடம் எப்படி வாக்கு கேட்கிறார்கள் என்றால்,தங்களுடைய ஆட்சிகாலத்தில் மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதை பட்டியலிட்டு பகிரங்கமாக கூறி மக்களை சந்திக்கிறார்கள்.
அதே தி.மு.க வின் மேற்கண்ட தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை நிச்சியமாக நிறைவேற்றுவார்கள் என்ற நிலையான நம்பிக்கை இருக்கிறது.
ஆகவே, அன்புள்ளங்களே உங்கள் பொன்னான வாக்குகளை தி.மு.க அணியின் சார்பாக நிற்கும் அத்தனை வேட்பாளர்களுக்கும் அவரவர்களுககுறிய சின்னத்தில் முத்திரையிட்டு தி.மு.க அணியை வெற்றிபெற செய்து ஆட்சி க்கட்டிலில் அமர்த்திட வேண்டுமாய் அன்பொழுக வேண்டிக்கொள்கிறேன்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்! |