Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:04:40 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 13
#KOTWART0113
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 17, 2012
ஒரு செல் ஊசலாடுகின்றது...
இந்த பக்கம் 8538 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காலத்தின் மாற்றத்திற்கேற்ப நாமும் மாறிவருவது தவிர்க்க இயலாத ஒன்றே! அதே நேரம் காலச்சக்கரத்தின் சுழற்சியில் சிக்கி நவீனமயமான உபகரணங்களை நாம் தவறாகப் பயன்படுத்தும் போது சிதைந்து ஒழிந்து போவது நம் வாழ்வின் நிம்மதியும், மகிழ்ச்சியும்தான்.

நவீன காலத்தின் கண்டிபிடிப்புக்களில் செல்ஃபோன் என்பது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒன்றாக மாறி விட்டது. அதன் பயன்பாட்டிலிருந்து ஏராளமான நன்மைகள் நமக்குக் கிடைத்த போதிலும் அதைக் கையாளும் விதத்தில் உள்ள சில தவறுகளால் விபரீதங்கள் விளையும் தளமாக அமைந்து கைபேசி நமக்கு கைசேதமாய் கை வீசி கை விட்டுப்போகும் கட்டாயத்திற்கு ஆளாகின்றோம். மாட்டின் கழுத்தில் பெல் தொங்கும், இப்போ மனுஷன் கழுத்தில் செல் தொங்குது என யாரோ ஒருவர் கூறியது முற்றிலும் உண்மை என்றாகி விட்டது.

கலாச்சார சீரழிவு மிகுந்து வரும் இக் காலத்தில் கைபேசி ஓர் கூரிய முனை கொண்ட கத்தியைப் போன்றது. நம் இளைய சமுதாயத்தினரின் மனதையும் உணர்வுகளையும் அது குத்திக் கிழிக்காமல் கவனமாகக் கையாளச் செய்வதில் பெற்றோர்களின் பங்கு மிக முக்கியமானது. வியாபார ரீதியில் ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வெல்ல வாடிக்கையாளர்களுக்கு வித விதமான சலுகைகளையும், அலங்காரத் திட்டங்களையும் அள்ளி வீசி அவர்களைத் தம் பக்கம் சாய்த்து வருகின்றன. ஆயிரம் குறுஞ்செய்திகள் முதல் ஐயாயிரம் வரை சொற்ப தொகைக்கு பேக்கேஜ் மூலம் வாரி வழங்குகின்றன. இதில் லவ்வர் பேக், ஃபேமிலி பேக், ஸ்டூடண்ட் பேக், செல் டூ செல் ஃப்ரீ டாக் டைம், குழு சார்ந்த இணைப்புகள் இப்படி எத்தனையோ கவர்ச்சிகரமான திட்டங்கள். இதில் அடிமாடுகளாக அகப்பட்டுக்கொண்டு ஆந்தைபோல் விழிக்கும் மக்கள் கூட்டம் தான் பரிதாபத்திற்குரியவர்கள்!

லேண்ட் லைன் எனப்படும் தரை வழி தொலைப்பேசி வீட்டில் எல்லோரும் பார்க்கும் விதம், பேச்சைக் கேட்கும் விதத்தில் வைக்கப்பட்டிருக்கும். இதில் இரகசியமாகப் பேசவோ, மறு முனையில் உள்ளவரிடம் தனிமையில் உறவாடவோ இயலாது. வீட்டில் உள்ளவர்கள் கேட்கக் கூடும் எனும் அச்சமும், கூச்சமும் நம் இளசுகளிடம், பெரிசுகளிடமும் உண்டாகும்.

செல்ஃபோன் எனும் சாத்தானின் உதவியால் யாரும் கண்காணிக்க இயலாத இடங்களில் இருந்து கொண்டே சைலண்டில் போட்டுக் கொண்டு ஆயிரம் எஸ்.எம்.எஸ்க்கள் ஒரு முனையிலிருந்து மறுமுனையில் உள்ளவரோடு பகிர்ந்து கொள்ளலாம். இதில் இண்டர்நெட் பேக்கேஜ் நான்கு ரூபாய்க்கும், ஏழு ரூபாய்க்கும் சுலபமாகக் கிடைப்பதால் இளவட்டங்கள் என்ன வேண்டுமானாலும் டவுண்லோடு செய்து பார்த்துக்கொள்ளும் அபாயகரம். ஃபேஸ் புக் இல்லாத ஃபேஸ்களே இல்லை எனும் அளவிற்கு உலகலாவிய தொடர்புகள் வேறு. பள்ளிக்கூடத் தோழிகள், நண்பர்கள் எனும் வட்டத்தில் துவங்கி பாட சந்தேகங்களைப் பரிமாறுகின்றோம் என்று செல்லும் கையுமாக அலையும் சின்னஞ்சிறுசுகள் நாளடைவில் தோழியின் அண்ணன், தம்பிதானே? எனப் புதிய தொடர்புகளுக்கு உட்பட்டு காலப்போக்கில் அவர்களுடன் கைபேசியில் நேரடித் தொடர்புகள் செய்யத்துவங்கி விடும் மாபெரும் ஆபத்தும் உள்ளது.

பெற்றோர்களோ தம் பிள்ளை ஒழுக்கமானவள் எனக் கண்மூடித்தனமான நம்பிக்கையில் இதைக் கண்டு கொள்வதேயில்லை. ஒரு நாள் வாயும் வயிறுமாகப் பள்ளிக்குச் சென்ற பிள்ளை தன் முன் வந்து நிற்கும் போது, மகளின் நிலை கண்டு நொறுங்கிப் போகின்றனர். இது உண்மை! இன்னும் சில இளவட்டங்கள் சீரழிந்து சின்னபின்னமாகக் காரணமாவதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். மாப்பிள்ளை-பெண் என பேசி முடிவு செய்தபின் உடனேயே அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதில்லை. மாறாக பையன் வெளிநாட்டில் இருக்கின்றான், வெளியூரில் இருக்கின்றான் பெண்ணுக்கு இன்னும் வீடு கட்டவில்லை எனக் கூறி பெரும் பாலும் ஓரிரு வருடங்கள் கழித்து தான் திருமணங்கள் நடக்கின்றது.

இதற்கிடையில் மணமகனின் சகோதரி அல்லது மணப் பெண்ணின் தோழிமார்கள் மூலம் செல்ஃபோன் நம்பர்கள் பரிமாறப்படுகின்றது. சின்னஞ்சிறுசுகள் வாலிபப் பருவத்தின் தாக்கமும், ஏக்கமும் எதிபார்ப்புகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதுடன் நாள் முழுக்க மணிக்கணக்கில் பேசியும் ஃபேஸ் புக்கில், ஆன்லைனில் வீடியோ சாட்டிங்கில் மூழ்கி தங்களின் எண்ணங்களையும் ஏக்கங்களையும் தீர்த்துக் கொள்கின்றனர். பெற்றோர்களோ தன் மகள் நம்பிக்கைக்குரியவள், நாணயமானவள் , நல்ல பிள்ளை என கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து இதைக் கண்டு கொள்வதேயில்லை. சரி இதை கண்டித்து யாராவது எடுத்துக் கூறினால், என் பிள்ளை வேறெ யார் கிட்டயுமா பேசுறா? எங்க வீட்டு வருங்கால மருமகனோடுதானே பேசுறா? எங்களுக்குத் தெரியும்! நீங்க சும்மா இருங்க! நம்ம காலம் வேறெ இந்தக் காலம் வேறெ, என சப்பைக்கட்டி தன் மகள் நாசமாகப் போவதற்கு க்ரீன் சிக்னல் காட்டி விடுகின்றனர். இவர்களும் தங்கள் சகட்டு மேனிக்கு சல்லாபத்தில் தள்ளாடி சுய நினைவு, சுறுசுறுப்பு, இழந்து எப்போதும் ஒருவித ஏக்கத்துடன் ஒருவித மயக்கத்திலேயே இருந்து வருவார்கள்.

இன்னும் சில தோழிமார்கள் தங்கள் வீட்டிற்கு மணமகனை அழைத்து இவளோடு தனிமையில் பேசும் வாய்ப்பபையும், இருவரும் சேர்ந்து ஃபோட்டோக்கள் எடுத்துக் கொள்ளும் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர். இது பெற்றொர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை! இதிலும் கொடுமை தனக்குப் பேசிவைத்த மணமகன் தன் கூட்டாளிகளையும் (ஆன்லைனில்) இண்டர்நெட் மூலம் இவளுக்கு அறிமுகம் செய்து வைக்கின்றான். ஃபேஸ்புக்கின் வசதியால் நாளடைவில் பேசி வைத்தவனை கழற்றி விட்டுவிட்டு அவனது கூட்டாளியைக் காதலித்து அவனையே மணம் முடிப்பேன் என அடம் பிடித்து அசிங்கப் பட்டு அல்லோலப் பட்டு திண்டாடும் குடும்பங்கள் பல.

சரி, இந்த ஓரிரு வருட இடைவெளியில் பையனின் பாசாங்கு வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு மனதளவில் தன் கற்பையும் வாய் மொழி வார்த்தைகளையும் அவனிடம் அர்ப்பணித்து விட்டு, ஏதோ ஒரு சில காரணங்களால் திருமண பந்தம் மணம் முடிக்கும் முன்பே முறிந்து விட்டால்....? பெற்றோர்களே! சிந்தித்துப் பாருங்கள்....!!!

அவனுக்கென்ன? அவனை மணந்து கொள்ள ஆயிரம் அழகான பெண்கள் அணி வகுத்து நிற்பார்கள். ஆனால் இவளுக்குத்தான் இன்னல்களும், இழப்புக்களும். தன் மகள் நிலை தடுமாறி அழுது வடித்து அவனைத் தவிர வேறொருவனைக் கனவில் கூட எண்ணிப் பார்க்க இயலாமல் தன் நிலை மறந்து, தாய் தந்தையரை வெறுத்து எப்போதும் அழுகை, சோகம் என மன நோய்க்கு ஆளாக்கப்படுவதைக் கண்டு பெற்றோர்கள் மனம் குமுறுவதை நாம் பல இடங்களில் இன்றும் காண்கின்றோம். தன் மகள் அவனிடம் தனிமையில் பேசுவதை அன்றே தடுத்திருந்தால் அவளுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்காதே? என இப்போது தலையில் அடித்துக் கொள்வதில் என்ன பயன்?

ஆகவே, அருமை பெற்றோர்களே...!!! இன்று முதல்,

<> நம் இளைய சமுதாயத்தினரின் முதல் எதிரியான இந்த செல்ஃபோன் ஷெய்த்தானுக்கு(சாத்தானுக்கு) கல்லெறிந்து தன் வாரிசுகளின் வாழ்க்கையைக் காப்பாற்ற முன் வாருங்கள்...

<> தங்கள் பிள்ளைகளுக்கு செல்ஃபோன் தரும் போது அடிக்கடி அதை பரிசோதித்து யார்? யாரிடம் எவ்வளவு நேரம் பேசியுள்ளானர்? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்...

<> நீண்ட நேரம் பிள்ளைகள் பாத்ரூம் மற்றும் கழிப்பறைக்குள் இருந்தால் தொடர்ந்து குரல் கொடுத்து அழையுங்கள்.கூடுமான வரை பிள்ளைகள் தனிமையில் (அது தோழியாகவே இருக்கட்டும்) பேசுவதை அனுமதிக்க வேண்டாம்...

<> பிள்ளைகளுக்கு உலகக் கல்வியை மட்டும் இன்றி மார்க்க கல்வியையும், பெருமானாரின் வாழ்க்கை வரலாறு, சஹாபாக்கள் வாழ்ந்த விதம், முன்னோர்களின் தியாகம், ஒழுக்க மாண்புகள் யாவையும் போதிக்க முன் வாருங்கள்...

<> ஏனோ? தானோ? என வாழ்ந்து, தாமும் வீழ்ந்து, வளரும் சமுதாயத்தையும் படு குழியில் வீழ்த்தாமல் பண்பாட்டுச் சிந்தனையின் படிக்கட்டுகளில் கரம்பிடித்து இச்சமுதாயத்தை முனேற்ற பாடுபடுங்கள்...

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒரு செல் ஊசலாடுகின்றது......
posted by: A.R.Refaye (Abudhabi) on 17 April 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21005

செல் அடித்தாலும்,பெல் அடித்தாலும்(LAND LINE) கடும் சொல்லால் திருப்பி அடிக்காமல் நற்சொல்லால் வந்தனம் செய்தால் பாலைவன இதயம் கூட சோலைவனம் ஆகும்!!

மாற்றம் ஒன்றே மாறாதது!!! மற்றவை எல்லாம் சுழற்சி,அறிவு வளர்ச்சி ,அறிவியல் வளர்ச்சி மாறிக்கொண்டே வருவதற்கேற்ப நம்மை நாமே உயர துடிக்கும் உள்ளத்தோடு உயரவேண்டும்!!!!!!

செல்லாய் காசைபோவோம் என அறிந்தும் முறையின்றி செல்லையும்,சொல்லையும் பயன்படுத்துவோர் பெரியோர்,சிறியோர் யாராக இருந்தாலும் வாழ்வியல் பயணத்தில் அறிவு முடங்கி ஊனமாகிப்போவார்கள் என்பதையே இக்கட்டுரை உணர்த்துகிறது.

பல நல்ல தலைப்புகளில் இன்னும் கட்டுரை வரவேண்டும்,அதனால் சில சமுதாய சீர் கேடுகள் சரி செய்யப்படலாம்.கட்டுரையாளற்கு பல லட்டுகள் தரலாம்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. கண்காணித்தல் / சுயக்கட்டுப்பாடு அவசியம்
posted by: Salai Sheikh Saleem (Dubai) on 17 April 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21006

என் இனிய இளவல் ரபீக் அவர்கள் பதிவுசெய்த கருத்துக்களும் புலஹாங்கிதன்களும் இன்று எல்லோர் மனதையும் பிரதிபலிக்கின்றது.

தொழிநுட்ப முன்னேற்றங்கள் நாம் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவை நமது வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடுகிறது.

இன்று நமது பிள்ளைகளிடம் நீங்கள் அலைபேசி வைத்துக்கொள்ளக்கூடாது என்று சொன்னோமானால் அதற்க்கு நாம் கூறும் காரனிகளைவிட, ஏன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் தான் ஜெயிக்கும்.

அப்போ நாம் என்னதான் பண்ணவேண்டும் என்பதை, தம்பி ரபீக் அவர்கள் மிக அழகாக கோடிட்டு கட்டியிருக்கிறார்கள்.

நமது மக்கள்கள் யாருக்கும் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை, அவர்கள் எல்லா வசதிகளையும் ஒரு எல்லைக்குள்ளான சுதந்திரத்தோடு அனுபவிக்கட்டும். உங்களின் மக்களின் கையில் அலைபேசி இருந்தால்தான் நீங்கள் பொறுப்பான பெற்றோர்களாவீர்கள் என்று ஒன்றும் கிடையாது.

அதேபோல் இந்த வயதில் தான் பிள்ளைகள் செல் போன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று யாராலும் நிர்ணயிக்க முடியாது. இது ஆளுக்கு ஆள், வீட்டிற்கு வீடு, நாட்டிற்கு நாடு, ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கு வித்தியாசப்படலாம். அதனால் இதை நிர்ணயிப்பது பிள்ளைகளின் பெற்றோர்கள்தான். தத்தம் மக்களுக்கு எப்போது அலைபேசியின் அவசியம் என்று கருதுகிறீர்களோ, என்று தம் மக்கள் இந்த கருவியை தீய வழியில் உபயோகப்படுத்த மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை பிறக்கிறதோ, அன்று கொடுத்தாலே போதும். கொடுப்பதோடு நிறுத்திவிடாமல் இஸ்திரமான கண்காணிப்பு மிகவும் அவசியம். நாம் கண்காணிப்பது நமது மக்களுக்கு தெரிந்தே செய்யுங்கள் அதனால் தவறுகளை ஓர் அளவிற்கு தடுக்கமுடியும்.

மக்களுக்கு இஸ்லாம் வகுத்துதந்திருக்கிற நேர் பாதைகளையும், சமூக நீதிகளையும், நமது சமுதாயத்தில் மக்களிடம் இருக்கின்ற எதிர்பார்ப்புகள், இன்னும் பல வாழ்க்கை நெறிமுறைகளை ஒரு பெற்றோர்களை விட வேறே யாரும் மக்கள் மனதில் ஏற்ற முடியாது.

எனவே, நாம் எவ்வளவுதான் கண்காணித்தாலும், எது தவறு எது சரி என்று அவர்கள் மனதிற்கு பாடாத வரையிலும் அவர்கள் நம்மை ஏமாற்றுவது ஒன்னும் பெரிய காரியம் இல்லை. எனவே மக்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கும்முன்பு சுயக்கட்டுப்பாட்டை அவர்கள் மனதில் திணித்துவிட்டாலே போதும். அதேபோலே, ஒவ்வொரு பெற்றோரும் தான் தம் மக்களுக்கு முன் மாதிரிகள், நாம் ஒழுங்காக ஒழுக்கமாக நடப்போம் நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம். ஆமீன்

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான்.... ஆனால் உஷார்.
posted by: s.s.md meerasahib (zubair) (riyadh) on 17 April 2012
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21007

அஸ்ஸலாமு அலைக்கும். இக்கட்டுரையின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியினை தெறிவிக்கிறேன். நம் சின்னஞ் சிறுசுகள் வழி தவறிடாமல் பாதுகாக்க தாங்களின் இந்த கட்டுரையின் உபதேசம்கள் நம் தாய்மார்களின் மனதில் பதிந்து மக்களை கண்காணித்தலும் வேண்டும்.

மேலும் நம் தாய்மார்கள் பிள்ளைகள் ஒழுக்கத்துடனும், இறை பக்த்தியுடனும் இருக்க மார்க்க கல்விக்கூடம்களுடன் அதிக தொடர்புடையதாக அமைத்தாலே போதும். நம் பிள்ளைகளை சைத்தான் தீண்டமாட்டான். மேலும் இரவு தூங்கும் நேரத்தில் சிறிதுநேரம் தஃலீம் கிலாசும் வீட்டில் வைத்தால்...... வீடு அல்லாஹ்வின் தவக்கல்த்தில் அமையும்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:ஒரு செல் ஊசலாடுகின்றது......
posted by: Vilack SMA (Hong Shen , Siacun) on 17 April 2012
IP: 121.*.*.* China | Comment Reference Number: 21008

கட்டுரை ஆசிரியர் சொன்ன அத்தனையும் உண்மைதான் . இருப்பினும் , புதுமையாக எதுவும் இல்லை . இவர் சொன்ன அத்தனையும் ஏற்கனவே பல பத்திரிகைகளில் , பலமுறை படித்த சமாச்சாரங்கள்தான் .தயவுசெய்து புதியதான தகவல்களை தாருங்கள்.

Vilack SMA .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. சுருக்கமாக சொல்வது... நாம் கையில் வைத்து இருப்பது கைபேசி அல்ல...! அது ஒரு தீப்பெட்டி...!
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( ?????) on 17 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21009

எனது அன்பு சகோதரரின் அன்பு நண்பர் சமூக ஆர்வலர் கட்டுரை ஆசிரியர் ஜனாப் அல்ஹாஜி முஹம்மது ரபீக் அவர்கள் இன்று நவநாகரீக காலத்தில் உருவான கைபேசி அதன் நன்மை... தீமைகள் பற்றி மிக அருமையாக.. உண்மையாக... தனது கட்டுரையில் வடித்து இருக்கிறார்.

முதலில் அவருக்கு எனது பாராட்டுக்கள்... அவரின் கட்டுரைகள் அதிகம் இந்த இணையதளத்தில் வரவேண்டும்... அதனால் மக்கள் பயன் பெற வேண்டும்... வாழ்த்துக்கள்..

இன்று கைபேசி பயன்படுத்தாத நபர்களே கிடையாது இன்று அணைத்து நபர்களிடமும் கைபேசி உபயோகம் உள்ளது..

கைபேசி என்பது ஒரு தீ பெட்டி போன்றது...!

இந்த தீபெட்டியை (கைபேசியை) நல்ல முறையில் பயன் படுத்தினால் குடும்பத்தில் ஒளியும், வாழ்வும், சிறப்பும், நன்மையையும் பொழியும்...!

அதே தீபெட்டியை (கைபேசியை) தவறான முறையில் பயன் படுத்தினால் குடும்பத்தில் ஒளியும், வாழ்வும், சிறப்பும், நன்மையையும் சேர்ந்து குடும்பமே அழியும்.

சுருக்கமாக சொல்வது... நாம் கையில் வைத்து இருப்பது கைபேசி அல்ல...! அது ஒரு தீப்பெட்டி...!

(1) அதை வைத்து தானும் ஒளி பெறலாம் பிறருக்கும் ஒளி கொடுக்கலாம்...!

(2) அதை வைத்து தானும் தன்னை தானே அழிக்கலாம்...! பிறரையும் குடும்பத்தோடு எரிக்கலாம்..!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. விளக்கு எஸ் எம் ஏ அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்:-
posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( ?????) on 17 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21010

ஏற்கனவே பல பத்திரிகைகளில் , பலமுறை படித்த சமாச்சாரங்கள் தான் .தயவுசெய்து புதியதான தகவல்களை தாருங்கள். என்கிறார் Vilack SMA - விளக்கு எஸ் எம் ஏ அவர்கள்..

விளக்கு எஸ் எம் ஏ அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்:- தாங்கள் பல பத்திரிகைகளில் இந்த கைபேசி சமாச்சாரங்கள் படித்தது போல் இன்னும் பல பேர் படித்தும் அறிந்தும் இருப்பார்கள்.. ஆனால் இந்த வலை தளத்திற்க்கு (இந்த கட்டுரை) இது புதிது அல்லவா..? இந்த வலைதளத்தை தினமும் படிப்போருக்கு இது புதியதாகவும்... இந்த வலைத்தளம் மூலம் இந்த செய்தியை அறிந்து தெரிந்து உணர்ந்து புரிந்து கொள்ள சில பேராவது இருக்கலாம்..! அல்லவா..?

இருப்பினும் , புதுமையாக எதுவும் இல்லை என்கிறீர்கள்..! அப்படி என்ன புதுமையை கைபேசியில் எதிர்பார்கிறீர்கள்...?

நான் தாங்களிடம் வாதத்திற்க்கும் விவாதத்திற்க்கும் வர இதை எழுதவில்லை... ஒரு கருத்தாளன் என்ற முறையில் எனது கருத்தை வேண்டுகோளாக எழுதுகிறேன்... நட்புடன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:ஒரு செல் ஊசலாடுகின்றது......
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 17 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21011

ஹிஜாஸ் மைந்தன் அவர்களின் இந்த கட்டுரை கலாச்சாரம் குறித்த கவலையையும் ,அவரது சமூக அக்கறையையும் ஒரு சேர வெளிப்படுத்துகிறது.

என்ற போதிலும் எந்த ஒரு விஞ்ஞான சாதனமும் அதன் பயன்பாட்டு அளவில் மக்களுக்கு பயன்படும் அதேநேரம் அதே மக்களின் ஒரு பகுதியினரால் துஷ்பிரயோகமும் செய்யப்பட்டு வருகிறது.

அணுவை பிளந்த ஐன்ஸ்டீன் அது மக்களை கொல்லும் அணுகுண்டு செய்ய பயன்படுத்தப்படும் என கனவில் கூட எண்ணியிருக்க மாட்டார்.

சினிமாவும் அப்படித்தான். ஒரு இஸ்லாமிய நாடான இரானில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இன்று உலகளாவிய அளவில் பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்று வருகின்றன. ஒரு திரைப்படம் தயாரிக்க அங்கு 15 லட்சம் ரூபாய் இருந்தால் போதுமாம். இங்கு மூன்று கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து நடிகைகளின் தொப்புளில் ஆம்லேட் போடும் காட்சிகள்தான் எடுக்கிறார்கள். ஒரு தமிழ் சினிமாவாவது தமிழனின் நிஜ வாழ்வை பிரதிபலிப்பதாக இல்லை.

விஞ்ஞானமும் கலைகளும் எப்போதுமே ஒரு கூட்டத்தால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.

செல்போனும் இந்த வகையில்தான் தவறான காரியங்களுக்கு உபயோகம் செய்யப்படுகிறது.

கட்டுரையாசிரியர் சொல்லும் வழிமுறைகளையும் இங்கு வாசகர்கள் சிலர் சொல்லியுள்ள வழிமுறைகளையும் பெற்றோர்கள் நடைமுறைப்படுத்தினால் சீரழிவுகளை தடுக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:ஒரு செல் ஊசலாடுகின்றது......
posted by: Vilack SMA (Hong Shen , Siacun) on 18 April 2012
IP: 121.*.*.* China | Comment Reference Number: 21012

சமூக ஆர்வலர் K .S .Shuaib மச்சானின் கருத்து பதிவு மிக அருமை.

" தமிழன் " அவர்களுக்கு , " பழையன கழிதலும் , புதியன புகுதலும் " , நீங்களும் படித்திருப்பீர்கள் . அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க வேண்டாம் . புதியதாக , சிந்திக்க தூண்டும்படியாக உள்ள கருத்துக்களை தாருங்கள் . அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் .

நீங்களும் இதை விவாதமாக கருதாமல் , சமூக அக்கறையுடன் பாருங்கள் .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. இக்கட்டுரை ஒரு நல்லுபதேசம்...............
posted by: Shameemul Islam SKS (Chennai) on 18 April 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 21013

மூன்று நாள் தான் ஆகுது. அந்த சீனப்பெண் வாடிப்போய் சென்னை மவுன்ட் ரோட்டில் நின்றிருந்தாள். அதற்கு கொஞ்சம் முன்பு வரை ஆவலுடன் அலைந்து கொண்டிருந்தார். எப்போது அவள் பணம் (ஒன்றரை லட்சம்) இவன் கைக்கு மாறியதோ அப்போது உடனுக்குடன் பையன் எஸ்கேப். என்னவென்று பார்த்தால் நெட் மூலம் இருவருக்கும் தொடர்பாம்.

காதலன் என்ற பெயரில் வெறும் கற்புக் கள்ளனாகத் தான் அந்த சீனப் பெண் முதலில் நினைத்திருப்பார். ஆனால் அவன் தன்னை நிற்கதியில் விட்டுவிட்ட ஒரு பொருள் திருடன் என்பதை உணர்ந்து கொண்ட அவள் தற்போது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து கையில் காசொன்றும் இல்லாமல் அலைவது தான் மிச்சம்.

முழுப்பூசணியை சோற்றில் மறைத்த கதை உங்களுக்குத் தெரியுமா. நமது மாநிலத்தில் ஒரு ஊரில் ஒன்பது மாதமாக கள்ளத்தனமாக கற்பைச் சுமந்தவள் குழந்தைப் பெற்றெடுக்க வெளியில் வரும்போது தான் ஊர் மக்களுக்கே புரிந்தது, இல்லாத மாப்பிள்ளைக்கு (கல்யாணமாகாமலேயே) பிறக்கப் போகும் குழந்தை என.

என்னென்று பார்த்தால் பக்கத்து ஊரு பையன் செல்பேசி மூலம் கொண்ட தொடர்பால் உயர்வான கள்ளத்தொடர்பாம் அது. இப்போதெல்லாம் ஆணும் பெண்ணும் ஒரே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட்டப்பந்தயத்தில் அல்ல.

ஆணும் பெண்ணும் பூமியும் ஈர்ப்பு விசையும் போல. ஆண் விசைகொண்டு பெண்ணை ஈர்ப்பவன். வெளியில் தெரியமாட்டான். ஆனால் பெண்ணோ பூமி போல ஈர்க்கப்படும் பொருள். இருவருமே சமூகத்தில் குற்றவாளிகள். அவளை சமூகம் தூற்றுகிறது. அவனோ அடையாளம் தெரியாமலேயே விட்டு விடப்படுகிறான்.

செல் ஒரு புதிய மார்க்கம். புதிய ஏற்பாடு.

தீனுல் இஸ்லாம் அல்ல இது. பதின் பருவத்தின் கடைசியில் உள்ளவர்கள் பலர் இன்றைய காலத்தில் பாலியலின் உச்சத்தை அடைந்தே விடுகிறார்களாம். இது ஒரு அதிர்ச்சிகரமான ஆய்வு. தீனுல் இஸ்லாத்தை முழுமையாக கற்றுச் செயல்படாதவர் "தீனுல் செல்லில்" எப்போது வேண்டுமானாலும் மாட்டிக்கொள்வார்.

ஏனெனில் அது சாத்தானின் ஓசை. இப்போதெல்லாம் ஒடிப்போவதை துரத்தவென்றே ஒரு இளைஞர் கூட்டம். தடுத்து நிறுத்தவே. அவர்களுக்கு நான் தொடர்ந்து சொல்வது சுழலும் மின்விசிறியை கையால் நிறுத்தினாலும் நிறுத்தலாம். ஆனால் கையை எடுத்து விட்டால் மீண்டும் சுற்றும். எனவே மின்விசிறியை நிறுத்த சுவிட்சை ஆஃப் செய்யுங்கள். அந்த சுவிட்ச் பைன்ட் தான் இறை அச்சம். ஈமானை ஊட்டுங்கள், இறை அச்சம் வளரும். நல்ல முன்மாதிரியை பெற்றவர்களே தாருங்கள்.

முன்பெல்லாம் தீமையை நாம் தான் துரத்திச் செல்ல வேண்டு இருந்தது. இப்போது அது நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறது. சாத்தான் என்றைக்குமே ஒரு வல்லரசு போல காட்சி தருவான். ஆனால் அவனின் நெற்றிப்பொட்டில் அறைந்து வீழ்த்த ஒரு ஈமானிய பலம் போதும். ஏனெனில் அது இறை பலம்.

இக்கட்டுரை ஒரு நல்லுபதேசம். தேவையான போதெல்லாம் நல்லுபதேசம் கூறுமாறு முஸ்லிம்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியதாக தமீம் இப்னு அவ்ஸ் எடுத்துச் சொன்னார்கள். "சன்மார்க்கம் என்பது நேர்மையான ஆலோசனையாகும்" என நபியவர்கள் கூறினார்கள். "யாருக்கு?" என நாம் கேட்டோம்.

"அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவனுடைய வேதத்திற்கும், முஸ்லிம்களில் தலைவர்களுக்கும் அவர்களுடைய பொது ஜனங்களுக்கும்" என்றார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:ஒரு செல் ஊசலாடுகின்றது......
posted by: K S Muhamed shuaib (Kayalpatinam) on 18 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21014

மச்சினன் விளக்கு எஸ்.எம்.எ அவர்களுக்கு நன்றி.

நான் இதை விவாத பொருளாக ஆக்கவில்லை. எனது கருத்துக்கள் சில.

இந்த கட்டுரையில் உங்களைப்போலவே என்னக்கும் கூட தெரிந்து கொள்ள புதிதாக எதுவும் இல்லைதான். எனது நீண்ட வாசிப்பு அனுபவத்தில் இது குறித்து நிறைய நான் வாசித்துள்ளேன். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வாசிப்பு அனுபவம் எனபது மிக மிக குறைவு. எல்லோரும் இணைய தளத்தில்தான் புகுந்து விளையாடுகிறார்கள் அதிலும் கூட இக்கட்டுரையாளர் சொல்வது போல தேவையற்ற வீண் விஷயங்களில்தான் ஈடுபாடு கொள்கிறார்கள்

நல்ல விஷயங்களை தேடி படிக்கும் ஒருசிலருக்காவது இது போன்ற கட்டுரைகள் விழிப்புணர்வு ஊட்டட்டுமே என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் மீண்டும் மீண்டும் இது போன்ற கட்டுரைகள் எழுதப்படுகின்றன. வெளியிடப்படுகின்றன.

தயவு செய்து நமது வாசிப்பின் ருசியை மட்டுமே அளவு கோலாக கொண்டு எதையும் எடை போட வேண்டாம் எனபது எனது தாழ்மையான வேண்டுகோள்.

செல்போன் என்பதை நாம் ஒரு போர்வாளாக கொண்டால் போர்வாளின் பயன் எதிரிகளை களத்தில் சந்திப்பதே. ஆனால் நாம் போர்வாளை புடலங்காய் நறுக்க பயன்படுத்தினால் தவறு நம்மீதா ?அல்லது போர்வாளின் மீதா ?என்பதை சகோதரர்கள் சிந்திக்குமாறு வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:ஒரு செல் ஊசலாடுகின்றது......
posted by: Bathool (KSA) on 18 April 2012
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21015

Assalamualaikkum.katturai mihavum arumai.ithupoal katturai niraiya newspaper,magazine la vanthirunthaalum athai kayal makkal padithiruppaarhala nu theriyathu.but intha website nam kayal makkal kandippaha padippaanga.ithai paarthu nam makkal thirunthuna sarithaan.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. ஒரு செல் ஊசலாடிக் கொண்டே தான் இருக்கின்றது...
posted by: Rabiya Shuaib (Kayalpatinam) on 18 April 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21017

கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கும் போது இது மாதிரியான எத்தனை கட்டுரைகள் வந்தாலும் அலுப்பு ஏற்படுவது இல்லை. கேள்விப்பட்ட விஷயமாகவே இருந்தாலும் ஒவ்வொரு தடவை படிக்கும் போதும் புதிதாக பயம் ஏற்படுகின்றது. அவ்விதமான பயத்தை இக்கட்டுரையை படிக்கும் போது உணர்ந்தேன். எனக்கு ஏற்பட்ட பயம் தான் இக்கட்டுரையாளரின் வெற்றி. இதே பயத்தை எல்லோர் மனதிலும் விதைக்க வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம். இந்த நொடி வரை நடந்துக் கொண்டிருக்கும் சீரழிவு என்பதால் இதில் பழையது கழிவதற்க்கு இடமில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. ஷைத்தானின் ஊசல்
posted by: sheit (Dubai) on 20 April 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21019

கட்டுரையாளரின் கட்டுரை, பட்டுரைக்குள் வைக்கவேண்டிய, கருத்து, பட்டவர்த்தனமாக , இதயத்தை கில்லிருக்கிறார்.கற்காலத்தில் இருந்து செல்காலத்தில் வந்திருக்கிறோம், இது செல்லின் ஊசலாட்டம் அல்ல, ஷைத்தானின் ஊசலாட்டம், இதற்கெல்லாம் காரணம் பெற்றோரும் முக்கிய பங்கு வைக்கிறார்கள், முதலில் நாம் இறை அச்சமுள்ளவராக இருக்கவேண்டும், அதுபோல் நம் பிள்ளைகளை வளர்க்கவேண்டும், நாமே சினிமா, பாட்டு, கூத்து என்று அதன் பின்னால், முன்னாளாக நிக்கிறோமே, வயசு அறுபது ஆகுது செல்லின் ரிங்க்டோன் குத்தாட்டம் பாட்டாக இருக்கிறதே, நமக்கே சொரணை இல்லையே.

விடை, நபி (ஸல்) சுன்னாவை முறையாக பின் பற்றினால், நம் இளசுகளை பிஞ்சிலே பழுக்காத முதிர்ந்த கனியாக்க முடியும். என்னுடைய கருத்து யாரையும் நோவ வைப்பது அல்ல நம் இளசுகள் வாழ்கை நொந்த மீனாக போககூடாதே என்று தான். அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்த கிருபை செய்யணும்.

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. Re:ஒரு செல் ஊசலாடுகின்றது......
posted by: mackie noohuthambi (colombo) on 20 April 2012
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 21020

example is better than precept. please ensure that the editor of this essay disposes all his mobile phones and command all his family members and his well wishers to do away with cell phone. the essay is worth reading, but cannot be put into practice. please tell the alternative. in this era of robo world, this type of out dated talks will put the readers into laughter.

innovations are not bidaths, but when it goes against the teachings of islam it should be oppressed. so advise the users about the evils of cell phones. we use computers, sometimes virus is there. we will rectify the error. we will not put the computer in the waste paper basket.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
15. Re:ஒரு செல் ஊசலாடுகின்றது......
posted by: Lebbai (Riyadh) on 21 April 2012
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21021

அஸ்ஸலாமு அழைக்கும்,

கட்டுரையாளரின் கட்டுரை அருமை. இதில் செல்போன் பிள்ளைகளிடம் தந்தால், கண்காணிக்க வழிகள் சொல்லப்பட்டுள்ளது. முடிந்த அளவு, கையில் கொடுக்காமல் தவிர்ப்பதே நல்லது.

மிகவும் அவசிய சமயத்தில், பெற்றோர்கள் தன் செல்போனை தற்காலிகமாக கொடுத்து உபயோகிக்க சொல்லலாம். (பெரியோர்கள் பயன்படுத்தும் சொந்த செல்போன்களை தவிர்த்து, தனியாக பொது உபயோகத்திற்கென்று ஒரு செல்போன் வீட்டில் எல்லோரும் பயன்படுத்த வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம்).

கலாசார சீரழிவுக்கு, செல்போன் ஒரு முக்கிய காரணிகளாக இருக்கிறது. இது போன்று முறையாக ஹிஜாப் பின்பற்றாமை, இளமையிலேயே அடிப்படை மார்க்க கல்வி புகுட்டாமை, போன்றவை அதி முக்கிய காரணங்கள் என்றால் மிகையாகாது.

உலக கல்விக்காக நாம் (மார்க்க கல்விகளை புறக்கணித்து) வெள்ளிக்கிழமை-களை தியாகம் செய்யவில்லையா? இதற்கு யார் காரணம், நம்மவர்கள் நிர்வகிக்கும் பள்ளி நிர்வாகமா, அரசு அதிகாரிகளா? நிச்சயமாக அரசு இதில் நிர்பந்தம் செய்யாது.

மார்க்க கல்வி பேசும் நம்மவர்கள் எத்தனை நபர் இதை மனதளவில் ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள்? இன்ஷா அல்லாஹ், இது சம்பந்தமாக யாராவது ஒரு அழகிய கட்டுரை தந்து, சமுதாயத்தின் கண் திறந்தால் அல்லாஹ் நம்மனைவருக்கும் கிருபை செய்வான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
16. விழிப்புணர்வு தான் வழி
posted by: M Sajith (DUBAI) on 23 April 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21023

சரியையும் தவறையும் ஒரு சேர தெரியத்தருவதுதான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செய்யும் பெரிய உபகாரமாக இருக்கமுடியும்.

தடை செய்வதால் எதையும் நிறுத்திவிட இயலாது என்பதும் மாறாக அதில் ஆர்வமும், தூண்டுதலும் மேலும் கூடும் என்பதும் பலரும் அறிந்ததே.

பொதுவாகவே சிலவற்றை, குறிப்பாக ஆண் பெண் உறவுமுறைகள் அதில் சரி தவறு, விளைவுகள் விபரீதங்கள் குறித்த தகவல்கள் போன்றவைகளை குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ளும் பழக்கம் நமதூர் காலாச்சாரத்தில் இல்லை. இது போன்ற கதைகள் சம்வங்கள் பேசிக்கொள்ளும் வேளையில் சிறியவர்கள் வந்தால் உடனே ஒரு நிசப்த்தம், இவை எல்லாம் இன்னமும் ஆர்வம் அதிகரிக்க செய்யும்..

ஒரு காலத்தில் வேண்டுமானால் இந்த நிசப்தங்களும் ஒளிவு மறைவுகள் சீர்கேட்டை தவிர்க்க உதவியிருக்கலாம், ஆனால் இன்று அறிந்து கொள்ள ஆயிரம் வழிகள்., அதிலும் அரைகுறையான அறிவு அதுவே ஆபத்தாகிவிடுகிறது.

விழிப்புணர்வு மற்றும் கல்வி அறிவுதான் சரியான தீர்வு, மார்க்கம் என்பது வாழ்க்கை முறை என்பதை நம்பினால், சரி அல்லது தவறு என அறிந்து கொள்ளும் ஒரே கல்விதான் இருக்க முடியும். ஒரு விசயம் சரி சரியில்லை என்பதை அதன் அடிப்படையோடு சொல்லித்தந்தால், உணரச்செய்தால் அசம்பாவிதங்கள் குறைந்துவிடும்.

நெருப்பு சுடும் என்று தெரிந்து தொடுபவர் எத்தனை பேர், அதையும் மீறி தொடுவதானால் - பிடிவாதத்துக்கு மருந்தேது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved