கம்ப்யூட்டர் யுகத்தின் தாக்கம் பிறந்த பிள்ளைகள் முதல் முதியோர் மீது வரை பிரதிபலிப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். இத்தருணத்தில் - நம் மாணவ மாணவிகளை, குறிப்பாக மாணவர்களை, இது எவ்வாறு சீரழித்துக்கொண்டு இருக்கிறது என்பதை, பன்னிரெண்டாம் வகுப்பு பரிட்சை முடிவுகள் வந்து இருக்கும் இவ்வேளையில் - தேர்வு முடிவுகளை ஆராய்ந்து, இந்த கம்ப்யூட்டர் யுக சமூக மாற்றத்தில் சிக்கித்தவிக்கும் காயல் மாணவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
கற்காலம் முதல் இக்காலம் வரை - காலத்தின் பரிணாம வளர்ச்சி - பல புதிய கண்டுபிடிப்புகளை தந்து கொண்டே இருக்கின்றது. கடந்த 100 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், மின்சாரம், டிவி, கம்ப்யூட்டர், கைப்பேசி, இணையம் (INTERNET), கார்/பைக் போன்ற
போக்குவரத்து கருவிகள் என்று இந்த 6 விசயங்களிலும்தான் தூக்கத்தை போக நம் அனைவரின் நேரங்களும் (வீண) அடித்து
செல்லப்படுகின்றன. இதற்கு பெரும்பாலும் எவரும் விதிவிலக்கல்ல.
ஆனால் எதற்கும் எல்லை என்று ஒன்று அவசியம்/உள்ளது. இஸ்லாம் கூறுவதைப்போல மத்தியஸ்தம் என்று ஒன்று உண்டு. அதுவும் ஒவ்வொரு வயதினர்க்கும். இதனை உணராததன் காரணமாக தான் - தந்தையின் நேர் கண்காணிப்பில் இல்லாத இன்றைய நம்
இளைய மாணவ சமுதாயம், சமூக மாற்றத்தில்சிக்கி தன் எதிர் காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்துக்கொண்டு வருகிறது.
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வரும்போது - பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று, பெருமையின் அடையாளமாக - நாம் வாங்கி வரும்
கம்ப்யூட்டர், கைப்பேசி மற்றும் நாம் விடுமுறைக்கு வந்த பிறகு வாங்கிக் கொடுக்கும் கார்/பைக் போன்றவையும், நம் விடுமுறை கழிந்த பின் நம்
கட்டுபாட்டில் இல்லாத பட்சத்தில் நம் பிள்ளைகளால் எவ்வாறு உபயோகபடுத்தப்படுகின்றன என்பதை கண்காணிக்க நாம் தவறி விடுகிறோம்.
இணையம் (INTERNET) வசதி இல்லாத வீடுகள் காயலில் இன்று மிக சொற்பமே. அப்படி இல்லையென்றாலும் கண்டிப்பாக கைப்பேசியில் மாதம்
200 ரூபாய் கொடுத்து தடையில்லா வலைதள வசதி (UNLIMITED INTERNET) வைத்து இருக்கும் மாணவர்கள் அதிகம். இன்றைய அனேக மாணவர்களின் லைப்ஸ்டைலே பைக், தடையில்லா வலைதள வசதி/ தடையில்லா SMS வசதி கொண்ட கைப்பேசி, தூக்கம் போக மிச்ச நேரங்களில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அப்டேட்ஸ். அதன் வெளிப்பாடு +2 முடிவுகளில் தெள்ளத் தெரிகிறது.
நான் காயல்பட்டணம்.காம் வெளியிடும் காயல்பட்டண முடிவுகளை கடந்த நான்கு-ஐந்து வருடங்களாக ஆராய்ந்து வருகின்றேன். உண்மை கசக்கும் என்பார்கள். வருடா வருடம் 10 - 12 மாணவர்களை தவிர்த்து - பெரும்பான்மையான மாணவர்களின் தரத்தை நோக்கினால், கவலைதான் மிஞ்சுகிறது.
=== 2012ம் ஆண்டு 700 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்த மாணவர்களின் சதவிகிதம் 43.28% (Overall - 25.6%)
=== 2012ம் ஆண்டு 901-1000 மதிப்பெண்களுக்கு மத்தியில் உள்ள மாணவர்களின் சதவிகிதம் 7.96% (Overall - 17.35%)
=== அதே வேளையில் 2012, 2009 தவிர்த்து - 2011, 2010, 2008 ஆண்டுகளில் 1000 மதிப்பெண்களுக்கு கூடுதலாக எடுத்த மாணவர்களின்
எண்ணிக்கை மொத்த சதவிகித்தில் பாதிகூட இல்லை
=== ஐந்து ஆண்டுகளில் 858 மாணவர்களில் 2 மருத்துவர்கள் தான் மாணவர்கள், 7 பேர்தான் நல்ல இஞ்சினியரிங்க் கல்லூரிகளில் சேர்ந்து
உள்ளனர். 22 பேர்தான் ஒரளவு மிதமான இஞ்சினியரிங்க் கல்லூரிகளில் இலவச சீட்களில் சேர்ந்து உள்ளனர். இது 4 சதவிகிதம் கூட
இல்லை
நகரில் உள்ள ஆண்கள் பள்ளிகளின் தேர்வு முடிவுகளை தற்போது காண்போம். இப்புள்ளிவிபரங்களை வழங்குவதன் நோக்கம் - பள்ளிக்கூடங்களை குறை கூறுவதற்கு அல்ல. இப்புள்ளிவிபரங்கள் எடுத்துக்கூறும் யதார்த்தத்தை - பார்வையாளர்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.
மாறிவரும் சமுதாயத்தில் சிக்கித்தவிக்கும் காயல் மாணவர்களை எவ்வாறு அணுகலாம் என்பதை இப்பொழுது பார்ப்போம்.
<> 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கண்டிப்பாக பைக், அலைபேசி , டிவி போன்றவைகளை மாணவர்களுக்கு மட்டுமில்லாமல்,
பெற்றோர்களும் உபயோகிப்பதை, குறைத்தல்
<> வெளியூர், வெளிநாட்டில் உள்ள தந்தைமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு - அவர்களின் முக்கிய வகுப்புகள் படிக்கும் ஆண்டுகளில் -
பெருமைக்காக பைக், கைப்பேசி வாங்கி கொடுத்தல், வீட்டில் புதிதாக இணையம் (INTERNET) பொருத்துதல் போன்றவைகளை தவிர்ப்பது
<> பிள்ளைகளுக்கு 8ம் வகுப்பு முதலே - தான் அரபு நாட்டில் படும் கஷ்டங்களை சொல்லி, நன்றாக படித்தால்தான் நல்ல வேலையில் அமர
முடியும் என்றும், தன்னைப் போல வெளிநாட்டில் அவதிபட வேண்டியது இல்லை என்றும், நல்ல வேலையில் அமர்ந்தால்தான் வாப்பா அரபு நாட்டில்
படும் கஷ்டத்தில் இருந்து விலகி ஊர் வர முடியும் என்றும் நினைவூட்டி கொண்டே இருப்பது
<> இல்லத்தில் இணையத்தை தவிர்க்க முடியவில்லை என்றால், தங்கள் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கும் பட்சத்தில் -
அவர்களின் சமூக வலைதளங்களில் தந்தையர்களும் இணைந்து அவர்களின் செயல்களை கவனிப்பது
<> அலைபேசிகளில் தடையில்லா இணையம் (UNLIMITED INTERNET) வ்சதி உள்ளதா இல்லையா என்று முக்கிய வகுப்புகளில்
கண்காணித்துக்கொண்டே வருவது
<> 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை விளையாட்டை குறைப்பது. நண்பர்கள் வட்டம், அவர்களுடன் அரட்டை அடிப்பது ஆகியவற்றை முற்றிலும்
குறைப்பது
|