Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:01:24 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 38
#KOTWART0138
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஏப்ரல் 18, 2013
இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை?
இந்த பக்கம் 7055 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அது யாழ்ப்பாண நகரம். அக்டோபர் 30 - 1990 காலை மணி 10.30. LTTE விடுதலைப் புலிகளின் வாகனத்தில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கி அலறியது. நகரில் முஸ்லிம்கள் வசிக்கும் மூலை முடுக்குகள் எல்லாம் சென்ற அது, குடும்பத்தில் ஒருவராவது கட்டாயமாக - கண்டிப்பாக பகல் 12.00 மணிக்கு உஸ்மானியா கல்லூரியில் உள்ள ஜின்னா ஸ்டேடியத்திற்கு வருமாறு கட்டளையிட்டது. திரும்பத் திரும்ப - வாகனம் திரும்பிய பகுதியெல்லாம் பலத்த குரலில் அந்த ‘அரச கட்டளை’யை அது அறிவித்தவாறு சென்றது.

துப்பாக்கிகளை ஏந்திய போராளிகள் அதிகமாக தெருக்களில் குவியத் துவங்கினர். சிலர் கால்நடையாக வீடு வீடாகச் சென்று அச்செய்தியை அறிவித்தனர். ஏன், எதற்கு என்று எதுவுமறியாத மக்கள் தங்கள் கைகளில் இருந்த வேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டு, ஜின்னா ஸ்டேடியம் நோக்கி நடக்கலாயினர். 12.30 மணியளவில் ஆஞ்சநேயர் என்றும், இளம்பரிதி என்றும் அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் அம் மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வார்த்தையைப் பேசலானார்.

“பாதுகாப்பு காரணங்களுக்காக யாழ்ப்பாண முஸ்லிம்கள் இரண்டு மணி நேர அவகாசத்தில் நகரைக் காலி பண்ண வேண்டும் - அதாவது நகரை விட்டுச் செல்ல வேண்டும் என்று உயர் பீடம் முடிவு செய்து அறிவிக்கிறது. செய்யத் தவறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்”. அவ்வளவுதான். விளக்கம் ஏதும் தரப்படவில்லை. இவர்களுக்கு விளக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைத்தார்கள் போலும்.

ஏன், எதற்கு என்று ஒன்றும் புரியாத சிலர் காரணங்களைக் கேட்டபோது, ஆஞ்சநேயர் கோபத்தின் உச்சிக்குச் சென்றார். (மரத்திற்கு அல்ல!) “முஸ்லிம்கள் கட்டளைக்குப் பணிய வேண்டும்... இல்லாவிடில் பயங்கர விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும்” என்றதோடு அவர், தனது கையிலிருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி பலமுறை சுட்டார். இதுதான் உங்களுக்குக் கிடைக்கும் என்று சொன்னாரோ இல்லை துப்பாக்கியே தங்களுக்கு துணை என்று காட்டினாரோ தெரியாது. அவரது மெய்பாதுகாவலர்கள் சிலரும் தங்கள் தலைவர் செய்ததைப் போலவே செய்து, தங்களின் Fire Power-ஐக் காட்டினர்.

உண்மைச் செய்தி “பட்டாசு வெடிகளோடு” மக்களுக்கு சொல்லப்பட்டுவிட்டது. ஆனால் அந்த அப்பாவி மக்கள் வித்தியாசமாகவே நினைத்தனர். அதாவது, அரசுப் படைகள் யாழ்ப்பாணத்தை நோக்கி நகரத் துவங்கிவிட்டார்கள். ஆகவே, எல்லா மக்களையும் வெளியேறும்படி விடுதலைப் புலிகள் கேட்கிறார்கள் என்றுதான் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

அந்த அளவிற்கு அவர்கள், “தம்பிமார்”களை தங்களுக்குத் தீங்கு செய்யாதவர்களாகவே நினைத்தனர். புலி தங்கள் மீது நகத்தை வைத்து பிறாண்ட ஆரம்பித்து விட்டது என்பதை அவர்கள் உணரவேயில்லை. தாங்கள் மட்டும்தான் துரத்தப்பட்டோம் என்பதை அவர்கள் அறிய வெகு காலம் பிடித்தது. அப்படியான சூழலில்தான் அவர்கள் வாழ்ந்தார்கள்.

புலிப் போராளிகள் மேலும் மேலும் அதிகமாகத் தெருக்களில் குவிய ஆரம்பித்ததைப் பார்த்த முஸ்லிம்கள் பெரிதும் குழம்பினர். இரண்டு மணி நேரத்தில் இடத்தைக் காலி பண்ண வேண்டும். துப்பாக்கி ஏந்தியவர்கள் தெருக்களில் ‘பொத்’ ‘பொத்’ என்று வாகனங்களிலிருந்து இறங்கத் துவங்கிவிட்டனர்.

பெரிய சமர் ஒன்றிற்கு யாழ்ப்பாணம் தயாராகிறது போலும் என்று நினைத்த அவர்கள் அவசர அவசரமாக தங்கள் உடமைகளைப் பொதிகளாக்கத் துவங்கினர். துணிமணிகள், நகைகள், பணம் என்று எது எதுவெல்லாம் அவசியமென்று தெரிகிறதோ அவற்றையெல்லாம் எடுத்தனர். விடுதலைப் புலிகள் பஸ், வேன் என்று போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர். சில முஸ்லிம்கள் தங்கள் சொந்தப் போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

தங்கள் வசிப்பிடங்களை விட்டும் மக்கள் வெளியேறத் துவங்கியதும், அடுத்த ஆணை வந்தது. “ஐந்து முனைச் சந்தி”யில், வெளியேறும் முஸ்லிம்கள் அனைவரும், “q"வரிசையில் நிற்கும்படி அறிவிப்புச் செய்யப்பட்டது. வரிசையில் நின்ற மக்களின் வயிற்றில் அங்குதான் அடிக்கப்பட்டது.

எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் முன்பு அறிவிக்கப்படாததால் மக்கள் தங்கள் விருப்பப்படி பொருட்களை எடுத்திருந்தனர். இப்போது ஆண் புலி, பெண் புலி எல்லோரும் முஸ்லிம்கள் அவர்களிடம் இருக்கும் பணம், நகைகள் மற்றும் பொருட்களையெல்லாம் தங்களிடம் தந்து விட வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறி, ஒருவருக்கு ரூ.150 தொகையும், ஒரு ஜோடி உடுப்பும் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றனர்.

மக்கள் குமுறத் தொடங்கினர். பெண்கள் அழ ஆரம்பித்தனர். ஆனால் புலிகளின் உறுமலும், அவர்களின் கைகளிலிருந்த - அவர்களை விட பயங்கரமான ஆயுதங்களும் அம் மக்களை மவுனியாக்கின. மக்கள் கைகளிலிருந்த பொதிகள் எல்லாம் இப்போது கை மாறின – கைப்பற்றப்பட்டன. சூட்கேசுகள் திறக்கப்பட்டன. ஓர் உடுப்பு மட்டும் எடுக்க அனுமதிக்கப்பட்டது.

கைலி உடுத்தி இருந்தவர்க்கு இன்னொரு கைலி தரப்பட்டது. கால் சட்டை போட்டிருந்தவருக்கு இன்னொரு கால் சட்டை, புடவை கட்டியிருந்தவர்க்கு இன்னொரு புடவை, பாவாடை தாவணியில் இருந்தவர்களுக்கு இன்னொரு செட். என்னே தாராள மனம்...? பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்களால், பணம், அடையாள அட்டை, சொத்துகளுக்குரிய ஆவணங்கள், வாகனங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன.

இது பகற்கொள்ளை. சுதந்திர போராட்ட வீரர்கள் மக்கள் உடைமைகளைத் தொடுவதில்லை. சுபாஷ் சந்திர போஸை முன்மாதிரியாகக் காட்டிய விடுதலைப் புலிகளின் தலைவருக்கு, சுபாஷின் போராட்ட வாழ்வில் இதுபோன்ற நிகழ்வைக் காட்ட முடியாது.

பெண் போராளிகள் பெண்களின் நகைகளைப் பறித்தனர். சில பெண் புலிகள் - பெண்களின் காதுகளில் இருந்த ஆபரணங்களை முரட்டுத் தனமாக இழுத்துப் பறித்ததில், இரத்தம் வழிந்தது. ‘ஆ’வெனக் கத்திய பெண்கள் வாயை மூடுமாறு, பெண் புலிகளின் கனல் கக்கும் கண்களால் சொல்லப்பட்டனர். சில ஆண் புலிகள் பலமாக உறுமவும் தவறவில்லை. குழந்தைகளின் நகைகளும் தப்பவில்லை. அதற்கெல்லாம் மேலாக, ஒரு கைக்கடிகாரம் கூட கொடுக்கப்படவில்லை. Yes, their time was bad. ஆனால், யாருடைய time bad என்பதை அறிய 19 வருடங்கள் பிடித்தன.

35 பணக்கார முஸ்லிம்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சில முஸ்லிம் நகை வியாபாரிகள், தங்கம் எங்கு ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்று கேட்டு பலவந்தப்படுத்தப்பட்டனர். ஒரு நகை வியாபாரி மற்றவர்கள் முன்பாக அடித்துக் கொல்லப்பட்டார். அவர்களை விடுவிக்க பெரும்பணம் கேட்டனர் இந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள். 30 லட்சம் வரை சிலர் கொடுத்தனர். இருந்தும், கடத்தப்பட்ட வர்த்தகர்கள் படிப்படியாகவே விடுவிக்கப்பட்டனர். சிலர் வெளியே வர சில வருடங்கள் ஆயின. அவர்களில் 13 பேர் திரும்பவேயில்லை. ஆம், திரும்பி வர இயலாத இடத்திற்கு அவர்கள் சென்றுவிட்டனர்.

யாழ்பாண முஸ்லிம்களைப் பொருத்த வரையில், விடுதலைப் புலிகள் அவர்களிடம் மிகவும் கடுமையாக - கொடுமையாக நடந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். முஸ்லிம்களுக்கும், அங்குள்ள ஹிந்து சமூகத்திற்கும் இடையே மிகவும் சுமுகமான உறவு இருந்தது. அவர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இரண்டு மூன்று இடங்களில்தான் செறிந்து வாழ்ந்தார்கள். சோனக தெரு, ஒட்டு மடம், பொம்மை வெளி பகுதிகளில்.

வர்த்தகத் துறையில் மிகவும் செல்வாக்கு பெற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். இரும்பு வியாபாரம், லாரி போக்குவரத்து, நகை வியாபாரம், இறைச்சிக் கடை என்பன அவர்களின் தனிச் சொத்து போல் இருந்தன. அந்நாளில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த L.K.S. மற்றும் A.K.S. நகை வியாபாரிகள் அங்கு பிரபல்யமாக இருந்ததையும் குறிப்பிடலாம்.

1975 அளவில் மேயர் ஆல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்ட புதிய நகரசபை அங்காடியில் யாழ்பாண முஸ்லிம்களே ஆதிக்கம் செலுத்தினர். அதிலிருந்த மூன்று பகுதிகளில் இரண்டு பகுதி இவர்கள் வசமே இருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முதன்முதலாக நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது மேயர் துரையப்பாவைத்தான் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் பல கல்விமான்கள், அறிஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்களும் இருந்தனர். தமிழ் மொழியில் அங்குள்ள ஹிந்துக்களுக்கு இணையாகப் பாண்டித்தியம் பெற்றவர்கள் பலர் இருந்தனர். கொழும்பு சாகிரா கல்லூரியின் அதிபர் மர்ஹூம் A.M.A.அசீஸ் (இவரிடம் அன்றைய காயலர்கள் - எனது மைத்துனர் மர்ஹூம் டாக்டர் சுலைமான், லண்டன் டாக்டர் செய்யிது அகமது போன்ற பலர் மாணவர்களாக இருந்தனர்) உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர், மேல் நீதிமன்ற நீதிபதி M.M.ஜமீல், கல்வித் துறை இயக்குநர் மன்சூர் போன்ற எண்ணற்றவர்களைக் குறிப்பிடலாம். அரசியலில் பலர் இருந்தனர். யாழ்ப்பாண துணை மேயர்களாக பஷீர் அவர்களும், சுல்தான் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இப்படியெல்லாம் இருந்தும் முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இதற்குக் காரணம் என்ன?

வடபகுதியில் முஸ்லிம்கள் சிறுபான்மையாகவே இருந்த வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அங்குள்ள ஹிந்துக்களுக்கு சமமான எண்ணிக்கையில் இருந்தனர். இங்கு இரு சாராரின் உறவு வடபகுதியில் இருந்தது போல் சுமுகமாக இருக்கவில்லை. அடிக்கடி பலப்பரீட்சையில் அது சிக்கியது. சிறு சிறு உரசல்கள் பின்பு மோதல்களாக உருவெடுத்து உறவைக் குலைத்தன.

இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்கள் சிலரும் இருந்தனர். பின்பு, சில சில கசப்புகளின் காரணமாக அவர்கள் வெளியேறத் துவங்கினர். ஒதுங்கியவர்கள் சிலர், பிற இயக்கங்களில் சேர்ந்தவர்கள் சிலர், அரசு பக்கம்சாய்ந்தவர்கள் சிலர். இது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டை மீறிய செயல். ஆகவே அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். தங்கள் வசம் இருந்த சில முஸ்லிம் இளைஞர்களை அவர்களே சுட்டுக்கொன்றனர்.

விடுதலைப் புலிகளின் சார்பில் கிழக்கு மாகாணத்திற்கு அன்று கருணா என்ற விநாயகமூர்த்தியும், கரிகாலனும் பொறுப்பாக இருந்தனர். இன்றைய அரசில் கருணா ஒரு துணை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களால் கிழக்கு மாகாண புலிகள் முகாமில் ஒரு முஸ்லிம் எதிர்ப்பு - வெறுப்பு உணர்வு தூண்டப்பட்டது.

இதே வேளை, அன்றைய அரசால் உருவாக்கப்பட்ட துணை ஊர் காவல்படையில் இருந்த முஸ்லிம்கள் ஹிந்து தமிழர்கள்பால் கட்டவிழ்த்துவிட்ட அட்டூழியங்கள் - கருணா, கரிகாலன் ஆகியோரை முஸ்லிம்கள் மீது பாரிய அளவில் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியது. அதற்காக அவர்கள் வடக்கு சென்று பிரபாகரனைச் சந்தித்து, பேசலாயினர்.

இதன் விளைவாக, கிழக்கில் சில முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டன. வீடுகள், கடைகள் எரியூட்டப்பட்டன. ஆண் - பெண் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பள்ளிவாயில்களும் தாக்குதலுக்கு இரையாயின. மட்டக்களப்பு, சம்மாந்துறை மஸ்ஜிதுகளில் தொழுகையில் இருந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உச்சகட்டமாக, ஆகஸ்டு 1990இல், காத்தான்குடி முஸ்லிம்களை நகரை விட்டும் வெளியேறும்படி துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இல்லாவிடில் பயங்கர விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என அது அச்சுறுத்தியது.

ஆகஸ்டு 03ஆம் திகதி இரவு, ஆயுதம் தாங்கிய 30 விடுதலைப் புலிகள் முஸ்லிம்கள் போல் வேடம் தரித்து, சுமார் 08.10 மணியளவில், காத்தான்குடியில் மீரானியா ஜும்ஆ மஸ்ஜித், ஹுஸைனிய்யா மஸ்ஜித், மஸ்ஜிதுல் நூர், பவ்சி மஸ்ஜித் ஆகிய இடங்களில் - இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றனர். இறந்தவர்கள் 147 பேர். அதில் - வயதில் மூத்தவர்கள், இளைஞர்கள், சிறுவர்களும் அடங்குவர்.

இந்த அனர்த்தத்தை - மனிதப் படுகொலையை நேரில் கண்ட 40 வயது முஹம்மது இப்றாஹீம் என்ற வர்த்தகர், சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். நியுயோர்க் டைம்ஸ் பத்திரிக்கையில் அவர் கூறியதாவது:- “நான் குனிந்து தொழுதுகொண்டிருந்தேன்... பயங்கரவாதிகள் சுடத் துவங்கினர்... அது 15 நிமிடங்கள் நீடித்தது. நான் இறந்தவர்களோடு படுத்துக்கொண்டதால் தப்பினேன்...” என்றார்.

முஹம்மது ஆரிஃப் என்ற 17 வயது இளைஞன், “நான் பக்கத்திலிருந்த கதவு வழியாகத் தப்பி, சுவர் ஏறிப் பாயும்போது, ஒரு விடுதலைப் புலி பயங்கரவாதி, சிறுவன் ஒருவனின் வாயில் துப்பாக்கியைத் திணித்து, பின்பு வெடிக்க வைத்ததைக் கண்ணால் கண்டேன்...” என்று நியுயோர்க் டைம்ஸ் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தான்.

இந்த பள்ளிவாயில் படுகொலையில் ஐந்து வயது, பத்து வயது சிறுவர்கள் பலர் இருந்ததையும், பலியானதையும் நாம் குறிப்பிட வேண்டும். ஒரு பாலச்சந்திரனுக்காக, பாலகனைக் கொல்லலாமா என்று துடிதுடிக்கும் தமிழகத்து தமிழீழ ஆர்வலர்கள், இதையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

என்ன பாவம் செய்தான் 12 வயது பாலகன் என்று நீங்கள் கேட்கும்போது, என்ன பாவம் செய்தார்கள் பள்ளியில் தொழுத இம் மக்கள் - இந்த பாலகர்கள்? பாலச்சந்திரன் பாவம் செய்தவன்தான். அப்பாவிகளை - பாலகர்களைக் கொன்ற கொலைகாரத் தந்தை ஒருவனுக்கு மகனாகப் பிறந்தது பாவமில்லையா?

இந்நிலையில், சாவகச் சேரியில் நடந்த ஒரு சம்பவம், அதனை விடுதலைப் புலிகள் எடுத்துக் கொண்ட முறை, அதனை அவர்கள் கையாண்ட விதம், வடக்கு முஸ்லிம சமூகத்தின் எதிர்காலத்தையும், விடுதலைப் புலிகளின் வரலாற்றையும் இருட்டாக்கியது.

செப்டம்பர் 04ஆம் திகதி, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான சில தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை மோதலை உருவாக்கியது. இதில் சில தமிழர்கள் பள்ளிவாயிலைத் தாக்க முற்படவே, முஸ்லிம் இளைஞர்கள் அதனைத் தடுத்து, அவர்களை விடுதலைப் புலிகளின் காவல் படையில் ஒப்படைத்தனர். (அக்காலத்தில் அப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.) ஆனால் விடுதலைப் புலிகள் அவர்களை விடுவித்ததோடு, சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும்பான்மை தமிழர்களோடு மோதக்கூடாது என எச்சரித்தது. அடுத்து, செப்டம்பர் 25ஆம் திகதி, சாவகச்சேரி பகுதியை விட்டு வெளியேற, ‘அனுமதி பாஸ்’ கேட்டு, மறுக்கப்பட்டு, தகராறு செய்த முஸ்லிம் இளைஞன் “காணாமல் போனான்”.

இந்நிலையில் ஒரு முஸ்லிம் கடையில் வாள் 75 எண்ணிக்கையில் இருப்பதாகச் சொன்ன விடுதலைப் புலிகள் அவற்றைக் கைப்பற்றியதோடு, முஸ்லிம்களின் வீடுகள் - கடைகள் அனைத்தையும் சோதனை செய்ய ஆரம்பித்தனர். இது சலிப்பை உண்டாக்கியது. அக்டோபர் 15ஆம் திகதி, சாவகச்சேரியின் 1000 முஸ்லிம்களும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வவுனியா பகுதிக்கு வெளியேறிச் செல்லுமாறு கட்டளையிடப்படவே, அவர்கள் வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து, மன்னார் பகுதியிலிருந்துதம், ஏனைய வடபகுதியிலிருந்தும் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர் - துடைத்து எறியப்பட்டனர். கடைசியாக அக்டோபர் 30இல் வெளியேற்றப்பட்டவர்கள்தான் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள்.

தமிழகத்தின் தமிழீழ ஆர்வலர்களைக் கேட்க விரும்புகிறேன் - இது நியாயம்தானா? எந்த அடிப்படையில் நீங்கள் இந்த மனித வெளியேற்றத்தை நியாயப்படுத்த முடியும்? பள்ளிவாயிலில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இலங்கை முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்று ஆத்திரப்படும் உங்களிடம் இதற்கு என்ன பதில் உள்ளது?

ஆகஸ்டு 13ஆம் திகதி 2009ஆம் வருடம் நான் மருத்துவ சோதனைக்காக சென்னை வந்திருந்தபோது, ஒரு பிற பல தொலை காட்சியில் பணியாற்றும் எனது நண்பர் ஒருவர், இலங்கை முஸ்லிம்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்பதை விளக்கும் வகையில் பேசுமாறு என்னைக் கேட்டார். சம்மதித்தேன்.

அதன்படி, தி.நகரின் பாடசாலை மண்டபத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலரை அழைத்து நடந்த கூட்டத்தில் நான் விளக்கினேன். இந்த இணையதளத்திற்கு அறிமுகமான ஒரு சிலரும் வந்திருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர், உண்மை நிலை வெளியே வரக்கூடாது என்ற அடிப்படையில் அர்த்தமற்ற கேள்விகளைக் கேட்டு குழப்பியதால் கூட்டம் ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டது. மூன் டிவி ஒளிப்பதிவு செய்து வெளியிட்டது.

விடுதலைப் புலிகள் தங்களுக்கே உரிய மமதையில், அடுத்த சிறுபான்மையினரான முஸ்லிம்களை மதிக்கவில்லை. பெரும்பான்மை சிறுபான்மையை மிதிக்கிறது என்று ஆர்ப்பரித்த அவர்கள், சிறுபான்மை மற்றொரு சிறுபான்மையை மிதிக்கலாம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்ததால்தான் அவர்களின் நிலை இன்று இந்தளவிற்கு அருகிப் போய்விட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பொதுமக்களைக் கொல்வதில்லை. அவர்களின் உடமைகளைப் பறிப்பதில்லை. அப்படி செய்பவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை. இப்போது சொல்லுங்கள் இலங்கை முஸ்லிம்கள் எப்படி LTTE விடுதலைப் புலிகளை ஆதரிப்பார்கள்?

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தன் வினை தன்னயேச் சுடும்...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) on 18 April 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26922

கட்டுரையாளர் ஷாஜஹான் துரை அவர்கள் காலப்போக்கில் வடுவாக மாறி ஆறிய காயத்தை தமது கூரிய பேனா முனையால் குத்திக் கீறியுள்ளார். வலி இன்னும் அதிகமாகவே உள்ளது.

விடுதலைப்புலிகள் தனி ஈழத்திற்காக போரடியவர்கள். தமது இனத்தின் உரிமைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள். கொத்துக் கொத்தாக மனித உயிர்களை காவு வாங்கிய சிங்கள அரசும், தன் தகப்பன் (பிரதமர்) சிதைக்கப்பட்டார் என்பதால் ஒரு இனத்தையே கருவறுக்க துணை போன இந்திய ரானுவமும் கைகோர்த்து தொண்டைக் குழியில் கடைசி மூச்சு உள்ளவரை தமிழ் மக்களைக் கொன்று குவித்தனர். சொந்த நாட்டிலேயே இன்று வரை அகதிகளாக வாழ்வுரிமை மறுக்கப்பட்டு முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள். இவர்களுக்காக குரல் கொடுக்க ஏராளமான அமைப்புக்கள், மாணவர்களின் போராட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம், என தமிழ்நாடே கொந்தளிக்கும் நிலை!

அன்று யாழ் வாழ் இஸ்லாமியர்கள் தங்கள் போராட்டத்திற்கு சாதகமாக இல்லை எனும் காரனத்தால் துரத்தப்பட்ட அந்த நிமிடங்களை எண்ணிப்பாருங்கள்.

பாலகர், வயோதிகர், கர்பிணிப் பெண்டிர், இப்படி ஒட்டுமொத்தமாக ஒர் ஊரையே காலி பண்ண வைத்த புலிகளின் அட்டூழியம். கொல்லப்பட்ட இஸ்லாமிய தனவந்தர்கள், ஜாலியன் வாலபாக் போன்ற இனப்படுகொலைகள் இறைவனை வணங்கிக் கொண்டிருந்த இலங்கையின் அப்பாவி முஸ்லிம்கள் மீது ஈவு இரக்கமின்றி தயவு தாட்சண்யமின்றி காடுமிராண்டித்தனமாக கட்டழித்துவிடப்பட்டு, திரும்பிய திசையெல்லாம் கொலை வெறிப்புலிகள் கொன்று குவித்த இஸ்லாமியர்களின் சடங்கள், இரத்த வெள்ளத்தில் மிதந்த பச்சைக்குழந்தைகளின் பூவுடல்கள், சாயப்பட்டறையின் கழிவு போல காத்தாங்குடி பள்ளி வாயிலில் கறைபுரண்டோடிய இரத்தக் கறைகள், தம் சமுதாயத்தினருக்காக அங்குள்ளவர்கள் சவக்குழிகள் வெட்டும்போது கூட தமது கண்ணிர் துளிகள் அவர்களின் வியர்வைத் துளிகளையும் மிஞ்சியதே? இப்படி என் சமுதாய மக்களை புலிகள் கருவறுத்தபோது எங்கே போயிற்று இந்த ஊடகத்தின் பூதக் கண்கள்? ஏன் பதியவில்லை நம் இந்திய இரானுவத்தின் கருணைப் பார்வை? ஏன் வீதிக்கு வர மறுத்தன? தமிழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள்? ஏன் ஓங்கி ஒலிக்க மறந்தன நம் அரசியல் தலைவர்களின் ஆதங்கக் குரல்கள்?

இன்று இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை சரி எனச் சொல்ல வரவில்லை! அதே நேரம் அன்று புலிகளின் ஆணவத்தால் உருக்குலைந்து போன என் சமுதாய மக்களுக்கு இந்த உலகம் செய்த கைமாறுதான் என்ன? இன்று இத்தகைய கொடுமைகளுக்கு உள்ளான தமிழர்களின் அவல நிலைக்கு ஒட்டுமொத்த காரணமும் புலிகளே! புலிகளே! புலிகளே!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: Kudack Sarvej Mohudoom Mohamed (Kuwait) on 18 April 2013
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 26923

Assalamualaikkum ,

நமது சகோதரர்களை மிகவும் கொடுமை படுத்தி இருக்கிறான் இந்த பிரபாகரன், அதற்க்கானே கூலியே அவனுடையே கொடூர மரணம், இலங்கை முஸ்லிம்கள் மட்டும் இல்லை, உலகில் எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் LTTE யேய் ஆதரிக்கமாட்டான்.

LTTE அழிக்கப்படவேண்டும் - அழிகபட்டுவிட்டது ஃஅல்ஹம்துலில்லாஹ், அதே போல் அப்பாவி தமிழ் மக்களும் பாதுகாக்கபடவேண்டும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: s.e.m. abdul cader (bahrain) on 19 April 2013
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 26937

அல்லாஹ் தண்டிபதில் கடுமையானவன் . துப்பாக்கியை எடுத்தவன் துப்பாகியால் அழிவான் . ஆணவகரானுக்கு இது சரியான பாடம். மர்ஹூம் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பிசபில்லாஹ் என்ற பதவியை கொடுபனாக . அமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...மத்தளத்திற்கு இரு பக்கமும் இடி
posted by: சாளை பஷீர் (மண்ணடி , சென்னை) on 19 April 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 26939

இன்று புலிகளின் அத்தியாயம் முடிந்து விட்டது.

ஆனால் இலங்கை முஸ்லிம்களை பொருத்த வரை சிங்கள பேரினவாதத்தின் கொடுங்கரம் அவர்களை தீண்டத் தொடங்கிவிட்டது.

பாவம் அவர்களுக்கு முன்னர் புலிகளாலும் இப்போது பொது பல சேனாவினாலும் பிரச்சினை.

இலங்கைத் தீவில் பௌத்த இன உணர்வானது இந்தியாவில் உள்ள ஹிந்துத்வ ஃபாஸிசம் போல் செயல்பட்டு வருகின்றது. இலங்கைத்தீவின் இன்றைய தேவை தமிழர், முஸ்லிம் அய்க்கியமே.

அத்துடன் இன வெறுப்பை விரும்பாத பெரும்பான்மை சிங்களவர்களுடன் அவர்கள் இணைந்து நாட்டிற்காக குரல் கொடுக்க வேண்டும்.

ஷாஜகான் துரை அவர்கள் அது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...பாலுக்கும் காவல்....!!!
posted by: SEYED ALI (ABUDHABI) on 19 April 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26953

இதை யாராவது வைகோவிடம் சொல்லி வையுங்களேன்.அவர்தான் இன்று தமிழகத்தின் உரிமைகளுக்கும்(பாலுக்கும்) காவல்,ஈழத்திற்க்கும்(பூனைக்கும்) தோழன்.என்னே அரசியல் சாணக்கியத்தனமும் தமிழர்களின் கேணத்தனமும்.

அன்று!(1982-83) ஒரு முறை துக்ளக் சோ தன்பத்திரிக்கையில் அகதிகளாக இங்கு ஓடிவந்த இலங்கை தோட்டத்தொழிலாளர் ஒருவரிடம் பேட்டி காணுகையில் உங்களுக்கு ஈழம் வேண்டுமா என கேட்டார்.அவருடைய பதில்"ஐயோ அதை நாங்கள் கேட்கவும் இல்லை,அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்"என்று.

அவர்கள் நம் தொப்புழ் கொடி உறவுகள்.ஈழம் என்று வந்தால் எங்களுக்கு இங்கும் இடமில்லை.அங்கும் இடம் தர மாட்டார்கள் என்று பதறினார்.சமீபத்தில் தலைமன்னார் வீதியில் ஈழ மீனவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள்.இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து.இப்போது சொல்லுங்கள் இந்த வைக்கோ போன்றோரின் தூண்டுதலால் ஈழ விடுதி போராட்டம் நடத்தும் தமிழன் ஒரு கேணயன்தானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: M.Fauz (AlAin UAE) on 20 April 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26976

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஷாஜஹான் துறையின் கட்டுரையை படிக்கும் போது அன்று வந்த அதே ஆத்திரமும்,கோபமும் வந்தது. இந்தியர்களை வெளியேற்றியது, இலங்கை அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்தது யார்? உரிமைகள் பறிக்க பட்டதாக சொல்லும் இதே தமிழர்கள்தான். முதலில் சிறுவர்கள் தம் படையில் இல்லை என்றார்கள். வலுகட்டாயமாக வீட்டிலிருந்து, வெளி இடங்களில் இருந்தும் கொண்டு போனவர்கள் எங்கே? இப்படி பல கேள்விகள் கேட்க முடியும்.

முஸ்லிம்களை போக சொன்னதும் அல்லாஹ்வின் ஏற்பாடுதான், அதனால் படை & புலி சண்டையில் முஸ்லிம்களின் உயிர் சேதம் இல்லை. அல்லா காப்பாற்றினான். கடைசியாக புலிகள் ஆயுத பலத்தாலேயே மக்களை அடக்கி வைத்து இருந்தார்களே ஒலிய, மன விருப்பதால் அல்ல. இதற்க்கு கடைசி நேர யுத்தத்தில் மக்களை கேடயமாக வைத்து இருந்தது ஒன்றே போதும்.

ம. பவுஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. நெஞ்சு கொதிக்கின்றது இந் நிகழ்வுதனை எண்ணிப்பார்க்கையில்...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) on 20 April 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26977

விடுதலை புலிகள் மனிதர்களா ? இல்லை மிருகங்களா ? 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இசாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் விபரம் – வயது அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. எம். எஸ். எம். அக்ரம் (06)
2. எம். எஸ். எம். தல்ஹான் (08)
3. எஸ். ஏ. எம். இம்தியாஸ் (09)
4. எம். சீ. எம். றிஸ்வான் (10)
5. எம். ஐ. ஜரூன் (10)
6. எஸ். செய்யது அஜ்மல் (10)
7. எம். ஐ. அஸ்றப் (11)
8. எம். ஐ. எம். ஆரிப் (12)
9. எம். கமர்தீன் (12)
10. எம். ஐ. எம். அஜ்மல் (12)
11. ஏ. எல். மக்கீன் (12)
12. எம். எஸ். எம். பௌசர் (12)
13. ஏ. எல். அபுல்ஹசன் (12)
14. வை. எல். எம். ஹரீஸ் (12)
15. எம். எஸ். எம். ஜவாத் (13)
16. எம். எஸ். பைசல் (13)
17. எம். பீ ஜவாத் (13)
18. யூ. எல். எம். அனஸ் (13)
19. ஏ. எல் அப்துல் சமத் (14)
20. எச். எம். பௌசர் (14)
21. ஏ. ஜௌபர் (14)
22. எம். எஸ். எம் சகூர் (14)
23. ஏ. சமீம் (14)
24. பீ. எம். முஹம்மத் பஸ்லூன் (15)
25. எம். இஸ்ஸதீன் (15)
26. எம். எம். எம். பைசல் (15)
27. எம். வை. இனாமுல் ஹசன் (16)
28. எம். இக்பால் (16)
29. எஸ். எம். சித்தீக் (16)
30. எம். ஐ. ஜௌபர் (17)
31. கே. எல். முஹம்மத் றாபி (17)
32. எம். எம். எம். ஜௌபர் (17)
33. எஸ். சுல்பிகார் (17)
34. யூ. எல். முஹைதீன் (17)
35. எம். ரீ. ஜௌபர் (17)
36. எஸ். ஏ. எம் ஐன்சாத் (18)
37. எச். கே. எம். ஆரிப் (18)
38. ஐ. றபீக் (18)
39. எம். எஸ். அப்துல் முத்தலிப் (18)
40. எம். ஏ. எம். அமீன் (20)
41. ஏ. எல் சலாஹுதீன் (20)
42. எம். எம். அஸ்றப் கான் (20)
43. எம். எஸ். ஏ. சுஹைப் (20)
44. ஏ. எல் சலாஹுதீன் (20)
45. எம். ஐ. ஹுசைன் (20)
46. எம். எம். ஜுனைத் (21)
47. எம். அப்துல் நவாஸ் (21)
48. எம். ஏ. பௌசர் (21)
49. எம். ஐ. ஹசன் (22)
50. எம். ஆர். அப்துல் சலாம் (23)
51. எஸ். எல். எம். ஜுனைத் (23)
52. எம். எஸ். அப்துல் றஹீம் (25)
53. ஏ. பீ. எம். யாசீன் (26)
54. எம். எல். எம். தாஹிர் (27)
55. எம். ஐ. அப்துல கபூர் (28)
56. யூ. எல். எம். இப்றாஹீம் (28)
57. எம். ஐ. கமால்தீன் (30)
58. ஏ. பாறூக் (30)
59. ஏ. றம்ளான் (30)
60. ஏ. நூர்தீன் (30)
61. ஏ. கே. ஹாறூன் (31)
62. எஸ். எச். எம். நஸீர் (32)
63. எம். சம்சுதீன் (33)
64. எம். பீ. எம் ஜுனைத் (34)
65. வீ. எம். இஸ்மாயில் (37)
66. எம். ஏ. சீ. எம். புஹாரி (35)
67. எம். சீ. எம். பரீத் (35)
68. பீ. எம். எம். இப்றாஹீம் (35)
69. எம். ஐ. ஏ. அஸீஸ் (37)
70. எஸ். ஏ. மஜீத் (37)
71. எம். உமர் லெப்பை (38)
72. எம். ஹனீபா (38)
73. எம். பீ. ஏ. சமத் (38)
74. எம். எம். இஸ்மாயில் (40)
75. ஏ. சீ. எம். நஸ்றுதீன் (40)
76. எச். எம். எம். சமசுன் (40)
77. எம். ஏ. எம். அப்துல் காதர் (40)
78. எம். எஸ். எம். சஹாப்தீன் (41)
79. கே. எம். ஏ. அஸீஸ் (42)
80. கே. எல். எம். றஹ்மதுல்லா (42)
81. எச். எம். மீராலெப்பை (43)
82. எம். ஏ. தம்பிலெப்பை (45)
83. என். எம். இஸ்மாயில் (45)
84. பீ. எம். அப்துல் காதர் (45)
85. எம். எம். ஹனீபா (46)
86. ஏ. ஆர். ஆதம் பாவா (47)
87. எம். எஸ். அப்துல் முத்தலிப் (47)
88. எம் லெப்பைத்தம்பி (48)
89. ஏ. எம். சலாஹுதீன் (48)
90. எம். ஐ. ஆதம்லெப்பை (52)
91. ஏ. சரீபுதீன் (52)
92. ஆர். எம் அன்வர் (53)
93. எம். எம். காசிம் (54)
94. எம். எம். அசனார் (55)
95. எம். ரீ. எம். அசனார் (55)
96. ஏ. எல். கச்சி முஹமமத் (56)
97. ஏ. ஆதம் லெப்பை (57)
98. ஏ. எம். முஹம்மத் முஸ்தபா (59)
99. எஸ். எம். ஹயாத்து கலந்தர் (60)
100. ஏ. எம். கலந்தர் லெப்பை (60)
101. எம். எம். சஹாப்தீன் (60)
102. ஏ. பக்கீர் முஹைதீன் (65)
103. எம். எல். முஹம்மத் முத்து (70)
104. எஸ். எம். எம். முஸ்தபா (72)

தகவல்: Harshad Cbe முகநூல்.
தொகுப்பு: ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. விடுதலை புலிகள் மனிதர்களா ? இல்லை மிருகங்களா ?
posted by: M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) on 20 April 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26978

12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் விபரம் – வயது அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது.

1. ஏ. றஹ்மத்தும்மா (40) பெண்
2. எம். பீ. ஹிதாயா (16) பெண்
3. எம். பீ. சரீனா (14) பெண்
4. எம். பீ. ஹபீபா (12) பெண்
5. ஏ. உசனார் (30) ஆண்
6. யூ. லாபிர் (03) ஆண்
7. எம். எல். சீனி முஹம்மத் (47) ஆண்
8. எஸ். எம். அஸ்மி (11) ஆண்
9. எம். மஹ்மூத் லெப்பை (70) ஆண்
10. சாஹிறா உம்மா (65) பெண்
11. எஸ். எம். காசிம் லெப்பை (37) ஆண்
12. எம். எஸ். நதீமா (27) பெண்
13. சீ. ஏ. எம். இஸ்மாயில் (46) ஆண்
14. வீ. ரீ. கதீஜா பீவி (30) பெண்
15. எம். எல். றமீஸ் (16) ஆண்
16. எம். எல். சமீமா (10) பெண்
17. எம். எல். எப். றிஸ்னா (05) பெண்
18. எம். ஐ. எம். சானாஸ் (05 மாதம்) பெண்
19. எஸ். எம். வெள்ளைத்தம்பி (70) ஆண்
20. ஏ. பீ. வெள்ளை உம்மா (65) பெண்
21. ஏ. எல். புஹாரி (30) ஆண்
22. வீ. ரீ. பரீதா (25) பெண்
23. ஏ. றிபாகா (01) பெண்
24. எஸ். ஏ. ஆயிஸா (25) பெண்
25. எம். ஜனூபா (20) பெண்
26. எஸ். சனூஸியா (01) பெண்
27. வீ. ஆமினா (40) பெண்
28. எம். எஸ். மதீனா உம்மா (23) பெண்
29. எம். எஸ். ஜிப்ரியா (12) பெண்
30. எம். எஸ். றமீஸா (10) பெண்
31. எம். எஸ். றம்சுலா (07) பெண்
32. எம். எஸ். சஹீலா (04) பெண்
33. எம். எஸ். மஹ்ரிபா (25) பெண்
34. எஸ். எல் நஜீபா (04) பெண்
35. எஸ். எல். நஸ்ரின் (06) பெண்
36. எம். பீ. பொன்னி உம்மா (65) பெண்
37. எம். பீ. மஹ்மூத் (55) ஆண்
38. ரீ. கே. சிமிலத்தும்மா (70) பெண்
39. ரீ. கே. சின்னலெப்பை (75) ஆண்
40. ஏ. ஆமினா (65) பெண்
41. எம். எப். நசார் (18) ஆண்
42. ஏ. செல்லத்தும்மா (45) பெண்
43. வை. ஐ. அலியார் (50) ஆண்
44. ஐ. எம். ஹம்சா (25) ஆண்
45. எம். எச். நிபாஸ் (14) ஆண்
46. ஐ. இஸ்மாயில் (45) ஆண்
47. எல். காதர் (18) ஆண்
48. எம். சீ. வெள்ளைத்தம்பி (50) ஆண்
49. வை. எம். சரீப் (30) ஆண்
50. கே. பீ. கச்சி முஹம்மத் (50) ஆண்
51. எம். ஐ. பாறூக் (35) ஆண்
52. எம். எல். தாஹிர் (25) ஆண்
53. ஏ. எல். அமீனா உம்மா (57) பெண்
54. எம். ஐ. குழந்தை உம்மா (40) பெண்
55. எம். ஐ. எம். ஜாபிர் (23) ஆண்
56. எஸ். ஐ. எம் முஹைதீன் பாவா (50) ஆண்
57. எம். ஐ. சீனி முஹம்மத் (75) ஆண்
58. ஏ. ஹயாத்து முஹம்மத் (50) ஆண்
59. ஐ. ஜுனைத் (40) ஆண்
60. எம். எஸ். ஐதுரூஸ் (11) ஆண்

மிக நீண்ட வரிகள் உள்ளதால் தொடர்ந்து பதிய கருத்துப்பகுதி ஏற்க மறுக்கின்றது. எனவே இதன் தொடர்ச்சியை அடுத்த கமெண்ட்ஸில் காணலாம். –ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. விடுதலை புலிகள் மனிதர்களா ? இல்லை மிருகங்களா ? தொடர்ச்சி.
posted by: M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) on 20 April 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26979

தொடர்சி..

61. வீ. கே. காசிம் லெப்பை (38) ஆண்
62. வீ. கே. கச்சி உம்மா (40) பெண்
63. எம். ஐ. காதர் அலி (35) ஆண்
64. சீ. ஏ. அனீஸா உம்மா (45) பெண்
65. சீ. ஏ. சுலைஹா (50) பெண்
66. யூ. எம். இஸ்மாயில் (58) ஆண்
67. யூ. சர்வான் உம்மா (38) பெண்
68. எம். ஐ. எஸ். லரீபா (17) பெண்
69. எம். எல். எம். சித்தீக் (15) ஆண்
70. எம். ஐ. சபீரா (06) பெண்
71. எம். ஐ. எம். தாஹிர் (06) ஆண்
72. யூ. ஐ. எஸ். உம்மா (40) பெண்
73. எச். எம். ஜெமீலா (20) பெண்
74. எச். எம். ஜனூரா (18) பெண்
75. எச். எம். ஹிதாயா (08) பெண்
76. எச். எம். பஸ்மி (03) ஆண்
77. எச். எம். இஸ்மாயில் (30) ஆண்
78. ஏ. எம். ஆமினா உம்மா (20) பெண்
79. எம். ஐ. பர்சானா (02) பெண்
80. எம். ஐ. பர்சான் (01) ஆண்
81. எச். கே. அஹ்மத் லெப்பை (81) ஆண்
82. ஏ. எல். நயிமுதீன் (12) ஆண்
83. ஏ. எல். பாத்தும்மா (10) பெண்
84. ஏ. எல். அன்சாரா (1 மாதம்) பெண்
85. ஜே. எம். நௌபர் (11) ஆண்
86. பீ. எம். நூர்ஜஹான் (16) பெண்
87. பீ. எம். ஹாஜறா (24) பெண்
88. யூ. எல். ஏ. சதார் (13) ஆண்
89. ஆர். ஹிதாயா (10) பெண்
90. எம். கே. முஹம்மத் லெப்பை (20) ஆண்
91. வீ. கே. நஜீமா (30) பெண்
92. ஏ. எஸ். பைரூஸ் (8 மாதம்) ஆண்
93. எஸ். எல். ஹபீபா (19) பெண்
94. எம். எல். ஜுனைத் (47) ஆண்
95. ஜே. பரீதா (16) பெண்
96. ஏ. ரீ. றாவியா உம்மா
97. ஆர். பைரூசா (19) பெண்
98. ஆர். எம். சித்தீக் (08) ஆண்
99. யூ. எம். சீனத்தும்மா (37) பெண்
100. எம். வை. எம். பசீர் (03) ஆண்
101. எஸ். எல். சுலைமாலெப்பை (40) ஆண்
102. எஸ். எல். சுலைஹா உம்மா (35) பெண்
103. எம். வை. எம். சபீர் (26) ஆண்
104. ஜே. சுலைமாலெப்பை (38) ஆண்
105. ஆர். எப். றம்சியா (06) பெண்
106. எம். என். எம். நியாஸ் (17) ஆண்
107. எம். சீ. எம். தாஹிர் (20) ஆண்
108. யூ. எல். ஜமால்தீன் (35) ஆண்
109. எச். எம். அப்துல் சமது (23) ஆண்
110. எம். எல். ஹனீபா (60) ஆண்
111. எம். இஸ்மாயில் (28) ஆண்
112. ஏ. அப்துல் மஜீத் (1 வாரம்) ஆண்
113. எம். எல். மரியம் பீவி (28) பெண்
114. ஏ. எல் சமீர் (10) ஆண்
115. யூ. எல். எப். மர்ழியா (35) பெண் — ‎with ‎Ashraf Ali
Hassan, Aameena Farvin, Ilham Gates and 36 others‎.‎ தகவல்: Harshad Cbe முகநூல்.
தொகுப்பு: ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved