Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:42:47 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 49
#KOTWART0149
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 26, 2013
மோகனா...! மோடியா...!
இந்த பக்கம் 6300 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பா.ஜா.க.வின் பிரதம வேட்பாளர் யார் என்பதை பல மாதங்களுக்கு முன்பே கசிய விட்டு மக்களின் மன ஓட்டங்கள் அறியப்பட்டு தற்போது கசிவை நிறுத்தி மோடியேதான் போட்டியிடுவார் என ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளது.

இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. வாஜ்பேயி, அத்வானி ஆகியோரை நிறுத்தி வெற்றியில் தோல்வி கண்ட அதே ஆர்.எஸ்.எஸ். இன்று மோடியை களத்தில் இறக்கி சரித்திரத்தை மாற்றி எழுத முயல்கிறது. இது சாத்தியமாகுமா என வினா எழுந்தாலும்; சாத்தியமாக்க எத்தகைய பிரயத்தனங்களையும் செய்ய ஆர்.எஸ்.எஸ். தயங்காது என்பதை அதன் இரத்தக்கறை படிந்த வரலாறு நமக்கு சாட்சி சொல்லும்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் தந்தை என அழைக்கப்படும் ஹெட்கேவர் அரசியல்வாதியாகவோ / ஆன்மீகவாதியாகவோ இருக்கட்டும். ஆனால் அவர் ஒரு தந்திரவாதி என்பதை அவரின் நச்சு எழுத்துக்கள் நமக்கு உணர்த்தும். மருத்துவத்துறையில் முனைவர் அணிந்த இவர் ஏப்ரல் முதல் நாள் 1889 ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்தார். கேஷவ் பலிராம் ஹெட்கேவர் எனப்பெயர் கொண்ட இவர் ஹெட்கேவர் என்றே அழைக்கலானார்.

இந்திய மண்ணின் குப்பைகளை 51 ஆண்டுகளாக கிளறிய இவர் சரித்திர குளறுபடிக்கும், மதவாத அரசியலுக்கும், இனவாத சண்டைக்கும் அடித்தளமிட்டு 1940 ஆண்டு ஜூன் திங்கள் 21 ஆம் நாள் உலகை துறந்தார். இவரது எழுத்துக்களிலும், வார்த்தைகளிலும் இந்துராஷ்டிரம் என்ற இரத்த வாடை கலந்த வெறி இருக்கும்.

எதிரியைக்கொண்டே எதிரியை வீழ்த்துவது என்பார்களே அதை நடைமுறைப்படுத்தி சாதிக்க வைத்தது இந்த கொடுங்கோலனின் எழுத்துக்களே. ஏற்படும் பிரச்சினைகளில் தன்னை இனங்காட்டாமல் மூன்றாவது நபர் மூலம் காரியத்தை சாதிப்பதில் கைதேர்ந்தவர்கள் இந்த பரிவார்கள்.

இந்தியப் பிரிவினையின் போதும், தொடர்ந்த முஸ்லீம் விரோத கலவரங்களின் போதும், பாபர் மஸ்ஜிதில் ராமர் சிலை வைக்கப்பட்டபோதும், தொழுகை நிறுத்தப்பட்டு மஸ்ஜித் பூட்டப்பட்ட போதும், பிறகு மஸ்ஜித் திறக்கப்பட்டு சிலை பூஜிக்கப்பட்ட போதும், மஸ்ஜித் இடிக்கப்பட்ட போதும், மஸ்ஜிதிற்கான தீர்ப்பு பெறப்பட்டபோதும் இவரின் விஷ எழுத்துக்கள் பெரும் பங்காற்றியது என்றே சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் என்ற அரசியல் எதிரியைக்கொண்டு முஸ்லீம் என்ற பரம எதிரியை வீழ்த்தும் இவர்களின் நாசகர வேலை தேசப்பிரிவினையில் ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது.

ஆங்கிலயேனையும், அகில இந்திய காங்கிரசையும் தூண்டிவிட்டு தேசத்தை துண்டாக்கினார்கள் 1947ல். அதே காங்கிரஸ் ஆட்சியின் போதே 1949 டிசம்பர் 23 அன்று நள்ளிரவில் பாபர் மஸ்ஜிதுக்குள் அத்துமீறி நுழைந்து ராமர் சிலையை திணித்தார்கள் நேரு காலத்தில். அதே காங்கிரஸ் ஆட்சியின் போதே அதுவரை தொழுகை நடந்து வந்த பாபர் மஸ்ஜிதை இழுத்து பூட்டினார்கள் 1949ல் நேரு காலத்தில். அதே காங்கிரஸ் ஆட்சியின் போதே மஸ்ஜிதை திறக்க வைத்து ராமர் சிலைக்கு பூஜை நடத்தினார்கள் 1985ல் ராஜீவ் காலத்தில். அதே காங்கிரஸ் ஆட்சியின் போதே மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்கினார்கள் 1992ல் நரசிம்ம ராவ் காலத்தில். அதே காங்கிரஸ் ஆட்சியின் போதே ராமர் ஆலயம் குறித்த தனக்கு சாதகமான...? தீர்ப்பையும் பெற்றார்கள் 2010ல் மன்மோகன் காலத்தில்.

இக்காலகட்டங்களில் நாடெங்கிலும் குண்டுகள் மூலம் அவர்கள் சாதிக்க நினைத்த பல சதி செயல்கள் முறியடிக்கப்பட்டு அகப்பட்ட சேவகன் மூலம் பொறிக்குள் பிடிபட்ட எலியானார்கள் சில இரண்டாம் நிலை பரிவார்கள். இதை மாற்று வழியில் தீர்க்க அப்போது பரிவாரின் தலைமை பொட்டில் உதித்ததே மும்பை தாஜ்மஹால் உணவகம்.

ஆம்...! அதற்கு காரணம்...; பொறிக்குள் சிக்கிய அந்த பரிவார்களை கையிலெடுத்து கவனித்தவர் ஹெமண்ட் கர்கரே என்ற ATS காவல் உயரதிகாரி. மும்பையை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிய இவர் நாட்டின் அச்சுறுத்தலாக விளங்கும் சங்பரிவாரின் காவி தீவிரவாதிகளை களையெடுக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.

கர்கரேயின் அந்த தலை உலுக்களை கண்டு அதிர்ந்த ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் உறங்காமல் உலா வந்தனர். பொறியில் சிக்கிய எலியை கவனிக்கும் விதத்தில் கவனித்தால் அது பொந்தை காட்டிவிடும். பொந்து தெரிந்து விட்டால் அது நசுக்கப்பட்டு பரிவார் கூடாரம் அடக்கப்பட்டுவிடும் என்பதை உணர்ந்த வந்தேறி நாசகர கூட்டம்; அதற்குள் பொறி வைத்தவனை கறி வைத்து விடமேண்டுமென்று தருணம் பார்த்து காய் நகர்த்தினர் கொடுங்கோலன் ஹெட்கேவரின் இரத்த வரிகளை கரைத்துக்குடித்த கோல்வாக்கர் வழி வந்தவர்கள்.

அ.பி. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பரிவார கும்பலால் நடாத்தப்பட்ட பாராளுமன்ற தாக்குதல் தவிர்த்து ஏனைய அனைத்து சம்பவங்களையும் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடத்தினார்கள். ஏன்... பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்புடையவன்...? எனச்சொல்லி அப்சல்குரு என்ற அப்பாவி காஷ்மீரியை தூக்கிலிட்டதும் காங்கிரஸ் ஆட்சியில்தான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில் எந்த சம்பவத்திலும் ஆர்.எஸ்.எஸ். நேரிடையாக தளம் அமைக்காது. நான் ஏற்கனவே கூறியது போல் மூன்றாம் நபர் / அமைப்பு மூலமே காரியத்தை சாதித்து குளிர் காயும். அப்படி சாதித்தும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கிய சம்பவங்கள் ஏராளம். அப்படிதான் கர்கரேயிடமும் தோலுரிபட்டார்கள்.

மோடியின் ஆசியோடு குஜராத்தில் தீட்டப்பட்ட சதித்திட்டம் காங்கிரஸ் ஆட்சியின் போது மும்பை தாஜ்மஹால் உணவக தாக்குதலாக அரங்கேற்றப்பட்டு அதில் அஜ்மல்கசாப் என்ற கற்பனை பாத்திரம் ஏற்படுத்தப்பட்டு அவனையே பலிகடாவாக்கி அவர்கள் நினைத்ததை சாதித்தே தீர்த்தார்கள் சங்பரிவார்கள்.

ஆம்...! மும்பை தாஜ்மஹால் உணவக தாக்குதல் மூலம் கர்கரே மற்றும் அவரது நெருங்கிய சகாக்கள் பலரை கொன்று, கர்கரேயின் கீழிருந்த பரிவார வன்முறை கும்பல் சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புக்களையும்1 கைப்பற்றி அதன் சுவடே இல்லாமல் ஆக்கியது இந்த தேசவிரோத ஆர்.எஸ்.எஸ். பொறியில் அகப்பட்ட எலியின் மூலம் பொந்தை அடைய நினைத்த கர்கரேயை அடையவிடாமல் அவரை கொல்ல ஏற்படுத்தப்பட்ட வரைவுதான் மும்பை தாஜ்மஹால் உணவக சம்பவம்.

தந்தை பெயரை இணைத்து நரேந்திர தாமோதர்தாஸ் மோடி என்ற நரேந்திர மோடி 1950 செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் மும்பையிலுள்ள வட்நகர் என்ற ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.மீது அமர்ந்து அதன் முழு நேர பிரச்சாரகனானார். ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுத பாசறை உட்பட அனைத்துப் பாசறைகளிலும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இவர் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற சங்பரிவாரின் மாணவ அமைப்பை குஜராத்தில் வழி நடத்தினார். அவசரநிலை பிரகடனத்தின் போது ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் சங்பரிவாரின் குரலை பிரசுரங்களாகவும், சிற்றிலைகளாகவும் வெளிப்படுத்தினார்.

முன்னாள் ஜனசங்க தலைவர்களான வசந்த் கஜேந்திர கட்கர் மற்றும் நதலால் ஜெகதா என்பவரும் இணைந்து 1980 ல் குஜராத்தில் பிஜேபியை தோற்றுவித்தார்கள். அவர்களோடு மோடி நல்ல தொடர்பை எற்படுத்திக்கொண்டார். 1985 / 1987 ல் ஆர்.எஸ்.எஸ். மோடியை பிஜேபியில் இணைத்தது. அரசியல் கலந்த அறிவியலில் பட்டதாரியான இவர் 2002 பிஜேபியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து அத்வானி, வாஜ்பேய்களின் கருத்தை மறுத்து பேசி சாதித்து குஜராத்தின் முதலவர் / தலைமை பதவியை அடைந்தார்.

தொடர்ந்து முதலவர் பதவியை தக்கவைத்த இவர் இன்று இந்திய தலைமைக்கு போட்டியிட ஆர்.எஸ்.எஸ்ஸால் ஆயத்தமாக்கப்பட்டுள்ளார். இவர் மூலம் கோத்ரா ரயில் எரிப்பு, அதை காரனியாக்கி முஸ்லீம் இன சுத்தகரிப்பு, குல்பர்கா படுகொலை இன்னும்....... என சங்பரிவார் சாதித்த நிகழ்வுகள் ஏராளம். இவரை பாரதமாதாவின் தலையில் வைத்து அழகு பார்க்க ஆர்.எஸ்.எஸ். விரும்பிகிறது.



அதனால் கோத்ரா முதல் தாஜ்மஹால் வரை பரிவாரம் கண்ட உன்னத மகசூலுக்கு...? பெரும் உதவி புரிந்த நாயகனுக்கு பரிகாரம் பண்ண நினைத்த ஆர்.எஸ்.எஸ். பிரதம வேட்பாளாராக அவரை நிறுத்தி தன் நன்றியை காணிக்கையாக்கியுள்ளது. ஆக; மோடிதான் பிரதம வேட்பாளர் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்ததில் நாம் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடைவதற்கு ஒன்றுமில்லை. அபாயகரமான ஒரு நீண்ட தொலைநோக்கு திட்டத்துடன் ஆர்.எஸ்.எஸ்ஸால் இவர் களமிறக்கப்பட்டுளார் என்பது மட்டும் தெளிவாகிறது.

இந்துராஜ்ஜியம் அமைக்கப்போகிறோம் எனக்கூறி பொய்யை திருப்பிச் சொல்லி உன்மையாக்கும் கோயபல்சின் உளறலை கையிலெடுத்த இந்த சங்பரிவார் அப்பாவி கீழ்தட்டு இந்துக்களை ஏமாற்றி மூளைச்சலவை செய்து கலகம் பண்ணவிட்டு இந்நாட்டில் செய்த அட்டூழியங்கள், அநியாயங்கள், ரண களங்கள் எத்தனை எத்தனை.

பாரத பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் பல முறை தடை செய்யப்பட ஆர்.எஸ்.எஸ். என்ற மாபாதக இயக்கம் நாட்டின் பிரதம வேட்பாளரை தெரிவு செய்கிறது என்றால் நம் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது... நாட்டின் சட்ட திட்டங்கள் என்னவானது...?

1932 செப்டம்பர் திங்கள் 26 அன்று பஞ்சாபில் உள்ள காஹ் என்ற கிராமத்தில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் பிறந்த மன்மோகன்சிங் தேசப்பிரிவின் போது அமிர்தரஸ் வந்தடைந்தார். அவர் கல்வி கற்ற காலத்தில் மோகன் என்றே அழைக்கலானார்.

1952ல் பஞ்சாபில் தொடங்கிய இவரது கல்வி பயணம் வெளிநாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்ட் என உலக பிரசித்திபெற்ற பல்கலைகழகங்கள் வரை சென்றது. 1962 வரை உயர்கல்வி கற்று பொருளாதாரத்துறையில் மிகப்பெரும் வல்லுனராகி அத்துறையில் முனைவர் பட்டமும் ஈட்டினார். பொருளாதார நிபுணத்துவத்தில் மிதமிஞ்சிய விருதுகளை பெற்று IMD, UNCTAD, MFT, RBI... போன்ற அரசுசார் மற்றும் அரசுசாரா உலக நிறுவனங்களில் ஏகப்பட்ட பொறுப்புக்களை வகித்த மன்மோகன் 1991ல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவால் காங்கிரசில் இணைக்கப்பட்டு இந்தியாவின் நிதி மந்திரியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

1978ல் சீனத்தின் பொருளாதார வீழ்ச்சியை தூக்கி நிறுத்தி அந்நாட்டின் பொருளாதார புரட்சிக்கு வித்திட்ட டெங் சியாவ்பிங் என்ற சீனப்புருஷருக்கு மன்மோகன் உதாரணமாக்கப்பட்டார். 2004 பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடாமல் சோனியா அம்மையாரால் பிரதமராக்கப்பட்ட மன்மோகன்; அவர் பொறுப்பேற்ற காலத்தில் நிலவிய பொருளாதார சரிவுக்கு தற்காலிக தீர்வை தந்தார். இத்தனை படிப்பும், பயிற்சியும், முதிர்ச்சியும் பெற்ற இந்த மன்மோகன்தான் தற்போது இந்திய பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

ஏன்... அவரது திறமை, உழைப்பு எல்லாம் என்னவானது...? ஆதிக்க சக்திகளுக்கு அடிமைச்சேவகம் செய்ய புறப்பட்டுவிட்டாரா / அவரது படிப்பையும், பயிற்சியையும் ஆதிக்க சக்திகளிடம் விற்றுவிட்டாரா...? தற்போது நிலவும் இப்பொருளாதார வீழ்ச்சியை அவர் தடுக்க தவறியதேன்...? இந்நிலைக்கு தீர்வு ஏதும் சொல்வாரா.../ மாற்று திட்டம் ஏதும் வைத்துள்ளாரா...?

மேலும்; இவரது உன்னத...? யோசனையால் அறிமுகப்படுத்தப்பட்டதே புதிய பொருளாதாரக்கொள்கை. அதை அப்படியே நடைமுறைக்கு கொண்டு வந்தார் குருவை சீனப்புருஷருக்கு உவமையாக்கிய சிஷ்யர் ப.சிதம்பரம். குரு சொன்னால் சரியாக இருக்கும், நாம் முன்னேற்றப்பாதையில் பயணிக்கலாம், நாடு பொருளாதாரத்தில் மேலோங்கும் என்ற உற்சாகத்தில் முன் பின் யோசிக்காமல், தீர ஆராயாமல், தொலைநோக்கு பார்வையில்லாமல் அப்படியே ஆமாம் சாமி போட்டு அக்கொள்கையை பரவலாக்கி இப்போது நாட்டு மக்களை சொல்லொன்னா துயரத்துக்கு ஆளாக்கியிருகிறார் இந்த சிஷ்ய கோடி.

அந்த புதிய பொருளாதார கொள்கையால் நன்மைகள் சில கிட்டினாலும் பெரும்பாலும் தீமைகளே அதிகம். அதன் மூலம் ஒரு ரூபாய் லாபம் என்றால் பத்து ரூபாய் நட்டமல்லவா உண்டாகிறது. மேல்தட்டு மக்களுக்கு வேண்டுமென்றால் அக்கொள்கை சாதகமாகலாம். ஆனால் கீழ்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அக்கொள்கை மிகப்பெரும் பாதகம் என்றே சொல்ல வேண்டும்.

அகில இந்திய காங்கிரசுக்கு ஒரு தனி பெருமை உண்டு. அது; வாக்குறுதி தந்து விட்டு மாறுசெய்வது, , முதுக்கு பின்னால் குத்துவது, நம்ப வைத்து கழுத்தறுப்பது, ஆசை காட்டி மோசம் செய்வது.

(காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு) காஷ்மீரின் பெருவாரியான மக்கள் விரும்பினால் அந்நாடு சுதந்திர நாடாக அறிவிக்கப்படும் என காங்கிரஸ் அரசு கொடுத்த வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாமல் அம்மக்களுக்கு மாறுசெய்து அவர்களை வஞ்சித்தார்கள்.

துர்க்குமான்கேட், 1976 களில் பத்திரிக்கைகளில் பரவலாக பேசப்பட்ட பெயர். இந்திராவின் ஆட்சி காலத்தில் அவரது புதல்வன் சஞ்சய், ஜக்மோகன் துணையுடன் டெல்லியை சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில் துர்க்குமான் கேட் மற்றும் ஜாமிஆ மஸ்ஜித் அருகில் இருந்த இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான குடிசை வாழ்விடங்களை அழித்து அதில் வாழ்ந்த அதிகமான முஸ்லீம்களின் வாழ்வாதரங்களை நிர்மூலமாக்கி நூற்றுக்கணக்கான முஸ்லீம்களை கொன்றொழித்து மாற்றிடம் தருவதாக சொல்லி முஸ்லீம் மற்றும் மாற்றாராரின் முதுகில்குத்தி வீரம்...? காட்டினார்கள்.

அதே காலகட்டங்களில் உலக வங்கியின் ஆணைப்படி அதன் அற்ப கடனுக்கு ஆசைபட்டு டெல்லி மக்கள் தொகையை குறைக்க தாயும், தனயனும் சபதமெடுத்து களம் இறங்கி டெல்லி குடிசைகளில் வாழும் மக்களை கொத்து கொத்தாக தூக்கி மருத்துவமணைக்கனுப்பி குறிப்பாக முஸ்லீம்களை கட்டாய குடும்பக்கட்டுபாடு என்ற பெயரில் கருவறுத்து முதுகில் குத்தினார்கள்

பாபர் மஸ்ஜிதை இடிக்க விடமாட்டோம், அதை பாதுகாப்போம், அப்படி இடிக்க வருபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என முஸ்லீம்களை நம்ப வைத்தது அயோக்கிய நரசிம்மராவின் காங்கிரஸ் அரசு. ஆனால் அவர்களோ மஸ்ஜிதை காக்காமல் இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்து முஸ்லீம்களின் கழுத்தை அறுத்தார்கள்.

காங்கிரசுக்கு வாக்களியுங்கள் முஸ்லீம்களுக்குரிய தனி இடஒதுக்கீடை அதிகமாக்கி தருகிறோம் என ஆசைகாட்டி ஓட்டு வாங்கியது மன்மோகன் அரசு. ஓட்டுக்களை வாங்கி கோட்டையில் அமர்ந்து வருடம் பல உருண்டோடியும் இன்று வரை இட ஒதுக்கீட்டை அதிகமாக்காமல் முஸ்லீம்களுக்கு மோசம் செய்கிறார்கள்.

முதலாமவன் இந்துராஷ்டிரம் என்ற பெயரில் மதவாதம் பண்ணி ஆட்சியில் அமர ஆசைப்படுகிறான்.

இரண்டாமவன் மதச்சார்பின்மை என்ற பெயரில் படித்த முட்டாள்களை வைத்து ஆட்சி நடத்துகிறான்.

முதலாமவன் காணும் கனவு மெய்பிக்கப்பட்டால் அதை முன்னின்று வழி நடத்துபவன் யார் என்றும் கூவி விட்டான்.

இரண்டாமவன் மீண்டும் அதே மன்மோகன்சிங்கைத்தான் நாட்டின் வழிகாட்டியாக்குவானா...! அதாவது காங்கிரஸ் மோகன்தான் ஆர்.எஸ்.எஸ்.மோடியை எதிர்த்து நிறுத்தப்படும் பிரதம வேட்பாளரா...? அல்லது....!

எது எப்படியோ இரண்டு ஆட்சிகளின் அவலங்களையும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் நம் நாட்டு மக்கள் நன்கு பார்த்தே விட்டார்கள். அது தவிர்த்து மூன்றாவது அணி என்று ஒன்று உருவாகுமே; அதன் பிறப்பு எப்போது..? என அதன் வரவை மக்கள் எதிப்பார்ப்பதாக அதிகமான வலைதளப்பதிவுகள் பேசுகின்றன.

வரப்போகும் நாடாளுமன்றத்தேர்தலை முஸ்லீம் சமூகம் மிகக்கவனமாக நிதானமாக கண்காணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மதவாத சக்திகளுக்கு வாக்குகளை தரமாட்டோம் என்ற உறுதியில் இருக்கும் நம் சமூகம், அதே சமயம், காங்கிரஸ் அணிக்கு வாக்களிக்கலாமா என்றால்; மூன்றாம் அணியின் பிறப்புக்கு பிறகே முடிவெடுக்க முடியும் என்றில்லாமல் மிக முக்கிய கோரிக்கைகள் சிலமுன் வைத்து அவை அனைத்தையும் / அதில் அதிகமானதை நிறைவேற்றுவோம் என எழுத்து மூலம் வாக்குறுதி அளிக்கும் அணிக்கே முஸ்லீம் சமூகம் தம் வாக்குகளை சிந்தாமல் அளிக்கும் என்று அறிக்கை விடுவோம். அது காங்கிரசாக இருந்தாலும் சரி அல்லது பிஜேபி அல்லாத மாற்று அணியாக இருந்தாலும் சரியே.

காங்கிரஸ் அரசு முஸ்லீம்களுக்கு இழைத்த துரோகங்கள், அது ஆட்சி செய்யும் லட்சணங்கள் அனைத்தும் நாம் நன்கு அறிந்துதான். என்ன செய்ய அதை எதிர்கொள்ள வலுவான இஸ்லாமிய அரசியல் அணியும் இல்லை, மதச்சார்பற்ற மாற்று அணியும் இல்லை. அதற்கு ஈடாக ஒரு புதிய அணி தோன்றினாலேயன்றி.

மத வாதமா... மித வாதமா.... என வரும்போது மத வாதத்தை சாய்த்துவிட்டு, மித வாதத்தை கையிலெடுப்போம். அதில் காங்கிரஸ், மூன்றாவது அணி என இரண்டு தீமைகள் நம் கண்முன் தெரிகிறது. அந்த இரண்டில் எதில் தீமையை குறைவாக கண்டோமோ அதை தேர்ந்தெடுப்போம்.

எழுத்துமூல வாக்குறுதி சாத்தியப்படுமா என விவாதத்தில் இறங்காமல் ஏன் சாத்தியப்படாது... என வினா எழுப்பி சாத்தியப்படவைத்து அரசியலுக்கு புது இலக்கணம் வகுப்பார்கள் நம் சமுதாயத்தலைவர்கள் என எதிர்பார்ப்போம்.

கொள்கை வேறுபாடுகளை மறந்து நம் எதிர்கால இந்திய முஸ்லீம் உம்மத்தின் அரசியல் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு தமிழக மற்றும் இந்திய முஸ்லீம் அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள்2 இப்போதே தொடர்புகொண்டு ஒவ்வொரு இயக்கங்களும் ஆளுக்கொரு கோரிக்கையை வைக்காமல் எல்லோரும் அமர்ந்து பேசி தமிழகம் மற்றும் இந்திய முஸ்லீம்களின் ஒருமித்த கோரிக்கை3 இது என்று அரசியல் சாணக்கியர்களின்...? காதில் விழுவது போல் உரக்க விளிப்போம். அதற்கான பணிகளை தொடங்க இன்றே ஆயத்தமாவோம்.

ஒற்றுமையுடன் கூடிய முஸ்லீம் அமைப்புக்களின் ஒருமித்த அறிவிப்பை இந்திய முஸ்லீம் உம்மத்தினர் விரைவில் எதிபார்க்கின்றனர்.

சமுதாயத்தலைவர்கள் அனைவரும் ஒரு மனதோடு கூடி அமர்ந்து விவாதித்தால் பலன் கிட்டும். இது முடியுமா என யோசிக்காமல் முடியும் என முழு நம்பிக்கை வையுங்கள். மனது வைத்தால் முடியாதது ஒன்றுமில்லை இறைவன்நாடினால்.

எதிர்வரும் தேர்தலை நம் நாட்டின் இறையாண்மைக்கும், இந்திய முஸ்லீம் உம்மத்தின் வாழ்வுரிமைக்கும் விடுக்கப்பட்ட பெரும் சவாலாக எதிர்கொண்டு களப்பணிகளாற்றி தேசவிரோத சக்திகளின் சதியை முறியடிக்க ஒவ்வொரு முஸ்லீமும் அயராதுழைப்போம்.

யாஅல்லாஹ்...! நீ அருளிய தூய மார்க்கத்தை ஏற்று அக்கிரமக்காரர்கள் மற்றும் அநியாயக்காரர்கள் மத்தியில் ஏக இறை நம்பிக்கையை திடமாக மனதில் ஏந்தி உன்னை மட்டுமே வணங்கும் ஒரு சமுதாயம் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அச்சமுதாயம் பலன்பெறும் வகையில் சிறந்த நிர்வாகத்துடன் கூடிய ஆட்சி அமைப்பை இந்நாட்டில் ஏற்படுத்துவாயாக!

யாஅல்லாஹ்! பாதுகாப்பற்ற உணர்வோடு வாழ்வை கழிக்கும் அச்சமுதாயத்திற்கு பாதுகாப்பளிப்பாயாக. அவர்களை அவ்வநியாயக்காரர்களின் சோதனைப்பொருளாக ஆக்கிவிடாதே.

யாஅல்லாஹ்! எச்சோதனைகளுக்கு அச்சமுதாயம் ஆட்படுத்தப்பட்டாலும் அதை எதிர்கொண்டு வெற்றி கொள்ளும் மனவலிமையை, உளதைரியத்தை அவர்களுக்கு கொடுப்பாயாக...!

யாஅல்லாஹ்! நீயும் உனது தூதர் மட்டுமே சொல்லித்தந்த இஸ்லாமியத்தை கடைபிடித்தொழுகும் ஒரு தன்னலமற்ற இஸ்லாமிய தலைமையை அச்சமுதாயத்திற்கு பெற்றுத்தருவாயாக!

யாஅல்லாஹ்! இழைக்கப்படும் அநீதிகள், ஏற்படும் சோதனைகளை மகிழ்வோடு ஏற்று எவ்வித சலனமும் கொள்ளாமல் அவைகளை துச்சமென மிதித்து மறுமையில் அதற்கான பலன் கிட்டும் என பொறுமை காத்து இறுதி மூச்சு வரை உயர்ந்த நம்பிக்கையோடு உன்னால் பொருந்திக்கொள்ளப்பட்ட சிறந்த மரணத்தை அச்ச்சமுதாயத்திற்கு வழங்குவாயாக!

குறிப்பு:

1. ஏனைய மாநிலங்களில் உள்ள வேறு சில கோப்புகள் தவிர்த்து ...

2. எமது சமுதாயத்தின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என எழுத்து மூலம் வாக்குறுதி தருபவர்களுக்கே எங்கள் ஆதரவு என முஸ்லீம் அரசியல் கட்சிகளும் அறிவிக்க வேண்டும்.

3. பல மாநில முஸ்லீம் சமூகத்திற்கு அங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப சில கோரிக்கைகள் மாறுபடலாம்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...sinthippargala makkal
posted by: seyed ibrahim K.M (chennai) on 27 September 2013
IP: 37.*.*.* | Comment Reference Number: 30399

Masha allah Migavum Arumaiyana Katturai

Insha Allah Matram varattum.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. மோடியின் வருகை...காவிக்கம்பள விரிப்பு திருச்சியிலே...
posted by: கே .எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம் ) on 27 September 2013
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30401

நாடகத் துவக்கம் திருச்சியில் ..

நாடாள நினைக்கும் நரியின்
வாயில் இரத்த ஒழுக்கு ...

பிள்ளைக்கறி சமைத்தவன் -இங்கு
தொட்டிலை ஆட்ட வருகிறான் ....

பாம்புக்கு பால்வார்க்க நினைப்போரே ...

எச்சரிக்கை ....!!

பாலை மட்டுமே குடிக்கும்
பாம்பு அல்ல இது ...!

நெருப்புக்கு விசிறி வீசுபவர்களே ---
உங்கள் குடிசைகளின் மேற்கூரை ஜாக்கிரதை ...!

ஒரு மானுட எதிரிக்கு
சிவப்பு கம்பளம் விரிப்போரே
சிவப்பு எனில் அவருக்கு
ரத்தம் மட்டுமே தெரியும் ...!

கூலிக்கு ஆள்பிடிக்கும்
கேளிக்கை மனிதர்கள் ..!

வேடிக்கை காட்டவரும்
விபரீத ஜென்மங்கள் ...!

குழந்தைகளின் கைகளில்
இருக்கும் ஐஸ்கிரீம் ஜாக்கிரதை ....!

அதையும் கூட
பாஸ்பரசாக மாற்றும் வல்லமை
இந்தக்கேடிகளின் கூட்டத்துக்கு உண்டு

மோடி வருகிறார் -ஜாக்கிரதை ..!!
மோடி வருகிறார் -ஜாக்கிரதை ...!!!!

-ஆக்கம்,
கே .எஸ் முகமத் ஷூஐப்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) on 27 September 2013
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30410

நல்ல கட்டுரை . மாற்றம் வேண்டும்தான் . மாற்றம் வந்தால் மட்டும் மாறிடுமா பாரதம் . இதோ பார் " ரதம் " என்று ஒட்டி காட்டுவார்கள் . நாமும் பார்த்துகொண்டிருக்க வேண்டியதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: M.I. மூசா நெய்னா (மதினா முனவ்வரா) on 27 September 2013
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30413

மிக அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.

சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவைகளை நன்கு அலசி ஆராய்ந்து நேற்று இன்று நாளை என்ற ரீதியில் அழகாக வடிவமைக்கபட்ட கட்டுரை.

நமது சமூகத்தின் பலவீனமே நமக்குள் உள்ள ஒற்றுமையின்மைதான். சமுதாய கட்சிகள் என்று சொல்லி கொள்பவர்கள் அனைவர்களும் நான்தான் தலைமை தாங்குவேன், எனது தலைமையின் கீழ் தான் ஒன்றுபட வேண்டும் என்று ஆசைபடுகிறார்கள். ஆனால் அந்த தலைவர்களோ 1, 2 சீட்டுக்காக நமது சமுதாயத்தின் நலனையே அடகு வைத்து விடுகிறார்கள்.

கேரளாவை உதாரணமாக எடுத்து கொள்ளுங்கள். அங்கே முஸ்லிம் லீக் எப்படி ஆட்சியில் கோலோச்சுகிறது. முஸ்லிம் சமுதாயம் எப்படி தலநிமிர்ந்து நிற்கிறது என்று பாருங்கள்.

எனது தாழ்மையான வேண்டுகோள்: கட்டுரையாளர், நமது தமிழகத்து சமுதாய கட்சிகளின் நிலை குறித்து ஒரு தெளிவான ஆக்கம் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...மோகனா மோடியா...
posted by: mackie noohuthambi (colombo) on 27 September 2013
IP: 113.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30415

கட்டுரை ஆசிரியரின் அலசலும் ஆதங்கமும் புரிகிறது. இந்த இருவரை விட நாம்தான் கொடியவர்கள்.

அல்லாஹ்வின் பெயரால் நபியின் பெயரால் எவ்வளவு இயக்கங்களாக முஸ்லிம்கள் இன்று பிரிந்து நின்று நமது வாக்கு வங்கியை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிம்கள் அவர்களுக்கு திருமறை, திருநபி இந்த இரண்டும் கொடுக்கப்பட்டு, உலகையே ஒரே குடைக்கு கீழ் கொண்டுவரும் திட்டங்கள் நம் கைகளில் தரப்பட்டது. சாம்ராஜ்யங்கள் முஸ்லிம்களின் கால்களை முத்தமிட்டன. அப்போது கணினிகள் இல்லை, விஞ்ஞான முன்னேற்றம் இல்லை. அல்லாஹ் ஒருவனைத்தவிர யாரும் இல்லை என்ற தாரக மந்திரம் மட்டும் முஸ்லிம்கள் கையில் இருந்தது. அந்த ஆயுதத்தை இன்று கலைஞரிடமும் புரட்சி தலைவியிடமும் கேப்டன் இடமும் இன்னும் இதை போன்ற எத்தனை அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களோ அவர்களிடம் அடகு வைத்து விட்டு, தறி கேட்டு போய் நிற்கிறோமே, நமக்கு தரப்பட்ட ஏணியை தூர தள்ளி விட்டு இன்னொருவரின் சின்னத்தில் நின்று வெற்றி பெறுவதை பெருமையாக நினைக்கிறோம்.

இஸ்லாமிய ஞானம் மிக்க திரு நகரை, சிறு மக்கா என்று உலகம் முழுதும் புகழப்பட்ட ஊரை கேவலம் கடவுளே இல்லை என்று சொல்லும் ஓர் தலைவரின் பெயரால் அழைப்பதை பெருமையாக நினைக்கிறோம். நமது பல்லை குத்தி நாமே நாற்றம் பார்க்கிறோம். ஒரு இறை ஒரு மறை ஒரு நபி என்று வாய் கிழிய பேசுகிறோம். ஆனால் இல்லாத ஒன்றுக்காக ஒரு பிறை ஒரே பிறை என்று பட்டி மன்றம் கருத்தரங்குகள் நடத்துகிறோம். மூன்று வெவ்வேறு தினங்களில் பெருநாள். ஒரே வீட்டில் மூன்று பெருநாள். நமது தொழுகைகள் காபாவை நோக்கினாலும் நாம் தொழுகும் முறைகளில் ஆயிரம் வில்லங்கங்கள்.

மோகனும் மோடியும் நம்மை பார்த்து கை கொட்டி சிரிக்கிறார்கள். நமது சபலங்களை, நமது வேற்றுமைகளை, நமது பிரிவினைகளை நமது பலவீனங்களை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

இந்த நிலையில் மோகன் ஆட்சிக்கு வந்தால் என்ன மோடி ஆட்சிக்கு வந்தால் என்ன. உச்ச நீதி மன்றம் அளிக்கின்ற தீர்ப்பு தனக்கு பாதகமாக இருக்கிறது என்பதற்காக, அவசர சட்டம் கொண்டு வந்து, உச்ச நீதி மன்ற தீர்பையே நீர்த்துப் போக செய்கிறார்கள்.

இருக்கிறவன் ஒழுங்காய் இருந்தால் சிரைக்கிறவன் ஒழுங்காய் சிரைப்பான்.

அல்லாஹ் அவனது திருமறையில் ஆணி அடிப்பது போல் சொல்கிறான்...

INNALLAAHA LA YUGHAYYIRU MAA BI QAWMIN HATTHAA YUGHAYYIROO MAA BI ANFUSIHUM
ஒரு சமுதாயத்தின் போக்கை அல்லாஹ் மாற்றமாட்டான் எதுவரை, அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள முன்வராத வரையில் என்று அதற்கு அறிஞர்கள் விளக்கம் சொல்கிறார்கள்.

ஒரு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. நோன்பாளிகளுக்கு கஞ்சி கொடுக்க வேண்டிய இஸ்லாமிய தலைவர்கள், ஒரு காபிரான தலைவரை கூப்பிட்டு அவருக்கு நோன்பு கஞ்சி கொடுத்து அவரை நோன்பு திறக்க வைத்து? (அப்போதுதான் அவர் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக்கொண்டும் COCA COLA குடித்துக்கொண்டும் வந்திருக்கிறார்). அவர் பேச்சையும் கேட்டு ரசிக்கிறார்கள். "பேராசிரியர் அவர்கள் நான் பேச வேண்டும் என்பதற்காக தனது பேச்சை குறைத்துக் கொண்டார். அதே போல் எதிர்வரும் தேர்தலிலும் அவர் அதிக இடங்கள் கேட்பதை குறைத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்" என்று அந்த தலைவர் பேசுகிறார். எவ்வளவு கீழிறங்கி போய் விட்டது சமுதாய தலைவர்களின் போக்கு.

எனவே என்னை பொறுத்தவரை, மோகன் வந்தாலும் மோடி வந்தாலும் முஸ்லிம்கள் என்றும் இப்படித்தான் இருப்பார்கள் நமது தலை எழுத்து, நம் தலையில் ஏறித்தான் இவர்கள் திருவிழா பார்ப்பார்கள். அதற்காக நம் தலையை அவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கவும் நாம் தயாராக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சன உண்மை. அல்லாஹ்வாக பார்த்து ஒரு அதிசயத்தை ஏற்படுத்தினால்தான் இந்த இவர்களை தவிர வேறு ஒருவர் பிரதமராக வருவார். அல்லாஹ்விடம் து ஆ கேட்பதைவிட வேறு வழி இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: ASHIKRAHMAN (mikhwa via albaha, k.s.a) on 28 September 2013
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30420

மிக அருமையான கட்டுரை. பாராட்டுக்கள். ஒற்றுமை., சகிப்புத்தன்மை இருந்தால் அலலாஹ் உதவியால் இன்ஷா அலலாஹ் வெற்றி பெறலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. இதுவே அப்போது அவசியம்
posted by: A.R.Refaye (Abudhabi) on 28 September 2013
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30440

கட்டுரையாளரின் அறிவுபசிக்கும், உள்ளார்ந்த உணர்வுபசிக்கும், அரசியலை விட ஆன்மீக உரம் ஏற்றும் உத்வேகதிர்க்கும் அளவே இல்லையா c/p ஒற்றுமையுடன் கூடிய முஸ்லீம் அமைப்புக்களின் ஒருமித்த அறிவிப்பை இந்திய முஸ்லீம் உம்மத்தினர் விரைவில் எதிபார்க்கின்றனர்-----

அப்படி ஒரு அறிவிப்பு சத்தியமாக இக்கால வரலாற்றில் நடக்கபோவதில்லை என அறிந்தும் உம் உள்ளார்ந்த ஆசைக்கு பாராட்டுக்கள் !

சமூக அமைப்புகள் என்ற பெயரில் நம்மை அறிவிலும், அரசியலிலும், ஆன்மீகத்திலும் காலம் காலமாய் குழப்பிகொண்டிருகிற நம் தலைவர்களின் நிலை கண்டு வெக்கி தலைகுனிவதை தவிர வேறு வழியில்லை நம் இறை பிரார்தனையின் போது தாம் கேட்கின்ற துஆ c/p

யாஅல்லாஹ்...! நீ அருளிய தூய மார்க்கத்தை ஏற்று அக்கிரமக்காரர்கள் மற்றும் அநியாயக்காரர்கள் மத்தியில் ஏக இறை நம்பிக்கையை திடமாக மனதில் ஏந்தி உன்னை மட்டுமே வணங்கும் ஒரு சமுதாயம் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அச்சமுதாயம் பலன்பெறும் வகையில் சிறந்த நிர்வாகத்துடன் கூடிய ஆட்சி அமைப்பை இந்நாட்டில் ஏற்படுத்துவாயாக!!

இதுவே அப்போது அவசியம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...பாராட்டுக்கள்
posted by: A.S.L.சதக்கத்துல்லா (கதிட்ரல் சாலை.சென்னை-86) on 03 October 2013
IP: 27.*.*.* India | Comment Reference Number: 30513

கட்டுரை ஆசிரியர் அவர்கள் நடந்த சரித்திரத்தை அழகாக வரிசைபடுத்தி நமக்கு நினைவு படுத்திஉள்ளார் அழகான எழுத்துக்களின் நடை.. இழகுவாக புரியும்படியும் எழுதிய எழுத்தாளர் அரபி சுஐப் அவர்களுக்கு பாராட்டுக்கள் மேலும் அறிவு பூர்வமான கட்டுரைகள் எழுத வல்ல நாயனை பிராத்திக்கின்றேன். வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. போதும் போதும் இயக்கங்கள் போதும்...
posted by: arabishuaib (jeddah) on 04 October 2013
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30519

கோட்சே காந்தியை கொன்றான்
கோல்வாக்கர் நீதியை கொன்றான்
மோடியோ மனிதத்தை கொன்றான்

நாடக ஒத்திகை நாக்பூரில்
அதன் அரங்கேற்றம் குஜராத்தில்
தொடர நினைக்கிறான் தமிழ்நாட்டில்

அப்பாவி இந்துக்களை ஏமாற்றி
தப்பான செய்திகளை சொல்லாக்கி
சொத்தான முஸ்லீம்களை கரியாக்கினான்

பாரதமாதா என்பானாம்
சுதேசி தனத்தை திணிப்பானாம்
மறுப்பவன் கழுத்தை அறுப்பானாம்

குருதியில் குளிக்கும் கொலையாளிகள்
குறுகிய மனத்தின் மூதேவிகள்
யூதனைத் தாங்கும் நாதாரிகள்

பொய் மூட்டையை முதலாக்கி
சரித்திர புரட்டை தொழிலாக்கி
நரித்தனம் செய்யும் நாசகர்கள்

இவர்களை வீழ்த்த நாம் சேர்வோம்
சிறந்த தலைமையில் அணி திரள்வோம்
ஓர் குடையின் கீழ் வந்தமர்வோம்

போதும் போதும் இயக்கங்கள் போதும்
சமூகம் அதனால் துவண்டது போதும்
மனித உயிர்கள் மாண்டது போதும்

அரசியல் மாச்சர்யம் தூரவைப்போம்
அருகில் அமர மனது வைப்போம்
கலந்து பேசி முடிவெடுப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:...
posted by: S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) on 08 October 2013
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30583

மிக அருமையான தற்போதைய சூழ்நிலையில் தேவையான கட்டுரை.

நமக்குள் இருக்கும் பல பிரச்சனைகளை ஒதுக்கி ஒன்றாக வேண்டும் நடக்குமா? பிறை விசயத்திலேயே ஒன்று பட மறுக்கும் நாம், நாட்டின் பிரதமர் விசயத்தில் ஒன்று படுவோமா? மன மாச்சரியங்களை மறந்து ஒன்று பட வேண்டும்.

ஆசிரியர் நமது அண்டை மாநிலமான கேரளாவை உதாரணம் காட்டியுள்ளார். இறைவன் பூகோள ரீதியில் அந்த மாநிலத்திற்கு கொடுத்த வரம் என்றே சொல்லவேண்டும் . எப்படியும் மிக அதிக சதவிகிதம் உள்ள ஒரு சமுதாயம் அவர்களுக்கு முன் நாம் சிறுபான்மையினர் என்ற நிலையில் உள்ளோம். ஆகவே இருக்கும் கெட்டவனில் எவன் பரவாயில்லை என்று நம் தலைவர்கள் ஒன்றுபட்டு சமுதாயத்தை வழிநடுத்துவதே புத்தி சாலித்தனம்.

மூன்றாவது அணி என்பது ஒருவேளை உதித்தாலும் விரைவில் பதவி ஆசையினால் அஸ்தமாக கூடியதாகவே இருக்கும்.தற்போதைய சூழ்நிலையில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:...
posted by: NAHVI (CHENNAI) on 07 November 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31276

அழகான ஆழிய சிந்திக்க வேண்டிய கட்டுரை. ஆசிரியர் ஷோயப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

எந்த அரசியல் கட்சியையும் சாரா முஸ்லிம் ஓட்டு வங்கி உருவாகாத வரை ஆசிரியரின் கனவு சாத்தியமில்லை. எல்லாருமே மாற்றி மாற்றி நம் முதுகில் குத்தியவர்கள்தான். MARCH 1998 - ல், ADMK , BJP உடன் கூட்டு . ஒர் ஆண்டே நீடித்த இந்த கூட்டு MAY 1999 -ல் முறிகிறது.

SEPTEMBER 1999 RE ELECTION -ல் DMK, BJP உடன் கூட்டு (2004 வரை). கூட்டு பிரிய கலைஞர் சொன்ன காரணம், BJP, உண்மை முகத்தை காட்டியதாம். அதற்கு முன்னால் அவருக்கு தெரியாதா? (DMK chief M Karunanidhi, whose party was part of the BJP-led NDA till 2004, said on Saturday that it had switched alliance when BJP showed its "true colours," )

எல்லாரும் துரோகிகள் என்ற உண்மையை இந்த சமுதாயம் உணர வேண்டும். முகவரி இல்லாத BJP க்கு தோள் கொடுத்து ,அந்த நாச கார இயக்கம் வளர, ஆட்சியில் அமர உதவியவர் V.P. SINGH அவர்கள்தான். அன்று அவருக்கு உதவியவர், சிறுபான்மை சமுதாயத்தின் காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். சுருங்க கூறின், நாச கார RSS ன் பினாமி BJP உடன் எல்லா திராவிட கட்சிகளுமே கை கோர்த்திருக்கின்றன. அப்பொழுதெல்லாம் அந்த கட்சிகளை சார்ந்த முஸ்லிம்கள் தங்கள் கட்சிகளோடுதான் இருந்தார்கள். இப்படி இருந்தால் இந்த சமுதாயம் உருப்படுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:...
posted by: AHAMED SULAIMAN (Dubai) on 30 January 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32872

அஸ்ஸலாமு அழைக்கும்,

அருமையான் கட்டுரை அது சமயம் இப்போது உள்ள சூழ்நிலைக்கு வேண்டிய பயனுள்ள கட்டுரை .

நம்முடைய சமுதாயம் கவனமாக இருக்கனும் , நம் அரசியல் கட்சிகள் ,அமைப்புகள் , ஜமாத்துகள் போன்றோர்கள் இது விசயத்தில் ஒரு நிலையான் கருத்தை எடுத்து அதன் பாதையில் பயணிக்க எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வழிநடத்துவானாக ஆமீன் .

அழிவு சக்திகள் இந்த நாட்டை கைப்பற்ற போடும் சூழ்ச்சீ யை வீழ்த்த இறைவன் போதுமானவன் நாமும் ஓரணியில் இருக்கணும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved