முதல் பாகம் காண இங்கே சொடுக்குக
இரண்டாம் பாகம் காண இங்கே சொடுக்குக
காயல்பட்டினத்தின் மண்ணறை கல்வெட்டுகள் சம்பந்தமான இந்த பாகம் முதல் அடுத்த சில பாகங்கள் வரை, இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச்
பல்கலைக்கழகத்தின் கட்டிட கலை மற்றும் நகர்புற படிப்புகள் துறையின் தலைவர் மேஹர்தத் சுகூஹீ மேற்கொண்ட ஆய்வுகளின் வாயிலாக வெளியான தகவல்களை காணலாம்.
இவர் 1980 களில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், 2003ம் ஆண்டு - MUSLIM ARCHITECTURE OF SOUTH INDIA - என்ற புத்தகம் வாயிலாக வெளிவந்ததது. இப்புத்தகத்தின் முக்கிய அம்சம் - தமிழகத்தில் மதுரை, காயல்பட்டினம் பகுதிகள்,
கேரளாவில் மலபார், கோழிக்கோடு, கொச்சி பகுதிகள், கோவா ஆகிய இடங்களில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிகளை ஆய்வு செய்தது ஆகும். இப்புத்தகத்தின் பின்னிணைப்பாக காயல்பட்டினத்தின் மண்ணறை கல்வெட்டுகள் குறித்த தகவல்கள்
வெளியிடப்பட்டிருந்தது. புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டிருந்த 14 கல்வெட்டுகளின் விபரங்களை இத்தொடரில் தொடர்ந்து நாம் காணலாம்.
இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 14 கல்வெட்டுகளில் ஒரு சில கல்வெட்டுகள் சம்பந்தமான சுருக்கமான தகவல் - A TOPOGRAPHICAL LIST OF ARABIC, PERSIAN AND URDU INSCRIPTIONS IN SOUTH INDIA புத்தகம் வாயிலாக, இத்தொடரின் முதல் பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
(1) அப்துல்லாஹ் (அஹமத் என்வரின் மகன்) என்பவரின் மண்ணறை கல்வெட்டு வாசகம் (மறைவு: ஹிஜ்ரி 806 / கிருஸ்துவ ஆண்டு 1403-4)
நகூடா அப்துல்லாஹ் என்பவரின் மண்ணறை - சிறுபள்ளியை ஒட்டியுள்ள ஒரு அறையினுள் உள்ளது. காயல்பட்டினத்தில் காணப்பட்ட இது போன்ற மண்ணறை கல்வெட்டுகளில் இங்கு காணப்பட்ட கல்வெட்டே மிகவும் பழமை வாய்ந்ததாகும்.
வடிவில் இந்த கல்வெட்டு, பிற்காலங்களில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகள் போல் இருந்தாலும், இதில் உள்ள விபரங்கள் - மாறுபடுகிறது.
கல்வெட்டு பெரிய அளவில் அழிந்துள்ளது. அதனால் - இதில் உள்ள வாசகங்களை, முழுமையாக அறிய முடியவில்லை. இந்த கல்வெட்டு குறிப்பிடும் நபரின் பெயர் கூட - உறுதியானதல்ல. பிற்காலங்களில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஆன்மீக வாசகங்கள் இடம்பெற்றன; இந்த கல்வெட்டில் - எந்த ஆன்மீக வாசகங்களும் இல்லை. பிற - இக்காலத்திற்கு முற்பட்ட கல்வெட்டுகளில் உள்ளது போல், மறைந்தவர் பெயர், தேதி மட்டுமே உள்ளது.
வரி வடிவு (Script) நஸ்கீ (Naskhi) வடிவில் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வடிவு கூர்மை (Pointed) முறையாகும் (பரவலான நேரொழுக்கான [Cursive] வடிவல்ல). குஃபிக் (Kufic) வரிவடிவின் பிரதிபலிப்பாக இது தெரிகிறது. இந்த
எழுத்துவடிவம், 15ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பயன்பாட்டில் இருந்து நீங்கியது.
இந்த கல்வெட்டு - அப்துல்லாஹ் ? என்பவரின் மரணத்தை தெரிவிக்கிறது. அப்துல்லாஹ் ? - அஹ்மத் என்பவரின் மகன். அஹமத் - நகூடா நெய்னா ? என்பவரின் மகன். நகூடா நெய்னா - நகூடா ரமதான் ? என்பவரின் மகன். இவர் - ஹிஜ்ரி 806,
துல்ஹஜ் 9 புதன்கிழமை (ஜூன் 18, 1404) அன்று காலமானார்.
(2) சயீத் அப்துல் மாலிக் (அஹமத் என்வரின் மகன்) என்வரின் மண்ணறை கல்வெட்டு வாசகம் (மறைவு: ஹிஜ்ரி 811 / கிருஸ்துவ ஆண்டு 1408-9)
சயீத் அப்துல் மாலிக் என்பவரின் மண்ணறையும் சிறுபள்ளியை ஒட்டியுள்ள அறையினுள் உள்ளது. எழுத்துக்கள் தேய்ந்திருந்தாலும், புரிந்துகொள்ளும் நிலையில் உள்ளது. அந்த கல்வெட்டு - சயீத் அப்துல் மாலிக் (சயீத் அஹமத் என்பவரின் மகன்;
சயீத் அஹமத் - சயீத் சதல்தீன் ? என்பவரின் மகன்) என்பவரின் மரண தகவலை தருகிறது. அவர் ஹிஜ்ரி 811, ஷவ்வால் 4 புதன்கிழமை இரவு (பிப்ரவரி 20, 1409) இறந்தார் என தெரிவிக்கிறது. 8 வரிகளில் உள்ள வாசகங்களின் முதல் வரி, பொதுவாக
பூவணி வேலை (Motif) அல்லது ஆன்மீக வாசகங்கள் இடம் பெரும் வளைவு (Arch) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
(3) சேக் அபூபக்கர் என்பவரின் மண்ணறை கல்வெட்டு வாசகம் (மறைவு: ஹிஜ்ரி 883 / கிருஸ்துவ ஆண்டு 1478-9)
சிறுபள்ளியை ஒட்டியுள்ள அறையினுள் உள்ள மூன்றாவது மண்ணறையில் உள்ள கல்வெட்டு வாசகங்கள், தலைப்பகுதியில் (Headstone) உள்ள கல்வெட்டில் உள்ளது. இந்த அறையில் அடக்கப்பட்ட கடைசி மதத்தலைவர் இவர். மேலும் தெற்கு
மதிலுக்கு அடுத்தார் போல் இந்த மண்ணறை உள்ளது. கல்வெட்டில் உள்ள அரபி வாசகம், சேக் அபூபக்கர், உதுமான் அல்-காஹிரி என்பவரின் மகன் என்றும், இவர் ஹிஜ்ரி 883, ரபியுல் அவ்வல் 22 புதன்கிழமை (ஜூன் 23, 1478) மறைந்தார் என்றும்
குறிப்பிடுகிறது.
[தொடரும்...]
முதல் பாகம் காண இங்கே சொடுக்குக
இரண்டாம் பாகம் காண இங்கே சொடுக்குக |