Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:47:29 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 18
#KOTWART0118
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 2, 2012
என் பார்வையில் காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம்!
இந்த பக்கம் 4201 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



ஏலக் கடையா? மீன் கடையா? இல்லை கள்ளுக் கடையா? இப்படித்தான் எனது மன ஓட்டம் இருந்தது 30.08.2012 அன்று நடந்த காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டம். அதில் பார்வையாளராக இருந்த எனக்கு வேதனைக்குப் பஞ்சமில்லை.

அரசியல் நாகரிகத்தின் அரிச்சுவடியே அங்கு இல்லை. அவை நெறி, ஒழுக்கம் என்பன அறவே அங்கு பேணப்படவில்லை. கூட்டத்தின் துவக்கமே உச்சகட்ட தொனியில் இருந்துதான் பிறந்தது. இது ஏற்கனவே அங்கு நடந்து வரும் நாடகத்தின் ஓர் அங்கம் என்றுதான் எண்ணத் தூண்டியது.

கூட்டம் முறையாகக் கூட்டாமலேயே கலைந்துவிட்டது. கரு கொள்ளாமலேயே கரு கொல்லப்பட்டுவிட்டது. வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே பலர் உள்நடப்பு செய்தார்கள் என்று எண்ணத் தோன்றியது.

காயல் நகரமோ வீதியெங்கும் குப்பையும் - கூளமுமாக, பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. தண்ணீர் பிரச்சினை தலையாய பிரச்சினையாக உள்ளது. இன்னும் பலப்பல உள்ளன. இவற்றைப் பேசுவதை விட்டுவிட்டு ஒருவரையொருவர் ஏசுவதற்காகவா மக்கள் இவர்களைத் தேர்ந்தெடுத்தனர்?

இங்கு கொதிநிலையில் இருப்பது ‘நெட் என்று இவர்கள் குறிப்பிடும் இன்டர்நெட் செய்தியாகும். தலைவியைத் தூக்கியும் - மற்றவர்களைத் தாக்கியும் இந்த அமைப்பு எழுதுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆகவே, வரும் விமர்சனக் கடிதங்கள் பல உறுப்பினர்களின் “நற்பெயருக்கு” இழுக்கு சேர்ப்பதாகக் கூறி ஓர் அணியில் “நெட்டுக்கு” தாழ்ப்பாள் போடக் கோரி - கூறி இரண்டு முறை வெளிநடப்பு செய்துள்ளார்கள். ரஜினி பாடலின்படி இவர்கள் அந்தப் பிரச்சினையைத்தான் முதலில் “சுத்தி சுத்தி வந்தாக..."

ஆனால், வீடியோ கேமராவுடன் பலர் இங்கு இருந்தனர். அவர்கள் அழையா விருந்தாளிகள் என தலைவி முழக்கமிட்டார். சுய விருப்பின்படி பத்திரிக்கை சுதந்திரத்தின் பேரில் அவர்கள் வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், வாசலுக்கு நேரே இருந்த வெள்ளை சட்டை அணிந்திருந்த உறுப்பினர் “உள்ளே வாருங்கள்” என்று கையால் - வாயால் அவர்களை அழைத்ததை நான் கண்டேன்.

ஒளிப்பதிவாளர்களின் வருகையோடு கூட்ட நிகழ்ச்சி தடம் புரண்டுவிட்டது எனலாம். எதை எதையோ பேசினார்கள் என்று சொல்வதை விட கத்தினார்கள் - கூச்சலிட்டார்கள் எனலாம். ஒரே நேரத்தில் பலரும் பல விஷயங்களைப் பற்றி ஆர்ப்பரித்ததால் என்னால் எந்த வார்த்தையையும் சரியாகப் புரிய முடியவில்லை.

ஒழுக்க நெறிக்கு அப்பாற்பட்டு - தரக்குறைவாக பல வார்த்தைகள் அங்கு பேசப்பட்டாலும், தலைவியோடு வெளிநாட்டு காயலர்களையும், நெட் அமைப்பாளர்களையும் இணைத்து ஓர் உறுப்பினர் பேசிய வார்த்தை பெரிய களேபரத்தை உண்டாக்கியது. நான் தலை குனிந்தேன்.

ஊளையிடும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு வெள்ளாடு இருப்பது போன்ற காட்சியே அங்கு இருந்தது. ஆனால் அந்த ஆட்டுக்குட்டி அஞ்சவில்லை. கணீர் என்ற குரலில் தனது வாதத்தை எடுத்து வைத்தது. பெண் உறுப்பினர் ஒருவர் “நீ ராஜினாமா செய்டீ" என்று திருப்பித் திருப்பி கோபத்தின் உச்சியில் இருந்து கேட்டதை என் கண்களால் நம்ப முடியவில்லை.

தலைவியிடமும் தவறு இருக்கலாம். உறு்பபினர்களிடமும் தவறு இருக்கலாம். அவற்றை முறையாக பேசித் தீர்க்க வேண்டுமேயொழிய கூட்டத்தை இரத்து செய்து வெளிநடப்பு செய்வது தவறு.

உறுப்பினர்கள் சில சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். மக்கள்தான் அவர்களின் எஜமானர்களே தவிர வேறு யாருமல்ல! மக்களுக்கு பணி செய்யாது சம்பளம் வாங்குவது முறையாகுமா? சிந்திக்க வேண்டும்.

நகர்மன்றம் நகராத மன்றமாக இருந்தால் காயல் நரகமாகி விடும். உள்ளூரில் பல வித அரசியல் இருப்பது போல் தெரிகிறது. வெளிநாடுவாழ் காயலர்கள் இதில் அக்கறை செலுத்த வேண்டும். நாம் எங்கு வாழ்ந்தாலும் ஒருநாள் இம்மண்ணுக்குத் திரும்பியே ஆக வேண்டும். ஆகவே சிந்தியுங்கள்!

இறுதியாக...

காயல் நகர மன்றத்தில் நடப்பது ஒரு பொம்மலாட்டம் என்றே பலரும் பேசுகின்றனர். ஆட்டுவிப்பவர்கள் ஆட்டுவித்தால் ஆடாதவரும் உண்டோ?

ஏலக் கடையா?
மீன் கடையா? இல்லை
கள்ளுக் கடையா?
இந்நிலை என்று மாறும்???

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: cader (JAIPUR) on 02 September 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21743

இது மாற வேண்டும் என்றால் எல்லா காயல் அமைப்பு, சங்கம், ஜமாஅத் மற்றும் மக்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. காயலின் மானம் கப்பலேறும் என்பதற்கு இக் கட்டுரை ஒன்றே ஆதாரம்!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) on 02 September 2012
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21745

ஒழுக்க நெறிக்கு அப்பாற்பட்டு - தரக்குறைவாக பல வார்த்தைகள் அங்கு பேசப்பட்டாலும், தலைவியோடு வெளிநாட்டு காயலர்களையும், நெட் அமைப்பாளர்களையும் இணைத்து ஓர் உறுப்பினர் பேசிய வார்த்தை பெரிய களேபரத்தை உண்டாக்கியது. நான் தலை குனிந்தேன்.- கட்டுரையாளரின் இவ் வேதனை கலந்த வரிகள் என்னை வாட்டியெடுத்தது.

இவர் துதிபாடியோ? அல்லது நெட்டுக்குச் சொந்தக்காரரோ அல்ல! பொதுவான ஓர் அமைப்பின் பொதுவானவர். தான் நேரில் கண்ட சம்பவங்களை அதனால் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை மிக நளினமாகக் கையாண்டுள்ளார். காயலின் மானம் கப்பலேறும் என்பதற்கு இக்கட்டுரை ஒன்றே ஆதாரம்!

என் தாய் மண்ணில் அரங்கேறும் இக் கொடுமையினை எண்ணி மிகுந்த மன வேதனையோடு.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. ஊளையிடும் 'ஓநாய்' கூட்டத்திற்கு மத்தியில்... ஒரு வெள்ளாடு !!
posted by: Salai.Mohamed Mohideen (USA) on 03 September 2012
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 21747

போட்டியிட்டு வெற்றி பெறும்வரை 'அன்று' தேவைப்பட்ட இதே ஊடகங்கள் (குறிப்பாக ஒரு ஊடகம்) இன்று அவர்களை 'கொதிநிலைக்கு' தள்ளியிருக்கிறதென்றால்... இவர்களின் 'உண்மையான முகங்கள்' விடியோ வாயிலாக பொதுமக்களுக்கு தெரிந்து விடக்கூடாது மற்றும் இவர்களை 'ஆட்டு' விக்கும் 'சக்தி'க்கும் அந்த குறிப்பிட்ட இணைய தளத்திற்க்கும் ஏதோ ஒரு பிணக்கு ஏற்பட்டு... அந்த இணைய தளத்தை கருவருப்பதட்க்கு மறைமுகமாக இந்த ஊடக சுதந்திரத்தை ஆயுதமாக எடுக்க, இவர்களுக்கு மாதப் படியளப்பவர்கள் (?) உத்தரவு பிறப்பித்ததது போல தெரிகின்றது.

ஒரே கல்லில்... இரண்டு மாங்காய். வெளிப்படை நிர்வாகத்தில் ஊழலை அறவே ஒளித்து வளமான காயலை உருவாக்குவதில் உறுதியாக இருக்கும் தலைவியையும் & மக்களை விழிப்புனர்வடைய செய்யும் அந்த இணையதளத்தையும் காலி  பண்ணும் திட்டம்??? 

" உள்ளே வாருங்கள் என்று கையால் - வாயால் அவர்களை அழைத்ததை " - இவர்கள் திட்டமிட்டு 'மற்ற ஊடகங்களை' அழைத்ததின் ரகசியம், இந்த நகர்மன்ற பிரச்சனையை ஊதி பெரிதாக்கி  'செயலற்ற அல்லது கவுன்சிலர்களின் நம்பிக்கையை இழந்து விட்ட தலைவி' என்ற ஒரு மாயையை உருவாக்கும் எண்ணம்???

"தலைவியோடு வெளிநாட்டு காயலர்களையும், " - தெரியாமல் விடியோவில் அவ்வார்த்தையை கேட்க்கும் சூழல். நா - காது கூசும் வார்த்தைகள். உங்களுடைய பொன்னான விடுமுறை நேரத்தையும் உங்களின் சுய கவுரவ/ கண்ணியத்தையும் பொருட்படுத்தாது  இவர்களை எல்லாம் 'மனிதர்களாக' மதித்து பெருநாள் ஒன்று கூடல் மற்றும் நகர்மன்ற பிரச்சனையை தீர்ப்பதற்க்காக அழைத்ததட்க்கு செருப்பால் அடித்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது. 

" ஊளையிடும் 'ஓநாய்' கூட்டத்திற்கு மத்தியில் " - மிகக் காட்டமான வார்த்தைகள். இவர்களை விட ஒரு சில அரசியல் 'சாக்கடைகள்' எவ்வளவோ மேல் என்பதனை உணர நமக்கு இவ்வளவு காலம் ???

"நாம் எங்கு வாழ்ந்தாலும் ஒருநாள் இம்மண்ணுக்குத் திரும்பியே ஆக வேண்டும்." -- ஆயிரம் முறை சொன்னாலும் சிலரிடம் எடுபடாத வாசகங்கள் !!

"ஆட்டுவிப்பவர்கள் ஆட்டுவித்தால் ஆடாதவரும் உண்டோ? " -- மிகச்சரியாக சொல்லப் பட்ட வார்த்தை. நகரமன்ற பிரச்சனைக்கு 'விடையை' அறிந்து கொண்டு... நாம் ஒவ்வொருவரும் கண்ணா மூச்சியாடுகிறோம். ஆட்டு விக்கும் அந்த சக்தியை எதிர் கொள்ள திராணியில்லை என்பதே ஒருவரி பதில். 


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. மாற்றம் நிச்சயம் தேவை.
posted by: Pirabu Shuaibu (Chennai) on 03 September 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 21748

உலக காயல் நலமான்றதின் மூத்த உறுபினர் & மிகவும் அனுபவம் நிறைந்த ஆசிரியர் - எம்.எஸ்.ஷாஜஹான் அவர்களே ,இந்த நகர்மன்றம் நல்லமுறையில் நடைபெறுவற்கு தாங்கள் நம் நகர பெரியவர்களிடம் (உங்களை போன்று அனுபவம் நிறைந்த பெரியவர்கள்) நல்ல ஆலோசனை (Masura ) களை கலந்து ஆலோசித்து நம் நகர்மன்றம் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு வெளிப்படையான கருத்தை தெரிவிக்கும் படி கேட்டுகொள்கிறேன்

பிரபு ஷுஐபு
ஹாங்காங்வால் காயலர்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: Vilack SMA (Nha Be , Vietnam) on 03 September 2012
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21751

அஸ்ஸலாமு அழைக்கும் ஷாஜஹான் காக்கா .

உங்கள் கட்டுரையின்மூலம் ஊரில் பிரச்சினைகள் எதனால் என்பதை நன்றாகவே உணர முடிகிறது .

நீங்கள் குறிப்பிட்டதுபோல் " தலையாய பிரச்சினைகள் " என்று பல உள்ளது . ஊரெங்கும் குப்பை கூளங்கள் , தண்ணீர் பிரச்சினை ! யார் காரணம் ? தலைமையின் நிர்வாகத்திரமையின்மையே காரணம் . இதைப்பற்றி பலமுறை ஊடகத்தின் கருத்துப்பதிவின் மூலம் என்போன்ற பலரும் தலைமைக்கு எட்ட வைத்தார்கள் . பலன் , பூஜ்யம்தான் .

அடுத்து , நீங்கள் குறிப்பிட்ட " நெட் " பிரச்சினை .ஒவ்வொரு கூட்டத்திலும் கூச்சல் குழப்பங்கள் இருக்கத்தான் செய்தன . ஆனால் அப்போதெல்லாம் தலைவியின் ஆதரவு " நெட் " மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது . அதனால் உங்களுக்கு , உள்ளே நடக்கும் நிகழ்வுகள் சரிவர தெரியாமல் போயிற்று .இன்றோ மீடியாக்கள் பலரும் வந்ததால் இவற்றை மீன் சந்தை , கள்ளுக்கடை என்று விமர்சிக்கிறீர்கள் .

அடுத்து , மிகவும் கண்டிக்கத்தக்கது , தலைவி மீடியா மக்களை " அழையா விருந்தாளிகள் " என்று சொன்னது . இவ்வளவு நாட்களாக தன்னுடைய ஆதரவு மீடியா அங்கு சென்று செய்தி செகரித்ததே , அவர்களை யார் அழைத்தார்கள் .

நீங்கள் குறிப்பிட்ட ஒழுக்க நெறி , தரக்குறைவு ..... வீடியோவில் பார்த்தது உண்மைதான் . இதற்கு யார் காரணம் ? தலைமை , உறுப்பினர்கள் எண்ணங்களின் பெரும்பான்மைக்கு ஒத்துப்போகாததுதான் . சரியோ , தவறோ , பெரும்பான்மையோடு சேரவேண்டும் . இல்லையேல் எந்த பணியும் நடக்காது .

தலைவியின் அனுபவமின்மைக்கு ஒருசில எடுத்துக்காட்டுகள் .( a ) ஏலம் விடுவதில் நடந்த குளறுபடிகள் . அதிக தொகைக்கு கொடுத்துவிட்டோம் என்று தன் ஆதரவு மீடியா மூலம் செய்தியை வெளியிட்டு , மக்களை நம்பவைத்து முட்டாளாக்கியது . ( b ) சமீபத்தில் தண்ணீர் பிரச்சினை பற்றி ஊரே அல்லோலப்பட்டிருக்கும்போது ,அதுவரை சும்மா இருந்த தலைவி , ஒரு அரசியல் கட்சி ஆர்பாட்டம் நடத்தும்போது , யாரோ கொடுத்த யோசனையால் " நகராட்சி விளக்க நோட்டீஸ் " தன்னிச்சையாக விநியோகித்தது .

ஆட்டுக்குட்டி ...... அஞ்சாத ஆட்டுக்குட்டிதான் . ஆம் , ஆதரவு ஜால்ராக்கள் எப்போதும் ஆட்டுக்குட்டியை சுற்றி சுற்றி வருவதால் ஆட்டுக்குட்டிக்கு பயம் வராது .

" நீ ராஜினாமா செய்டீ " மிகவும் கண்டிக்கத்தக்க வார்த்தை.

இறுதியாக ,

" ஆட்டுவிப்பவர்கள் ஆட்டுவித்தால் ஆடாதவரும் உண்டோ " உண்மைதான் காக்கா . இந்த தலைவியை ஜால்ராக்கள் பலர் ஆட்டுவிக்கின்றனர் . இவரும் , அவர்களின் பேச்சை கேட்டு ஆடுகின்றார் .

" என்று மாறுமோ இந்த நிலை "

Vilack SMA , Nha Be , Vietnam .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. நடுநிலையான கருத்து
posted by: முஹம்மது புகாரீ (காயல்பட்டினம்) on 03 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21752

மரியாதைக்குரிய காவாலங்காவின் தலைவர் அவர்களின் வரிகள் வாசிக்கின்ற ஒவ்வொருவரையும் நியாயமாகவும் நடுநிலையாகவும் சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. நகர்மன்றத்தில் நடைபெற்ற நாகரிகமற்ற நிகழ்வுகளை மிகவும் நாகரிகமான நடையில் பதிவு செய்துள்ளமை உள்ளபடியே வரவேற்கத் தக்க ஒன்று.

சர்வதேச மட்டத்தில் வசிக்கும் காயலர்கள் தங்கள் கடப்பாடு உணர்ந்து இதற்கு முடிவு கட்டியாக வேண்டும். பணத்தால் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்கத் துடிக்கும் சக்திகளின் போக்கை இனம் கண்டு அதை மாற்றியமைக்க முன்வர வேண்டும்.

“வெளிநாடுவாழ் காயலர்கள் இதில் அக்கறை செலுத்த வேண்டும். நாம் எங்கு வாழ்ந்தாலும் ஒருநாள் இம்மண்ணுக்குத் திரும்பியே ஆக வேண்டும். ஆகவே சிந்தியுங்கள்!” எனும் கட்டுரையாளரின் வரிகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கத் தக்கவை.

ஹாங்காங் காயலர் சகோதரர், பிரபு ஷுஐப், “உள்ளூர் பெரியவர்கள், பிரமுகர்களிடம் இதை வெளிப்படையாகப் பேசி தீர்வு காணலாம்“ என குறிப்பிட்டிருப்பதை வரவேற்கிறேன்.

ஆனால், உள்ளூர் பெரியவர்கள் நியாயமாகவும், விருப்பு வெறுப்பின்றியும் பிரச்சினைகளை அணுக முற்படும்போதுதான், பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்கவியலும். அதைவிடுத்து அவர்களுக்கென சுயவிருப்பு வெறுப்புகளை வைத்துக்கொண்டே பிரச்சினைகளை அணுகுவதாக பல தரப்பிலிருந்தும் தகவல்கள் கிடைக்கின்றன.

பின்வரும் இறைவசனம் நம்மை நெறிப்படுத்த வேண்டும்.

இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செயல்படுவோராகவும் நியாயத்தின் சாட்சிகளாகவும் ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தார்மீது (உங்களுக்கு)ள்ள பகை, (அவர்களுக்கு) நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டிவிட வேண்டாம். (எல்லாரிடமும்) நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகவும் உகந்ததாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். (அல்மாயிதா, 5:8)

தவறு யார் பக்கம் இருப்பினும், அதை நியாயமான அடிப்படையில் அணுகுவதுதான் சரியான வழிமுறை. தேவையற்ற வார்த்தைகள் கோஷங்களால் எதுவும் நடந்தேறப்போவதில்லை. தனிநபர் விமர்சனம், தரக்குறைவான குணப் படுகொலைகள், காட்டிக்கொடுக்கும் போக்கு இவை தொடர்ந்தால் அவை இரும்புக் கரங்கள் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான ஓர் அணி உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம். அப்போதுதான் நாமும் காப்பாற்றப்படுவோம். நம் நகர மக்களும் காப்பாற்றப்படுவார்கள். நகர்மன்றமும் நகரும் மன்றமாக மாறும்.

இக்கூட்டு முயற்சியைத் தொடங்கப்போவது யார்? என்பதுதான் நம்முன் எழுந்துள்ள கேள்வி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. Re:...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 03 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21753

அருமையாக சொன்னீர்கள். இலங்கையில் இருந்து வந்த உங்களுக்கு நமது நகர்மன்றம் மிக சிறப்பான வரவேற்பு அளித்து கவ்ரவித்து இருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க காயல்பதி என்று செல்லுமிடமெல்லாம் நம் மண்ணின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறோம்.

காயல்பட்டினம் எங்கள் இஸ்லாமிய இன்சுவை சமையலில் உப்பு சேர்த்த கலைநகரம். இங்கே கிடப்பது புளுதியல்ல, மக்கமா மலரின் மகரந்த பொடிகள் . இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும் அலைகளின் வாயும் ஹதீதுகள் பேசும்.

நாமெல்லாம் யார் சேகுதம்பியின்(சேகுதம்பி பாவலர்) சின்னதம்பிகள், பீரப்பாவின் பேரப்பிள்ளைகள்....இப்படி கவிக்கோ அப்துர் ரஹ்மான் நம்மை புகழ்ந்து பாடுவார்கள். அவர்களை கூட்டி வந்து நமது நகர் மன்ற நிகழ்சிகளை பார்வை இட சொன்னால், அவர் பாடிய பாடல்களை மாற்றி பாடிக்காட்டுவார்.

கொள்ளையடிப்போர் வள்ளலைப்போலே, கோவிலை இடிப்போர் சாமியை போலே காண்கின்றேன் பின்னே பாவ புண்ணியம் என்பது என்ன நன்மை தீமை என்பது என்ன பாரினிலே....என்று கண்ணதாசன் பாடுவார்.

ஒரு காலத்தில் உங்களை நமது நகரமன்ற தலைமை தேடிவந்தது, நான் அதை ஏற்கவில்லை என்று சொன்னீர்கள். இப்போது அதற்கான தருணம் கனிந்து வந்துள்ளது. உங்கள் கட்டுரை மற்றவர்கள் விழிநீரை துடைக்குமா அல்லது விழித்திரைகளை திறக்குமா பொறுத்திருந்து பார்ப்போம் . உங்களை விமர்சனம் செய்து எழுதுவதை நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள்தான் இப்படி கட்டுரைகளை, தான் கண்ட அவலங்களை அச்சேற்ற முடியும். நாடக வேஷம் கூடவராது நாளைய உலகம் இவரை விடாது.ஒருநாள் திரை விலகும் உண்மை வெளிச்சத்துக்கு வரும் அப்போது இந்த நகர் மன்றம் நீங்கள் எதிர்பார்க்கும் சிறப்பு மன்றமாக செயல்படும்....ஆம் அப்படித்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம்...நம்பிக்கை தானே வாழ்க்கை.

நீங்கள் "துரை" என்று அழைக்கப்படுவதால் நீங்கள் ஆங்கிலம்தான் பேசுவீர்கள் என்று நினைத்திருந்தேன். இப்படி தூய தமிழில் ஒரு கட்டுரை உங்களால் எழுத முடிகிறது என்றால் நிச்சயம் "காயல்பட்டினத்தின் தமிழின தலைவன்" என்று ஒரு பட்டம் வழங்கலாம் போல் தெரிகிறது. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. வாசஹற்கள் அனைவரும் கவனிக்க வேண்டி கேட்டு கொள்கிறன்
posted by: சேக் முகம்மது (காயல் பட்டிணம்) on 03 September 2012
IP: 115.*.*.* India | Comment Reference Number: 21784

அனைவருக்கும் முதர்கன் எனது சலத்தை தேரிவிக்கிறன்

அஸ்ஸலாமு அலைக்கும்

முதலில் என்னை பத்தி சொல்லி விடுகிறன்.

1 .நான் யரையும் சார்ந்தவன் இல்லை.
2 .யரின் சார்பஹவும் இங்கு இதை சொல்லவும் இல்லை.

முதலில் கட்டுரை யழருக்கு அவர் இந்த ஒரு நகர் மன்ற கூட்டத்தை பாற்து விட்டு ஒரு முடிவிற்க்கு வரமுடியாமள் தவிது இருப்பது நன்றஹ புரிகிறது.

வாசஹர்களே ஒங்களிள் அனேக நபற்கள் தாங்கள் கேல்வி பட்டதை உன்மை என்று நம்புகின்றனர் அதில் உன்மை எது பொய் எது என்று பிறித்து அறிந்து இறுப்பது இல்லை

சில வாசஹர்கள் தங்களது கற்ப்பனையில் தோன்டியதை எழுதுகின்றனர் அதவது T R மதுரி ஒரு சொல்லுக்கும் இன்னோறு சொல்லுக்கும் சம்மன்தம் இருக்காது எதோ நாமும் எழுதுவோம் என்று எழுதுவார்கள் அவற்கள் நமது காயலின் எதிற். காலத்தை நல்ல படியஹ அமைந்திட உன்மையை அறிந்து அதை மாத்திரம் எழுத வேண்டுகிறன்

வெளிப்படையன நிற்வாஹம் என்பது தலவியின் வாதம் அதனை ஓரு பொதும் தறமுடியது என்பதே எனது வாதம்

அரசிக்கு எதிறக பேச வேண்டி சூலல் வரும் அப்போது அதனை பதிவு செய்தாள் அந்த பதிவின் முலம் சில பிறச்சனைகள் உருவஹும் என்பதை நாம் யவரும் புறிந்து கொள்ள வேண்டும்

விட்டு கொடுக்கும் மனபான்மையை இரு தரப்பினரும் வலது கொள்ள வேண்டுகிறன்.

கன்னியமிகு காயலர்கலே, வேளி நாட்டுவாள் காயலர்கலே, மக்கலாள் தேர்வு செய்யபட்ட நகர் மன்ற உரிப்பினர்கலே, தலவி அவர்கலே நமது காயலின் கண்ணியதையும் மற்றும் காயல் மானகரின் வலர்ச்சிக்காஹவும் ஒருமித்த கருத்துடன் மற்றும் விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் நாம் யாவரும் இருக்க வல்ல ரகுமானை வேண்டி கொள்கிறன்.

இப்படிக்கு நன்மையை மட்டும் நாடி.
எ.அர்.சேக் முகம்மது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
9. Re:...
posted by: M Sajith (DUBAI) on 03 September 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21791

தலைமை தேர்ந்தெடுப்பதில் காட்டிய ஆர்வத்தை மக்கள் உறுப்பினர் தெரிவில் காட்டாததென் விளைவு இது...

முந்தய தலைவரையும் இதே மன்றத்தில் ராஜினாமா வரை கொண்டு வந்த கதை வீடியோ வந்திருந்தால் உறுப்பினர் தெரிவில் மக்கள் கவணமாக இருந்திருக்க கூடும்.. செக் மோசடி விவகாரம்தான் தலைமை தேர்வில் விழிப்பை ஏற்படுத்தியது...

இந்த சூழ்நிலையில் தொடர்வதை விட நகரவையை கலைக்க தலைவியே பரிந்துரை செய்யலாம்...

மீண்டும் தேர்தல் நடத்தினால் இந்த காட்சிகளை படமாகக் காட்டினால் போதும் மக்கள் தலைமையை தேர்ந்தெடுக்க காட்டிய ஆர்வத்தை உறுப்பினர் தேர்விலும் காட்டுவார்கள்...

அதோடு ஒதிக்கீட்டில் வரையறுக்கப்பட்ட பெண் தலைமையின் ஐந்தாண்டு முழுமையாடையாததால்.. ஒரு Pஈள் இல் மீண்டும் பெண்களுக்கே ஒதிக்கீடும் கிடைக்கும்..

ஆரம்பத்திலிருந்து ஒரு ஆட்டத்தை துவங்கலாம்..!!

அல்லது, தலைவி முதலமைச்சரை ஒரு மாலையுடன் சந்தித்தால் இவர்கள் அனைவருக்கும் அன்று மாலையே ஆப்பு அடிக்கலாம்..

விரக்த்தியில் எந்த முடிவானாலும் தவறில்லை

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
10. Re:...முத்தான மூன்றாவது முறையும் மாநகராட்சி முடக்கம் .
posted by: kalava aboobacker (Yanbu (KSA)) on 04 September 2012
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21819

முத்தான மூன்றாவது முறையும் மாநகராட்சி முடக்கம் .

வீர வசனம் பேசி உறுப்பினர்கள் வெளிநடப்பு.

இவ் வேதனை செய்திகளுக்கு ஒரு வடிகாலே வராதா?

ஒரு விடிவு காலமே பிறக்காதா?

இந்த அட்டூழிய அத்து மீறல்களும்,அதைதட்டி கேட்க

ஆள் இல்லை என்ற இறுமாப்பும் இவர்களுக்கு எப்படி வந்தது?

இவர்களின் பக்கபலமாக பெரிய சக்திகளின் பினாமிகள் பம்பரம்போல் சுழன்று தேடிசென்று திருப்தி படுத்துகிறார்கள் என்ற தைரியம் தானே!

ஊரை ஒற்றுமைபடுத்தவும் ,ஊர் மக்கள் நலனுக்காகவும் நாம் நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு பொருள் செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல்கள் வாழ்ந்து மறைந்த (இன்றும் நம் மனசாட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும்) வரலாற்று புகழ் மணக்கும் புண்ணிய ஊர்தான் நம் காயல்பதி!

இப்புண்ணிய பூமியில் இன்றும் சிலர் நமக்கிடையே பிளவை ஏற்படுத்தி,ஒற்றுமைக்காக உழைக்க முயற்சிப்பவர்களை ஓரம் கட்டி,அவர்களெல்லாம் அந்த அணி,இந்த அணி என்று நம்மை பிரித்தாளும் கூட்டம் கூத்தாடி கொண்டாடி கொண்டிருப்பதற்கு காரணம் என்ன?

அவர்களுக்கு அவ்வப்போது அகம்மகிழ மடியில் விழும் மாணியம் தான். தீர்க்கமான சிந்தனை திறனாலும்,தளராத முயற்சியாலும் தேடிபெற்ற செல்வத்தை இப்படி சிதறடிக்கிறீர்களே,சிறிது கனமாவது சிந்தித்தீர்களா?

இது நமக்குள்ள மானப்பிரச்சனை,இவர்களெல்லாம் நம்மை எதிற்பதா? இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியதுதான் என்ற வெறுப்புணர்வை உங்கள் உள்ளத்தில் வளரவிட்டு வேடிக்கைபார்க்கும் வீணான கூட்டத்தோடு தயவு செய்து கிஞ்சித்தும் கலந்தும் விடாதீர்கள்,உங்கள் காசை கரியாக்க நீங்களே காரணமாகவும் ஆகி விடாதீர்கள்.

ஊர்மக்களின், ஊர்மக்களால், ஊர்மக்களுக்காக செயல்படும் பேரவை என்று பெருமையாக பல பண்பாளர்களையும்,

பல பெரியவர்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. அழகாகவும்,அமைதியாகவும் சென்றுகொண்டிருந்த

அந்த அமைப்பிலும், ஊர் மக்கள் மன ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சில குறுக்குபுத்தியுடையோர் புகுந்து பெரியோர்களையும், பண்பாளர்களையும் புறம் தள்ளிவிட்டு,

இப்புல்லுரிவிகள் கிழித்த கோட்டை தாண்ட முடியாத அளவிற்கு அப்பண்பாளர்களும் ,பெரியோரகளும் பேசா ம்டந்தைகளாகவும், பொம்மைகளாகவும் மாறிவிட்ட மாயம் நடந்தேறிவிட்டது.

இந்த போக்கை பலமுறை தட்டிகேட்ட மக்களையும், மீடியாக்களையும் மதிக்காத காரணத்தினால், பொறுத்து, பொறுத்து பார்த்த மக்கள் பொங்கியெழுந்து, தங்கள் தீர்ப்பை மாற்றி எழுதி விட்டார்கள்.

மக்கள் தீர்ப்பை மனிதாபத்தோடு ஏற்க மறுக்கும் பல பிரிவினை வாதிகளின் வெறித்தனம் இன்னும் வடிந்தபாடில்லை.

எந்த சீமான்களின் சிந்தனைகளையும் தங்கள் பக்கம் திருப்பியாவது, எந்த வியபாரியின் உதவியை பெற்றாவது ஒருநாள் கூட நகராட்சியை நடைபெறவிடக்கூடாது என்பதுதான் இக்கூட்டத்தின் கொள்கையும் குறிக்கோளும் ஆகும்!

யாருக்கு நஷ்ட்டம்? யார் பாதிக்கபடுகிறார்கள்? பக்கத்து ஊர்காரர்களெல்லாம் நம்மை கேவலமாக பார்கிறார்களே என்ற தன்மான உணர்வு ஒரு சதவீதமாவது உள்ளத்தில் உறைக்க வேண்டாமா ?

அதெல்லாம் எங்களுக்கு தெரியாது,. எங்களுக்கு தலைவி தகுதி இழக்கவேண்டும், அப்புண்ணிய எண்ணத்தின் தீவிர தன்மையானவர்கள் எங்களின் தவப்புதல்வர்கள்!

அவர்களின் குதூகலமும், குத்தாட்டமும் இன்றைய சூழ்நிலைகேற்ப இன்றியமையாததே என்று எக்காளமிடுகிறார்கள்!

போரா என்ற நம் புனித மார்க்கத்தின் கலாச்சார செயலை கேலிசெய்து பேசிய உறுப்பினர்கூட இவர்களுக்கு இனிப்பானவர்கள்,

மத நல்லிணக்கத்தை மதிக்கும் மாண்புடையவர் என்று மகுடம் சூட்டி மகிழ்கிறார்கள். இந்த மதி இழந்தோரின் "மிதப்பு கட்டை" கவனமெல்லாம் தலைவியை தொலைத்து கட்டுவதென்ற குறிக்கோள் ஒன்று மட்டும் தான்.

அவர்களின் அகராதியின் ஆத்திசூடி யாதெனில், தலைவியை எதிர்க்கும் எவரும் எங்களின் இறுக்கமான நண்பர்களே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
11. Re:...nagarmandram
posted by: hylee (kayalapattinam) on 04 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21823

ஒரு அருமையான செய்தி, நல்ல அழகான கருத்துகள். சபாஷ் துரை. வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
12. Re:...
posted by: A.J.MD.MANSOOR. UK. (london) on 04 September 2012
IP: 90.*.*.* United Kingdom | Comment Reference Number: 21837

Assalamualaikum

This all members first of all need proper council from hadhidh prophet (sal) N omer (rali)administration.

Kayalpatnam peoples voted this members for responsible work N peoples expect good work from them. So please kick off your personal problems n do some work this voted peoples.

please humble request to all members kick off yours irresponsibility movements. This peoples trust n expect from yours lot of good jobs..

We are muslim community we need unity.so i think we need to arrange get together tea n snacks party with all members and kayal VIP and Aalim ......we hope everything good in future inshaallah.... its hurt any one im really sorry....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
13. Re:...
posted by: syed omer kalami (CHENNAI) on 04 September 2012
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21841

NICE ARTICLE,IT REFLECTED LIKE CRYSTAL CLEAR MIRROR OF THE MEETING.

MY HUMBLE REQUEST TO PREZ TO JION RULLING PARTY IF IT PROLONG LIKE THIS. AFTER THAT WE CAN SEE MANY CHANGES IN MEMBERS ACTIVITIES. THEY KNOW AMMA TREATMENT. ALL TAIL WILL BE FOLDED.

THEIR IS NO WRONG IN IT.. WE CAN DO MANY GOOD DEEDS TO PEOPLE OF KPM AND UPLIFT THE TOWN AND YOU CAN ALSO MAKE YOUR DREAM, REALITY.

FOR THIS ADVICE DON"T THINK IAM AMMA PARTY.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
14. காயலிளிருந்து புலம் பெயர தயாராகுங்கள்
posted by: umar rizwan jamali (singapore) on 05 September 2012
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 21845

இஸ்லாம் ஒரு முன்மாதிரி மார்க்கம்.

தவறுகள் நிறைந்திருந்த சமூகத்தின் மத்தியில் தனித்தன்மையோடு அத்தவறுகளை கலைந்த ஒப்பற்ற மார்க்கம். அப்படிப்பட்ட தூய இஸ்லாத்தின் பாரம்பரியத்தை பேணிப் பாதுகாத்த நம் முன்னோர்களின் வாரிசுகளா இவர்கள்? அது உண்மையானால்! அந்த கண்ணியத்தை சிதைத்துவிடாதீர்கள்.

நேர்மையாலர்களிடத்தில் நல்ல வார்த்தைகளே பிறக்கும். பிரித்தாளும் சக்திகள் புரையூடிப்போயிருக்கும் இந்த காலத்தில் பிணைப்பின் பாலமாக நமதூரின் மாணிக்கங்கள் செயல்படவேண்டுமே தவிர, யாருக்காக வேண்டியோ ஏன் நமக்கிடையில் மோதல்?

இவ்வூர் நன்றாக இருந்தால் நமக்குத்தானே பெருமை. அதன் முன்னேற்றத்தில் நம் பாரம்பரியமும், பிச்சலமும் இணையுமே! உலக வாழ் காயல் தந்த முத்துக்களே, மூத்த மாணிக்கங்களே! இதற்க்குப்பின்புமா உங்களின் மௌனம்? நமதூரில் எதற்காக சங்கங்களும், அமைப்புக்களும்? அது பொழுதுபோக்குக்காக என்றால் பயனற்று போகட்டும், அல்லது அவைகளை ஒன்றினைத்தோ, உரிய முடிவெடுத்தோ ஒப்பற்ற நமதூரின் கண்ணியத்தை காப்பாற்றுங்கள். அல்லது காயலிளிருந்து புலம் பெயர தயாராகுங்கள். அவமானத்துடன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved