Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:23:26 AM
புதன் | 20 செப்டம்பர் 2017 | துல்ஹஜ் 29, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:1715:2818:2119:30
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்06:03
மறைவு18:15மறைவு18:31
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:46
உச்சி
12:11
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:3619:0019:24
அமாவசை @ 11:01
Go to Homepage
காயல் வரலாறு
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 3
#KOTWART073
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 25, 2013
மண்ணறை கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு! (பாகம்-3)
இந்த பக்கம் 3877 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முதல் பாகம் காண இங்கே சொடுக்குக
இரண்டாம் பாகம் காண இங்கே சொடுக்குக

காயல்பட்டினத்தின் மண்ணறை கல்வெட்டுகள் சம்பந்தமான இந்த பாகம் முதல் அடுத்த சில பாகங்கள் வரை, இங்கிலாந்தில் உள்ள கிரீன்விச் பல்கலைக்கழகத்தின் கட்டிட கலை மற்றும் நகர்புற படிப்புகள் துறையின் தலைவர் மேஹர்தத் சுகூஹீ மேற்கொண்ட ஆய்வுகளின் வாயிலாக வெளியான தகவல்களை காணலாம்.

இவர் 1980 களில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், 2003ம் ஆண்டு - MUSLIM ARCHITECTURE OF SOUTH INDIA - என்ற புத்தகம் வாயிலாக வெளிவந்ததது. இப்புத்தகத்தின் முக்கிய அம்சம் - தமிழகத்தில் மதுரை, காயல்பட்டினம் பகுதிகள், கேரளாவில் மலபார், கோழிக்கோடு, கொச்சி பகுதிகள், கோவா ஆகிய இடங்களில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிகளை ஆய்வு செய்தது ஆகும். இப்புத்தகத்தின் பின்னிணைப்பாக காயல்பட்டினத்தின் மண்ணறை கல்வெட்டுகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டிருந்த 14 கல்வெட்டுகளின் விபரங்களை இத்தொடரில் தொடர்ந்து நாம் காணலாம்.

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 14 கல்வெட்டுகளில் ஒரு சில கல்வெட்டுகள் சம்பந்தமான சுருக்கமான தகவல் - A TOPOGRAPHICAL LIST OF ARABIC, PERSIAN AND URDU INSCRIPTIONS IN SOUTH INDIA புத்தகம் வாயிலாக, இத்தொடரின் முதல் பாகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

(1) அப்துல்லாஹ் (அஹமத் என்வரின் மகன்) என்பவரின் மண்ணறை கல்வெட்டு வாசகம் (மறைவு: ஹிஜ்ரி 806 / கிருஸ்துவ ஆண்டு 1403-4)

நகூடா அப்துல்லாஹ் என்பவரின் மண்ணறை - சிறுபள்ளியை ஒட்டியுள்ள ஒரு அறையினுள் உள்ளது. காயல்பட்டினத்தில் காணப்பட்ட இது போன்ற மண்ணறை கல்வெட்டுகளில் இங்கு காணப்பட்ட கல்வெட்டே மிகவும் பழமை வாய்ந்ததாகும். வடிவில் இந்த கல்வெட்டு, பிற்காலங்களில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகள் போல் இருந்தாலும், இதில் உள்ள விபரங்கள் - மாறுபடுகிறது.

கல்வெட்டு பெரிய அளவில் அழிந்துள்ளது. அதனால் - இதில் உள்ள வாசகங்களை, முழுமையாக அறிய முடியவில்லை. இந்த கல்வெட்டு குறிப்பிடும் நபரின் பெயர் கூட - உறுதியானதல்ல. பிற்காலங்களில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஆன்மீக வாசகங்கள் இடம்பெற்றன; இந்த கல்வெட்டில் - எந்த ஆன்மீக வாசகங்களும் இல்லை. பிற - இக்காலத்திற்கு முற்பட்ட கல்வெட்டுகளில் உள்ளது போல், மறைந்தவர் பெயர், தேதி மட்டுமே உள்ளது.

வரி வடிவு (Script) நஸ்கீ (Naskhi) வடிவில் உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வடிவு கூர்மை (Pointed) முறையாகும் (பரவலான நேரொழுக்கான [Cursive] வடிவல்ல). குஃபிக் (Kufic) வரிவடிவின் பிரதிபலிப்பாக இது தெரிகிறது. இந்த எழுத்துவடிவம், 15ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பயன்பாட்டில் இருந்து நீங்கியது.

இந்த கல்வெட்டு - அப்துல்லாஹ் ? என்பவரின் மரணத்தை தெரிவிக்கிறது. அப்துல்லாஹ் ? - அஹ்மத் என்பவரின் மகன். அஹமத் - நகூடா நெய்னா ? என்பவரின் மகன். நகூடா நெய்னா - நகூடா ரமதான் ? என்பவரின் மகன். இவர் - ஹிஜ்ரி 806, துல்ஹஜ் 9 புதன்கிழமை (ஜூன் 18, 1404) அன்று காலமானார்.





(2) சயீத் அப்துல் மாலிக் (அஹமத் என்வரின் மகன்) என்வரின் மண்ணறை கல்வெட்டு வாசகம் (மறைவு: ஹிஜ்ரி 811 / கிருஸ்துவ ஆண்டு 1408-9)

சயீத் அப்துல் மாலிக் என்பவரின் மண்ணறையும் சிறுபள்ளியை ஒட்டியுள்ள அறையினுள் உள்ளது. எழுத்துக்கள் தேய்ந்திருந்தாலும், புரிந்துகொள்ளும் நிலையில் உள்ளது. அந்த கல்வெட்டு - சயீத் அப்துல் மாலிக் (சயீத் அஹமத் என்பவரின் மகன்; சயீத் அஹமத் - சயீத் சதல்தீன் ? என்பவரின் மகன்) என்பவரின் மரண தகவலை தருகிறது. அவர் ஹிஜ்ரி 811, ஷவ்வால் 4 புதன்கிழமை இரவு (பிப்ரவரி 20, 1409) இறந்தார் என தெரிவிக்கிறது. 8 வரிகளில் உள்ள வாசகங்களின் முதல் வரி, பொதுவாக பூவணி வேலை (Motif) அல்லது ஆன்மீக வாசகங்கள் இடம் பெரும் வளைவு (Arch) பகுதியில் இடம்பெற்றுள்ளது.







(3) சேக் அபூபக்கர் என்பவரின் மண்ணறை கல்வெட்டு வாசகம் (மறைவு: ஹிஜ்ரி 883 / கிருஸ்துவ ஆண்டு 1478-9)

சிறுபள்ளியை ஒட்டியுள்ள அறையினுள் உள்ள மூன்றாவது மண்ணறையில் உள்ள கல்வெட்டு வாசகங்கள், தலைப்பகுதியில் (Headstone) உள்ள கல்வெட்டில் உள்ளது. இந்த அறையில் அடக்கப்பட்ட கடைசி மதத்தலைவர் இவர். மேலும் தெற்கு மதிலுக்கு அடுத்தார் போல் இந்த மண்ணறை உள்ளது. கல்வெட்டில் உள்ள அரபி வாசகம், சேக் அபூபக்கர், உதுமான் அல்-காஹிரி என்பவரின் மகன் என்றும், இவர் ஹிஜ்ரி 883, ரபியுல் அவ்வல் 22 புதன்கிழமை (ஜூன் 23, 1478) மறைந்தார் என்றும் குறிப்பிடுகிறது.





[தொடரும்...]

முதல் பாகம் காண இங்கே சொடுக்குக
இரண்டாம் பாகம் காண இங்கே சொடுக்குக

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: mohamed aboobacker (kayalpatnam) on 25 December 2013
IP: 59.*.*.* India | Comment Reference Number: 32180

கொடி மர பள்ளி மையவாடிஇல் கல் வெட்டுகள் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். அங்குள்ள கல் வெட்டுகள் பற்றி தெரிந்தால் சொல்லுங்கே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
DanubeWavoo Jewellers
FaamsAKM Jewellers
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
Faams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved