இணையதள இணைபிரியாத வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
நம்நாட்டின் 67 வது சுதந்திர தினவிழா சென்றமாதம் ஆகஸ்ட் 15ஆம் நாளில் நடைபெற்றது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திய முஸ்லிம்கள் குறித்து இரு பாகங்களாக தரப்போகிறேன். இன்ஷாஅல்லாஹ்.
விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் முக்கியப் பிரமுகர்களின் பங்கு
கேரள குஞ்சாலி மரைக்காயர் 1520ல் ஷாஜஹான், ஒளரங்கசீப் 1659-1707ல் ஹைதர் அலி திப்பு சுல்தான் 1753ல், மதுரை மருதநாயகம் என்ற கான்சாஹிப், பகதூர்ஷா(டெல்லி) 1837ல் இவர்கள் தவிர வீரப்பெண்மணிகளான கேரளம் கண்ணனூர் ராணி, பேகம் ஹஜ்ரத் மஹல், பேகம்அயிஜாஸ் ரஸ_ல் போன்றோரை பற்றியும் இன்னும் பிரபலமான எல்லை காந்தி என்ற அப்துல் கஃபார்கான், ஜின்னாசாகிப், மௌலானா அபுல்கலாம் ஆசாத், சர் செய்யித் அஹ்மத் கான், முஸ்லீம்லீக் தலைவர் இஸ்மாயில் சாகிபு, கவிஞர் இக்பால், கவிஞர் கா.மு. சரீப், செய்குத் தம்பி பாவலர், அலி சகோதரர்கள், செய்யித் சுலைமான் நத்வி, ஹா.பா. தாவூத் ஷா (பத்திரிகை ஆசிரியர்), டான்ஸ்ரீடத்தோ உபயத்துல்லாஹ், தளபதி மெய்தீன், சி. அப்துல் ஹக்கீம். இவர்கள் தவிர ஷா வலியுல்லாஹ் முகத்திது திஹ்லவி மற்றும் சிராஜுத் தௌலா உட்பட இன்னும் 74 பேர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து இருப்பது ஆதாரம் காட்டும் உண்மையாகும். வ.உ.சிக்கு கப்பல் வாங்க உதவிய முஸ்லிம்,, நேதாஜிக்கு கோடி ரூபாய் கொடுத்த முஸ்லீம், செக்கிழுத்த சென்னை முஸ்லீம் குறித்தும், சிப்பாய் கலவரம், கிலாபத் கிளர்ச்சி, கிலாபத் கிளர்ச்சியில் ஈடுபட்ட பெண்கள், கேரள மாப்பிள்ளைமார் கிளர்ச்சி மற்றும் காந்திஜி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், அன்னிய துணி புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல், ஆகஸ்ட் புரட்சி, சத்தியாகிரகம் போன்ற போராட்டத்தில் காந்தியின் பின்னணியில் ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் கலந்து கொண்டு உயிர்த்தியாகம் செய்தனர். அரபி மத்ரஸா மூலமும், தமிழ், உருது, மலையாள பத்திரிகை மூலமும் விடுதலை வேட்கை கருத்தை புகட்டிய செய்திகள் இதில் தொகுத்து வழங்கப்படும்.
சுதந்திரப் போராட்டத்தில் காயலர்களின் பங்கு
குஞ்சாலி மரைக்காயருக்கு உதவிய காயல்வாசி யார்? அதேபோல் பத்திரிகைத்துறை மூலம் விடுதலைக்காக பாடுபட்டு சிறை சென்ற காயல்வாசி யார் என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம் அல்லவா?
கொரில்லாப் போரில் முஸ்லிம்கள்
கொரில்லாப் போரில் வெளிநாடுவாழ் முஸ்லீம்கள், இந்திய ரௌலட் சட்டம் எதிர்ப்பணி, ஜாலியன் வாலாபாக் படுகொலை, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் கலந்து கொண்ட ஊர்களின், மக்கள்கள் விபரம் தரப்படும்.
கடல் போரில் முன்னோடி கேரளம் குஞ்சாலி மரைக்காயர் மாவீரர்
இந்திய நாட்டுக்குள் வர்த்தகம் செய்வதாக நுழைந்த முதல் வெளிநாட்டவர் போர்த்துக்கீசியர், அதன்பின் டச்சுக்காரர், அவர்களுக்குப் பின் பிரிட்டீஸ்காரர்கள் இறுதியாக பிரெஞ்சுக் காரர்கள் வந்தார்கள். அவர்கள் நம்மை ஆதிக்கம் செய்யத் துவங்கியபோது விடுதலை வேட்கையை நாம் துவங்க வேண்டியதாயிற்று. கேரளம் மற்றும் தமிழக கடற்கரை ஓரமாக கப்பல்கள் பலவற்றில் வந்து கடலோரமாக முஸ்லிம் மக்களுக்கு அரணாக உதவியவர் கேரளம் வடபகுதியிலுள்ள கோழிக்கோடு 20 கி.மீட்டர் தூரத்திலுள்ள ஊர். 16 ஆம் நூற்றாண்டில் சாமூரி மன்னர்ஆட்சி செய்து வந்தார். 16 ஆம் நூற்றாண்டில்; வாஸ்கோடகாமா கேரளக் கடற்கரைக்கு வந்து இறங்கினார்.1520 ல் குஞ்சாலி மரைக்காயர் என்ற வீரர் போர்த்துக்கீயரை முறியடித்து வெற்றிகண்டார். பின்னர் 1526 ல் கப்பல்படை மூலம் கொச்சியின் அருகிலுள்ள இடப்பள்ளியில் சாமூரி மன்னர் ஆட்சி நடந்தபோது சீன மலையாள வணிகர்களுக்கு இன்னல் விளைவித்த போர்த்துக்கீயரை கப்பல் மூலம் கொழும்புவரை துரத்தி வெற்றிக் கண்டார் முதலாம் குஞ்சாலி மரைக்காயர்.
காயல்பட்டணம் கீழக்கரை கடற்பகுதியில் கொள்ளையிட வந்த போர்த்துக்கீயரை மீண்டும் துரத்தி வெற்றிக் கண்டவர் குஞ்சாலி மரைக்காயர். இவர்களுக்கு உதவியாக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காயல்பட்டினம் சதக் மரைக்காயரும், நாகூர் பாதுஷா சாகுல் ஹமீது ஒலியுல்லாஹ் 401 பக்கீர்களுடன் தமிழக கடற்பகுதியைக் காக்க 11 கப்பலுடன் முதலாம் குஞ்சாலி மரைக்காயர் உதவினார். இலங்கைவரை சென்று போரிட்டு அங்கு வீரமரணம் அடைந்தார்.
இரண்டாவது குஞ்சாலி மரைக்காயர்
கண்ணனூர் கடற்பகுதியில் புகுந்த போர்த்துக்கீயர் தாக்கியபோது பொன்னானியில் கோட்டை கட்டியிருந்த அவர் அங்கேயே மரணமடைந்தார்.
மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர்
1592ல் சாமூரி மன்னர் போர்த்துக்கீயருடன் இணைந்து கொண்டபோது பொன்னானியிலுள்ள கப்பல் வர்த்தபண்டக சாலையை உடைத்து போர்த்துக்கீயர் மூன்றாவது குஞ்சாலி மரைக்காயரை சிறைபிடித்து கோவா அனுப்பினார். அங்குவைத்து அவர் தலை வெட்டப்பட்டு வீர மரணமடைந்தார். மூன்றாம் குஞ்சாலி மரைக்காயரிடம் 40 கப்பல்கள் வர்த்தகம் மற்றும் போர் பாதுகாப்புக்கும் அவர் வைத்திருந்தார். 16ஆம் நூற்றாண்டில் முதல் விடுதலைப் போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயரின் வீரம் போற்றத்தக்கது. இவருக்குப்பின் இவரின் சகோதரர் அஹ்மது குஞ்சாலி மரைக்காயர் நான்காவது குஞ்சாலி மரைக்காயர் ஆவார். சுதந்திர இந்தியாவின் போர்க்கப்பல் ஒன்றுக்கு குஞ்சாலி என்று பெயரிட்டிருந்தார்கள்.
மொகலாய சக்கரவர்த்தி ஷாஜஹான், ஒளரங்கசீப்
ஜஹாங்கீரின் மகன் ஷாஜஹான். இவரின் மகன் ஒளரங்கசீப் காலத்தில் பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவில் 1632ல் புகுந்த போது அவரை எதிhக்;கலானார். ஒளரங்கசீப் காலத்தில் ஒரு குழப்பம் ஆரம்பமானது. ஹிந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா, போர்த்துக்கீசியர் இந்தியா, இங்கிலீஸ் இந்தியா, பிரெஞ்ச் இந்தியா என பலபிரிவு ஏற்பட்டது. ஷாஜஹான் 1605 முதல் 1627 வரை இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டார். ஒளரங்கசீப் போர்த்துக்கீயரையும், பிரஞ்சுக்காரர்களையும் இந்தியாவிலிருந்து விரட்ட பாடுபட்ட விடுதலை விரும்பி மன்னராவார்.
திப்பு சுல்தானின் வீரம்
ஹைதர் அலி மகன் திப்புசுல்தான் 1753ல் மைசூர் தேவனஹள்ளியில் பிறந்தார். 1761ல் மைசூர்மன்னரானார். ஹைதர் அலி 1752ல் பிரஞ்சு அரசு மூலம் ராணுவ தந்திரங்களை கற்ற ராஜதந்திரியாவார். ஹைதர் என்றாலே வெற்றி சிங்கம் என்று பொருள் படும். திப்பு (மைசூர் புலி) என்று கூறப்பட்டால் பிரிட்டீஸாரின் உடல் நடுங்கும். தந்தை ஹைதர் அலியிடம் 1767 முதல் 1769 வரை போரில் கலந்து கொண்டார். திப்பு கூறினார்: இந்தியாவை விட்டு பிரிட்டீஸாரை விரட்டும் வரை பஞ்சு மெத்தையில் படுத்துறங்க மாட்டேன் என்று கூறி வந்தார். பூரண மதுவிலக்கு திட்டத்தை அமல்படுத்தினார். இந்து முஸ்லீம் ஆலயங்களுக்கு மான்யம் வழங்கினார். அவர் ஆட்சி அமைந்த அனைத்து ஊர்களிலும் நூலகம் அமைக்க உதவினார். அவரின் அரண்மனையில் 2000 நூல்கள் இருந்தன. அவர் படித்த நூல்களில் ராஜமுத்திரையிட்டார். கையெழுத்துப் பிரதிகளை அச்சுப்பிரதியாக்க உதவினார். திப்பு போர்வீரர் மட்டுமல்ல. கவிஞரும் கூட. உருது மொழிகளில் நூல்கள் வெளியிட ஊக்குவித்தார். அரபி, உருது, கன்னடம், பிரெஞ்ச், ஆங்கிலம் பாரசீக மொழிகளைக் கற்றார். 1794ல் ராணுவ செய்திகளுக்கு என ராணுவத்தினர் மட்டும் அறிந்து கொள்ள பத்திரிகையை உருவாக்கினார். மதுவிலக்கு அமல் நடத்த பனைமரம், தென்னை மரங்களை வெட்டும்படி அறிவித்த செய்தி காந்தியின் ஹரிஜன் பத்திரிகையில் வெளியானது. 1780 முதல் 84 வரை திப்புவின் ராணுவத்தில் 88 ஆயிரம் வீரர்கள் இருந்தார்கள். போர்க்கப்பல் 20 இருந்தது. 1796 ல் 40 கப்பலில் 10 ஆயிரத்து 520 வீரர்களும் 72 பீரங்கிகளும் 18 முதல் 30 பவுண்ட் எடையுள்ள குண்டுகள் செலுத்தும் திறன் இருந்தது. ஒவ்வொரு கப்பலிலும் பீரங்கிகள் இருந்தன. இரண்டாவது கப்பலில் 62 பீரங்கிகள் மூன்றாவது கப்பலில் 46 பீரங்கிகள் கையெறி குண்டுகள் பலவும் இருந்தன. பிரெஞ்சு நிபுணர்களுடன் கலந்து கொண்டு 1797ல் போர்க்கப்பல், வணிகக்கப்பல் கட்ட திட்டமிட்டிருந்தார். முதன்முதலில் ராக்கெட் குண்டுகளை ஏவி எதிரியை கதிகலங்கச் செய்தார். பல அரசர்களுக்கு எழுதிய 29 கடிதங்கள் சிருங்கேரி மடத்தில் பாதுகாக்கப்படுகிறதாம். திப்பு சுல்தானுக்கு அந்தபுரத்தில் சதி செய்யப்பட்ட நிலையில் போரிட்டு கொண்டோ இருந்தவரை கொல்லப்பட்டார். 1799 மே 4 ல் இந்த வீரர் திப்பு – சதிகார கும்பலால் கொல்லப்பட்டு கோட்டைக்குள் வீரமரணமடைந்தார். விடுதலைப் போரில் திப்பு சுல்தானின் பங்கு பெரிதும் பாராட்டப்படுகிறது.
மருதநாயகம் என்ற கான்சாஹிபு மாவீரர்
1725ல் சிவகங்கை அருகிலுள்ள பனையூரில் தையல் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். மருதநாயகம் பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்று கான்சாஹிபாக மாறினார். குதிரை சவாரி, வாள்வீச்சு, பீரங்கி துப்பாக்கி சுடும் பயிற்சிகளை ஆங்கில, போர்த்துக்கீசியர், பிரெஞ்சு ஐரோப்பியரிடமிருந்து பணி செய்து கற்றார். தெற்கில் நடந்த அனைத்து போர்களிலும் பாளையத்தார்களை வென்றதால் கான்சாஹிபு மதுரைக்கு ஆளுனராக ஆங்கிலக் கம்பெனிக்காரார்கள் நியமித்தனர். ஆனால் கான்சாஹிபுக்கு இந்தப் பதவி கொடுக்கக்கூடாது என்று ஆற்காடு நவாப் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆங்கில படைக்கு எதிர்படையை மதுரையில் ஆரம்பித்தார். ஹைதர் அலியின் உதவியால் மதுரை கோட்டையை கைப்பற்றி ஆங்கிலக் கொடியை இறக்கி தனது குதிரைமுரசு கொடியை மதுரைகோட்டையில் ஏற்றினார். இதனால் சினம் கொண்ட ஆங்கிலேயரின் பகைவராக கான்சாகிப் கருதப்பட்டார். 1763 ல் ஆங்கிலப்படை கான்சாஹிபை கைது செய்ய வந்தனர். ஆங்கிலப் படையை விரட்டி வென்றார். கான்சாஹிப் ஆட்சியில் மதுரையில் பல சீர்திருத்தங்களை செய்தார். மதுரையில் நெசவு தொழிலில் ஈடுபட்ட சௌராஷ்டிர இனமக்களுக்கு இத்தொழில் செய்ய முன்பணம் உதவி செய்தார். சமயமுறையில் நீதி வழங்கியதால் மக்களின் மதிப்பை பெற்றார். மாசா என்ற போர்த்துக்கீசியரின் பெண்ணை கான்சாஹிப் மணந்தார். அவர் திருவிதாங்கோடுபதியை சேர்ந்தவர். ஆண்குழந்தைப் பிறந்து சுல்தான் எனப் பெயரிடப்பட்டது.
காட்டிக் கொடுத்த துரோகி மூவர்
ரமலான் மாதம் கான்சாஹிப் கோட்டையில் தொழுது கொண்டிருக்கும்போது காவலாளி மார்ச்சந்த் , சீனிவாசா, பாபாசாஹிப் மூவரும் அவரைப் பிடித்துக் கட்டி ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தனர். இந்த மூன்று துரோகிகளாலும் கான்சாஹிப் பிடிபட்டார். 1764ல் மதுரை சம்மட்டிப்புரத்தில் அக்டோபர் 5ல் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டார்கள்.
கான்சாஹிப் உடலை துண்டுதுண்டாக வெட்டிய ஆங்கிலேயர்கள்
மூன்றுநாள் கழித்து அவரின் உடலை ஆங்கிலேயர்கள் பலதுண்டுகளாக வெட்டினர். தலையை திருச்சியிலும், கைகால்களை திருநெல்வேலி, திண்டுக்கல், நத்தம் ஊரிலும் புதைத்தனர். தலை, கை, கால் இல்லாத உடலை மதுரை சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். மதுரையில் கான்சாஹிப் வாழ்ந்த மாளிகையை ஆங்கிலேயர் தகர்த்து விட்டனர். அது மேடாக இருந்ததால் மேட்டுத் தெரு என்று ஆனது. 1808 ல் ஷேக் இமாம் என்ற பெரியார் சம்மட்டிபுரத்தில் கான்சாஹிப் பள்ளிவாசலை கட்டினார். இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட மாபெரும் வீரர் கான்சாஹிப் அவர்களை இக்கால மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதுவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திலும், ஜனவரி 26 குடியரசு தினத்திலும் இந்த விடுதலைக்கு பாடுபட்ட வீர முஸ்லிம்களை இனியாவது நினைவு கொள்ள வேண்டும். இந்திய பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்திலும் இந்த வீரர்களின் வாழ்க்கை பாடங்கள் இடம்பெற நாம் முயற்சிக்க வேண்டும்.
குறிப்பு:
மேற்கண்ட செய்தியை தமிழக முன்னணி பத்திரிகையின் நிருபர் எழுதிய இந்நூல் உடனடி படிக்க விரும்பினால் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி நூலகத்தில் புத்தகவரிசை எண்: ர.சி.ச. நம்பர் 30486 விபரம் கூறி என்னைப் போல நீங்களும் எடுத்துப் படிக்கலாம். இதன் மொத்த பக்கம் 1112.
இன்ஷாஅல்லாஹ் வரும் ... |