Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:23:13 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 105
#KOTWEM105
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 17, 2013
எங்கே ஒற்றுமை? எங்கே சகோதரத்துவம்?

இந்த பக்கம் 4382 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்...

ஒரு குடும்பத்தில் பரஸ்பரம் அன்பும், பண்பும், பந்தமும், பாசமும் நிலவினால் அந்தக் குடும்பம் குதூகலிக்கும். ஓர் ஊரிலுள்ள மக்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் அண்ணன், தம்பிகளாக அன்பைப் பொழிந்து, சகோதர பாசத்துடன் வாழ்ந்தால் அந்த ஊர் உருப்படும்.

ஒரு சமுதாயத்தில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நீக்கமற நிறைந்திருந்தால் அந்தச் சமுதாயம் – அந்த உம்மத் உய்வடையும். வெற்றி பெறும். ஆம்! இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மையே சகோதரத்துவம்தான்.

நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், இஸ்லாத்தின் பக்கம் ஏனையோர் ஈர்க்கப்படுவதற்கும் தடையாக இருப்பது நமக்கிடையேயுள்ள பிளவும், பிரிவுகளுமே!

இன்றைய நமது சமூகத்தின் நிலையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். சிறிய அளவிலேனும் ஆய்வு செய்து பாருங்கள். சமுதாயக் கண்மணிகள் பரஸ்பரம் தமக்குள் புழுதி வாரித் தூற்றுவதும், ஏசுவதும், பேசுவதும், ஏகடியம் பேசி எள்ளி நகையாடுவதும், விமர்சனங்கள் என்ற பெயரில் விளாசித் தள்ளுவதும், சவால்கள் விடுவதுமாக தங்களது நேரங்களை வீணடிக்கிறார்கள்.

இதுதான் இஸ்லாம் காட்டித் தந்த வழியா? இதைத்தான் இறைவேதம் இயம்புகின்றதா? இப்படித்தான் இறைத்தூதர் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்களா?

சீமான் நபி (ஸல்) அவர்களின் செயல்பாட்டைப் பாருங்கள். மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதீனா வந்தவுடன் அங்கே ஓர் இஸ்லாமிய எழுச்சிக்கான அடித்தளம் அமைத்தபோது இரண்டு விடயங்களுக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

ஒன்று - மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவம்.

இரண்டு - சமூகங்களுக்கிடையில் ஒற்றும.

பரம்பரை பரம்பரையாக பகைமை பாராட்டிக் கொண்டிருந்த அவ்ஸ்-கஸ்ரஜ் கோத்திரங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள். காலாகாலமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களை சகோதரர்களாக மாற்றிக் காட்டினார்கள்.

ஆனால் நாமோ...? இன்றைய நமது செயல்பாடுகள் மீண்டும் ஜாஹிலிய்யா என்னும் அஞ்ஞான காலகட்டத்தை நோக்கி நாம் திரும்பிக் கொண்டிருக்கின்றோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.

பெரிய, சிறிய பிரச்னைகளுக்காக பரஸ்பரம் சண்டையிட்டுக்கொள்கின்றோம். வழியில் வந்த பிரச்னைகளுக்கெல்லாம் வசை மாறிப் பொழிகிறோம். தெருவில் தென்படும் பிரச்னைகளுக்கெல்லாம் திசை மாறிப் போகிறோம்.

ஒற்றுமை

திருக்குர்ஆனைப் புரட்டுங்கள். முஸ்லிம் உம்மத் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அது தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. நம்பிக்கையாளர்கள் தமக்கிடையே பரஸ்பரம் ஆழமான சகோரத்துவ உறவைப் பேண வேண்டும் என்று அது ஆணையிடுகின்றது. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே. ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 49 : 10)

எந்நிலையிலும் நீங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று இன்னொரு வசனம் இப்படி இயம்புகின்றது:

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். (அல்குர்ஆன் 3 : 103)

கருத்துவேறுபாடுகளினால் நீங்கள் பிளந்துபட்டு நின்றால் உங்களிடம் கோழைத்தனம் வந்து விடும், உங்கள் பலமும் குன்றி விடும் என்கிறது மற்றொரு மறைவசனம்:

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள். உங்கள் பலம் குன்றி விடும். (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் நிலைகுலையாமல் இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிலைகுலையா பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8 : 46)

முஃமின்கள் தங்களுக்கிடையே இரக்கம் மிக்கவர்களாகவும், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது இன்னொரு வசனம்: முஹம்மது (ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். (அல்குர்ஆன் 48 : 29)

அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 5 : 54)

ஆனால் இன்று இதற்கு நேர் மாறாக நடக்கிறது. காஃபிர்களிடம் கனிவுடன் நடந்து கொள்கிறார்கள். இறைநம்பிக்கையாளர்களுடன் இறுக்கமாக இருக்கிறார்கள்.

இன்று முஸ்லிம்கள் மேலே கூறப்பட்ட அனைத்து இஸ்லாமிய விழுமியங்களையும் விழுங்கிவிட்டு - புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையின்மையில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் உம்மத்திற்கு இன்று உலகளவில் ஏற்பட்டிருக்கும் இன்னல்களை, ஆபத்துகளைக் கண்ட பிறகும் கூட, ஒற்றுமை ஒன்றுதான் தீர்வு என்ற நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டு விட்ட நிலையிலும் கூட - ஒற்றுமைக்கு எதிராகவே இன்றும் நம்மில் பலர் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரிவினைக்கான காரணம்

நம் சமூகத்திலுள்ள பிரிவினைக்கான காரணங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது அமல்கள் செய்யும் விடயத்தில் உள்ள கருத்துவேறுபாடுகள். அமல்கள் விடயத்திலுள்ள கருத்துவேறுபாடுகள் இன்று தோன்றியவையா? நேற்று தோன்றியவையா? நிச்சயமாக இல்லை. பண்டு தொட்டு, பழைய காலம் முதலே இந்தக் கருத்துவேறுபாடுகள் நிலை நின்று வந்திருக்கின்றன.

நபித்தோழர்களிடத்திலும் இந்தக் கருத்துவேறுபாடுகள் இருந்துள்ளன. அவர்களுக்குப் பின் வந்த தாபிஈன்களிடத்திலும், தபுஃ தாபிஈன்களிடத்திலும் கருத்து வேற்றுமைகள் இருந்துள்ளன.

ஆனால் அவர்கள் அணி அணியாகப் பிரிந்திடவில்லை. சில்லறைக் காசாகச் சிதறிடவில்லை. மாறாக, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருந்தார்கள். கண்ணீயமாக நடந்து கொண்டார்கள். எதிரிகளை ஓரணியில் நின்று சந்தித்தார்கள்.

கருணை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வைப் பார்ப்போம். ஒரு பயணத்தில் இரண்டு நபித்தோழர்களுக்கு தொழும் நேரம் வந்துவிட்டது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே தயம்மும் செய்து தொழுதார்கள்.

ஆனால் அவர்கள் சிறிது தூரம் சென்றவுடன் தண்ணீர் கிடைத்தது. உடனே ஒரு நபித்தோழர் தண்ணீரில் ஒளூ செய்து மீண்டும் தொழ வேண்டும் என்றார்.

இரண்டாமவரோ தொழத் தேவையில்லை என்று கூறினார். முன்னவர் மட்டும் மீண்டும் தொழுதார். இரண்டாமவர் மீட்டுத் தொழவில்லை. விவகாரம் அண்ணலாரிடம் சென்றது. இருவருமாக தங்களது கருத்துவேறுபாட்டை நபி (ஸல்) அவர்கள் முன் எடுத்து வைத்தனர். வாதங்களைக் கேட்டு முடித்ததும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாமவரிடம் கூறினார்கள்: “நீர் செய்தது எனது வழிமுறை.”

முன்னவரிடம் கூறினார்கள்: “உமக்கு இரட்டை கூலி கிடைக்கும்.”

இஸ்லாம் வெறுக்கும் பகைமை

சமூகத்தைப் பிரித்து பகைமை பாராட்டி பலப் பல குழுக்களாக மாறி செயல்படுவதும், அதற்காக மக்களிடம் கருத்துவேறுபாடுகளை மீண்டும் மீண்டும் சொல்லி பிரிவினைக்கு, பகைமைக்கு வித்திடுவதும் விண்மறையோ, நன்னபியோ, நனி சிறந்த முன்னோர்களோ காட்டித் தராத பாதை. அது அழியாத இஸ்லாத்தின் அனுமதியில்லாத செயல்!

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

அல்லாஹ் மனிதனுக்கு பகுத்தறிவு என்ற ஓர் அருட்கொடையை அருளியுள்ளான். இதன் மூலம் மனிதன் சிந்திக்கின்றான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை. பத்து பேர் இருந்தால் பத்து சிந்தனைகள் உதிக்கும். இதுதான் மனித இயல்பு.

எனவே ஒவ்வொருவரும் சிந்திப்பதைப் பொறுத்து கருத்துவேறூபாடுகள் ஏற்படுவது இயல்பானதே. இதனை நாம் உட்கொள்ள வேண்டும். பத்து பேர் இருந்தால் பத்து கருத்துகள் இருக்கத்தான் செய்யும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.

அங்கே நமது கருத்தைக் கூறலாம். வலியுறுத்தலாம். தவறுகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் அருமை நபித்தோழர்களின் அழகிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அங்கே ஒவ்வொரு தனி மனிதனின் கண்ணியமும் காக்கப்பட வேண்டும். அந்தக் கூட்டத்தைப் பிரித்து பிளவுபடுத்தி விடக் கூடாது.

நபித்தோழர்களுக்கிடையில் கருத்துவேறுபாடுகள் இருந்தன. உத்தம நபித்தோழர்கள் ஒரே கருத்தில் இருந்திடவில்லை. பல விடயங்களில் கருத்து மாறு பட்டார்கள். ஆனால் அணுகுமுறையில் மாற்றம் காணவில்லை. அதே அணுகுமுறை. அதே கண்ணியம். அதே கட்டுப்பாடு. பிரிந்து, பிளவு பட்டு நிற்கவில்லை. அதற்கு நாம் நிறைய உதாரணங்களைக் கூறலாம்.

அகழ் யுத்தம் முடிந்த நிலையில் தங்கள் தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள் இவ்வாறு: “விரைவாகப் புறப்படுங்கள். அனைவரும் பனூ குரைளா கோத்திரத்தாரின் கோட்டையை முற்றுகையிடுங்கள். அங்கே சென்று அஸர் தொழுகையை நிறைவேற்றுங்கள்.”

அண்ணலாரின் ஆணையை ஆழமாகப் படித்துக் கொள்ளுங்கள். இனி நபித்தோழர்களிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளுக்கு வருவோம். நபித்தோழர்கள் செல்லும் வழியில் அஸருடைய வக்த் (நேரம்) வந்தது. தொழுகைக்கு வக்த் எனும் நேரத்தைக் கடைப்பிடிப்பது மிக அவசியம் என்பதால் அஸர் நேரம் கடந்து விடும் என்று சிலர் வழியிலேயே அஸரைத் தொழுதார்கள்.

இல்லை... அல்லாஹ்வின் தூதரின் ஆணைக்கு அப்படியே அட்டியின்றி அடி பணிய வேண்டும். எனவே பனூகுரைளா கோட்டையை அடைந்த பிறகுதான் அஸ்ர் தொழ வேண்டும் என்பது இன்னொரு தரப்பாரின் வாதம். அந்தக் கருத்தைச் சரி கண்டோர் பனூகுரைளா கோட்டையை அடைந்த பிறகுதான் அஸ்ர் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

இந்த விவகாரமும் அண்ணலாரிடம் சென்றது. அவர்கள் யாரையும் கடிந்து கொள்ளவில்லை. எந்தத் தரப்பாரையும் குறை காணவில்லை. அதாவது இரண்டையும் சரி கண்டார்கள்.

அபூபக்கர் (ரலி) - உமர் (ரலி)

பத்ருப் போர் முடிந்து கைதிகளை என்ன செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் கைதிகளை பிணைத்தொகை வாங்கி விடுதலை செய்யலாம் என்றார். உமர் (ரலி) அவர்களோ அனைவரையும் கொன்று விட வேண்டும் என்றார். இருவருடைய கருத்துகளையும் இரு நபிமார்களின் பெயரைக் கூறி அவர்களின் கருத்தைப் போன்றது என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் இருவரையும் பாராட்டினார்கள்.

பல விடயங்களில் இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் முதல் கலீஃபாவைத் தேர்ந்தெடுக்க அபூபக்கர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் பெயரை முன்மொழிந்தார்கள். இதனைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“அபூபக்கர் போன்ற மகான்கள் அடங்கிய சமூகத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்பதை விட எந்தக் காரணமும் இல்லாமல் உமருடைய தலை வெட்டப்படுவதே சிறந்தது!”

அபூபக்கர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆன பிறகு மூன்று விடயங்களில் உமர் (ரலி) அவர்களுக்கு கருத்துவேறுபாடு உண்டானது. அவைகளாவன:

1. ஜகாத் தரமாட்டேன் என்று கூறியவர்களிடம் போர் தொடுப்பது.

2. காலித் பின் வலீதை படைத்தளபதியாக நியமித்தது.

3. போரில் கிடைத்த பொருட்களைப் பங்கு வைப்பது.

அபூபக்கர் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது உமரை அழைத்து இரண்டாவதும், மூன்றாவதுமான விடயங்களில் இப்பொழுது உங்களது கருத்து என்ன என்று கேட்டார். ஆனால் உமர் (ரலி) அவர்கள் தனது கருத்து என்னவோ அதில் உறுதியாக இருந்தார். இப்படிப்பட்ட உறுதி மிக்க தலைவர்தான் இப்போதைய தேவை என்பதை உணர்ந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் உடனே இரண்டாவது கலீஃபாவாக உமரைத் தேர்ந்தெடுக்கும்படி அறிவித்தார்.

உமர் (ரலி) - காலித் பின் வலீத் (ரலி)

உமர் (ரலி) அவர்கள் இரண்டாவது கலீஃபாவாகப் பொறுப்பேற்றதும் காலித் பின் வலீதை (ரலி) படைத் தளபதி பொறுப்பிலிருந்து நீக்கினார். “முஸ்லிம்களுக்கும், நாட்டிற்கும் அது நல்லது என்றால் நான் அதற்கு கட்டுப்படுகிறேன்” என்று கூறி காலித் பின் வலீத் (ரலி), அபூஉபைதாவின் (ரலி) கீழ் சாதாரண வீரராகப் பணியாற்றினார். இது காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தலைமைத்துவத்தின் மேல் வைத்திருந்த மதிப்பையும், அவர்களின் பெருந்தன்மையையும், தன்னடக்கத்தையும் காட்டுகிறது.

காட்சி மாறுகிறது, உமர் (ரலி) அவர்கள் மரணப் படுக்கையில் இருக்கும்போது கூறினார்: “காலித் பின் வலீத் மரணித்திருக்காவிட்டால் அவரையே அடுத்த கலீஃபாவாக நியமிக்க நான் உத்தரவிட்டிருப்பேன். அல்லாஹ் என்னிடம் முஹம்மதுடைய உம்மத்திற்கு யாரைப் பொறுப்பு ஏற்படுத்தினாய் என்று கேட்டால் நான் அல்லாஹ்வின் வாளாகிய காலித் பின் வலீத் என்று கூறியிருப்பேன். ஏனெனில் காஃபிர்களுக்கு எதிராக அல்லாஹ் ஏற்படுத்திய வாள் காலித் பின் வலீத் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கின்றேன்.”

இது உமர் (ரலி) அவர்கள் தங்கள் சக தோழர்கள் மேல் வைத்திருந்த மதிப்பையும், பெருந்தன்மையையும் காட்டுகிறது.

இமாம்கள்

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைச் சந்திக்க எகிப்திலிருந்து ஒரு அறிஞர் வந்திருந்தார். அப்போது இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தங்களது நெற்றியில் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்த அவ்வறிஞர், “ஏன் உங்களுக்கு இவ்வாறு வியர்த்து வழிகின்றது?” என்று கேட்டார். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள், “நான் இமாம் அபூஹனீஃபா அவர்களுடன் பல விடயங்கள் குறித்து விவாதம் செய்து விட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு, “அவர் உண்மையிலேயே ஒரு நல்ல மார்க்க அறிஞர்தான்!” என்று அவரைப் பாராட்டினார்.

இன்று நமது நாட்டில் விவாதம் செய்யும் இரு கருத்துடைய அறிஞர்கள் இவ்வாறு பாராட்டிக்கொள்வார்களா? இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப் பற்றிக் கூறுகிறார்: “அறிஞர்களில் நட்சத்திரம் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.”

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைப் பற்றி இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:

“ஃபிக்ஹு சட்டங்களின் தெளிவு வேண்டும் என்றால் இமாம் அபூஹனீஃபாதான் மக்களுக்கு உதவ முடியும்.”

இமாம் அபூஹனீஃபா (ரஹ்) அவர்களைச் சந்திக்கச் சென்ற இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ஃபஜ்ருடைய தொழுகையில் குனூத் ஓதவில்லை என்கிறது இன்னொரு நிகழ்வு.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடம் அவருடைய மகன் அப்துல்லாஹ் வினவினார்: “தங்கள் பிரார்த்தனையில் எப்போதும் ஷாஃபிஈ அவர்களையும் சேர்த்துக்கொள்கிறீர்களே... யார் அந்த ஷாஃபிஈ?”

இமாம் அஹமது (ரஹ்) அவர்கள் கூறினார்: “மகனே ஷாஃபிஈ இமாம் அவர்கள் முஸ்லிம் உலகிற்கு சூரியனாகவும், மக்களுக்கு நன்மையின் பிதாவாகவும் வாழ்ந்தவர்கள்.”

இமாம்களுக்கிடையில் உள்ள கண்ணியமான உறவைப் பற்றி நாம் மேலே பார்த்தோம். நமது நாட்டில் உள்ள பல கருத்துகளையுடைய அறிஞர்களும் இமாம்கள் எவ்வாறு தங்களுக்குள் கண்ணியமாக நடந்து கொண்டார்களோ அதே போல் நடந்து கொண்டால் சமுதாயம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும்?

ஒற்றுமைக்குண்டான வழிகள்

நம்பிக்கையாளர்களுக்கு ஒன்று படுவதற்கு ஏராளம் வழிகள் இருக்கின்றன.

ஒரே இறைவன் - அல்லாஹ்

ஒரே நம்பிக்கை - லாஇலாஹ இல்லல்லாஹ்

ஒரே வேதம் - அல்குர்ஆன்

ஒரே தலைவர் - நபி (ஸல்)

ஒரே கிப்லா - கஅபத்துல்லாஹ்

ஒற்றுமைக்கான முக்கியத்துவம்

நாம் பிரிந்து வாழ்வதால் நமது சக்தி பலவீனமடைந்துள்ளது.

எதிரியின் சக்தி பலப்பட்டு அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளார்கள். ஆகையால் நாம் பிரிவினைகளைக் களைந்து ஓன்றுபட வேண்டும்.

திருக்குர்ஆன் கூறுகின்றது:

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டு பண்ணிக்கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 3:105)

மனிதர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமை

வலுவான தனி மனித உறவுகளும், சகோதரத்துவமும் பலப்பட்ட சமூக வாழ்க்கையைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. சத்திய விசுவாசிகள் பரஸ்பரம் சகோதரத்துவம் பேண வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 49 : 10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“உங்களில் ஒருவரை நேசிக்காதவரை நீங்கள் நம்பிக்கையாளராக முடியாது. நம்பிக்கையாளராகாதவரை சுவனத்தில் நுழைய முடியாது.” அல்லாஹ்விற்காக நேசிப்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்.

1. அல்லாஹ்வின் அன்பு

ஹதீஸுல் குத்ஸீ ஒன்றில் அல்லாஹ் கூறுகின்றான்: “என்னை முன்னிறுத்தி பரஸ்பரம் அன்பு செலுத்துபவர்களூக்கும், சந்திப்பவர்களுக்கும், செலவு செய்பவர்களுக்கும் என்னுடைய அன்பு கிடைக்கும்.”

2. அல்லாஹ்வின் நிழல்

கியாமத் நாளில் அல்லாஹ் கூறுவான்: “என்னுடைய மகத்துவங்களை முன்னிறுத்தி பரஸ்பரம் அன்பு செலுத்தியவர்கள் எங்கே? இன்று நான் அவர்களுக்கு நிழல் தருவேன் - என்னுடைய நிழல் இல்லாமல் வேறு நிழல் இல்லாத இந்நாளில்!”

பந்தமும் பாசமும் நிலைநிறுத்துவது

பரஸ்பரம் அன்பு செலுத்துவது எவ்வளவு முக்கியமானது என்றும், சுவனத்தில் பிரவேசிக்க நாம் சக மனிதர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் நாம் புரிந்து கொண்டோம். இஸ்லாம் வலியுறுத்தக்கூடிய - நபி (ஸல்) அவர்கள் கட்டமைத்தது போன்ற ஒரு சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் நம்மிடம் சில மாற்றங்களை, சில பண்புகளை உருவாக்க வேண்டும்.

1. அழகிய குணம்

தீன் என்றால் அழகிய குணத்தை உள்வாங்கியது என்று பொருள். அந்த தீனை உட்கொண்டுள்ள நாம் அழகிய குணங்களை வெளிப்படுத்த வேண்டும் - முஸ்லிம் தலைவர்களிடமும், முஸ்லிம் உம்மத்திடமும்.

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் என்பது நன்மையை நாடுவது” என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: “யாருக்கு?” நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நாம் நமது உரிமைகள் பாதூகாக்கப்பட வேண்டும் என்றும், நமது முன்னேற்றத்திற்கான பாதை ஏற்பட வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றோம். இந்நிலை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். அப்படி ஆசைப்பட்டால்தான் நாம் உண்மையான முஃமின்களாக ஆக முடியும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை மேலே பார்த்தோம்.

“உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

2. அடுத்தவருக்கு முன்னுரிமை

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் கடும் பசியோடு ஒரு மனிதர் வந்தார். அவரை அபூதல்ஹா (ரலி) அவர்களுடன் விருந்தாளியாக செல்ல நபி (ஸல்) அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

அபூதல்ஹாவுடைய வீட்டில் ஒருவருக்கு மட்டுமே உண்ணும் அளவு உணவு இருந்தது. உடனே அபூதல்ஹா (ரலி) தன் குழந்தைகளைத் தூங்கச் செய்தார். விருந்தாளியுடன் சாப்பிட அமரும்போது விளக்கை அணைத்து விட்டார். அனைவரும் சாப்பிடுவது போல் விருந்தாளி நினைத்து வயிறாற சாப்பிட்டார். விருந்தாளியின் பசி அடங்கியது. இந்த நபித்தோழரைப் பாராட்டி அல்லாஹ் குர்ஆனில் வசனத்தை இறக்கினான்.

இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப்பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களை விட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் 59 : 9)

ஏனையோருடன் அன்பு செலுத்தினால் மட்டும் போதாது. அவர்களின் தேவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் நட்பும் உறவும் சகோதரத்துவமும் மேலோங்கும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. நபியுடையவும், நபித்தோழர்களுடையவும் வாழ்க்கையிலிருந்து கிடைக்கும் படிப்பினை இதுதான்.

யர்முக் போரில் படுகாயமுற்று மரணத் தறுவாயில் தண்ணீர் தண்ணீர் என்று குரல் கொடுத்த தோழருக்கு தண்ணீருடன் நெருங்கியபோது மற்றொரு தோழருடைய குரல் தண்ணீர் தண்ணீர் என்று. முதலாமவர் தனது தண்ணீரை இரண்டாமவருக்குக் கொடுக்கச் சொல்கிறார். இரண்டாவது தோழரிடம் செல்லும்போது மூன்றாவதாக தண்ணீர் குரல். இரண்டாமவரும் அவ்வாறே கூறுகின்றார்.

இவ்வாறு ஆறு நபித்தோழர்கள் மரணத் தறுவாயில் கூட மற்றவரின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்த சம்பவத்தைப் பார்க்க முடிகிறது.

உறவுகளை முறிக்கும் செயல்பாடுகள்

1. கெட்ட பேச்சுகள்

பேசும்போது தரக் குறைவான வார்த்தைகளைப் பேசுவது, பிறரை ஆட்சேபணை செய்வது, கெட்ட பெயர்களைக் கூறி அழைப்பது, இழிவு படுத்துவது போன்ற செயல்பாடுகள் உறவுகளை முறிக்கவும், பரஸ்பரம் சண்டையினை உருவாக்கவும் வழி வகுக்கும்.

2. கோபம்

கோபம் உறவுகளை முறிக்கும் செயல். கோபம் ஒருவருக்கு ஒவ்வொரு விதமாக உருவாகும். நாம் நமது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அதை ஏற்றுக்கொள்ள ஏனையோருக்கும் முடியாமல் போய் விடும். இறையச்சமுடையவர்களின் பண்பு இவ்வாறு இருக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது:

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3 : 134)

3. பிணக்கம் (சண்டை)

உண்மையான நம்பிக்கையாளர்கள் பரஸ்பரம் சண்டையிடக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஒருவர் தன் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமலிருக்கக் கூடாது.”

எண்ணிப் பாருங்கள். நம்மிடையே ஆண்டாண்டு காலம் பேசாமல் எத்தனையோ சகோதரர்கள் இருக்கிறார்கள்.

4. ஏனையோரை அலட்சியப்படுத்துதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தன் சகோதரனை ஒரு முஸ்லிம் நிந்தனை செய்யக் கூடாது. நிந்திப்பது முஸ்லிமுக்கு இழிவை ஏற்படுத்தும். பிறரை நிந்தித்து விட்டால் அவருடன் உறவை மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படாமல் போய் விடும்.”

கொடுக்கல் வாங்கல்

ஒரு முஸ்லிமுடைய கொடுக்கல் வாங்கல் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இதில் ஏற்படும் மனச் சிதைவுகள் பரஸ்பரம் உறவுகளை முறித்து விடும்.

இஸ்லாம் கொடுக்கல் வாங்கல் விடயத்தில் எவ்வாறு கட்டளை இடுகின்றதோ அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். காரணம், அது ஈமானின் ஓர் அம்சமாகவும் இருக்கின்றது.

உறவுகளை சக்திப்படுத்தும் வாய்ப்புகள்

பரஸ்பரம் ஸலாம் கூறுதல், புன்னகைத்தல், முஸாபா செய்தல், பரஸ்பரம் சந்தித்தல், பிரச்னைகளுக்கு பரிகாரம் செய்தல், ஆலோசனை கூறுதல், பிரார்த்தனை செய்தல்.... போன்ற செயல்பாடுகளால் உறவுகளை சக்திப்படுத்தலாம்.

இப்படியாக பிற சகோதரர்களின் நலனில் அக்கறை கொண்டு, கருத்துவேறுபாடுகளை கருத்தில் கொள்ளாமல், பெருந்தன்மையுடனும், கண்ணியத்துடனும் நடந்துகொண்டால் நல்லுறவுகள் மலரும். சமுதாயத்தில் சகோதரத்துவம் பிறக்கும். நானிலம் சிறக்கும்.

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Zainulabudeen (Sharjah) on 17 September 2013
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30154

உங்களுடைய கட்டுரையை படித்தேன். அல்ஹம்துலில்லாஹ். நன்றாஹ இருந்தது. மேலும் உங்களுடைய படைப்புகளை இனி வரும் காலங்களில் எதிர் பார்க்கின்றேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: S.M.I.Zakariya (chennai) on 19 September 2013
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30180

கட்டுகதைகளை கட்டுரையாக வடிக்கும் இந்த காலதில் வரலாற்றுசான்றுகளுடன் வார்த்தைகளுக்கு வர்ணம் பூசி இருக்கிறார் நண்பர் அப்துல் ஹமீது வாழ்த்துக்கள்.

பெரியார்தாசன் முஸ்லிமாக ஆகுவதற்கு முன்னர் ஒரு மேடையில் Dr KVS ஹபீப் அவர்களை பற்றி குறிப்பிடும் போது இவர் subject யை தவிர வேறு எதை பற்றியும் பேசுவது இல்லை என பெருமையாக குறிப்பிட்டார் அதனை இக்கட்டுரையில் நான் காண்கிறேன். வாசகர்களின் உணர்சிகளை தூண்டிவிட்டு அதில் ஆதாயம் தேடுவது எளிது. ஆனால் அப்துல் ஹமீது அவர்கள் இக்கட்டுரையில் அவ்வாறு செய்யவில்லை இக்காலத்துக்கு தேவையான ஒற்றுமை எனும் கையிற்றை இருகபிடிக்க சொல்கிறார்.

காலித் பின் வழித் ரலி அவர்கள் போன்ற மக்களிடம் புகழ்பெற்ற திறமையான போர்த்தந்திரம் வாய்ந்த வீரமிக்க ஒரு தளபதியை இவ்வுலகம் கண்டிருக்காது ஆனால் அவர் அந்த பதவியில் இருந்து தூக்கப்பட்டு சாதாரண சிப்பாயாக பணியாற்றும் நிலை வேறு யாருக்கும் வந்திருந்தால் கண்டிப்பாக அந்த நாடு பிளவு பட்டிருக்கும். ஆனால் அவர் அதை செய்ய வில்லை இன்முகத்தோடு சிப்பாயாக பணியாற்றினார் அந்த இடத்திலும் தன்னுடைய தேவை போரில் தேவை படும்பட்சதில் அவர் உதவ முன்வந்தார். காலித் பின் ரலி அவர்களின் மரண செய்தியை கேள்விப்பட்டவுடன் உமர் ரலி அவர்கள் தேம்பி தேம்பி அழுதார் பெண்கள் எல்லாம் தெருக்களில் வந்து அலுதுகொண்டிருகிரர்கள் என்ற செய்தியை கேள்விப்பட்டும் அதை அவர் தடுக்கவில்லை காலித் பின் வழித் அவர்கள் கூட தன்னிடம் இருந்த பொருட்களை உமர் இடம் ஒப்படைத்து விடுங்கள் என் மரன் தருவாயில் கூறிவிட்டு மரணித்தார்.ஒருகாலகட்டத்தில் அலி ரலி அவர்களிடம் உமர் ரலி அவர்கள் காலித் பின் வழித் அவர்களை தளபதி பதவியில் இருந்து நீக்கியது தவறு என்பதை கூட ஒப்புகொள்கிறார்

அலி ரலி அவர்களுக்கும் அயிஷா ரலி அவர்களுக்கும் போர் மூளும் தருவாயில் ஒருவர் அலியிடம் வந்து இப்போரில் கொல்லப்பட்டால் யார் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என கேட்ட போது இரு அணியில் உள்ளவர்கலுமே சொர்கதிற்குதான் செல்வார்கள் என் பதிலளித்தார் மேலும் அப்போரில் கொள்ளப்பட்டவர்களுக்கு ஒன்றாகவே ஜனாஸா தொழுகை வைத்தார்

முஆவிய ரலி அவர்களும் அலி ரலி அவர்களும் கருத்து வேறுபாட்டின் காரணமாக தனித்தனியே ஆட்சி செய்த போதும் கூட மார்க்க விசயத்தில் முஆவியா ரலி அவர்களுக்கு சந்தேகம் வந்த போது அலி ரலி அவர்களின் உதவியை நாடினார்

ஆனால் நாமோ மார்க்க விசயத்தில் சிறு கருத்து வேறுபாடு வந்தால் கூட இவன் காபிர் அல்லது முனாபிக் என பட்டம் கட்டிவிடுகிறோம். சுபுஹு தொழுகைக்கு குனூத் உண்டா இல்லையா என தர்க்கம் பண்ணுவோம் ஆனால் சுபுஹு தொழுகையில் பள்ளி வாசல்களில் இருண்டு வருசைகளுக்கு மேல் நம்மால் பார்க்க முடியவில்லை ஒரு பொருளுக்கு ஜகாத் ஒரு தடவை கொடுத்தால் போதுமா இல்லை வாழ்நாள் முழுக்க கொடுக்க வேண்டுமா என் விவாதம் பண்ணுவோம் ஆனால் ஜகாத் கொடுப்பதே இல்லை.

சரி மார்க்க விசயத்தில் தான் இப்படி என்றால் உலக விசயத்தில் நம்முடைய நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கொடுக்கல் வாங்கலில் நம்மவர்களுடைய பெயர் நாறிப்போய் கிடக்கிறது வியாபாரத்திலும் குடும்ப விவகாரங்களிலும் நாம் ஒற்றுமையை கடைபிடிப்பதில்லை சிறு விஷயங்கள் எல்லாம் பெரிது படுத்தப்பட்டு கட்டபஞ்சாயத்து வரைக்கும் போய் விடுகிறது

நம்மிடம் மாற்றத்தை நாம் தான் கொண்டுவரவேண்டும் அதற்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: J Mohaideen Batcha (Dubai) on 21 September 2013
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30237

அற்புதமான கட்டூரை, கட்டூரையை படித்துப் பார்த்துவிட்டு ஆசிரியரை வியக்காமல் இருக்க முடியவில்லை, தேவையான தருணத்தில் தேவையான கட்டுரை. தொகுத்தவிதமும், சம்பவங்களின் கோர்வையும் அருமை. ஆசிரியரின் கட்டூரைகள் சமூகத்திற்கு பயன் அளிக்க தொடர்ந்து பதிவிடுங்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...THEORY AND PRACTICE
posted by: mackie noohuthambi (colombo) on 30 September 2013
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 30473

நபிகள் நாயகமும் அவர்கள் தோழர்களும் எதை சொன்னார்களோ அதை செய்தார்கள்.நடைமுறை வேறு சொல்வது வேறு என்று இருக்கவில்லை. ஆசிரியர் அவர்கள் எடுத்து வைத்த கருத்துக்கள் இன்றைய நவீன அய்யாமுல் ஜாஹிலிய்யாத் காலத்தில் வாழும் நமக்கு பொருந்தாது என்று உலமாக்கள் நினைக்கிறார்கள்.

உங்கள் கட்டுரை என்போன்ற அவாம்கள் கண்களை திறக்கலாம். ஆனால் நபிமார்களின் வாரிசுகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நமது உலமாக்களுக்கு பொருந்தாது. இப்போது அவர்கல எல்லோரும் படு பிசியாக இருக்கிறார்கள். சொர்கத்துக்கும் நரகத்துக்கும் யார் யார் போவர்கள் என்ற அடையாள அட்டை கொடுக்கும் வேலையை அல்லாஹ் இவர்களிடம் ஒப்படைத்துள்ளான் போல் தெரிகிறது.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:..கட்டுரை ஆசிரியர்கு
posted by: Yasar Arafath (Trichy) on 06 October 2013
IP: 101.*.*.* India | Comment Reference Number: 30556

அஸ்ஸலாமு அழைக்கும்

மிக அருமையான கட்டுரை. ஆனால் ஒரு வேண்டுகோள் நபிமார்கள் மற்றும் மகான்களின் பெயர்களை குறிப்பிடும் போது குறுகிய அடையாலங்கலை பயபடுத்தவேண்டாம் (சல் ,ரழி) முழுமையாக எழுதுமாறு அன்புடன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved