பார் காந்தி... வந்து பார்...
ஐயாயிரம் அப்பாவிகளைக் கொன்ற
அகில உலக பயங்கரவாதி
அஹிம்சையின் தேசத்தை
ஆளத் துடிக்கும்
அலங்கோலத்தை வந்து பார் ...
பார்த்ததும் ஓடிவிடு ...
நாற்பத்தெட்டு ஜனவரியில்
நாதுராம் கோட்சே மட்டும்தான்...
இன்று
நாடெங்கும் நாலாபுறமும்
நரபலி மோடிகள்!
அங்கும் இங்கும் சுற்றாதே...
அமித் ஷாக்கள் உன்னை
அள்ளிக் கொண்டு போய்
என்கவுன்டரில்
போட்டுத் தள்ளி விடுவார்கள்!
குஜராத் பக்கம் போய் விடாதே...
விவசாய நிலங்களை
கார்பரேட் கம்பெனிகளுக்கு
தாரை வார்த்துவிட்டு
வளர்ச்சி வளர்ச்சி என்று
பொய்யுரைக்கும் புனிதர்கள்
வெள்ளைக்காரனிடம் உன்னையும்
விற்றுவிடுவார்கள்!
தமிழகத்தின் சம்மந்தியே!
இந்தப் பக்கம்
தலை வைத்தும் படுத்து விடாதே!
"சத்திய சோதனை"யின்
சரித்திர காகிதங்கள்
டாஸ்மாக் பார்களில்
சுண்டல் பொட்டலங்கள் ஆவதை
தாங்குமா உன் இதயம்?
பரங்கியர்கள் ஆண்டபோது
பதினைந்தில் துணிந்து வந்தாய்...
உனக்குத் தெரியும்...
இப்போது மீண்டும் வந்தால்
கோவனமும் மிஞ்சிடாது!
எப்போதும் போல்
சமாதியிலும், சிலைகளிலும்
சயனம் கொள்... அது போதும் ...
ஆண்டுக்கு ஓரிருமுறைகள்
அலங்கரித்து பூத்தூவி
வழக்கம்போல் மீண்டும்
உனது இருப்பிடத்தை
காக்கைகளின் கழிப்பறையாக்கி...
2. மகாத்மாவே.... மன்னித்து விடு இந்த மானங்கெட்ட மதவாத சக்திகளை...! posted by:M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 02 October 2013 IP: 117.*.*.* India | Comment Reference Number: 30495
ஐந்நூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளில்
உன் உருவம் இல்லையெனில்
உன்னையும் மெல்ல மறந்திருக்கக் கூடும்
இந்த மண்ணின் மைந்தர்கள்.
கொன்றவனைக் கோவில் கட்டி கும்பிடும்
கூறுகெட்ட சமூகம் இன்று நாடாள நினைப்பது
விந்தயிலும் விந்தை-நீயோ
இன்னும் எம் தேசத்தின் தந்தை!
மாகாத்மாவே...மன்னித்து விடு
இந்த மானங்கெட்ட மதவாத சக்திகளை...!
காவியும் பச்சையும் நீ உடுத்திய வெள்ளையும்
சீக்கிய நீலமும் கலந்து தேசியக்கொடியை செய்தோம்
காவி மேலே இருப்பதாலே என்னவோ
அதன் சாயம் கரைந்து கீழ் வரை இறங்கும் அபாயம்
கலரில் என்ன இருக்கின்றது காந்தியே...?
காவி காக்கியாக மாறுமோ எனும் அச்சம்தான்.
மாகாத்மாவே...மன்னித்து விடு
இந்த மானங்கெட்ட மதவாத சக்திகளை...!
எரிப்பதற்கு மனித விறகுகள் இருக்க
ஏன் அலைய வேண்டும் இவர்கள்?
இடிப்பதற்கு இறையில்லங்கள் இருக்க
ஏன் சுமக்க வேண்டும் செங்கல்?
சிதறிக்கிடக்கும் சிறுபாண்மை மக்கள்
சிதறு தேங்காய்தானோ என்னவோ?
பொறுக்கி எடுத்து மீண்டும் நொறுக்க
புறப்படும் யாத்திரைகள்... ரதங்கள்
மோடி வித்தைகள் கோடி இருப்பினும்
உன் ரத்தம் சிதறிய இம்மண்ணில்
காவியின் காலடி அனுமதியோம்.
மகாத்மாவே.... மன்னித்து விடு
இந்த மானங்கெட்ட மதவாத சக்திகளை...!
3. “சதிகார ஊடகங்கள் - விதிமாற்ற வருவாயா?” posted by:Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) on 02 October 2013 IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30499
“சதிகார ஊடகங்கள் - விதிமாற்ற வருவாயா?”
சிந்திக்கத் தூண்டிய வரிகள்.
தேர்தல் காலங்களில் இந்த ஊடகங்களின் சதி சொல்லி மாளாது. இல்லாததையும் பொல்லாததையும் ஊதிப் பெரிதாக்கி (மனித) சமுதாயத்தை கூறுபோடுவதில் கை தேர்ந்தவர்கள். பொய் ஒன்றையே மூலதனமாக கொண்டவர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross