உலகலாவிய வாழும் எனதருமை வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் டிசம்பர் 26.02.2015 வெளியான எனது கட்டுரையை இதுவரை 10.2.2016 வரை படித்து ரசித்தவர்கள் 522 பேர். ஆனால் இவர்களின் ஒருவர் கூட கருத்து அனுப்ப வில்லை ஏன்? கருத்துக்கள்தான் எங்களுக்கு மேலும் எழுத தூண்டும் டானிக் போல இருக்கும்.
குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் கருத்தை நான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். நேரமில்லை என்று கூறி தப்பிக்கிறார்கள். நேரம் நம்மை நோக்கி வருமா? நாம் நேரத்தை நோக்கி போகனும் மேதவிர அதை எதிர்பார்ப்பது எப்படி சரியாகும். தப்பிக்க இந்த வரிகளை இனி எழுத்தாளார்கள் பயன்படுத்தமாட்டார்கள் என நினைக்கிறேன்.
நான் பொதுமக்களின் நலன் கருதி உண்மையாக உழைக்கிறேன். அதனால் பகல் உணவுக்கு இரண்டரை மணிக்கும் இரவு உணவு பத்து மணிக்கும் வீட்டுக்கு வருகிறேன். என் மனைவிக்கு இது பழகிபோய் விட்டது. நான் வீடு வராமல் பகல் இரவு உணவை என் துணைவி ஒரு போதும் சாப்பிடுவது கிடையாது.
எனக்கு பொதுமக்களின் கடமை முக்கியம். எனது உடலுக்கு உணவு தேவை என்பதை ஒருநாளும் எதிர்பார்த்து பகல் ஒரு மணிக்கொல்லாம் வீடு சென்றதும் கிடையாது. என் மனைவி பழகிக் கொண்டதால் எழுத உதவியாகவும் என்னை மாதிரி பசித்து இருந்து பழகிவிட்டாள். இதுதான் சேவையின் மறுபக்கம் சந்தோஷமாக இருக்கிறது என்பதை குறித்து எழுத எண்ணினேன்.
சிலர் தங்களின் வேலைகளை முடித்து கொள்ள சில நேரம் இரண்டரைக்கும் பகல் நேரம் வருவார்கள். ஊர் சுற்றி பொது வேலை நபர்களை சந்தித்து விட்டு இரண்டரை மணிக்கு வந்து உணவருந்த உட்காருவேன். அப்போது வந்து கதவை தட்டி கண்டிப்பாக நான் உங்களை பார்க்காமல் போக மாட்டேன். நீங்கள் சாப்பிடும் வரை நான் வெளி வாசலில் காத்து இருப்பதால் பல பெண்கள் அடம் பிடித்து ஸ்டிரைக் பண்ணி உட்கார்ந்த நாட்கள் ஏராளம். இந்த நிலை உருவகாகும் போதுதான் சேவையின் மறுபக்கம் சங்கடம் என்ற நிலை உருவாகிவிடுகிறது.
ஏனெனில் பகல் இரண்டரைக்கு சாப்பிட்டேன.; கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து படுக்க விடமாட்டார்கள். இப்படி செய்வதால் என் மனைவிக்கு இலேசான கோபம் வரும். முகம் காட்டும். பொதுவாக வேலைகளை வந்ததும் முடித்து போகனும் என்றுதான் பல பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கே தெரிய வேண்டும் மணி இரண்டரை ஆகிறது... இப்போதுதான் மச்சான் வந்தாங்க என்று சன்னலை திறந்து கொண்டால் பரவாயில்லை... சாப்பிடும் வரை வெளியே இருப்பதாக அடம்பிடிக்கு படிக்காத பெண்கள் ஏராளம் என்ன சொன்னாலும் காதில் ஏறுவதில்லை.
அவர்கள் வந்த வேலையை முடித்து போவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இதனால்தான் சேவையின் மறுபக்கம் கடுப்பாகி சங்கடம் ஆரம்பிக்க வழி பிறக்கிறது. ஆற அமர மாலை 5 மணிக்கு வருகிறேன் என்று கூறி வந்த யாரும் போவதில்லை. சில பெண்களுக்கு விபரம் சொன்னால் என் மனைவியுடன் டென்சனாகி கத்தி விட்டு போகிறார்கள். ஏன் டென்ஷன் வருகிறது? என்று கவனித்தால் மனசே டென்ஷன் வருகிறது. நூலை (பக்கம் 32) நளினி எழுதியதை படித்தால் எல்லாம் புரிகிறது.
டென்ஷன் எந்த ரூபத்தில் எல்லாம் வருகிறது என்றால் நாம் எதிர்பார்த்து சந்திக்க சென்றவரை சந்திக்க முடியாவிட்டாலும் டென்ஷன் ஆரம்பம் ஆகிறதாம். காலையில் குழாயில் தண்ணீர் வரவில்லையானாலும் பால்காரன் லேட்டாக வந்தாலும், திடீரென்று சமையல் கேஸ் தீர்த்து போனாலும், ஸ்கூல் பஸ் வரும் நேரம் பையன் டிரஸ் போட்டு ரெடியாகல என்றாலும், பலபெண்கள் டென்ஷன் ஆகிறதாக நளினி எழுதியதுடன் நிறைய தகவலை அவர்கள் தருவதில் சிலவற்றை மட்டுமே நான் மேலேயும் கிழேயும் எழுதி காட்ட ஆசைபடுகிறேன்.
ஆபீஸில் நுழைந்தவுடன் கரென்ட் போனால் வீட்டுக்குள் போகும்போது குழந்தை அழும் சப்தம் கேட்டாலும், இரயில்வே க்ராஸிங்கில் கிட்ட நாம் போகும்போது ரயில்வே கேட் மூடும் போது நாம் டென்ஷனாகிறோம். அவர்கள் அவர்களின் வேலையை சரியான வேளையில் செய்கிறார்? அதற்காக நாம் ஏன் டென்ஷன் பட்டு கோபத்தை வெளியே காட்டி சப்தமிட தேவைதானா? என்பதை யாரும் எண்ணிப்பார்பதில்லை. நமது வீட்டிலும் நம்மை சுற்றிலும் நடப்பதாக எண்ண வேண்டாம்.
உலகம் முழுவதும் இந்த டென்ஷன் முறை மாறி மாறி நடந்து கொண்டே இருக்கிறது. பிறர் நன்மையடைய பாடுபடும் எத்தனையோ மனிதர்கள் பல நேரம் அறியாமையால் புரியாமல் பாதிக்கும் போது அவர்களின் சேவைவழியில் சங்கடம் என்ற அத்தியாயம் உதயமாகி இனி இந்த மக்களை புரிந்து கொள்ள வைக்க முடியாது.
சேவை செய்யும் புனித வழியிலிருந்து விடுபட்டு போகலாம் என்று நான் கூட பலமுறை பாதிக்கப்பட்டு வருத்தப்பட்ட நேரம் அதிகம் அதிகமாக உண்டு. புரியாததால் இப்படி நடந்து கொள்வதால் நான் செய்த சேவைக்கு அருத்தமில்லாது போகும்போது மனம் வருத்தப்படுவதில் தப்பு இல்லை எனலாம்.
சில டென்ஷன் பேர்வழிகளால் சேவை செய்பவர்களின் நிலையை உணராது சாடி பேசுவது. சேவை செய்பவர்களை குறித்து பசாது பேசி திரிவது சிலரின் வேடிக்கையானசெயலாக இருப்பதை காண முடிகிறது.
டென்ஷன் ஏன் ஏற்படுகிறது?
மருத்துவரின் கருத்துப்படி டென்ஷன் ஏற்படும் போது உடல்நலம் பாதிப்பு ஏற்படுத்துமாம். இரத்த அழுத்தம் அதிகரித்தல், இதயதுடிப்பு அதிகரித்தல், நரம்பு தளர்ச்சி, கிட்னி பாதிப்பு, அல்சர், பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி, ஹார்ட் அட்டாக், போன்ற நோய்களுக்கு காரணம் டென்ஷன்தான் முதன்மை வழியாவதாக ஆய்ந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஒருவர் மீது தேவையில்லாது கோபப்படும் போது டென்ஷன் பிறக்க வழிபிறக்கிறது. டென்ஷன் அதிகம் உள்ளோரின் சாப்பிடும் முறை, தூங்கும் முறை பெரிதும் மாறி பாதிக்கப்படுவதைக் காணலாம். அவரை காண மௌனமாக இருப்பார் ஆனால் ஒருவர் மீது வேண்டா வெறுப்பை மனதில் வைத்து குழம்பி வஞ்சனை தீர்க்க துடிக்கும் போது டென்ஷன் மேலும் மலை போல வளர்வதை அவர் உணர்வதில்லை.
சேவை செய்த வரை பாராட்ட வேண்டிய நேரத்தில் அவரை பற்றி குறை கூறி தெரிவதை அவர் மனம் உணர்வதில்லை. அப்படிபட்டவர் அவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். டென்சனுக்கு காரணம் உணவிலும் இருக்கிறது. நார்சத்து உணவு நல்லது. உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல என்ற செய்தியை டென்ஷன் பேர்வழிகள் தெரிந்து கொள்வதில்லை. சிலர் மறைத்து மறைத்து குடிப்பதை அதிகமாக்குவதும் புகைப்பிடிப்பதை அதிகமாக்குவதும் நகம் கடிக்கும் பழக்கமும் டென்ஷன் காரணமாக வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
டென்ஷன் என்பது மன அழுத்தம் என்றே அறிந்து கொள்ள வேண்டும். எங்கே குறை காணும் எண்ணங்கள் உருவாகிறதே அங்கு சங்கடங்களும் சேர்ந்து தொடர்ந்து வரும். சேவை செய்பவர்களை சிலர் தான் அறிந்து பாராட்டுகிறார்கள். பலர் என்னதான் சேவை செய்தாலும் பாராட்டாமல் குறைகளை தேடி அலைக்கிறார்கள். இது இவர்களின் வழக்கம். மாற்றமுடியாது.
சந்தோஷமே சௌபாக்கியம் என்றார் ஒரு வேந்தர் (அரசர்) மனம் நலமாக இருந்தால் உடல் நலமாக இருக்கும் என்கிறார் - டாக்டர் சி. பன்னீர் செல்வன் MBBS,MD. இவர் மனநல மருத்துவர் இவர் எழுதி வெளியிட்ட நூல்தான் மனநலம் என்ற நூல் இதை வெளியிட்ட பதிப்பாசிரியர். காந்தி கண்ணதாசன் (சென்னை T. நகர் கண்ணதாசன் பதிப்பகம் மூன்றாம் பதிப்பு ஜீலை 2014 –ல் வெளியானது) (மொத்த பக்கம் - 144) மக்களை குழப்பும் டென்ஷன் பேர்வழிகள் இது போன்ற நூல்களை படித்தால் ஓரளவு சேவை செய்யும் மனிதர்களை புரிந்து கொள்ள முடியும்.
முதல் பகுதியில் சங்கடம் எப்படியெல்லாம் உருவாகிறது என்று இருநூல்களில் படித்த தகவலை ஆதாரமாககொண்டு எழுதிகாட்ட முன் வந்தேன். சேவையின் மறுபக்கம் சந்தோஷம் ஏற்படவும் சங்கடம் உருவாக்கவும் அவரவர் எடுக்கும் முறையில் உள்ளதை அதன்மூலம் அறிந்து கொண்டோம். நுன்றி அல்ஹம்துல்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் எனது அடுத்த கட்டுரை அன்பு சகோதரிகளுக்கு அழகிய புத்திமதிகள் படித்தவர்கள் இரு வரி கருத்து தயவு செய்து எழுதுங்கள்.
|