'இஸ்லாம்” எனும் இனிய மார்க்கம் நம்மை ஈன்றெடுத்துள்ளது. இதில் நாம் 'முஸ்லிம்” என்ற முழுஉணர்வோடு, 'ஒழுக்கம்” என்ற போர்வையைப் போர்த்தியவா;களாக, 'சுவர்;க்கம்” என்ற இலக்கை நோக்கி, 'இறைமறையின்” பாதையிலே 'இறைதூதரின்” வழிக்காட்டுதலின் படி இனிமையாக நாம் பயணித்துக் கொண்டிருப்பது இறைவன் நமக்கீந்த அருட்கொடையேயின்றி வேறில்லை.
பயணத்தின் பாதையிலே இடர்களையும், ஜன்னல்களையும் எதிர்நோக்கும் நாம் நம்மையுமறியாது அன்றாட வாழ்வியலில் சில தவறுகளையும், அதனால் விளையும் பேராபத்துக்களையும், பேரிழப்புகளையும் அறியாவண்ணம் அழகுற 'அழகுக்காக” அலங்கரித்துக் கொண்டிருக்கிற பட்டியலில், தீன் குலக் கண்மணிகளாகிய நம் பெண்களின் கண்களிலே மண்ணை வாரித் தூவிக்கொண்டே நம்மை நரகை நோக்கி இழுத்தழைத்துப் போய்க்கொண்டிருப்பதில் இன்றைய நவீன அபாயகரமான 'அபாயாக்கள்” முதலிடம் வகிக்கின்றது.
அபாயா, புர்கா, பர்தா, போரா, ஹிஜாப் என பல பெயர்களைப்; பெற்று, பல வண்ணங்களில் பல்வேறு விதவிதமான வடிவங்களில் வலுப்பெற்றுள்ளது காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல முடியும்.
'புர்கா” என்ற பெயரோடு தூய வெண்மை நிற ஆடையை நமதூரிலே சில வருடங்களுக்கு முன்பு பரவலாக வயது அடைந்தவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துப் பெண்களும் அணிந்துகொண்டு, வீதியிலே வரும்போது முக்காடிட்டு முகம் தெரியாது வலப்புறமும், இடப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்;த்துக் கொண்டு வருகையில், “அய்யோ! வெள்;ளைப் பேய் வருகிறது” என்று வேண்டுமென்றே சப்தமிட்டு கூறிக்கொண்டே தோழிகளுடன் ஓடிச்சென்று ஒளிந்துகொள்கையில் அப்பெண்டிரின் வாயிலாக வசைமொழிகளை வாங்கியது அறியாத விளையாட்டுப் பருவமான 25, 30 வருடங்களுக்கு முன்பு.
இப்போது அதே புர்காவை இங்கொன்றும் அங்கொன்றுமாக வயோதிகர்களில் ஒருசிலர் அணிவதை மட்டுமே எம்மால் அறிய முடிகிறது. பின் எமது பள்ளிப் பருவங்களிலே வேலைப்பாடற்ற தளர்;வான பர்தாக்களை அணிந்து வெகுதூரம் அன்றாடம் பள்ளிக்கு நடந்து சென்றபோதெல்லாம் அவை ஏதோ நம் உடலுக்கு அடைக்கலம் தந்த ஓர் உணர்;வைத்தான் தந்தது.
காலத்தின் கோலம் என்னவோ, காலம் கடந்து செல்லச் செல்ல - எம்ராய்டரி பர்தா, லேஸ் பர்தா, ஜார்ஜட் பர்தா, பனியன் கிளாத் பர்தா என மெல்ல மெல்லப் படியேறி, உடல் வடிவை கச்சிதமாக எடுத்துக்காட்டக் கூடிய மிக இறுக்கமான ஸ்லிம் பர்தா, கல் பர்தா என்று கலங்கரை விளக்கின் உச்சிக்கு ஏறி வந்துவிட்டன. இனி இமயத்தின் சிகரத்தை எட்ட என்னென்ன புதிய வரவுகள் காத்திருக்கின்ற என்பதை யாம் அறியோம்.
ஒவ்வொரு நாட்டிலும் இவை ஒவ்வொரு விதமான வடிவங்களில் உலா வருகிறது. அதில் சில சிகையலங்காரத்தை மட்டுமே மறைத்த வண்ணமுள்ளது. இவ்விடத்தில் நம்மை அறியாவண்ணம் அலங்காரம் என்ற பெயரில் ஷைத்தான் வழிநடத்தி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கையில், நாமும் அவனது சூழ்ச்சியையும், அதனால் ஏற்படும் வீழ்ச்சியையும் அறியாது வீதியிலே விண்மீண்கள் போல மின்னிக்கொண்டு உலா வருகிறோம்.
வெளிநாட்டிலோ, வெளியூரிpலோ இருக்கும் தந்தையோ, கணவரோ, சகோதரனோ, மகனோ, மகளோ என யார் ஊர் வர ஆயத்தமானாலும் நாம் முதலில் அவர்களிடம் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், அழகிய வேலைப்பாடு மிக்க 'கலி பர்தா” கொண்டு வரும்படிதான்! மறுக்க மனமின்றி அவர்களும் தேடியலைந்து கொண்டுவந்து கொடுக்கையிலே, அதன் விபரீதத்தை எடுத்துரைக்காது வாங்கிக் கொடுத்த குற்றத்திற்கு அறிந்தோ, அறியாவண்ணமோ ஆளாகி விடுகின்றனர்.
இன்றைய சூழலில் பெண்களாகிய நம்மில் சிலர் அழகுக்கு முன்னுரிமை வழங்குவது இந்த 'அபாயகரமான” அபாயக்களுக்குத்தான் என்பது வேதனையளிக்கும் விசயமே!
சில வருடம் முன்பு மாநபிகளார் வாழ்ந்த மதீனாவிற்க்கு நான் சென்றபோது, ஒருபுறம் அழகுற அங்குள்ள கடமைகளை செய்து மறுபுறம் (தவறென்றறியாது) பர்தா வாங்க கடைவீதிக்கு சென்று, இருப்பதிலேயே அழகிய வேலைப்பாடு மிக்க கல் பர்தா இரண்டினை வாங்கியணிந்து மகழ்ச்சியடைந்த தருணம் அது. 'தன் வினை தன்னைச் சுடும்” என்ற பழமொழிக்கொப்ப – தவறிழைத்துவிட்டோமே... என்ற எண்ணம் மேலோங்கக் காரணம் நபியவர்கள் நவின்றுள்ள ஓர் பொன்மொழியைக் கேட்ட பின்புதான் புத்திக்கு எட்டியது. உள்ளத்தை தட்டியது.
நபிகளார் கண்ட காட்சி என்னவெனில், நரகிலே சில பெண்கள் நிர்வாணமாக ஓர் கயிற்றில் கட்டி தலைகீழாக தொங்க விடப்பட்ட நிலையில் அதன் கீழ் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதிலே அவளது சதை உருகிக்கொண்டிந்த பயங்கரமான காட்சியைக் கண்டு ஜிப்ரஈல் (அலை) அவர்களிடம், “எதற்காக இப்பெரிய தண்டணை இப்பெண்களுக்கு?” என நபியவர்கள் வினவியபோது, இப்பெண்கள் அலங்காரமான ஆடையை வெளியில் அணிந்து சென்றவர்கள். முறையான ஹிஜாபைப் பேணவில்லை என பதிலளித்ததாகக் கூறிய பொன்மொழியை எம் அன்றாட வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பார்க்கையில் உள்ளம் பதைபதைத்தது. பயம் தோய்ந்த நிலையில் கற்கள் ஒவ்வொன்றையும் பிரித்தெடுத்த வேளையில் சிலர் கூறினர்: ‘உனக்கு என்னவாயிற்று? அழகான கற்களை பிய்த்தெடுக்கிறாயே...? இதை வெளியிலே போட்டு நடந்தால் பிச்சைக்காரி என்றல்லவா கூறுவார்கள்?” என்று கூறியபோது உள்ளம் அதை ஏற்க மறுத்தது. காரணம் இறைவன் முன் அமல்களெல்லாம் அழிந்த நிலையில் நாம் பிச்சைக்காரியாகப் போய் நிற்பதை விட இப்பெயரே போற்றத்தக்கது... மேலும் இக்கற்களைப் பிரித்தெடுத்தது போன்று நாளை மறுமையிலே இறைவன் எம் சதைத்துண்டுகளைப் பிய்த்தெடுத்து விடக்கூடாதே என்ற எண்ணம் மேலோங்கியது... பிறருக்கு இதைக் கொடுத்தாலும் அவர்கள் அதை அணியும்போது அப்பாவம் என்னையே வந்தடையும்... வேண்டாமென தூக்கியெறிந்தாலும் வீண்விரயம் செய்த குற்றமும் எம்மையே சேரும். ஆகவே கவனமாகக் கையாளவேண்டிய தருணமாக அமைந்து இறுதியாக இவ்விடயத்தில் தவறிழைத்தமைக்காக மன்னிப்பை விரும்புகிற மன்னனிடம் மன்றாடி மனந்திருந்தி, மன்னிப்புக் கோருவதை விட வழியறியா விழிபிதுங்கி நின்ற கணம்தான் இக்கட்டுரையை எழுத எம்மைப் பணித்தது.
திருமறையில் 39.53ல் “என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும் அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசையாகி விட வேண்டாம்! அல்லாஹ் அனைத்துப் பாவங்களையும் மன்னித்துவிடுவான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன்... மிக்க கிருபையுடையவன்” என்ற வசனம் எம் நம்பிக்கைக்கு வலு சேர்த்தது.
கண்ணியமிக்க உலமாக்கள் நிறைந்த நமதூரில் மார்க்கத்தின் உயிர்நாடியாய்த் திகழ்கின்ற உலமாக்களே! இவ்விசயத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதன் சாராம்சத்தை உணர்த்தி, கண்டிப்புடன் கடமையாற்றவும், கனிவுடன் எடுத்துரைக்கவும் உரிமை பெற்றவர்களான நீங்கள் உத்வேகத்துடன் சீரிய முறையில் மக்களின் சிந்தையிலே தெளிவுற செவிமடுக்கச் செய்வதில் சிறப்புற செயல்பட திறம்படைத்தவர்களாகிய தங்களின் அளப்பரிய பங்களிப்பை அள்ளித்தாருங்கள்!!
குடும்பத் தலைவராக இருக்கும் ஒவ்வொரு ஆணும் தங்களின் தாய், மனைவி, சகோதரிகள், குழந்தைகள் என யார் இவ்வலங்காரத்தை விரும்பினாலும் அதற்கு மறுப்பதோடு மட்டுமின்றி இதன் பாரதூரமான விடயங்களை பக்குவமாய் எடுத்துரைத்து 'உங்களையும் உங்களது குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்ற பொன்மொழியைப் பின்பற்றி குடும்பத்துடன் சுவபைதியில் குடியேனும் வாய்ப்பை பெறலாமல்லவா!!
பர்தா வியாபாரியாக இருப்பவர்கள் வேலைப்பாடு மிக்க அபாயகரமான அபாயாக்களை விற்று, அதிலிருந்து வரும் லாபத்தை விட அதனுடன் சேர்ந்து வரும் பாவமோ பாரதூரமாமது. ஆகவே தூயவடிவிலான வேலைப்பாடற்றவற்றை சொற்ப லாபத்தில் விற்று, சுவனத்தின் சுகபோகங்களாக ஆடைகளை அணியும் வாய்ப்புகளுடன் வாழ நம் சகோதரிகளுக்கு வழிகாட்டலாமே...?
வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதரஸாக்களுக்கு பெண் சிறார்களாகிய இளம் சிட்டுக்கள் சிட்டுக்கருவிகள் போல் சிறகடித்து வருகையிலே பர்தாவின் அவசியம் மற்றும் அதன் தூய வடிவம் பற்றி அழகிய முறையில் ஆதியிலே எடுத்துரைத்து கற்பாறையில் வெட்டிய கல்வெட்டைப் போல் கடுகளவும் பிசகாது கவனமுடன் நடத்திட காட்டுவது அங்கு பணியாற்றும் ஆசிரியைகளின் அளப்பெரும் பங்கு மிக அவசியமானதே!!
பள்ளி, கல்லூரிகளிலே பயிலும் மாணிக்கங்களான மாணவச் செல்வங்களே! வேலைப்பாடற்ற தளர்வான பர்தாவையே நாங்கள் அணிவோம் என்று உறுதிபூண்டு செயலாற்றினால் பின் தொடரும் சமுதாயமும், மாறாக நடத்திரும் மாற்று மத சமுதாயமும் மாற்றத்தை கொண்டு வர முழுவடிவம் பெற்ற நீங்கள் செல்வனே செயலாற்றினால் இக்கட்டுரை உயிரோட்டமுள்ளதாய் அமைய வாய்ப்புள்ளது. போராடி என்றுமே வெற்றிவாகை சூடும் நீங்கள் மௌனப்புரட்சியாய் செயல்வடிலே சாதியுங்கள் இதனை!!
ஒட்டுமொத்த இஸ்லாமிய பெண்களாகிய நாம் 'ஹிஜாப்”பை பேனுவதால் பிறர் எண்ணுவதைப் போன்று அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட கோழிகளல்ல. சுதந்திரத்தை எல்லா வழியிலும் சுதந்திரமாக அனுபவிக்கும்படி அழகிய கட்டுக்கோப்பைத்தான் இஸ்லாம் நமக்கு வழங்கியுள்ளது.
ஆதலால் பெண்களாகிய நாம் அயல்நாடுகளுக்கு செல்லும் போதும் சரி, அந்நியர்களுடன் பணிபுரியும் போதும் சரி, அழைக்கப்படும் விருந்தோம்பலிலும் சரி, படிக்கப்போகும் கல்வி நிறுவனங்களிலும் சரி, எவ்விடத்திலும் அவ்விட கலாச்சாரத்திற்கு சருகிடாமல் நம் கேடயமான 'ஹிஜாபை” கவனமாக கையாண்டு மாற்று மத சமூகத்தவர் பாதுகாப்பு மிக்க இவ்வழியை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் வண்ணம் நம் அகவழகும், புறவழகும் வீதியிலன்றி வீட்டிலே வைத்துக் கொள்வோம்.
வசனம் 59 அத்தியாயம் 33 அத்தியாயம் 33 வசனம் 33 மற்றும் அத்தியாயம் 24 வசனம் 31ல் இறைவன் கூறும் கட்டளைகளை சற்று செவிதாழ்த்தி கேட்க வேண்டும். இதனை சற்று பொறுமையுடன் படித்துப்பா;த்தால் பல படிப்பினைகள் இதில் உள்ளன. செவ்வனே 'ஹிஜாப்”பை செயல்படுத்துகையில் பயனறியா சிலரின் பரிகாசத்திற்குக் கூட ஆளாக வேண்டிய சூழல் ஏற்படலாம். போற்றல்களோ, தூற்றல்களோ... தூக்கியெறிந்துவிட்டு, நாம் செல்லும் மறுமையெனும் பயணமதில், உலகமெனும் விமானத்தில் ஏறி, இஸ்லாமெனும் இருக்கையில் அமர்ந்து, தக்வாவெனும் கயிற்றை அணிந்து, சுவர்க்கமெனும் இலக்கை நோக்கி, ஈமானெனும் திசையிலே திணறாது பயணிக்க வேண்டிய நாம், விமானத்தின் இறக்கையிலே கலாச்சாரமெனும் கொக்கியிட்டு, அதில் அழகு என்ற கயிற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டு, நரகமெனும் படுகுழியின் பாதாளத்தில் வீழ்ந்திடாதிருக்க வேண்டுமெனில் வீதியிலே விழிப்போடு முறையான 'ஹிஜாப்”பை பேணி நடப்போமானால் வாழ்ந்திடலாம் வளமோடு இம்மையிலும் மறுமையிலும்!!
இக்கட்டுரையை படித்து முடித்து விட்ட அன்பர்களே! இப்போது முடிவெடுங்கள் எது சரியென்று! வலுவிழந்த எம் எழுத்துக்களை உங்கள் வாழ்வியலில் புகுந்து தங்களின் மேலான கருத்துக்கள் ஊடாக எம் சிந்தனைக்கு வலுவூட்டி, எம் தந்தையெனும் அறிவு நீர் தடாகத்தில் துளியேனும் யான் பருகி, சுவனப்பதியிலே குடும்பத்துடன் குடியேற தங்களனைவரின் 'துஆ” வெனும் அன்பளிப்பை வேண்டியவளாக அடுத்து வரும் பதிப்பிலே அடியெடுத்து வைக்கும் ஆசையுடன் விடைபெறுகிறேன்.
அன்புடன்,
ஆயிஷா முனீரா B.C.A..
D/o. மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் மவ்லானா மவ்லவீ S.E.M.ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் மிஸ்பாஹீ
W/o. M.N.முஹம்மத் முஹ்யித்தீன் B.Sc., |