ஏதோ ஒரு நெருடல்! எங்கோ நடக்கிறது... எமக்கென்ன! என்று இருந்துவிட மனம் இடம்தரவில்லை “ஹலபு”கள் பற்றிய எண்ணங்கள் எம் நெஞ்சத்தில் மேலோங்க, சிரியர்களின் சீரற்ற நிலை எம் சிந்தனையை சித்தப்படுத்த, சிதையுண்ட உடல்களை ஊடகங்கள் ஊடாக கண்ணுற்ற எம் விழிகளில் வழியும் நீர் ஒருபுறம், மறுபுறம் கலத்திற்கு சென்று ஈடுகொடுக்க இயலா சூழல் தான் எமை எம் இருப்பிடத்திலே இருந்துகொண்டு உடலும், உள்ளமும் ஒரு சேர இயன்றதை எடுத்துரைத்து எழுத பணித்தது எம் கரங்களை!
பரந்து விரிந்தது ஷாம் நிலப்பரப்பு மட்டுமல்ல! பசுமரத்தாணி போல் பச்சிளம் குழந்தை முதல் பெரியோர் வரை திடமான ஈமானால் திணறாமல் திகழ்ந்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரது உள்ளமும் பரந்து விரிந்ததே! ஆயினும் பந்தாடப்படுகிறார்கள் தம் சொந்த நாட்டு அதிபரான “பஷர் அல் ஆஷாத்”த்தின் அடக்குமுறையினாலும், அவருடைய நட்புநாடான ஈரானுடைய இரானுவத்தாலும், கூடவே ரஷ்யாவின் அதிபயங்கர ஏவுகளையினாலும் அழிக்கப்படுகிறது எம் உடன்பிறப்புகளின் உயிர்களும், உடமைகளும். பச்சிளம் குழந்தைகள் கூட விதிவிலக்கல்ல ஏவுகனைகளும், இரசாயன தாக்குதல்கள் ஒரு புரம். தாய் தந்தையின்றி குழந்தைகளும், குழந்தையின்றி தாய் தந்தைகளும், உடன்பிறப்புகளின்றியும், ஒட்டு மொத்த உறவுகளை இழந்தும், உடலுறுப்புகள் சிதைக்கப்பட்டும், பட்டினியுடனும், படுக்க இடமின்றியும், உடுக்க ஆடையின்றியும், அரவணைக்க ஆதரவின்றியும் அல்லோலப்பட்டு தினம் தினம் ஷியாக்களால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது சிரியா நகரம்!! எதிரிகள் நினைக்கலாம் நாம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என, தவறு! தம் படைப்பலத்தால் தரைமட்டமாக்கி பல இலட்சம் உயிர்களை வேண்டுமானல் நீ எடுத்திருக்கலாம், ஆனால் எம் சகோதர, சகோதரிகளின், ஏன் ஓர் குழந்தையின் உள்ளத்தில் ஈமானை கூட உம்மால் எடுத்து விட முடியாது தோல்வியடைந்துக் கொண்டிருக்கிறாய்! மரணத்தருவாயிலிருக்கும் ஒர் குழந்தைக்கு ஈமானிய தாய் கலிமா சொல்லிக்கொடுத்தது மற்றும் 6 வயது குழந்தை தனது இறுதி தருணத்தில் இறைவனிடம் போய் உன் செயல்களை முறையிடுவேன்! என்று கூறிய அந்த பிஞ்சு உள்ளத்தின் ஈமானிய உறுதியினை உணரக்கூட முடியாத பரிதாபம் உமக்குதான்! ஏவுகனைகளையும், அனு ஆயுதங்களையும், தோட்டாக்களையும் வேண்டுமானால் நீ விளைக்கு வாங்கலாம் ஆனால் ஈமானை விலைக்கு வாங்க முடியாது என்பதை செயல்வடிவிலே காட்டும் சிரியர்களின் இலக்கு சுவர்க்கமே!
பல நபிமார்கள், ஸஹாபாக்கள் வாழ்ந்த இடம்! நபி ஈஸா(அலை) வந்திறங்கக்கூடிய இடம், மஹ்ஷர் மைதானம் ஏற்படக்கூடிய இடம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அதிகமதிகம் பிராத்திக்கப்பட்ட இடம்தான் இன்று ஷியாக்காளால் சின்னாப்பின்னமாக்கப்பட்டுக் கொண்டிருகிறது. தந்தைக்கு பின் ஆட்சியை தனதாக்கிக் கொண்ட அதிபரின் ஆட்சி மேல் அதிருப்தி கொண்ட “சுன்னா” மக்கள் அரசு ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியுண்டதன் விளையே இது! “அதிபர் ஆஷாத்”த்தை எதிர்க்கும் அனைவரையும் பயங்கரவாதிகளாகவே பார்கிறோம் என்று கூறி ரஷ்யா தனது பயங்கரவாதத்தை அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்ந்துள்ளது. அரசோ ஈரான் இராணுவத்துடன் கைகோர்ந்து இனப்படுகொலை செய்து இன்பம் காண்கிறது.
உறவுகள், உயிர்கள், உடமைகள் என அனைத்தையும் இழந்து மரண பீதியில் அரவணைக்க ஆளின்றி, ஆதரவற்ற நிலையில் தத்தளித்துக் தவித்துக் கொண்டிருக்கும் அம்மக்களின் அவலக்குரல் அண்டை நாடான அரபுகளின் காதுகளுக்கு கேட்கவில்லை போலும், அல்லது ஷாம் மக்களோடு நெருக்கமாயிருங்கள் என்ற நபிகளாரின் வார்த்தைகள் மறந்து விட்டது போலும், நீங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற இறைவனின் வார்த்தையை ஏன் இஸ்லாமிய நாடுகள் கடைபிடிக்க முன்வரவில்லை என எமக்குத்தெரியவில்லை! உதவினால் நமக்கு பிரட்சனை வந்துவிடுமோ என்ற பயமெனில், உதவாவிடிலும் அதே பிரட்சனையை இமை மூடி விழிக்கும் நேரத்திற்குள் இறைவனால் ஏற்படுத்திவட முடியும் என்பதை அரபுகள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே நமது ஒவ்வொருவரது ஆசையும் தான் ஆயினும் ”ஓரிறைக் கொள்கை”யை என்று ஏற்றுக் கொண்டோமோ அன்றே இறைவன் புறத்திலிருந்து சோதனையும் தொடங்கிவிட்டது. பல்வேறு சோதனைகளைத் தாண்டிதான் சுவர்கத்தை அடைய முடியும் என்ற நபிகளாரின் கூற்று நினைவிற்கொள்ளத்தக்கது!
நாம் வாழும் இப்பகுதியில் சிரியாவில் நடந்தேறியதைப் போன்ற தோர் பெரும் நிகழ்வுகள் நடைபெறவில்லையென்றாலும் சிறிசிறு சோதனைகளால் சோதிக்கப்பட்டுதான் கொண்டிருக்கிறோம், அதையெல்லாம் பெரிதுபடுத்தாது தாமரை பூ போன்று மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக நாம் இருப்பினும், தமிழ்நாடு அரசு கொஞ்சம் கொஞ்சமாக தாமரையிடம் தஞ்சமடைவதை நோக்கும் போது நம்மை தண்ணீரிலே மூழ்கடித்துவிடுவார்களோ என்ற எண்ணம் எமக்கு மேலோங்கினாலும் இறைவனின் உதவியை ஆதரவு வைத்தவர்களாக நாம் வாழ்ந்து வருகிறோம். மியான்மர், பாலஸ்தீன், சிரியாவைத் தொடந்து இலங்கையுலும் சில தினங்களுக்குமுன் பௌத்தர்களின் இனவெறித்தாக்குதல் நடந்தேறி ஓர் இஸ்லாமிய சகோதரரின் உயிர் எரிக்கப்பட்டு பறிக்கப்பட்டதை எண்ணும்போது இதயம் வலிக்கிறது. “முஃமின்களை அநியாயமாகக் கொலை செய்பவனுக்கு நிரந்தர தங்குமிடம் நரகம்தான்’ என்ற இறை எச்சரிக்கையை எதிராக நடப்பவர்கள் சிந்தித்தால் ஜெயம் பெறுவார்கள்.
“உலகெங்கிலும் இஸ்லாமியர்களுக்கு இவ்வளவு அநியாயம் நடக்கிறதே! இறைவன் பார்த்துக்கொண்டா இருக்கிறான்” என சில அறிவீனர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆம்! எம் இறைவன் அனைத்தையும் பார்க்க கூடியவனும், செவியேற்கக் கூடியவனும்தான். ஆனால் “கண்கள் நிலைக்குத்தியிருக்கும் காலம் வரை அநியாயக்காரர்களுக்கு அவகாசம் கொடுத்திருக்கிறேன்” என்று ஏற்கனவே கூறிவிட்டான். நமைப்போன்று அவசரக்காரனல்ல அவன். இறுதியில் அவனது பிடி மிகக் கடுமையானது அப்போது அவனிடமிருந்து அநியாயக்காரர்களை காப்பாற்ற யாருமிருக்க மாட்டார்கள் என்பதை உணர முன்வரவேண்டும்.
மிகக்கொடுமையான முறையில் அநியாயக்காரர்களால் “ஷஹீதாக்கப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் உயிருடன் தான் இருக்கிறார்கள் மரணிக்கவில்லை. அவர்களுக்கு உணவளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்ற நபிமொழி நம்மை ஆசுவாசப்படுகிறது.
இஸ்லாமிய சொந்தங்கள் நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார்களே என்ற சஞ்சலத்தில் நாம் உலன்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்கள் ஒரு சொட்டு இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் அவர்களது அனைத்துப்பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிட்டது, சுவர்கத்திலுள்ள தமது இருப்பிடத்தை காண்பார்கள் உயிர் உடலை விட்டு பிரியும் முன். கபுறுடைய வேதனை அவர்களுக்கு கிடையாது. மறுமையில் மஹ்ஷர் பெருவெளியின் திடுக்கிடும் சூழலிருந்து விடுவிக்கப்பட்டு சாந்தமாக இருப்பார்கள். அங்கே கிரீடம் அணிவிக்கப்படும். அதிலுள்ள 1 முத்து இந்த உலகம் மற்றும் உலகத்திலுள்ள அனைத்தையும் விட சிறந்தது. “ஹுருள் ஈன்கள்” அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்படுவார்கள். மேலும் தன்னுடைய குடும்பத்தினர்களில் 70 பேருக்கு ஷபாஅத் செய்யக்கூடிய வாய்ப்பளிக்கப்படும் என்ற இறைத்தூதரின் சுபச்செய்தி ஷஹிதாக்கப்பட்ட எம் சகோதர சகோதரிகளுக்கு கிடைத்துவிடலாம் என்ற நம்பிக்கை நிம்மதியடையச் செய்கிறது. அநியாயத்திற்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் என் உறவுகளின் ஈமான் மென்மேலும் வலுப்பெறவும், தமது இருப்பிடத்திலே நிம்மதியாக தங்கிடவும், அநியாயக்காரர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் நமது ஒவ்வொரு தொழுகையிலும் உதவி தேடுவதே நாம் நமது இருப்பிட்த்திலே இருந்துக் கொண்டு நாம் அவர்களுக்கு செய்யும் உதவி அநியாயக்காரர்களுக்கெதிராக ஆயுதமேந்த முடியாத நம்மின் ஒவ்வொருவரது துஆவும் அவர்களது ஆயுதத்தை விட கூர்மையானது.
கட்டுரையின் ஆரம்பத்தில் அழுத்திப் பிடித்து எழுதத் தோன்றிய எம் நெஞ்சம், அவலத்தை முடிந்தளவு எடுத்துச் சொன்ன திருப்தியுடன் “அல்லாஹ்வின் உதவி அருகாமையில் இருக்கிறது” என்ற இறைவசனமும் “ஷாமிற்கு வெற்றி இருக்கிறது” என்ற நபிமொழியிம் தான் நிம்மதியளிக்கிறது.
|