நம் வாழ்க்கை முறையினை எந்த முறைப்படி அமைத்து கொண்டு வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே நோயற்ற வாழ்வாகவும் மட்டுமின்றி நீண்ட ஆயுளைப் பெற்ற வாழ்வாகவும் நம் அனைவரின் வாழ்க்கையும் அமையும் என்பதை நினைவில் வைத்த்துக் கொள்வது நல்லது.
உலக சுகாதார ஆய்வறிக்கை இன்னும் சில வருடங்களில் நமது நாடு “ “சுகர்” குறையுடன் வாழும் மனிதர்களின் தலை நகரமாக திகழும் என்னும் அதிர்ச்சிச் செய்தியை அண்மையில் வெளியிட்டுள்ளது. தீடீரென பூகம்பத்தை நம் கண்முன் கண்டது போல் உள்ளதல்லவா?
துன்பத்தில் தான் இன்பம் இருக்கிறது எனவே துன்பத்தை எதிர்க்கொள்ள தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்பவனே சிறந்த மனிதன். துன்பத்தில் மிகக்கொடுமையான துன்பம் எது என்றால்? நாம் உளப்பூர்வமாக நேசிக்கும் மனிதர்களை தீடீரென்று அல்லது கொஞ்சம் கொஞ்சமாக இழக்கச் செய்யும் மரணம் ஆகும்.
ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் “ஒரு மனிதனின் பிறப்புடனேயே இறப்பும் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் இடைப்பட்ட வாழ்க்கைப் பயணத்தில் சந்தோஷத்தை மட்டுமே நம்மால் வெல்ல முடியும்!. அப்படிப்பட்ட சந்தோஷத்தை எப்படி போராடி வெல்வது என்பது தான் இன்றைய நடைமுறை சவாலாக உள்ளது?
மனிதர்கள் பெரிதும் கவலைப்படுவது நோய்களைக் கண்டுதானேஇ தவிர தனது அறியாமையைக் கண்டு கூட அவர்கள் அஞ்சுவதில்லை அவர்;களின் அறியாமையைக் கண்டு டாக்டர்களும், மற்றவர்;களும் தானே வருந்துகின்றனர்.
முதலில் தெளிவாக தெரிந்துக் கொள்ளுங்கள் B.P. சுகர் இவை இரண்டும் நோயல்ல! ஒரு குறையே! நோய் என்றால் இரண்டொரு தினத்தில் குணமாகி விட வேண்டும். ஒரு மனிதனின் மரணம் வரை கூடவே வருகிறது என்றால் அது குறையாக மட்டுமே இருக்க முடியும். உதாரணமாக கண்பார்வை சரியாக தெரியவில்லை என்று கண்ணாடி அணிந்துக் கொள்கிறோம் இது நோயா? அல்லது குறையா? “ “தெளிந்தால் நீரோடை கலக்கினால் சாக்கடை”.
B.P. சுகர் இரண்டும் ஒரு தாய் பெற்ற குழந்தை போன்றது. B.P யை எப்போதும் சரியாக வைக்காவிட்டால் கூடவே வருவது சுகர்தான்.சுகரை எப்போதும் சரியான அளவில் வைக்காவிட்டால் அடுத்து வருவது B.P தான்.
சுமாராக 40 வயதில் ஒருவருக்கு B.P சுகர் வருகிறது என்பதற்கு. பத்து வயதில் ஒருவரின் உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை வாழ்க்கை நெறிமுறையும் தான் மிக முக்கியக் காரணம் என மருத்துவம் கூறுகிறது. பரம்பரையும் ஒரு காரணம் என்றாலும் நாம் அறிவால் கூட அதை வெல்ல முடியும். அதற்கான முயற்சியும், பயிற்சியும் நம்மிடம் தான் உள்ளது.
ஒரு மருத்துவ குறிப்பு நமதூரில் வீட்டுக்கு ஒரு டீ.P அல்லது சுகர் உள்ளவர்கள் இருப்பதாக சொல்கிறது. ஆனால் நம்மில் பலரும் தன்னுடைய ஆரோக்கிய வாழ்வுக்காக செய்ய வேண்டிய முக்கிய கடமைகளை செய்ய நேரமில்லை என்று கருதி தவிக்கிறோம் அல்லது தவிர்க்கிறோம். இன்று முதல் காலை கதிரவனுக்கு முன் எழுந்திருங்கள் இருவகை நன்மைகள் ஒன்று நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, மற்றொன்று படைத்தவனை வணங்கவும் பிரார்த்திக்கவும்.
வாழ்வில் நோய்கள் வராமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளை நாம் உருவாக்கி கொள்வது நம்மிடம் தான் உள்ளதே!. தவிர மருத்துவர்களிடமோ, மருந்துக்களிடமோஇ பரிசோதனை கருவிகளிடமோ இல்லை என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விட அவை வராமல் தடுப்பதற்குரிய வாழ்க்கை நெறியை சரியான முறையில் பின்பற்ற கற்றுக் கொள்ளுங்கள்.
மனிதனின் உடல் நிலையின் அமைப்பு – செரிமான முறைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை ஒட்டியே இப்போதும் உள்ளது அப்போது மக்களிடத்தில் ‘பட்டினி’ – உடல் உழைப்பு என்பது மிக சர்வ சாதாரணம்.ஆனால் இன்றைய விரைவு உணவு (Fast Food) முறைக்கு ஏதுவாக இந்த உடல்கூறுகள் அமையப்பெறவில்லை என்பது தான் முதற்காரணம் மூலக்காரணம்.
நாமும் அதை மெய்ப்பிக்கும் விதமாக ஆடிஒடி, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதை எல்லாம் பரணையில் மூட்டைகட்டி வைத்து விட்டு இயந்திரங்களை நம்பியே! நாமும் இயந்திரமாகி வி;ட்டோம். எப்போதும் உட்கார்ந்தே ரிமோட் கொண்டு தொலைக்காட்சி முதல் இன்னும் எல்லாமும் செய்கிறோம். விளைவுகள் இளமையிலேயே நம்மை நாமே “உருளைக்கிழங்கு போண்டாக்களாக்கி” கொழுப்பு சத்துக்களை அதிகமாக மிக அதிகமாக உடலில் இணைத்துக்கொள்கிறோம். பிறகு கறைப்பதற்க்கும் குறைப்பதற்க்கும் அவதிப்படுகிறோம் அவஸ்தைப்படுகிறோம்.
சிலர் ஏதோ ரேசில் கலந்துக்கொண்ட மாதிரி உணவை வேகவேகமாய் உள்ளே தள்ளுவார்கள். உணவு செரிப்பதற்க்கு 20 நிமிடங்கள் ஆகும். அதனால் அவர்களுக்கு வயிறு நிறைந்ததா -இல்லையா? என்றே தெரியாமல் போகிறது. இன்னும் சிலர் டி.வி பேப்பர் போன்றவற்றில் கவனம் சென்று விடும். தட்டில் எவ்வளவு உணவு வைத்தாலும் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போய்விடும். “ “டாக்டர் கேட்கிறார் வயிறு என்ன குப்பை தொட்டியா?”
வேறு சிலர் உறையாடிக்கொண்டே சாப்பிடுவது ஒருபடி மேலே சென்று பலர் “கலறிச்சோறு” என்றால் என்னமோ பத்தாண்டு “செல்”லில் – அடைபட்டு விட்டு இன்று தான் வந்த மாதிரி ஒருவார “கலோரியை” ஒரே மூச்சில் மேய்ந்து விடுவது ...இன்னும் சிலர் பிராணிகளை போன்று “மூடுவந்த போதெல்லாம் கண்டதையும் திண்பவராக ஒழுங்கு முறை கடைப்பிடிக்காததுமாக வாழ்ந்து வருகிறார்கள். மாவுபண்டங்கள் எண்ணெய் பதார்த்தங்கள் இவைகளுக்கு எல்லாம் இன்றே மணியடித்து விடுங்கள். மாமிசங்களைத் தவிர்த்தும் காய்கறிகளையும், பால், கோதுமை, பழங்களையும், கொதித்த நீரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பசிக்கும் போதும், நேரம் தவறாதும், அளவு கொண்டும், நல்லமென்றும், பொறுமையாகவும் உணவுகளை உடலுக்கு நல்ல ஊற்றமாக்கி கொள்ளுங்கள்.
இது ஒரு உண்மை சம்பவம் :- இரண்டொரு மாதத்திற்கு முன் “கிட்னியில் கல்” என்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் எனது நண்பர். டாக்டர் அன்று காலையில் சுகர் அளவு பார்க்கிறார் 98 என்கிறது ரிப்போர்ட். நாளை அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறி விடை பெறுகிறார் டாக்டர். மீண்டும் மாலை சுகர் அளவு பார்க்கப்படுகிறது 302 என்று ரிப்போர்ட் கண்டதும். டாக்டர் உடனே அறைக்கு, விரைந்து வந்து காலை நன்றாக சுகர் இருந்தது இப்போது மிக அதிகமாக உள்ளதே!என்ன சாப்பிட்டீர்கள் என்கிறார். நண்பர் இனிப்போ, பகல் உணவோ இன்னும் சாப்பிடவில்லை என்றார்.
அடுத்த கேள்வி தான் மிக முக்கியம்! நீங்கள் யாருடனும் சண்டை போட்டீர்களா? என்று டாக்டர் நண்பரை கேட்கிறார் ஆம்; துணைவியாருடன் இரண்டுமுறை என்கிறார். இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் B.P சுகர் உள்ளவர்கள் மாத்திரையும் உணவுக் கட்டுப்பாடு மட்டும் சமமாக உடல் ஆரோக்கியத்தை வைத்துக் கொள்ளாது. மாறாக கோபப்படாமல் சந்தோஷமாக எப்போதும் இருக்க பழகி கொள்வது தான் உடல் ஆரோக்கியம்.
மனிதன் எரிமலையாக வெடித்து கோபப்படும்போது முகத்தின் 72 தசைகள் வேலை செய்கிறது. அதே நேரத்தில் குற்றால சாரல் போன்று சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்து இருக்கும் போது முகத்தின் 17 தசைகள் மட்டுமே வேலை செய்கிறது. மன இறுக்கத்திற்கு இடம் கொடுக்காமல் வாழ்தல் மிக முக்கியம். “நோய்களை நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் ஆளுங் கட்சியாக வாழ்வோம். நம்மை நோய்கள் கடுமையாகிவிட்டால் எதிர்கட்சியாக வீழ்வோம்”
நம்மிடம் விழிப்புணர்வு என்பதே துளியுமில்லை. தேவையில்லாத வீண் பேச்சுக்களில் டி.வியிலும் அறிவுக்கு பொருந்தாத வீண் கதைகள் பார்ப்பதும் இப்படியெல்லாம் நேரத்தையும் காலத்தையும் கழிப்பதை விட நம் வாழ்க்கைக்கு தேவையான அறிய நல்ல செய்திகள் இந்த உலகில் கொட்டிக்கிடக்கிறது.அதில் மருத்துவ சம்பந்தமான தகவல்கள் டாக்டர்கள் மட்டுமே தெரிந்து கொள்ளட்டும் என்றென்னாமல் நாமும் அவைகளை தெரிந்து கொண்டால் நமக்கும் உதவியாக மற்றவர்களுக்கும் உபகாரமாக இருக்குமல்லவா?
இளமையிலோ முதுமையிலோ B.P சுகர் வரக்கூடாது வந்து விட்டால்? அதை எப்படி வெல்வது இதோ! எளியமுறை இனியமுறை உணவு கட்டுப்பாடு 30 சதவீதம்இ உடற்பயிற்சிகள் 30 சதவீதமஇ; மருந்துக்கள் 30 சதவீதமஇ; டாக்டரின் அறிவுறை 5 சதவீதம் நமது செயல்பாடு 5 சதவீதம் இதுதான் தாரகை மந்திரம் நடைமுறை படுத்திப் பாருங்கள். 100 வயதென்ன அதையும் தாண்டி ஆரோக்கியமாக வாழலாம். “வாழ நினைத்தால் வாழலாம் வழி உண்டு விழி கொண்டு.”
எதையும் பதற்றமின்றி சலனமில்லாமல் ஓடும் சிற்றோடை போல வாழ்க்கையைப் பார்க்க பழகியவரை நோய் அலைகள் அலக்கழிக்க முடியாது. அமைதியைஇ இன்பத்தை, சந்தோஷத்தை அறுவடை செய்வோர்க்கு ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான நாள்தான் என்று எண்ணுவதற்க்கு உள்ளத்தில் “சமச்சீர்மையை” அற்புதமான கருவியாக்கி வெல்லுங்கள்.
எந்த சூழ்நிலையையும் எதிர் கொண்டு வாழ்வோம் என்ற இன்றைய சிந்தனை நாளை வரும் நோய்களை கூட துரத்தியடிக்கும் என்பதை மறவாதீர்கள். “ “மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீர்த்திவலைகளை வாங்கும் கதிரோனின் ஒளியாகி” அவற்றையெல்லாம் பறந்தோடச் செய்யுங்கள்..
மருத்துவர்கள் ...
மருந்துக்கள்
மறந்து வாழ படைத்தவனிடம் பிராத்திப்போமாக |