இது கவிதையில்லை.........
உணர்வு...........தேடல்............
தவிப்பு............வேண்டுதல்...................
வாசிக்கும் போதே மனது வழி கசியும்
கண்ணீரே துஆக்களாய் மாறும்............
எனக்கு அதுவே போதும்.............. முஸ்தாக் அஹ்மத்
----------------------------------------
இதோ இன்னுமொரு ரமலான்.......
இதோ இன்னுமொரு ரஹ்மத்.............
பிறை கண்டு கொண்ட பேரானந்தம்.............
அல்லாஹ்வின் அட்சய பாத்திரம்
இஸ்லாத்தின் நான்காம் தூண்
இஸ்லாமியர்களின் ஆரோக்கிய தேன்.......
சொர்கத்தின் முகவரி....
ரய்யான் கதவை கடக்கும் ரகசியம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட நோன்பாளிகளுக்கு
அல்லாஹ் அளித்த அருட்கொடை..........
ஆயிரம் ஆயிரம் முறை கேட்டாலும்
இன்னும் அதிசயமாகவே தோன்றும்
லைலத்துல் கத்ர் இரவும் அதன் ஆயிரம் மாத நன்மைகளும்...
பாவ மன்னிப்பிற்காய்
படைத்தவன் கொடுத்த பாக்கியம்.........
இந்த நிமிடத்தின் நிஜத்திலும்
இருப்பின் நிச்சயத்திலும்
ரமலானை வரவேற்பதோடு............
மிச்ச மிருக்கும் துஆக்களை
மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் மனது............
காலராவிலும் கான்செரிலும்
காணமல் போனது - எங்கள்
மருத்துவத்தின் மகத்துவம்................
உன்னிடம் சரணடைவது ஒன்றே உத்தமம்..............
காப்பாற்று................ கதறும் குரல்களை காதிலேற்று............
குறைந்த வணக்கங்களோடு
அருகதையற்ற விண்ணப்பம் .....
இருப்பினும்
கருணையாளனே.................
குறைகொண்ட வணக்கங்களை
நிறையாக்க- ரமலான் எனும் ரஹ்மத்
இறக்கி ரசித்தவனே...............
நோயில்லா சந்ததிகள் கொடு.........
உயிர் கொண்டு போகும் நோய்கள் தவிர்........
தாங்கும் சக்தி கொடு.......... தடுக்கும் மருந்து கொடு........
மன்னிக்கப்பட்ட பாவங்கள்..
மீண்டும் படராத மனம் கொடு............
ஜக்காத் கொடுக்க ஏழைகள் தேடும் இஸ்லாமியர்கள்..........
இம்மையில் நோன்பு திறக்கும் போது குளிர்ச்சி
மறுமையில் உன்னை சந்திக்கும்போது மலர்ச்சி
இவையாவும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவாய் இப்போதே வேண்டும்..........
2. Re:ரய்யான் கதவின் சாவி... வர... posted by:முஹம்மது ஆதம் சுல்தான் (RIyadh) on 19 July 2012 IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20839
ராமலாம் மாதம்,மனத்தளவில் நினைத்தாலே மகிமைபீறிடுகிறதே!
மாடிமேல் மாடிக்கட்டி கோடியில் கொழிக்கும் கோமானும், குருவி கூடுபோல் குடிசையில் வாழும் ஏழையின் பசியை உணர இஸ்லாம் கோடிட்டு காட்டிய கொள்கையில் நோன்பிருந்து தன் உணர்வுகளுக்கு ஒர் வலயம் அமைத்து வல்லோனிடம் விழிநீர் வழிய வேண்டப்படும் வனப்பான மகிமைமிகு மாதமல்லோவோ இம் மாதம்.
இம்மாதத்தின் மகிமையை புகழ்ந்து எழுத முனைந்து வார்த்தைகளை இவ்வையகதிலிருந்தும்,வானத்திலிருந்தும் ஒன்று சேர்த்து குவித்தெழுதினாலும் எல்லை இல்லா எழுத்தாகதான் எஞ்சி நிற்குமேயல்லாது முடிவு பெறாது.
தம்பி முஸ்தாகின் மாணிக்கவரிகளில் மெய்மறந்து மூழ்கிவிட்டேன். இமகிமை மாதத்தில் மறை தந்த இறையோன் முஸ்தாகின் மனமுருகிய துவாவை கபூல் செய்து
நம் அனைவர்களின் நாட்டங்களையும் நிவர்தியாக்கி தந்தருள்வானாக ஆமீன்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
3. re posted by:daud (chennai) on 21 July 2012 IP: 59.*.*.* India | Comment Reference Number: 20840
அஸ்ஸலாமு அலைக்கும்
முஸ்தாக் அவர்களின் முத்து முத்தான வார்த்தைகளும் கவிதையும் நெஞ்சை தொட்டுவிட்டன வரிக்கு வரி முத்தாய்ப்பான கருத்துக்கள் .....மக்களின் நெஞ்சத்தை தொடட்டும்
மனதில் மாற்றம் ஏற்படுத்தட்டும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் நிலைக்கட்டும் ....
தங்களின் பிராத்தனை இறைவனிடத்தில் ஒப்புக்கொள்ளப்படட்டும் ஆமீன் .......................................
4. Re:ரய்யான் கதவின் சாவி... வர... posted by:Hameed Rifai (Yanbu (KSA)) on 22 July 2012 IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20841
நண்பர் முஸ்தாக் அஹ்மத்
இழைந்து குழைந்து
உருகி உருகி வடித்த
பொக்கிஷம் இந்த கவிதை
மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்
ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும்
அதன் பாதிப்பு
என் சுவாசம் வலி நுழைந்து
இதையத்தை தழுவி
விழிநீர் சுரக்க
எழுதிய கைகளை தேடுகிறது
நண்பரே நீங்கள் எழுதிய இந்த கவிதையில் சிலதை எடுத்து இங்கே பாராட்ட வினைந்தேன் இறுதியில் எதை பதிக்க எதை விடுக்க என்ற குழப்பத்தில் மொத்தத்தையும் பதியவே ஆசைபடுகிறேன்
கண்ணியம் மிக்க ரமளானின் கருணை பொங்கும் அமல்களை கவிதை வடிவில் தந்து சகோதரத்தை வலிறுத்தி வடித்த தங்கள் கவிதை இன்றைய பொழுதுகளில் அவசியமானதும் அவசரமானதும்
உங்களோட அதிகம் நாள்கள் பழகும் பாக்கியம் எனக்கு கிடைகவில்லை ஆனால் சந்தித்த பொழுதில் எல்லாம் கவிதை பேசியே ரியாத் நகர வீதிகளில் நாம் உலா வந்திருக்கிறோம்
பல நேரங்களில் உங்கள் கவிதையின் குரலாகவே நான் இருந்திருக்கிறேன் என்ற இருமாபோடு கூடிய பெருமை எனக்கு எபோழுதும் உண்டு
மீண்டும் இணையும் வாய்ப்பை இறைவன் நமக்கு சீக்கிரம் குடுப்பான் என இறைஞ்சுகிறேன்
5. Re:ரய்யான் கதவின் சாவி... வர... posted by:K M SHAFEER ALI (CHENNAI) on 22 July 2012 IP: 59.*.*.* India | Comment Reference Number: 20842
அஸ்ஸலாமு அழைக்கும்
என் சஹோதரரின் நண்பனே
என் ஆசானே
எல்லோருடைய மனக்குமுறலும்
உங்கள்
கவிதையாக ?
தேடலாக ?
உணர்வாக ?
விழி வழியே
உள்சென்று
அனைவரின்
விழி நனைய செய்திருக்கும்
ஆசானே
உன் மொத்த தொகுப்பிற்கும்
முத்தான இரு வரிகள்
அனைவரையும்
கரைய வைத்த உணர்வுபூர்வமான
இரு வரிகள்
நோன்பிற்கும் பட்டினிக்குமான இடைவெளி
வணக்கங்களால் மட்டுமே நிரப்படுகிறது.........
அல்லாஹ் உங்கள்
எண்ணங்கள் செயல்கள்
தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி
தருவானாக ஆமீன்
முன்னாள் இளந்தென்றல் ஆசிரியரே
இந்நாள் ஆசிரியர் யார் ?
6. Re:... posted by:Ismail (Dammam) on 09 August 2012 IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21141
மாஷா அல்லாஹ்..
தரமான தகவல்களை உணர்வு பூர்வமான முறையில் வாசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி..
பழைய நண்பனுக்கு பாராட்டுக்கள். (பார்த்து 20 வருடங்களுக்கும் மேல் இருக்கும்.)
சிறு தகவல் திருத்தம்..
லைலதுல் கத்ரை பற்றி வரும் போது ஆயிரம் மாதங்கள் என்று வரி வந்தால் பொருத்தம்..
தொடர்ந்து தரமிக்க அரிய பல கவிதைகளை தர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross