Ø நோயின்றி வாழவும், ஆரோக்கியமாக இருக்கவும், காலை, மாலை தூய்மையான கடற்கரைப் பகுதி, பூங்கா மைதானத்திலும், மரம் நிறைந்த சோலையிலும் நடக்க வேண்டும்.
Ø நடப்பதை ஓர் கடமையாக கொண்டால் நலமாக வாழலாம்
Ø மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது.
Ø வாகன புகை விடும் சாலை வழியாக எப்போதும் நடக்காதீர் (புகை உடலுக்குபகை)
Ø நடப்பதினால் இருதயம் (இதயம்) புத்துணர்ச்சி அடைகிறது. இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும், அதிக இரத்த அழுத்தம் நடப்பதினால் குறைகிறது.
Ø நுரையீரலுக்கும் நல்லது, புற்றுநோய் ஏற்படும் இறப்பு பாதிப்பு அதிக அளவில் குறைகிறது. சா;க்கரை வியாதி உள்ளவா;கள் நடந்தால் இரத்தத்தின் சாக்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன், தொந்தி குறையும்.
Ø நடப்பதினால் மூட்டுவலி நீங்கும், இடுப்பு வலி போக்கும், சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும், மலச்சிக்கல் நீங்கிடும், இதயம் சீக்கிரத்தில் பழுதடையாமல் பாதுகாக்கும். நல்ல நடப்பது அஜீரண கோளாறு நீங்கிவிடும். இரவில் நன்றாய் தூக்கம் வரும். இரத்த குழாய் அடைப்பு நடப்பதினால் நீங்கும். தினமும் நடந்து சுகத்தை அள்ளுங்கள்.
எவ்வளவு தூரம் நடக்க வேண்டும், எப்படி நடப்பது?
Ø ஆபீஸல் வேலை பார்க்கின்றவர்கள் அல்லது தொழிலதிபர்கள் நடக்க போக நேரம் ஒதுக்குவதில்லை. அவா;கள் விட்டில் நடைபயிற்சி இயந்திரம் சைக்கிள் போன்ற ஓர் வாகனத்தை வீட்டில் வாங்கி வைத்து அதன் மூலம் நடைபயிற்சி செய்ய முடியும்.
Ø நடப்பதற்கான அளவு விதிமுறைகள் உள்ளன. அதை ஆலோபதி ஆங்கில டாக்டர், சித்தா டாக்டர்களும் தெளிவுபடுத்தி நூல்கள் எழுதி உள்ளனர். அவற்றை வாங்கி அவசியம் நாம் படிக்க வேண்டும். மக்கள் நலன் கருதி அவற்றை படித்து தேவையான குறிப்புகளை மட்டும் எழுதி உள்ளேன்.
Ø ஒருமைல் தூரம் நடக்க 2000 அடி நடக்க வேண்டும். துலையை குனிந்து தரையை பார்த்தவாறு நடக்கக் கூடாது. நிமிர்ந்த நிலை தோள் பட்டை சற்று மேலே தூக்கியவாறு ஆண்கள் கம்பீரமாக வேகத்துடன் நடக்க வேண்டும்.
Ø நடக்கும் போது நமது நடையின் அளவு அதாவது வலது காலுக்கும், இடது காலுக்குமிடையே உள்ள அளவு 2 ½ அடிமுதல் 3 அடி வரை என்ற அளவில் நடப்பதே நடையின் முக்கிய நோக்கமாகும். (ஆரம்பத்தில் குறைந்தது 2 அடியாவது நடை அமைய வேண்டும்.) நடக்கும் போது இருகைகளும் நன்றாய் அசைய வேண்டும்.
Ø ஆரம்பத்தில் மெதுவாகவும், ஒரு வாரத்தில் நடையின் வேகத்தை கூட்டுங்கள்.
Ø கவலையோடு நடக்கக் கூடாது. எல்லோரும் சேர்ந்து நடக்கலாம். ஆனால் பேசிக்கொண்டு நடப்பதை தவிர்க்கவும். வுயதான ஆண், பெண் துணைக்கு ஒருவரை அழைத்து நடக்கச் சொல்ல வேண்டும் ( பகவல் 12 மணி முதல் 3 மணி வரை நடப்பதை தவிர்க்கவும்)
Ø முதலில் ஒரு நிமிடத்தில் 70 அடி நடக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 2 மைல் கடந்து செல்ல வேண்டும். ஒரு நிமிடத்தில் 105 அடி நடை நடப்பதால் ஒரு மணி நேரத்தில் 3 மைல் தூரம் கடந்து விடலாம் (ஒரு மணி நேரத்தில் 2 மைல் கடந்து செல்ல பழகிக் கொள்ள வேண்டும்)
Ø கொஞ்சம் வயதானவர்கள் அதிகாலையில் இரண்டு பிஸ்கட் காஃபி, டீ, அருந்திவிட்டு நடக்கலாம். நடப்பதற்கு இடையில் தண்ணீர் அருந்தக் கூடாது. நடந்து வந்ததும் ஓர் இடத்தில் கை, கால்களை நீட்டி நன்றாக மல்லாந்து படுத்து கொள்ளவும்.
Ø 30 வயது உள்ளவர்கள் 13 நிமிடத்தில் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும்.
Ø 40 வயது முதல் 50 வயது வரை 15 நிமிடத்தில் ஒரு மைல் கடந்து செல்ல வேண்டும்.
Ø நோயாளிகள் டாக்டரிடம் கேட்டு நடப்பது நல்லது. கடற்கரை மணலில் வெறுங்காலுடன் நடக்கலாம்.
Ø நடப்பதை கணக்கிட ஸ்பீடோ மீட்டர் உள்ளது. அதை வாங்கி இடுப்பில்படும்படி நடக்கலாம். இதனால் கலோரி அளவு புரிந்து கொள்ள முடியும்.
Ø ஓடுவதைவிட, சைக்கிள் ஓட்டுவதைவிட, நீச்சலடிப்பதைவிட, ஜிம்முக்கு போவதை விட ரொம்ப ஈஸி காலை மாலை நடப்பதேயாகும்.
Ø வளைந்து நடப்பது, 8 முறையில் நடப்பது குறிப்பிட்ட சில நூலில் விளக்கம் பெறலாம்.
Ø இளைர்கள் சுமார் 6 கி.மீட்டர் தூரமும் சற்று வயதானவர்கள் 4 கி.மீட்டர் தூரம் நடந்து வருவது நல்லது.
நடப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
Ø இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பு கரைந்து விடுகிறது. இதயம் புத்துணர்ச்சி பெறும்.
Ø மெதுவாக நடந்தால் ஒரு மணிக்கு 240 முதல் 300 வரை கலோரின் எhpக்கப்படுகிறது.
Ø சற்று வேகமாக நடந்தால் ஒரு மணிக்கு 300 முதல் 360 வரை கலோரிகள் எரிக்கப்படுகிறது.
Ø வேகமாக நடந்தால் ஒரு மணிக்கு 360 முதல் 400 வரை கலோரி எரிக்கப்படுகிறது.
Ø இரத்த ஓட்டம் சீராக, இதயம் நன்றாக வேலை செய்ய தினமும் நடக்க வேண்டும்.
Ø தினமும் நடக்காதவர்களுக்குத்தான் பல்வேறு நோய் ஏற்படுகிறது.
Ø குறைந்தது தினமும் 45 நிமிடங்கள் நடந்து பழகிக்கொள்ள வெண்டுமாம்.
Ø குளிர்காலத்தில் காது, கழுத்து, பகுதியை மறைத்து மஃப்ளர் அணிந்து அதிகாலையில் தவறாமல் நடப்பதும் நல்லது. வெளியூர் சென்றாலும், நடக்கும் பழக்கத்தை ஒரு போதும் விட்டுவிடக் கூடாது.
Ø நபிகள் நாயகத்தின் நோய் நிவாரணி என்ற நூலில் நபிகளார் அவர்கள் தினமும் தன் வீட்டிலிருநது பேரீச்சம்பழ தோட்டம் வரை நடந்து சென்றதாக கூறுகிறது.
Ø மற்றொரு நூலில் ஷாஃபி இமாம் அவர்கள் கூறுகிறார்கள். சாப்பிட்ட பின் 80 எட்டுகள் நடந்து கொள்ளவும் இதயம் கல்லாகாது என்றார்கள்.
ஸ்பீடோ மீட்டர் என்றால் என்ன?
ஸ்பீடோ மீட்டர் என்பது ஒரு மினி கருவி இதை நடப்பவர்கள் தனது இடுப்பில்படும்படி அணிந்து நடந்தால் - நடக்கும் தூரத்தையும், கலோரின் அளவையும் தெளிவாகக் காட்டும். ஆமொpக்காவில் வேலைபார்த்துக்கொண்டு எய்ம்ஸ் ஆஃப் இந்தியா தொண்டு நிறுவனத்தில் பொதுபணி செய்யும் காயல்நகர அலியார் சாஹிபு ஸ்பீடோ மீட்டரை எனக்கு தந்து சென்றார்கள். நமதூரில் காலைமாலை நடக்கப் போவோர்களுக்கு நடைபயிற்சி கிளப் ஏற்படுத்தினால் எல்லோருக்கும் ஸ்பீடோமீட்டர் தருவதாக கூறுகிறார் அவர்.
குறிப்பு:
நடப்பது பற்றி நூலிலிருந்து மக்கள் நலன் கருதி தொகுத்தேன். டாக்டா; எஸ். அமுதக்குமார் M.B.B.S., M.C.I.B., எழுதிய நலம் தரும் நடை பழக்கம் (நமதூர் அரசு நூலக வாரிசை எண்:20470) மற்றும் அன்னை கதிஜா அறிவு நூலகம் (இது ஏ.எல்.எஸ்.இன் சொந்த நூலகம்) நடை நோய்க்கு தடை (8-ம் நடை பயிற்சி என்றால் என்ன?) சித்தா டாக்டர் இரா. பூபதி எழுதிய நடைபயிற்சி அதன் பயன்களும் இவைகளில் இன்னும் மேலதிகாமான தகவல் உள்ளது. இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் நலம் தரும் வெங்காயம் - பூண்டு, சீரகம். |