Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:52:33 PM
திங்கள் | 24 பிப்ரவரி 2020 | துல்ஹஜ் 207, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2212:3715:5818:3319:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:33Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:03
மறைவு18:28மறைவு19:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2305:4706:12
உச்சி
12:31
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:38
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 55
#KOTWEM55
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், செப்டம்பர் 25, 2012
என் கேள்விக்கு இறைவனின் பதில்!

இந்த பக்கம் 4715 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்!

துபாய் காயல் நல மன்றத் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் கருத்தாழமிக்க நல்ல பல மின்னஞ்சல்களை அவ்வப்பொழுது அனுப்பி வைப்பார்கள். அதில் சமீபத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் என்னை மிகவும் ஈர்த்தது.

டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு நகரத்தில் நடக்கவிருந்தது. அந்த மாநாட்டில் டாக்டர் அஹ்மதுக்கு ஒரு விருது வழங்கப்படவிருந்தது. அவர் அண்மையில் நடத்திய ஒரு நீண்ட நெடிய மருத்துவ ஆராய்ச்சிக்காக, அதனைப் பாராட்டும் விதமாக அந்த விருதை வழங்கி அவரை கௌரவிக்க இருந்தார்கள்.

அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார் டாக்டர் அஹ்மத். அந்த ஆராய்ச்சிக்காக மிக நீண்ட காலமாக, கடினமாக உழைத்திருந்தார் அவர். ஆராய்ச்சிக்காக தான் பட்ட சிரமங்களுக்கெல்லாம் ஆறுதலாக இந்த விருது அமையும் என்று அவர் எண்ணினார். விமானம் புறப்பட்டது. புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் விமான ஓட்டுனர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். விமானத்தில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறதென்றும், அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கப் போவதாகவும் அவர் அறிவிப்பு செய்தார்.

தான் உரிய நேரத்தில் மாநாட்டை அடைவோமா என்று கவலை கொண்ட டாக்டர் அஹ்மத் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக உதவி மேடைக்கு ஓடினார். அங்கே இருந்த பெண்மணியிடம் அவரது நிலையை எடுத்துச் சொன்னார். தான் போக வேண்டிய இடத்திற்கு உடனடியாகக் கிளம்பக் கூடிய அடுத்த விமானத்தைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொண்டார்.

அந்தப் பெண்மணி அடுத்த குண்டைப் போட்டார். அடுத்த பத்து மணி நேரத்திற்கு அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு விமானமே இல்லை என்றும், அதனால் தன்னால் அவருக்கு உதவ முடியாது என்றும் வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால் ஓர் ஆலோசனை கூறினார். ஒரு காரை வாடகைக்கு எடுத்து ஓட்டிச் சென்றால் நான்கு மணி நேரத்தில் சென்று விடலாம் என்று கூறினார்.

வேறு வழியில்லாததால் அந்த ஆலோசனையை அவர் ஏற்றுக்கொண்டார். சாதாரணமாக நீண்டதூரப் பயணத்திற்கு கார் பயணத்தை அவர் விரும்ப மாட்டார்.

ஒரு காரை வாடகைக்கு எடுத்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். சிறிது நேரத்தில் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தட்பவெப்ப நிலை திடீரென்று மாறியது. கனமழையுடன், கடுமையான புயல் காற்று வீசத் தொடங்கியது. மழையின் அடர்த்தியில் அவரால் காரை ஓட்டிச் செல்ல முடியவில்லை. சாலையைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. இந்தக் குழப்பத்தில் அவர் போக வேண்டிய ஒரு வளைவைத் தவற விட்டார். அவரை அறியாமலேயே வண்டி வழி மாறிச் சென்று கொண்டிருந்தது.

இரண்டு மணி நேரக் கடினப் பயணத்திற்குப் பின்னர் தான் வழி தவறி விட்டோம் என்பது அவருக்கு உறுதியானது. பாலைவனச் சாலையில், பயங்கர புயல் காற்றுக்கிடையில், பயமுறுத்தும் மழையினூடே அவரின் இந்த நீண்ட கடினமான பயணம் அவரை மிகவும் தளர்த்தி. கடும் களைப்பை ஏற்படுத்தியது. நல்ல பசியும் எடுத்தது. ஏதாவது வீடு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சென்றார். ஒன்றும் தென்படவில்லை. சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, ஒரு சிறிய ஓட்டு வீடு கண்ணில் தென்பட்டது. காரை நிறுத்தி, அந்த வீட்டின் கதவைத் தட்டினார். ஒரு வயதான பெண்மணி கதவைத் திறந்தார். அந்தப் பெண்மணியிடம் தனது நிலையை விளக்கிய டாக்டர் அஹ்மத், தொலைபேசியைப் பயன்படுத்த அனுமதி கேட்டார்.

அந்த வீட்டில் தொலைபேசியும், மின்சாரமும் இல்லை என்று தெரிவித்த அந்த வயதான பெண்மணி அவரை உள்ளே வருமாறு அழைத்தார். மிகவும் களைத்துப் போய் இருப்பதால் தேநீரும், உணவும் அருந்திவிட்டுச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். டாக்டர் போக வேண்டிய இடத்திலிருந்து வழி தவறி நீண்ட தூரம் வந்துவிட்டதாகவும், சரியான பாதையை அடைவதற்கே இன்னும் நிறைய நேரம் பிடிக்கும் என்றும் அந்தப் பெண்மணி கூறினார்.

பசியும், களைப்பும், குளிரும் அவரை யோசிக்க விடவில்லை. அந்தப் பெண்மணியின் அழைப்பை ஏற்று உள்ளே சென்றார். மேசையில் சூடான தேநீரும், உணவும் இருக்கிறது என்றும், அதனை அருந்துமாறும் கேட்டுக்கொண்ட அந்தப் பெண்மணி தான் தொழுது விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

தேநீரை உறிஞ்சிய டாக்டர் அஹ்மத் அப்பொழுதுதான் அதனைக் கவனித்தார். மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்தில் தொழுது கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் அருகில் ஒரு குழந்தை தொட்டிலில் படுத்துக் கிடந்தது.

ஒரு தொழுகை முடிந்ததும், கையேந்தி பன்னிப் பன்னி மன்றாடிப் பிரார்த்தனை புரியும் அந்தப் பெண்மணி அடுத்த தொழுகையை ஆரம்பித்து விடுவார். மீண்டும் பிரார்த்தனை. மீண்டும் மன்றாட்டம். இதனைக் கவனித்துக்கொண்டிருந்த டாக்டர் அந்தப் பெண்மணிக்கு ஏதோ ஓர் அவசியத் தேவை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டார்.

தொழுகையை முடித்து அந்தப் பெண்மணி எழுந்ததும் டாக்டர் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வான் என்ற நம்பிக்கையும், ஆறுதலும் கூறினார்.

அவர் நிறைய பிரார்த்தனைகளைச் செய்ததையும், மிக நீண்ட நேரம் தொழுததையும் தான் கவனித்ததாகவும், ஏதாவது தன்னாலான உதவிகள் வேண்டுமென்றால் தான் செய்து தருவதாகவும் டாக்டர் அந்தப் பெண்மணியிடம் கூறினார். அந்தப் பெண்மணி புன்முறுவல் பூத்தார். அல்லாஹ் தன் அனைத்துப் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொண்டதாகவும், ஒரே ஒரு பிரார்த்தனை மட்டும் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதாகவும் கூறினார்.

அந்தக் குறிப்பிட்ட பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாஹ் ஏன் இன்னும் பதில் தரவில்லை என்று தனக்குத் தெரியவில்லை என்றும், தனது பலஹீனமான ஈமான் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். சொல்லத் தடையில்லையென்றால் அந்தத் தேவை என்னவென்று தன்னிடம் கூறும்படி டாக்டர் கேட்டுக்கொண்டார்.

அதனைச் சொல்வதாக ஆமோதித்து தலையாட்டிய அந்த அம்மையார் சொன்னார்:

“அந்தத் தொட்டிலில் இருக்கும் குழந்தை என் பேரன். அவனுடைய பெற்றோர்கள் அண்மையில் நடந்த விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார்கள். இந்தக் குழந்தைக்கு அரிய வகை புற்றுநோய் உள்ளது. நான் போகாத மருத்துவமனை இல்லை. பார்க்காத டாக்டர்கள் இல்லை. குழந்தைக்கு சிகிச்கை அளிக்க முடியாது என்று எல்லோரும் கையை விரித்துவிட்டனர். என் பேரனுக்கு உள்ள அரிய வகை புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு ஒரே ஒரு மருத்துவரால்தான் முடியுமாம். அவர் பெயர் டாக்டர் அஹமதாம். ஆனால் அவர் இருக்குமிடம், நான் இருக்குமிடத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. அவரை நான் காண்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆதலால்தான் நான் அல்லாஹ்விடம் அல்லும், பகலும் டாக்டர் அஹமதுவைச் சந்திப்பதற்கும், அவர் என் பேரனுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு மன்றாடிப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்.” இதனைக் கேட்ட டாக்டர் அஹ்மதின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது. “அல்லாஹ் மிகப் பெரியவன். விமானத்தில் கோளாறு, பயங்கரப் புயல், பாதை தவறியது… இவையெல்லாம் ஏற்பட்டது எதற்கு என்று இப்பொழுதுதான் எனக்கு நன்றாகப் புரிகிறது. அல்லாஹ் டாக்டர் அஹ்மதுவைச் சந்திப்பதற்கு உங்களுக்கு வழியை ஏற்படுத்தித் தரவில்லை. மாறாக, டாக்டர் அஹ்மதுவையே உங்களிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான். ஆம்! நான்தான் டாக்டர் அஹ்மத்…” என்று கூறினார் டாக்டர்.

திடுக்கிட்ட அந்த அம்மையாரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். உடனே தன் கைகளை உயர்த்தி இவ்வாறு கூறினார்: “யா அல்லாஹ்! நீ மகா பெரியவன், மகா கருணையாளன்…!”

அந்த மின்னஞ்சல் இத்தோடு நிறைவுற்றது. மின்னஞ்சலின் இந்தக் கடைசி வரிகளைப் படித்தவுடன் என் கண்கள் குளமாயின. பிரார்த்தனைக்குத்தான் எத்துணை வலிமை! கருணையாளனான அல்லாஹ் தன் அடியார்களின் பிரார்த்தனைகளுக்கு எவ்வாறெல்லாம் பதிலளிக்கின்றான்!

தன் அடியார்களைப் பிரார்த்தனை புரியும்படி அல்லாஹ் ஊக்குவிக்கவும் செய்கின்றான்.

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக. (சூரா அல் பகரா 2 : 186)

“பிரார்த்தனை… அதுவே ஒரு வணக்கம்” என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நம் தேவைகளைக் கேட்பதற்கு, நம் மனப் பாரத்தை இறைவனின் முன்பு இறக்கி வைப்பதற்கு நமக்கு நன்மையையும் அள்ளித் தரும் அற்புத மார்க்கம்தான் இஸ்லாம்.

பிரார்த்தனைகள்தான் எத்தனை வகை? மனிதர்கள் பலவிதம். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு விதமான தேவைகள். பல்வேறு விதமான பிரச்னைகள். அந்தத் தேவைகளை அடைவதற்கு, பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அவர்களுக்கிருக்கும் ஒரே வழி பிரார்த்தனைதான்.

பிரார்த்தனைக்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. பிரார்த்தனை செய்யும்பொழுது ஏனோதானோவென்று செய்வதில் எந்தப் பலனும் இல்லை.

மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்வதுதான் மிக்க பலன்களைத் தரும். எங்கோ சிந்தனைகளை வைத்துப் பிரார்த்தனை செய்வதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

“இன்னும் தெரிந்து கொள்ளுங்கள். மறதியான உள்ளத்தால் (நாவால் மாத்திரம்) கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்வது பிரார்த்தனையின் முக்கியமான அம்சம்.

“அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ)

“என் அடியான் என்னை எப்படி எண்ணுகின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம், திர்மிதீ)

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து, பூமான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.

“என் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது” என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ் அருளிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டும், தான் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்டும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“இறைவா! நீ எனது இறைவன். நீயே என்னைப் படைத்தாய். நான் உனது அடிமை. நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன். வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று ஓர் அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

பிரார்த்தனை புரியும்பொழுது அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இன்பத்திலும், துன்பத்திலும் பிரார்த்திக்க வேண்டும்.

“துன்பமான நேரத்தில் தன்னுடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் மகிழ்ச்சியான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ)

“மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள். கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னைத் தெரிந்து கொள்வான்” என நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

பிரார்த்தனை புரியும்பொழுது எந்தவித அவசரத்தையும் காட்டக் கூடாது. நிதானமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

பிரார்த்தனை புரியும்பொழுது இரு கைகளையும் ஏந்தவேண்டும்.

“தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நான் அப்பொழுது அவர்களின் அக்குளின் வெண்மையைப் பார்த்தேன்” என அபூ மூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார். (நூல் : புகாரீ)

“நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும், சங்கையுள்ளவனுமாவான். ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான்” என ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : திர்மிதீ)

பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள்:

1. நோன்பு துறக்கும்பொழுது.

2. லைலத்துல் கத்ர் இரவு.

3. இரவின் கடைசிப் பகுதி (தஹஜ்ஜுத் நேரம்).

4. ஃபர்லான தொழுகைகளின் இறுதிப் பகுதி.

5. பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில்.

6. அரஃபா தினத்தில்.

7. ஜும்ஆவுடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.

8. கடமையான தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்லப்படும் போது.

9. தொழுகையில் ஸஜ்தாவில் இருக்கும்பொழுது.

“உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் ஸஜ்தா செய்யும் நேரம். ஆகவே ஸஜ்தா செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

“ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். (அதில் கேட்கப்படும் பிரர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு) தகுதியுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. சேவல் கூவும் பொழுது.

“சேவல் கூவுவதைக் கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக் கேளுங்கள். அது மலக்கைக் காணும்போதுதான் கூவுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ)

11. பிரயாணி தன் பிரயாணத்தின் போது. (பைஹகீ)

12. பிற சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் பொழுது.

“ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாகக் கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு, “இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக. இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக” எனவும் பிரார்த்திப்பார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எப்படி பிரார்த்திக்க வேண்டும் என்று கற்றுத் தந்த கருணை நபிகள் (ஸல்) அவர்கள் எப்படி பிரார்த்திக்கக் கூடாது என்றும் கற்றுத் தந்துள்ளார்கள்.

“உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்து விடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிராக அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும்.” (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ், நூல் : முஸ்லிம்)

இரத்த உறவைத் துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திக்கக் கூடாது.

“யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தைத் துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் மூன்றில் ஏதேனும் ஒரு விதத்தில் இவ்வாறு பதில் அளிக்கிறான்:

1) அவன் கேட்டதைக் கொடுத்து விடுகிறான்,

2) மறுமைக்காக அதன் நன்மையைச் சேர்த்து வைக்கிறான்,

3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கைப் போக்கி விடுகிறான்

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித்தோழர்,

“அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம்” என்றார். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது” என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி), நூல் : ஹாகிம்)

ஆக, நாம் கேட்கும் எந்தப் பிரார்த்தனையும் வீண் போகாது. நமது பிரார்த்தனைகளை ஒன்று அல்லாஹ் உடனே ஏற்று பதில் தருவான். அல்லது நாம் பிரார்த்தனை செய்த அளவுக்கு நன்மை மறுமையில் நமக்கு வந்து சேரும். அல்லது நமக்கு ஏற்படும் தீங்குகள் அகற்றப்படும். அந்தத் தீங்குகளின் அளவு நாம் செய்யும் பிரார்த்தனையின் அகல, ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். நாம் பன்னிப் பன்னி மன்றாடிக் கேட்கும் துஆக்கள் கபூல் ஆகவில்லையென்றால் அந்த அளவுக்கு நமக்கு வரப் போகும் வேறு பல துன்பங்களை அல்லாஹ் அகற்றி விடுவான் என்று பொருள்.

ஆதலால் எத்தனை காலம்தான் பிரார்த்திப்பது, ஒன்றும் நடக்கவில்லை என்று நாம் சலித்துக்கொள்ளவோ, நிராசையடையவோ தேவையில்லை. விடாமல் நமது தேவைகளை அல்லாஹ்வின் மன்றத்தின் முன் வைத்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். அது தட்டுகின்ற இடத்தைத் தட்டி, முட்டுகின்ற இடத்தை முட்டும். அல்லாஹ் அதில் கண்டிப்பாக மேற்கண்ட மூன்றில் ஒரு பலனை வைத்திருப்பான்.

கருணையுள்ள ரஹ்மான் திருக்குர்ஆனில் நமக்கு பல பிரார்த்தனைகளைக் கூறியுள்ளான். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அழகிய பிரார்த்தனைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

அந்தப் பிரார்த்தனைகளைக் கவனித்தீர்கள் என்றால் அங்கே ஓர் அழகு மிளிர்வதைக் காண்பீர்கள். சுருக்கமான வார்த்தைகளில் அதிகப் பொருட்கள் அடங்கியவையாக அவை இருக்கும். எனவே நாமே சுயமாக வார்த்தைகளைப் போட்டு பிரார்த்திப்பதை விட இந்தப் பிரார்த்தனைகளைக் கேட்டால் அதிகப் பலன்கள் விளையும்.

பிரார்த்தனைகளைக் கேட்கும்பொழுது அல்லாஹ்விடம் உரிமையுடன் கேட்க வேண்டும்.

“உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். ‘நீ விரும்பினால் தா!’ என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை.” (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல் : புகாரீ)

மனிதனுக்கு பிரச்னைகள் அதிகாமாகும்பொழுது அதனை மனதிலேயே போட்டு பாரத்தை ஏற்றிக்கொண்டிராமல் இன்னொரு மனிதரிடம் அந்தப் பிரச்னைகளைச் சொன்னால் மனதின் பாரம் இறங்கிப் போகும்.

இந்த மனக்குறைகளை யார் யாரிடமோ சொல்வதை விட வல்ல இறைவனிடம் இறக்கி வையுங்கள். மனச் சுமையும் நீங்கும். பிரார்த்தனை வணக்கம் என்பதால் நன்மையும் கிட்டும். அதற்குத் தகுந்த பலன்களும் பலிக்கும்.

இன்றைய பரபரப்புக் காலகட்டத்தில், பணிச் சுமைகளுக்கிடையில் நமக்கு ஏற்படும் படபடப்பு, மன உளைச்சல் போன்றவற்றைக் களைய இறைப் பிரார்த்தனை அதிகம் செய்தல் நலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் தேவையற்ற நோய்கள் வருவது தவிர்க்கப்படுகிறது. எனவே பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து, உளப்பூர்வமாக வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்து ஈருலகிலும் வெற்றிகளை ஈட்டுவோமாக!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: Shahul Hameed (UAE) on 25 September 2012
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22402

மாஷா அல்லாஹ்,மனதை நெகிழஷ் செய்த கட்டுரை ,செருப்பு வார் அறுந்தாலும் கூட இறைவினடம் வேண்ட பணிக்கப்பட்ட நாம் நம்முடைய அத்துனை தேவைகளும் சடையாமல் இறைவனிடம் இறைதூதர் காட்டிய வழியில் பெற முயற்சிக்க வேண்டும்,எல்லாம் வல்ல நாயன் நம்முடைய அத்துனை ஹலாலான தேவைகளை யும் நிறைவேற்றி தருவானாக ஆமீன்,தாங்களும் என்னுடைய ஹக்கில் துவா செய்யவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: S.M. Hassan Moulana (Kuwait) on 25 September 2012
IP: 83.*.*.* Kuwait | Comment Reference Number: 22404

மாஷா அல்லாஹ், அருமையான கட்டுரை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: Ibrahim Ibn Nowshad (Bangalore) on 25 September 2012
IP: 220.*.*.* India | Comment Reference Number: 22406

மஷாஹ் அல்லாஹ்! அனைவரும் தெரிந்து பின்பற்றவேண்டியது. அல்லாஹ் நம் யாவருக்கும் தெரிந்து அமல் செய்யகூடிய பாக்கியத்தை தருவானாக. ஆமீன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: A.R.Refaye (Abudhabi) on 25 September 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22408

ஆசிரியர்: எம்.எஸ்.அப்துல் ஹமீது அவர்களுக்கு வாழ்த்துக்கள்-இக்கட்டுரைக்கான மூலம் மருத்துவர் அஹ்மத் அவர்களின் இந்த நடவடிக்கை உண்மையாக இருக்க வேண்டும். ஆசிரியர் அந்த குறிப்பை தரும் பட்சத்தில் இக்கட்டுரையை மற்றவகளுக்கும் அனுப்ப ஏதுவாக இருக்கும்.

A.R.Refaye- arrefaye@yahoo.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...என் கேள்விக்கு இறைவனின் பதில்!
posted by: Fariz (Dubai) on 25 September 2012
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22409

அஸ்ஸலாமு அலைக்கும்...

அல்லாஹ்வை நினைவு கூரும் அருமையான கட்டுரை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஒரே புகலிடம்
posted by: சாளை பஷீர் (மண்ணடி,சென்னை) on 25 September 2012
IP: 116.*.*.* India | Comment Reference Number: 22410

பிரார்த்தனையின் பலத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் சகா அப்துல்ஹமீத்.

அவருக்கு நன்றியும் பாராட்டுக்களும்!

சக மனிதனின் துயரமும் கண்ணீரும் வலியும் இன்னொரு மனிதனுக்கு ஒரு தடவை மட்டுமே தைக்கும்.

அதன் பிறகு அதை தொடர்ச்சியாக பார்க்கும் கேட்கும் பிறருக்கு சக மனிதனின் அந்த அவலம் சலித்து போய் விடும்.

உலகில் ஒரு மனிதன் விலை மதிப்பற்ற முன் நிபந்தனையற்ற அன்பை தனது பெற்றோரிடம் மட்டுமே பெற முடியும்.

அந்த அன்பும் கூட கால வரையறைக்குட்பட்டது.

சில பொழுது அந்த அன்பு இயலாமையினால் கூட கிடைக்காமல் போகும் வாய்ப்புண்டு.

ஆனால் அகிலங்களின் இறைவனின் அன்பும் முறையீடுகளுக்கு விடையளிக்கும் பண்பும் எல்லையற்றது.

சக மனிதனின் கரிசனத்தை விடவும் ,அன்னை தந்தையின் பாசத்தை விடவும் மிகைத்த அன்பை கொண்டவன் அந்த அல்லாஹ் மட்டுமே!

எத்தனை தடவை வேண்டுமானாலும் முறையிடக்கூடிய ஒரே இடம் அல்லாஹ் மாத்திரமே! அவன் சலிப்பதேயில்லை.

நமது பிரார்த்தனைகளும் முறையீடுகளும் அல்லாஹ்வினால் கேட்கப்படுவதையும் விடையளிக்கப்படுவதையும் உணர முடிவதென்பதுவும் ஒரு வகையான ஆன்மீக அனுபவமும் பாக்கியமும் கூட.

எல்லாருக்கும் அது கைகூடுவதில்லை.

அதே நேரத்தில் அது சாத்தியமில்லாத விடயமுமில்லை.

அல்லாஹ்வை சரியாக அறியாத வரைக்கும் பிரார்த்தனைகளின் வலிமையும் அவை தரும் ஆறுதலும் நமக்கு தெரியப்போவதில்லை.

"பிரார்த்தனையெல்லாம் அல்லாஹ்வினோடு பிரார்த்தன கேட்கான் அல்லாஹு மாத்ரம்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by: Muzammil (Dubai) on 25 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22411

அஸ்ஸலாமு அழைக்கும்

மாஷா அல்லாஹ் நல்ல கருத்துள்ள கட்டுரை. இதே மாதிரி இன்னும் எதிர்பர்தவன்னமாக. ஜசகல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...மாஷாஅல்லாஹ்...
posted by: மு.அ.கசாலி மரைக்கார். (காயல்பட்டணம்.) on 26 September 2012
IP: 14.*.*.* India | Comment Reference Number: 22415

மாஷாஅல்லாஹ்... அருமையான கட்டுரை, அறிந்த விஷியத்தையும் பலவீனமான மனிதர்களால் மறந்துவிடகூடிய சூழ்நிலைகளில் சிந்தனையை பலமாக தூண்டி எழுப்பச் செய்யும் துண்டுகோலக அமையும் இக்கட்டுரை.

மு.அ.கசாலி மரைக்கார். காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by: Vilack SMA (Nha Be , Vietnam) on 26 September 2012
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 22416

பிரார்த்தனையின் பலனை சொல்லும் கட்டுரை . இதோ இன்னும் ஒரு சம்பவம் .

சென்ட்ரல் ஸ்கூலில் 9 ம் வகுப்பு படிக்கும்போது ( 1981 ) பெட்டைகுளம் சாகுல் ஹமீது சார் சொன்னது . இவர் தொழுகை மற்றும் இபாதத்துகளில் அதிக ஆர்வம் உள்ளவர் . அல்லாஹ்வின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர் . இது , இவரிடம் பயின்ற மாணவர்கள் அத்தனை பேருக்கும் நன்றாக தெரியும் .

இவர் வெளியூரில் வேலை பார்த்த சமயம் ஒருமுறை , 10 ம் வகுப்பு பேப்பர் திருத்துவதற்காக ஒரு ஊருக்கு சென்றிருக்கிறார் . அப்போது , அந்த ஊரில் தொழுகைக்காக பள்ளிக்கு சென்றிருக்கிறார் . தொழுகை முடிந்து பள்ளியில் சற்று ஓய்வாக இருந்த சமயம் , அந்த இமாமுடன் பேசிக்கொண்டிருக்கும்போது , இருவரும் தங்களின் சொந்த விஷயங்கள் பற்றி பேசியிருக்கின்றனர் . சாகுல் ஹமீது சார் , தான் இந்த ஊருக்கு வந்த வேலை விஷயம் பற்றி சொல்லியிருக்கிறார் . இமாமும் ,தன் மகன் 10 ம் வகுப்பு பரீட்சை எழுதி இருப்பதாகவும் , படிப்பில் சுமார்தான் என்றும் சொல்லியிருக்கிறார் . மேலும் , அவன் எல்லா பாடங்களையும் பாஸ் பண்ணும் அளவுக்கு எழுதி இருப்பதாகவும் , ஆங்கிலத்தில் ஒரு பேப்பர் மட்டும் சந்தேகமாக இருப்பதாகவும் இமாம் சொன்னார்கள் . சாகுல் ஹமீது சார் அவர்கள் அந்த பையனுடைய விபரங்களை கேட்டறிந்துவிட்டு, அப்போதே , மனதால் இறைவனிடம் வேண்டிக்கொண்டு , அந்த இமாமுக்கு சற்று ஆறுதலும் கூறிவிட்டு , தன்னுடைய வேலைக்கு சென்றுவிட்டார்கள் .

ஆச்சரியம் ... இவர் கேட்ட துஆவிற்கு இறைவன் சற்றும் தாமதிக்காமல் பதில் தந்துவிட்டான் . ஆம் ... அன்று இவருக்கு , திருத்துவதற்காக வந்த பேப்பர் , இமாம் பையன் படிக்கும் பள்ளியுடையது . ஆங்கிலம் . இமாம் சொன்ன தகவல்களை கொண்டது . அந்த பேப்பர் கட்டுகளில் இமாம் பையனின் பதிவு எண் உள்ள பேப்பரும் இருந்திருக்கிறது . உண்மையில் பையன் பெயில் . ஆனால் சாகுல் ஹமீது சார் அவர்கள் 2 மதிப்பெண் கூடுதலாக போட்டு அந்த பையனை பாஸ் பண்ண உதவி இருக்கிறார்கள் . அடுத்த வேலை தொழுகைக்காக பள்ளிக்கு சென்றபோது , இமாமிடம் உங்கள் பையன் பாஸ் ஆகி விடுவதாகவும் , நடந்த சம்பவங்களை பற்றியும் சொல்லியிருக்கிறார் .

ஆக , கட்டுரையாளர் சொன்னதுபோல் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. அல்லாஹ்வின் உதவி சிலருக்கு விரைவாகவும் , சிலருக்கு சற்று தாமதமாகவும் கிடைக்கும் . எல்லாமே நாம் எப்படி கேட்கிறோம் என்பதை பொருத்தது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. பாரக்கல்லாஹு ஃபீக்க
posted by: முஹம்மது புகாரீ (Chennai) on 26 September 2012
IP: 14.*.*.* India | Comment Reference Number: 22425

அருமைச் சகோதரர் MSAH அவர்களின் கட்டுரை உள்ளபடியே உள்ளத்தைத் தொட்டது. அல்லாஹ் அவருக்கும் அவரது பேனாவுக்கும் அருள்வளங்களை நல்குவானாக.

கதை கூறி கருத்துகளை குர்ஆன், ஹதீஸ் வசனங்களுடன் பொருத்தியிருப்பது மிகவும் நன்று.

நம்மில் பலர் ‘துஆ’ போன்றவற்றில் ஆழமான நம்பிக்கையும் அழுத்தமான எண்ணமும் வைத்தால் நிச்சயம் அது கைகூடி வரும் என்பதில் ஐயமில்லை.

இம்மை முயற்சிகள் இமய மலை அளவுக்கு மேற்கொண்டாலும் இறைவனின் ஒப்புதல் இல்லையேல் அது விழலுக்கு இரைத்த நீரைப் போன்றுதான்.

ஆகவே, நம் ஒவ்வொரு முயற்சிக்கும் செயல்களுக்கும் அவசியம் தேவை தூய எண்ணமும் பிரார்த்தனையும் விடா முயற்சியுமே.எத்தகைய பிரச்சினைகள் என்றாலும் அது தூள் தூளாகி போகும் என்பதில் ஐயமில்லை.

இதுபோன்ற தலைப்புகளில் சகோதரர் ஆக்கங்களை இப்பகுதியில் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் நம் யாவரும் ஈருலக ஈடேற்றத்தை அளிக்கப் போதுமானவன்.

அன்புச் சகோதரன்
முஹம்மது புகாரீ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by: mubharak (dubai) on 26 September 2012
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22439

அஸ்ஸலாமு அழைக்கும்....

எனது அருமை சகோதரரே [என் கேள்விக்கு இறைவனின் பதில்] என்று மிகவும் அருமையான தலைபோடு தொடங்கிய கட்டுரை கண்டு வியப்புற்றேன்...

மிகவும் அழகாக, அருமையாக, ஹதிஸ்களின் விளக்கத்தோடு தெளிவான கட்டுரை, துவா செய்வதில் உலா விசயங்களை இந்த கட்டுரை முலம் அல்லா என்னை அறிந்துகொள வைத்துள்ளான் நான் உங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...

.....உங்கள் துவாவில் என்னையும் சேர்த்து கொள்ளுங்கள்......

.....இந்த பணிகள் தொடர மற்றும் உங்கள் வாழ்வில் பரகத் செய்ய எல்லாம் வல்ல அல்லா உங்களுக்கு உதவி புரிவானாக ஆமீன் ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. கண்கள் நனைந்தன...கட்டுரையைப் படித்த போது....!
posted by: M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) on 26 September 2012
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22442

கண் இமைப்பதும், மூச்சு விடுவதும், ஓர் அனிச்சை செயல்! இதப் பற்றி வெகுவாக யாரும் சிந்திப்பதில்லை! அதே வேளை கண் இமைக்க மறுத்தால், மூச்சுவிட மறந்தால் என அதன் பயன் மற்றும் விளைவுகளை ஓர் மருத்துவர் விளக்கும் போது தான் அதன் அவசியமும், சிறப்பும் நமக்கு சிந்தையில் தட்டுப்படும்! இதேப் போன்றுதான் இக் கட்டுரையும்.

படித்தேன்...படித்தேன்.... படித்துக் கொண்டிருக்கும் போதே கணனியை முன்னுக்குத் தள்ளி கண்களைப் பணித்து கரங்களை உயர்த்தி சலவாத்துடன் என் வேண்டுதலை வல்ல நாயன் அல்லாஹ்விடம் கேட்டேன். ஒரு நம்பிக்கையும், உற்சாகமும் பிறந்தது. இது தான் கட்டுரையாளரின் வெற்றி!

அவரது எழுத்தின் எண்ணமும்,நோக்கமும் வாசிப்பவர்க்கு பயன் தரக் கூடியதாக அமைந்திருப்பதற்கு இதுவே சான்று! ஒரே ஒரு சம்பவத்தைக் கூறி அடி மனதின் ஆழத்தில் குடி கொண்டுள்ள ஈமானிய நம்பிக்கையை ஊற்றெடுத்துப் பொங்கியெழச் செய்துள்ளார். அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்! ஆமீன்.

அன்புடன்,
-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re .......
posted by: mohaideen (Dubai ) on 27 September 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22455

மாஷா அல்லாஹு .. அருமையான தொகுப்பு . துவாவின் முக்கியத்துவத்தையும் அதை கேட்க்கும் முறை பற்றியும் முழுமையாக ஹதீத் மூலமும் அறிந்துகொள்ள முடிந்தது .. மெம்மேலும் உங்கள் படைப்புகள் தொடர வல்ல இறைவன் அருள்புரியானாக .....

என்றும் அன்புடன்
நெல்லை மைதீன் .. .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:Doctor Ahmed's Travel
posted by: Mohamed Zafarulla (Dubai) on 27 September 2012
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22457

அஸ்ஸலாமு அழைக்கும். இந்த மெயில் ஐ படிக்கும் போது நான் அழுது விட்டேன். எனது வேலை பறிபோன நேரத்தில் எனது வேண்டுதல் அல்லாஹ்விடம் மட்டுமே. ஒவ்வொரு வேளை தொழுகைக்கு பின்பும் மனமுருகி அழுது கேட்ட dhua ஆனது எனக்கு மீண்டும் என்னுடைய பழைய கம்பெனியிலேயே வேளை கிடைக்க வழி செய்தது. மாஷா அல்லாஹ். இறைவன் மாபெரும் கருணையாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by: shahin ahamed (calicut) on 27 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22460

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷாஅல்லா. தலைப்பை பார்க்கும் போதே கட்டுரையை பார்க்க ஆர்வமாக இருந்தது. கட்டுரையை படிக்கும்போதே உண்மையிலேயே கண்களிலிருந்து கண்ணீர்கள் வந்தன. தாயாரின் உள்ளமும் கண்களும் கண்ணீரில் குளிர்ந்தன.

பிரடி நரம்பை விட சமீபத்திலிருக்கும் அல்லாஹ்வை நினைவு கூறாமல், அல்லாஹ்வின் பாசத்தையும், கருணையையும் பெறாமல் நேரத்தை வீணடித்து தட்டளிபவர் எத்தனை பேர்? எல்லையில்லா அன்பும், எல்லையில்லா கருணையும் உள்ள அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய முறைப்படி பிரார்த்தித்தால், பலன் கிடைக்காமல் போவதில்லை என்பதை தீவிரமாக விளக்கியுல்லாய்.

சலவாத்து சொல்லி பிரார்த்தனை துடங்க வேண்டும் என்பதையும் இப்போதுதான் தெரிந்து கொண்டோம். இதுபோன்ற ஆக்க பூர்வமான, பலனுள்ள செய்திகளை, கருத்துகளை எண்ணங்களை உனக்குள் ஏற்ப்படுத்திய அல்லாஹ்வை துதிக்கின்றோம். அல்ஹம்து லில்லாஹ். மேலும் உன்பணி சிறக்க, ஆரோக்கியத்தையும் நல்ல சிந்தனையையும் தந்தருள்வானாக ஆமீன்

இப்படிக்கு உன் தாயார் மற்றும் தங்கை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. நன்றி
posted by: Mohamed Rasheed (Nagore) on 27 September 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22461

கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது . துவாவின் அருமையை புரிந்துகொண்டால் அனைவருமே அல்லாவிடம் நெருக்கம் ஆகலாம்.வல்ல நாயன் அல்லாஹு நமக்கு நல்லருள் புரிய துவா செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by: HAMEED FAIZAL (DUBAI ) on 28 September 2012
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22486

ஆழமான கருத்தை அழகாக எடுத்து வைத்துள்ளார்கள் ..இறைவனை நெருங்கும் வழி வெறும் சடங்கு சம்பிராதயமாக கேட்கும் துவா இறைவனை சென்று அடைவதில்லை ..எனவே நம்மை படைத்த இறைவனிடம் நாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் உரிமையுடன் கேட்கலாம் என்பதை காக்கா அழகாக சொல்லி இருக்கிறார்கள் நமது துஆவில் நாம் அவர்களையும் அவர்களது அறிவுப்பூர்வமான கருத்துக்கள் நமக்கு மீண்டும்,மீண்டும் கிடைக்கவேண்டுமென்று வேண்டுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:
posted by: N.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம் ) on 28 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22492

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் கட்டுரை மிகவும் அருமை மாஷா அல்லாஹ் !

கட்டுரையை படித்துக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு சோதனையான நிகழ்வுகளும் வரும்போதே என் மனதில் ஓர் எண்ணம் உதித்தது - இறைவனின் நாட்டப்படி ஏதோ ஓர் அதிசயம் நடக்கப்போகிறது என்று , அந்த அதிசயம் தெரிய வந்தபோது கண்கள் குளமாகின.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்கள் வாழ்விலே , எங்களை சூழ்ந்துள்ளவர்கள் வாழ்விலே சுபுஹான அல்லாஹ்! இது போன்று சம்பவங்கள் நடந்ததுண்டு - காட்சிகள் வேறு , காலங்கள் வேறு ஆனால் நிகழ்வுகள் ஒன்றுதான். ஆம் " துஆ " வின் வலிமைக்கு ஈடு இல்லைதான்.

பிரார்த்தனைக்கு எவ்வளவு வலிமை உண்டு என்பதை வல்ல அல்லாஹ்வின் உதவி கொண்டு நம்மிலே பலர் அறிந்திருக்கிறோம் - ஆனால் சிலரே முழு நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி பயனடைகிறோம்.

சகோதரர் அப்துல் ஹமீது அவர்களின் கட்டுரையின் மூலம் நாம் எல்லோருமே முழு நம்பிக்கையுடன் , அவர் குறிப்பிட்டிருக்கும் குர்ஆன் வசனங்கள் , நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளில் கூறியுள்ளபடி பிரார்த்தனை செய்தோமானால் நிச்சயம் அது பயனளிக்கும் என்பது திண்ணம்.

-----------------------------------------

சகோதரர் எழுதியுள்ள கட்டுரையின் வாயிலாக பல படிப்பினைகள் நமக்கு கிடைக்கிறது. பிரார்த்தனையின் வலிமையை மட்டும் அது எடுத்தியம்பவில்லை " இன்ஷா அல்லாஹ் ! " என்று நாம் கூற வேண்டியதின் அவசியத்தையும் வழியுறுத்துகிறது.

கட்டுரையில் வரும் டாக்டர், செல்ல வேண்டிய இடத்திற்கு , செல்ல வேண்டிய நேரத்திற்கு சென்றாரா / செல்ல முடிந்ததா?. அதனால்தானே , இறைவன் நம்மை " இன்ஷா அல்லாஹ்! " என்று சொல்லும்படி கூறுகிறான் . எங்கும், எதுவும் அவன் நாட்டப்படிதான் நடைபெறும் நம்முடைய என்னப்படியல்ல என்பதை உணர்கிறோம்.

இந்த கட்டுரையை அழகான சம்பவத்தோடும் , குர்ஆன் - ஹதீதுகள் எடுத்துக்காட்டோடும் விளக்கமாக நமக்களித்த சகோதரர் அப்துல் ஹமீது அவர்களை வல்ல அல்லாஹ் ! ஈருலகிலும் மேன்மையாக்கி வைப்பானாக ஆமீன்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by: fathima zuhera (vadakara) on 28 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22496

மாஷா'அல்லாஹ...... ரொம்ப அருமையா இருந்தது . உணர்வுகளை தூண்டியது .....அல்லா உங்களுடைய எழுத்து பனி தொடரவும் உங்களுக்கு அதிகமான ஞானத்தையும் கூலியையும் தருவானாக ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. துஆ செய்யத் தூண்டும் கட்டுரை!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 29 September 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22503

அழகான - அற்புதமான தகவலுடன் கூடிய கட்டுரையை சகோதரர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் நமக்குத் தந்துள்ளார்.

இன்றைய அவசர உலகத்தில், அலட்சியமாக நம்மால் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்ட ஒரு பயனுள்ள அமல் பிரார்த்தனை செய்தல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by: kithuru mohamed abbas (Dammam) on 29 September 2012
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22518

அஸ்ஸலாமு அழைக்கும்

மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான கட்டுரை உலக செய்தியும் இஸ்லாமிய விசயங்களையும் கலந்து எழுதி இருக்கிறார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by: Basheer Ahamed.S (Doha, Qatar.) on 30 September 2012
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 22543

அல்ஹம்துலில்லாஹ்!

அற்புதமான படைப்பு!

துஆ நமக்கும் அல்லாஹ்விற்கும் உள்ள தொடர்பு சாதனம் என்பதை எல்லோருக்கும் புரியும் எளிமையான விதத்தில் தந்துள்ளீர்கள்! எழுத்து நடை மிக அருமை! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

-பஷீர் அஹ்மத்,பண்பொழி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by: Thaha Mohamed Ilyas (Dubai) on 04 October 2012
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22601

மாஷா அல்லாஹ்... மிக நன்றாக இருந்தது. மனதைத் தொட்டது. நான் இந்தக் கட்டுரையை என் கல்லூரி நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டேன். அனைவரும் படித்திட வேண்டிய அருமையான கட்டுரை.

அல்லாஹ் நம் அனைவரது பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by: HM Shafiullah (Chennai) on 22 October 2012
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22968

Dear Hameed,

Could you please give me the numbers of Hadheeds you have quoted in your essay?

Regards
Shafiullah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved