உலகலாவிய வாழும் இணையதள வாசகர்கள் அனைவர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எழுத்தாளரை விட படிக்கும் நீங்கள் தான் அறிவாளிகள் என்று நம்புகிறேன். அதனால்தான் எதையும் பயந்து பயந்து ஆராய்ந்து எழுதுகிறேன். உங்களுடைய கருத்துக்கள்தான் என்னைத் திறம்பட எழுத வைக்கும் என்று நம்புகின்றேன். வரிக்கு வரி தெரியும் தவறுகளை தயவுசெய்து சுற்றிக்காட்டி என்னைத் திருத்த விரும்புகிறேன். (விமர்சனம் என்பதே குறைகளையும் நிறைகளையும் எழுதுவதுதானே). இந்த இணையதளம்தான் எனது முதல் கட்டுரையை வெளியிட்டு உலகறிய செய்தது. அவர்களை என் பேனாமுனை என்றும் நினைத்துப் பார்க்கும். இதுதான் நன்றியுடைய செயலாகும்.
இத்தொடரில் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகளை எழுதி வருகிறேன். நூலகம் சென்றோ-நூல் விற்கும் கடைகளுக்குச் சென்றோ புத்தகம் வாங்கிப் படிக்கும் வழக்கம் குறைந்து வரும் காலத்தில் என்போன்றோர் சதாபுத்தகத்தின் மீது ஓர் காதல் அன்பை பொழிவது ஏன் என்று கூடத் தெரியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு பொன்மொழி அறிந்துள்ளேன். கல்வியைத் தேடுபவர் மேலும் மேலும் கல்வியைத் தேடிக் கொண்டேயிருப்பார். இவர்களைப் போல யாசகம் கேட்பவரும் கிடைக்க கிடைக்க யாசகம் கேட்டுக் கொண்டே இருப்பார் என்று கூறியது பொன்மொழியை மேடை ஒன்றில் கேட்டிருக்கின்றேன்.
புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மை என்ன?
புத்தகம் படிப்பதால் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அறிஞர்கள் எழுதிய நூல்களை படிப்பதால் அனுபவம் கிடைக்கிறது, அத்துடன் ஓர் அறிஞரகா கூட மாற முடியும். பத்திரிக்கையிலோ, இணையதளத்திலோ எழுத வேண்டுமானல் நிறைய நூல்களை தொடர்ந்து படிக்க வேண்டும். குறிப்பு எடுத்து வைத்து கொள்வதும் காலம் வரும்போது, அதில் தேவைக்கு ஏற்ப எழுதிக்காட்ட முடியும். பட்டதாரிகளுக்கும் படிக்காதவர்களுக்கு உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியும். படித்த பட்டதாரி உடனுக்கு உடன் பதில் தந்துவிடமாட்டார். முடிக்காத முட்டாள் அறிவாளியை பட்டதாரியை வீழ்த்துவது போல வாய்சௌடால் பேசி மண்டையை வார்த்தையால் உடைத்துக் கொள்வான். அறிவாளி அதிகமாக பேசமாட்டான். செயலில் இறங்கினால் வெற்றிக்கனி அடைவான். புத்தகம் மனிதனை நேர்வழிப்படுத்தும். இஸ்லாத்தின் கருத்துக்களை எடுத்து வைக்கும் ஏராளமான நூல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. குர்ஆன் மொழிபெயர்ப்பு முழுவதையும் வாசித்தாலே முழுமையாக இறைவனையும், இறைத்தூதரையும் புரிந்துகொள்ள முடியும்.
வீண் விளையாட்டுக்கு மூன்று மணிநேரம் செலவு செய்யும் மனிதர்கள் தினமும் தன் பிள்ளைகளை நூலகம் அழைத்து வந்து அறிமுகப்படுத்துவார்கள். எத்தனை பேர் இருக்கிறார்கள்? இன்று இஸ்லாமிய நூல் எத்தனை வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது? படித்ததும் பழைய பேப்பர் கடைக்கும் அனுப்பும். அவலநிலை காலத்தை எண்ணிப்பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் குர்ஆன் தர்ஜமா இருக்க வேண்டும். வீட்டுத்தலைவி (உம்மா) ஒவ்வொரு நாளும் குர்ஆனின் சிறுபகுதியை தமிழில் படித்து பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். இதுபோல் புகாரி, முஸ்லீம் போன்ற நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளது. அதை வாங்கி நம் பிள்ளைகளின் திருமண பரிசாக தரலாம்.
பல கொள்கை வந்ததால் நமதூரில் பல்வேறு நூல்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்படுவதை காண்கின்றேன். வேதனையாக உள்ளது.
கிடைக்காத இஸ்லாமிய அரிய நூல்கள் கரையான் அரித்து வீதியில் வீசப்பட்டும், படிக்காமல் பல அரிய நூல்கள் பழைய பேப்பர் கடையில் தஞ்சம் அடைந்து கிடக்கிறது. காரணம் புத்தகங்களின் அருமைத் தெரியாததால் இலங்கையைச் சார்ந்த டாக்டர் எம்.எம். உவைஸ் ஹாஜி என்ற பேரறிஞரிடம் தமிழக இஸ்லாமிய புலவர்களின் பாமாலை, காப்பியம், சிந்து, முனாஜாத் போன்ற நூற்றுக்கணக்கில் நூல் சேர்த்து வைத்திருந்ததால் மதுரை தமிழ் பல்கலைக்கழகம் இலங்கை டாக்டர் எம்.எம். உவைஸ் ஹாஜி அவர்களை கௌரவித்து மதுரை தமிழ் பல்கலைக்கழக வித்வானாக பதவி தந்தது. பழைய காப்பியங்களுக்கும் ஓலைச்சுவடிக்கும் மதிப்பு தரும் இடம்தான் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் அவர்கள் மூலம் கற்ற புத்தக பாதுகாப்பு முறை எனக்கு நாற்பது வருடமாக என் நூல்களை பாதுகாக்க உதவுகிறது. பல்வேறு அறிஞர்கள் நூல் படித்ததால் இதை அறிந்து கொள்ள முடிந்தது. கோபங்களை மறக்கவும், குரோதங்களை நீக்கவும் நல்ல நூல்கள் வழிகாட்டும் தோழன் ஆகிறான்.
காயல்பட்டணத்து வரலாற்றைக் கூறும் நூல்களைப் பாதுகாப்போம் வாரீர்
காயல்பட்டணத்தின் பாரம்பரியம் 1200 வருடங்கள் என்று சொல்வோர் அதற்கான என்ன ஆதயத்தை வைத்து இருக்கிறார்கள். காயல்பட்டணத்தில் வாழ்ந்த இஸ்லாமிய தமிழ்புலவர்கள் வாழ்ந்த இடமாவது யாருக்காவது சரியாக தெரியுமா? அருணகிரி நாதரின் திருப்புகழுக்கு மறு புகழ் பாடிய காசீம் புலவர் அவர்களின் வழி தோன்றல்கள் கே.டி.எம். தெரு, எஸ்.எம்.பி மஹ்மூது ஹூசைன் கவிஞரின் முப்பாட்டன் வழி என்று கூறப்படுகிறது. அப்பாபள்ளியில் சமாதி கொண்டிலங்கும் ஷாம் ஷிஹாபுத்தீன் ஒலியுல்லா மஹான் எழுதிய ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ஞானங்கள் அடங்கிய பாமாலை நூல் எங்கே மறைந்துள்ளது.
நன்மார்க்க பதிப்பகம் என்ற பெயரில் ஹஸன் ஹாஜி வெளியிட்ட மறுப்பதிப்பு, அவர்களுக்கு முன் சாகுல்ஹமீது என்ற பெரியார் வெளியிட்ட ஷாம்ஒலி அப்பா பாடல்கள் சிறுசிறு நூல்கள் எங்கே –யாராவது அதில் அக்கறைக் கொண்டார்களா பாதுகாத்திட ஹாமிதிய்யா மழ்ஹருல் ஆபிதீன் போன்றோர் ஷாம்ஒலி அப்பா பாடல்களை பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். காயல்பட்டணத்தில் பிறந்து கீழக்கரையில் வாழ்ந்து அங்கேயே மறைந்த நமதூர் மேதை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மநூனி என்ற நூலை கீழக்கரை செல்வந்தர்கள் சிறப்பாக முயற்சி செய்து வெளியிட்டார்கள். நமதூர் செல்வந்தர்க்ள எந்த நூலை வெளியிட உதவினார்கள்? காயல்பட்டணம் ஒருகாலத்தில் பாண்டியன் ஆட்சிக்காலத்தில் துறைமுகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆதாரம் பாதுகாத்துவரப்பட்டதா? நமதூருக்கு முற்காலத்தில் வந்த கால்டுவெல் பாதிரி, மார்க்கோபோலோ, இப்னுபதூதா போன்ற உலக சரித்திர ஆசிரியர்களின் குறிப்புகள் கொச்சின் நூலகத்திலும் லண்டன் மியூசியத்தின் பழைமைநூல் பொக்கிஷத்தில் பாதுகாத்து வருவதாக கூறும் சொல் ஆதாரமானதா வளரும் தலைமுறைக்கு இதையெல்லாம் நம் ஊர் இணையதளங்கள் தேடிதருமா எழுத்தாளன் என்ற முறையில் எனது மனத்திரை ஆதங்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயல்பட்டணத்தை பற்றி நூல்கள் யார் யார் எழுதியுள்ளார்கள்? அதுவும் தெரியுமா?
இஸ்லாமிய கலைக்களஞ்சியத்தில் எம்.ஆர்.எம். அப்துர்ரஹீம் மூன்று பாகத்திலும் நமதூரில் வாழ்ந்து மறைந்த இஸ்லாமிய தமிழ் புலவர்கள் குறித்து எழுதியுள்ளார். இதுபோல காயல் நகரதீவுத்தெருவைச் சார்ந்த எம்.கே. செய்யத் அஹமது என்ற பெரியார் வான்புகழ் காயல்பட்டணம் 1951-ல் வெளியிட்டார்கள். இவர்களின் முஸ்லீம் தமிழ்பாரம்பரியம் என்ற ஓர் நூலும் உள்ளது. ஆர்.எஸ்.அப்துல் லத்தீபு சாஹிபு எம்.ஏ. எழுதிய தமிழ் ஆங்கில நூல் காயல்பட்டணம் வரலாறு பற்றியது. காயல்நகர பஞ்சாயத்து நூற்றாண்டுமலர் 1990-ல் வெளியானது.
இந்தியாவின் முதல் பிரதமர் என்ற புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு எழுதிய டிஸ்கவரி ஃஆப் இந்தியா என்ற சுயசரிதை நூலில் காயல்பட்டணத்தின் பெருமை குறித்து எழுதியுள்ளார். இலங்கை பன்னூல் ஆசிரியர் மானா மக்கின் காயல்பட்டணமும், இலங்கையும் கொண்ட தொடர்பு குறித்து ஒரு நூலை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் ஆர்.பி.எம். கனி அவர்கள் எழுதிய இஸ்லாமிய இலக்கிய கருவூலம் அனேகமாக 1963-ல் மணவைமுஸ்தபா காயல்பட்டணம் குறித்து எழுதிய நூல் இஸ்லாமிய இலக்கிய சிந்தனை 1978 இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் காயல்பட்டணத்தில் வெளியிட்ட இஸ்லாமிய இலக்கிய கோவை காரைக்கால் பேராசிரியர் சாஹிப் மரைக்காயர் அவர்களும் காயலின் வரலாறு குறித்து இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் தந்துள்ளார்கள். அவைகளை காலத்தால் நாம் பழைய புத்தகக் கடைகளிலும் மூடிக் கிடக்கும் நமதூர் நூலகங்களிலிருந்தும் பெற்று பாதுகாக்க வேண்டும். அதை நானும் சென்ட்ரல் ஸ்கூல் தமிழ் பிரிவு ஆசிரியர் மு. அப்துர்ரசாக் M.A., B.Ed M.Phil., P.hd. அவர்களும் இணைந்து தேடி எடுக்கும் முயற்சியில் உள்ளதால் நீங்களும் உங்களிடம் உள்ள நூல்களை தமிழாசிரியர் மு. அப்துர்ரசாக் சார் அவர்களிடம் கொடுத்து உதவுங்கள். காயல்பட்டணத்து இஸ்லாமியர்களின் வாழ்வியல் சடங்குகளும் சமூக அமைப்பும் என்ற நூல் ஆய்வில் ஈடுபட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் (Phd) பட்டம் பெற உள்ளார். நமது ரஷாக் சார் அவர்கள்.
வளரும் காயல்வாசிகளின் தலைமுறைக்கு இதுபோன்ற எண்ணற்ற நூல்களை தேடி பாதுகாத்து வைப்பது நமது கடமை என்பதை இக்கட்டுரை மூலம் உங்கள் எண்ணத்தில் வைக்கின்றேன். காலத்தால் அவை பயன்படும் காயல்பட்டணம் குறித்து எந்த நூல் எடுத்தாலும் ஆதாரங்களுடன் எழுதப்பட்டால் அது பெருமை பெறும் போற்றி பாதுகாக்கப்படும். ஆசிரியர் என்றால் யார்? - தொகுப்பாசிரியர் என்றால் யார்? என்ற வித்தியாசம் கூடத் தெரியாதவர்களெல்லாம் நூல் தொகுத்து வெளியிட்டு இருந்தார்கள். நமதூர் வரலாற்று நூல்களை பாதுகாக்க செல்வந்தர்களின் பொருளுதவியும் வேண்டும். மூத்த எழுத்தாளர் மேடை பேச்சாளருமான எஸ்.இ. அமானுல்லாஹ் போன்ற பத்திரிகைத் துறை அனுபவம் வாய்ந்தவர்களும் நமதூர் நூல்களை தேடிப் பாதுகாக்கும் அணியில் சேர்த்து செயல்பட வேண்டும். காயலின் புதிய பயணம் தொடர இணையதள வாசகர்கள் ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்.
|