1. Re:...அரசுகளின் கையாலாகத்தனம், posted by:Palappa Muhiyyadheen Abdul Kader, (Chennai(Mannady)) on 29 December 2012 IP: 117.*.*.* India | Comment Reference Number: 24812
அஸ்ஸலாமு அலைக்கும் புரட்சிக் கவிஞர் கவி மகன் காதர் அவர்களே!
தங்களின் புரட்சிக் கவி வாயிலாக அரசுகளின் கையாலாகத்தனத்தை எடுத்தியம்பி எங்களையெல்லாம் ஏக்க பெருமூச்சிட்டு கண்ணீர்க் கரைய வைத்து விட்டீர்.உங்கள் கவிப் புலமையை மேலும் மெருகூட்டி சிம்மாசனப் பேராசைப் பெரு மக்கள் கூனிக் குறுகி அவமானத்தால் அஞ்சியவர்களாக ஆக்சிஜன் காற்றை நுகர முடியாமல் தத்தளிக்க வேண்டும்.அல்லது இதற்கு மாற்றாக மக்கள் புரட்சி ஏற்பட்டு மானங் கெட்ட ஆட்சியாளர்களும்,அசூசையான அசுரர்களும் இந்த நாட்டை விட்டு விரண்டோடி விரைவில் சத்திய ஷரீஅத் ஆட்சி மலரும் நாள் வெகு தூரத்தில் இருக்கக்கூடாது என இரு கரம் ஏந்தி இறைவனைப் பிரார்த்தித்து பயகம்பர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஆசியையும் வேண்டி அன்னாரின் தோழர்கள்(ரலியல்லாஹு அன்ஹும்),இமாம்கள்(ரலியல்லாஹு அன்ஹும்),இறை நேசச் செல்வர்களின்(ரலியல்லாஹு அன்ஹும்) துஆவையும் வேண்டி நிற்ப்பதன் மூலம் வல்ல இறைவன் மாசு மறுவற்ற மக்களுக்கு நிம்மதியையும்,நீதியையும் நிலை நிருத்திடுவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் எனும் இறைஞ்சலுடன் நிறுத்துகின்றேன் வஸ்ஸலாம்.
இப்படிக்கு
பாலப்பா முஹிய்யதீன் அப்துல் காதர்,
மண்ணடி,
சென்னை
தொடர்புக்கு-9751501712,044- 25266705
,
2. உண்மை உரைத்தீர் posted by:Mohamed Abdul Cader (Saudi Arabia) on 29 December 2012 IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24815
காதர் காக்கா, நான் உங்களின் கவிதையின் அன்பு ரசிகன்.
உண்மையை சொன்னீர், இன்னும் உங்களிடமிருந்து புதுக் கவிதையையும் எதிர்ப்பார்க்கிறேன். தொடருட்டும் உங்களின் கவிப்பணி, தந்தைக்கு தப்பாமல் பிறந்த மகன் நீ.
உன் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக. ஆனால் ஒன்று மட்டும் நிஜம் தங்கள் தகப்பனாருக்கு கவிதையில் இணை அவர்கள் மட்டுமே!
4. சற்றே கண்ணை மூடிட வேண்டும் posted by:NIZAR (KAYALPATNAM) on 30 December 2012 IP: 101.*.*.* India | Comment Reference Number: 24820
தொடர்ந்து கண்ணை மூடிவர சொன்ன கவிஞ்சர் இறுதியில் கண்களை திறக்கசொல்லி இருக்கிறார். கவிமகன் தனக்குரிய பாணியில் இன்றைய நாட்டு நடப்புகளை புட்டு புட்டு வைத்து இருக்கிறார்.
இதனை குற்றங்களுக்கும் தீர்வு இஸ்லாமிய சட்டங்களே என்பதை இன்றைய அரசியல் வாதிகளை விட மாற்று மத சகோதரர்கள் விளங்கி வருகிறார்கள். தூக்குதண்டனை என்ற ஒன்றே இருக்க கூடாது கூவி வந்த அரசியல்வாதிகள், பொதுநல அமைப்பை சார்ந்தவர்கள் இன்று அப்படியே மாறி கற்பழிப்பு மனித மிருகங்கள் மீது தூக்கை உடனே போடவேண்டும் என வலியுறுத்துகிறார்கள் என்றால் பாருங்களேன்.
இன்னும் பூரண மதுவிலக்கு கேட்கிறார்கள் என்றால் பாருங்களேன். கவிமகன் அவர்கள் இந்த கவிதையில் மின்வெட்டு, சில்லறை வணிகத்தில் அன்னியர் வருகை என அனைத்தையும் அற்புதமாக விளக்கி உள்ளார் என்றால் அது மிகையாகாது.
வரும் காலங்களில் இஸ்லாமிய சட்டங்கள் இஸ்லாமியர்கள் கேட்காமலே நடைமுறை படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்றால் மிகையில்லை. தரமான கவிதைகளை தொடர்ந்து தரும் கவிமகனுக்கு வாழ்த்துக்கள், கவிதையில் அனைத்தும் திகட்டாத வரிகள், அணைத்து செய்திகளும் ஒரு தட்டில் இருந்தது போல் உணர முடிகிறது.
6. அருமை.. அருமை.... :... posted by:subhan n.m.peer mohamed (abu dhabi) on 30 December 2012 IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24822
அருமை.. அருமை.... தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி வாழ்த்துக்கள் ..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross